Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண சபை முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவினை காவல்துறையினர் குழப்பியுள்ளார்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடமாகாண சபை முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவினை காவல்துறையினர் குழப்பியுள்ளார்கள்!
மே 16, 2014
 

 யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்துக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவினை எம்.கே.சிவாஜிலிங்கமும், அனந்தி சசிதரனும் நினைவுச் சுடரேற்ற முயன்ற சமயம் அது காவல்துறையினரால் குழப்பப்பட்டது.

மே 18 நினைவேந்தலை ஒட்டி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு மாகாண சபை அலுவலக முன்றிலில் சுடரேற்றி அஞ்சலி செய்யும் நிகழ்வு இடம்பெறும் என சிவாஜிலிங்கம் நேற்றிரவு அறிவித்துள்ளார்

அந்த அறிவிப்பை அடுத்து கைதடியில் மாகாண சபை அலுவலகத்தின் முன்னால் இன்று காலை முதல் பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மாகாண சபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் காலையில் அங்கு வந்தனர். அலுவலகத்துக்குள் அவர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வேறு மாகாண சபை உறுப்பினர்களும் அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை. பெரும் எண்ணிக்கையில் ஊடகவிலாளர்கள் மட்டும் குவிந்திருந்தனர்.

மாகாண சபை கட்டடச் சுவருக்கும், ஏ'9' கண்டி வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் - மாகாண சபை முன்றலில் -வாழைக் குற்றியின் மீது சிறிய சட்டியை வைத்து அதில் கற்பூரத்தைப் போட்டு சுடரேற்ற சிவாஜிலிங்கம் முயன்றார். அங்கு வந்த காவல்துறையினர் அதனைத் தட்டி விழுத்தி மிதித்தனர். அந்த இடத்தில் அத்தகைய நிகழ்ச்சி எதையும் செய்ய முடியாது என அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள் இன்னிலையில் அந்த இடத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

http://www.sankathi24.com/news/41515/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலி தீபத்தை எட்டி உதைத்த பொலிஸார்: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்: சிவாஜிலிங்கம்

 
 
D65d650s6ds6d0sf.jpg
 

 

 

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை  நினைவு கூற விடாது எத்தனை தடைகளை இந்த அரசாங்கம் போட்டாலும் உறவுகளை நினைவு கூறுவதைத்தடுத்து விடமுடியாது, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் காட்டமாக தெரிவித்தார்.
 
யாழ்.கைதடிப் பகுதியிலுள்ள வடக்கு மாகாணசபையின் பேரவைக் கட்டடத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை தடுத்து நிறுத்திய பொலிஸார் மாகாண சபைக்குள் செல்வதற்கும் தடைவிதித்திருந்தனர். இந்நிலையில் மாகாணசபையின் கட்டடத்திற்கு முன்பாகவுள்ள வீதியில் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் சுடரேற்றி   அஞ்சலி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
 
இதன்போது குறுக்கிட்ட சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வன்னியாராட்சி அஞ்சலிக்காக ஏற்றப்பட்ட தீபத்தை கீழே தட்டி வீழ்த்தியதோடு சப்பாத்துக்காலினால் எட்டி உதைத்து தீபத்தை அணைக்க முட்பட்டார். இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்நிலையில் பொலிஸாரினதும் இராணுவப் புலனாய்வாளர்களினதும் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உரையாற்றிய சிவாஜிலிங்கம் மேலும் தெரிவிக்கையில்,
 
விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மறவர்களுக்காகவும் பொதுமக்களுக்காகவும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம். மே16 – 18 ஆம் ஆம் தகதி வரை முள்ளிவாய்க்காலில் மரணித்த செந்தமிழ் உறவுகளுக்காக, படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும்,அஞ்சலிகளையும் , வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்ளுவோம். 
 
இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக சர்வதேச விசாரணையை கேட்டுப்பெற்றே தீருவோம்.சர்வதேச விசாரைணமூலம் இதனைநிலைநாட்டியே ஆகுவோம். இதனைவிட  நிரந்தரமான  அரசியல் தீர்வைப்பெறவும் நாங்கள் உழைப்போம். எவ்வளவு அடக்கு முறைகளைப்பிரயோகித்து நீங்கள் என்னதான் தடுத்தாலும். எங்களுடைய தரப்பிலேயுள்ள அத்தனை நினைவுச்சின்னங்களையும் நீங்கள் அழித்தாலும் நீங்கள் எழுப்பிய அத்தனை நினைவுச்சின்னங்களும், பாராளுமன்றத்திற்கு முன்பாகவுள்ள படைவீரர்களின் நினைவுச் சின்னங்களாகயிருக்கலாம், ஆனையிரவிலுள்ள நினைவுச்சின்னமாகயிருக்கலாம் முள்ளிவாய்க்காலிலுள்ள நினைவுச் சின்னமாகயிருக்கலாம் மற்ற இடங்களிலும் உள்ள நினைவுச் சின்னங்களாகயிருக்கலாம். 
 
ஒரு போராட்டம் நடந்ததை எடுத்துக்காட்டும் சிங்களச்சிறுவர் அறிந்துகொள்வார்கள். சந்ததி சொல்லும் பயங்கரவாதம் என்று சொல்லவில்லை ஆயுதப்போராட்டம் மௌனித்துவிட்டது என்று சொல்லப்படுகின்றது. ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் கூடவும் போராட்டம் நடைபெற்றபோதும் மக்கள் மீதான தாக்குதல்களையும் அடக்கு முறைகளையும் நாம் கண்டித்துவந்துள்ளோம். 
 
ஜே.வி.பியினர் இறந்தவர்களை அனுஷ்டிக்க அனுமதியுள்ளது என்றால் எமக்கேன் அனுமதிவழங்க மறுக்கின்றனர். தமிழர்கள் இரண்டாம் தரப்பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர். நவம்பர்; 13 ஆம் திகதியை ஜே.வி.பியினர்; அனுஷ்டிக் முடியும் என்றால் ஈழத்தமிழர்கள் இறந்த உறவுகளை ஏன் அனுஷ்டிக்க முடியாது. இரண்டாம் தரப்பிரஜைகளாக தமிழர்கள் பார்க்கப்படுவதே இந்த அடக்கு முறைகளுக்கு காரணம். எனவே தமிழ் மக்கள் எழுச்சியாக மே-18 ஆம் திகதிவரையும் ஏன் அந்த திகதியைக்கடந்தும் இந்த மாதம் முழுதும் ஏன் மாகாணசபை அமர்வின் போதும், மாகாணசபையை  ஒத்திவைத்தும் தமது எதிர்ப்புக்களையும் அஞ்சலிகளையும் செலுத்துவார்கள் முடிந்தால் தடுத்துப்பாருங்கள் ; சவால் விடுகின்றேன். தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.