Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.கீரிமலையில் பிதிர்க்கடன் நிறைவேற்ற அனுமதி மறுப்பு

Featured Replies

யாழ்.கீரிமலை புனித தீர்த்தக்கரையில் பிதிர்க்கடன் நிறைவேற்றச் சென்றவர்களை உட்செல்லவிடாமல் இராணுவத்தினர் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீரிமலையில் பிதிர்க்கடன்களை நிறைவேற்றும் பொருட்டு வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், பாலச்சந்திரன் கஜதீபன் மற்றும் ரி.துவாரகேஸ்வரன் (வடமாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்) ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை(18) காலை கீரிமலைக்குச் சென்றனர்.

இதன் போது அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கீரிமலையில் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற அனுமதியளிக்க முடியாது என்று கூறியதுடன் அவர்கள் உட்செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது உறவினர்கள் பிதிர்க்கடன்களை நிறைவேற்றுவதற்கான ஒழுங்குகள் துவாரகேஸ்வரனால் கீரிமலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதற்காக 50 சிவாச்சாரியர்களும் அவர்களுக்கான தானங்களும் துவாரகேஸ்வரனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. 

இன்று(18) பிதிர்க்கடன்களை நிறைவேற்றுவதற்காக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மற்றும் இறந்த திதி இன்று உள்ளவர்களின் உறவினர்களும் பிதிர்க்கடன்களை நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்குச் சென்றிருந்தனர்.

இவர்கள் உட்செல்ல இராணுவம் அனுமதியளிக்க மறுத்த நிலையில் அவர்கள் திரும்பி வந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/110894-2014-05-18-06-49-54.html

  • தொடங்கியவர்
பிதிர்கடன் நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்கு செல்ல அனுமதி கோரி அனந்தி சசிதரன் ஆர்ப்பாட்டம்

 

ananathi18_CI.jpg

 

 

 
உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்கு செல்ல அனுமதி கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினரும் காணாமல் போனோருக்காக குரல் எழுப்பி வருபவருமான அனந்தி சசிதரன் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார். அவருடன் அவரது உதவியாளர் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் நடமாட்டமேதுமற்ற கீரிமலையின் எல்லையில் அவர் பொலிஸ் மற்றும் படையினரது சோதனை சாவடி முன்பதாக இப்போராட்டத்தினை கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக முன்னெடுத்து வருகின்றார்.
 
முன்னதாக உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் நிறைவேற்றுவதற்காக கீரிமலையில் விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்தப்பகுதி முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. கீரிமலைக்குச் செல்லும் பிரதான வீதி மார்க்கங்கள் அனைத்திலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீதிகள் மூடப்பட்டுள்ளன. அந்தப் பிரதான வீதிகளினூடாகவோ குறுக்கு வீதிகளினூடாகவோ யாரும் கீரிமலைக்குச் செல்ல முடியாதவாறு இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
 
இந்நிலையில் குறித்த புதிய சோதனை சாவடியொன்றினில் அனந்தி வழிமறிக்கப்பட்ட நிலையில் தன்னை கீரிமலைக்கு செல்ல அனுமதிக்க கோரி வீதியின் நடுவில் அமர்ந்து அவர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.அவ்வேளையில் தான் படை அதிகாரிகளினால் அச்சுறுத்தப்பட்டதாகவும் மேலும் தெரிவித்த அவர் தன்னை புகைப்படமெடுத்து அச்சுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
  • கருத்துக்கள உறவுகள்

வீரப் பெண்மணியே ..வாழ்த்துகின்றேன்...

வீரப் பெண்மணியே ..வாழ்த்துகின்றேன்...

  • தொடங்கியவர்

காணாமற்போன உறவுகள் மீண்டும் வரவேண்டும்: அனந்தி

 

IMG_5666.JPG

-எம்.றொசாந்த் 

சரணடைந்து காணாமற்போன உறவுகள் எல்லோரும் மீண்டும் வர வேண்டும் என்றும் போரிலே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் நல்லூரில் தான் பிரார்த்தித்ததாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு நின்றிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், '2009ஆம் ஆண்டில் பாதுகாப்பு சரணடைந்து காணாமற்போன உறவுகள் அனைத்தும்  மீண்டும் வரவேண்டும் என்ற நோக்கத்தோடும் நாங்கள் எவ்வளவு துன்பப்பட்டு சிதறுண்டு அதில் மரணித்தோமோ அதேபோல அதற்கு காரணமானவர்களும் அவ்வாறு சிதறி போகவேண்டும் என்று பிரார்த்திப்பதற்காகவே இந்த கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டோம்' என்றார். 

'இந்த நாள் தான் எங்களின் அந்த வாழ்கையை தொலைத்த நாள். அன்றைய தினம் சுமார் 8 மணியளவில் என்னுடைய கணவரை பிள்ளைகளுடன் முல்லைத்தீவு இராணுவத்தினரிடம் நான் கையளித்திருந்தேன். 

ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும் என்னுடைய கணவர் எங்கே இருக்கின்றார் என்று கூட தெரியாமல் அவர் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்ற நிலைமையில் தேடிக்கொண்டு இருக்கின்றேன்.

நான் தொடர்ந்து மூன்று வருடங்களாக இந்த வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றேன். முதலில் கிளிநொச்சி மாவட்டத்தில் வழிபாட்டில் ஈடுபட்டேன். அடுத்து முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்தேன். இன்றைய தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு செய்தேன்.  

இந்த நாடு இறைமை உள்ள நாடு, ஜனநாயகம் நிலவுகின்ற நாடு என சர்வதேசத்திற்கு காட்டிக்கொண்டு இருக்கின்ற அதேவேளை இங்கே கண்ணீருடன் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன' என்று அவர் சுட்டிக்காட்டினார். 

tamilmirror

  • கருத்துக்கள உறவுகள்
1908010_750016208384587_9196931317250277
1010081_750016308384577_3846216521710472

அங்கே வெற்றி விழா.. இங்கே தமிழச்சி நடுத்தெருவில்..

இறுதி இனஅழிப்பில் கொல்லப்பட்ட தனது உறவினர்களுக்காக கீரிமலைக்கு பிதிர்கடன்களை கழிக்க செனற அனந்தி எழிலனுக்கு நடந்த அவலம் இது.;.

இந்த இரண்டு படங்களும் சொல்லும் நாங்கள் யார்? அவர்கள் யார்? என்பதை...

# இலங்கைத்தீவில் இருதேசங்கள்

 

fb

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.