Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம் அமைத்து கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் நம்முடைய கையில்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழம் அமைத்து கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் நம்முடைய கையில் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் 

 

pon.jpg

 

சார்க் நாடுகளின் அமைப்பின் தலைவர் என்ற முறையிலேயே நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

 

ராஜபக்சே மட்டுமின்றி சார்க் அமைப்பில் உள்ள பிற நாடுகளின் தலைவர்களுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 

ராஜபக்சேவை தனிப்பட்ட முறையில் பா.ஜ.க விருந்துக்காக அழைக்கவில்லை. ஒட்டு மொத்த சார்க் நாடுகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டதில் அதில் இடம்பெற்றுள்ள இலங்கைக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 

 

இனப்படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் கட்சி ராஜபக்சேவை அழைத்தற்கும், பா.ஜ.க அழைத்தற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. ஈழத் தமிழர்களின் நலன் கருதியே ராஜபக்சே தற்போது இந்தியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். அவரது நடவடிக்கையை பொறுத்தே ஈழம் அமைய வாய்ப்புள்ளது. 

 

ஈழம் அமைத்து கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் நம்முடைய கையில் இல்லை. அது ராஜபக்சேவின் கையில் இருக்கிறது. ராஜபக்சே சரியான முறையில் இலங்கையில் இருக்கக் கூடிய தமிழர்களை நடத்தவில்லை என்று சொன்னால், மூன்றாம் தர குடிமக்களாக நடத்துவோம் என்று சொன்னால், 2009க்கு முன்பு போல் நடத்துவோம் என்று சொன்னால், 1971ல் வங்கதேசம் உருவானது போன்ற ஒரு நிலைமை, உருவாகாது என்று சொல்ல முடியாது. அந்த முடிவு ராஜபக்சேவின் கையில் இருக்கிறது. இவ்வாறு கூறினார்.

 

http://www.nakkheeran.in

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் நலன் கருதியே மஹிந்தவுக்கு அழைப்பு: பா.ஜ.க

 

இலங்கைத் தமிழர் நலன் கருதியே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அழைக்கப்பட்டுள்ளார் என்று தமிழக பாரதீய ஜனதாக கட்சியின் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி, எதிர்வரும் 26ஆம் திகதி இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் பங்கேற்குமாறு இலங்கை, பாகிஸ்தான் உட்பட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களின் ரத்தக்கறை படிந்த கரங்களோடு, இந்திய நாட்டுக்குள் ராஜபக்ஷ நுழைவதை எந்தவிதத்திலும் தமிழர்களால் சகித்துக்கொள்ள இயலாது என்றும் அவர் கூறியிருந்தார்.

கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை;. இலங்கைத் தமிழர்களின் நலன் கருதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். (தட்ஸ்தமிழ்)

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/111434-2014-05-22-07-00-08.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் அமைவதும், அமையாததும் ராஜபக்சேவின் கையில் உள்ளது: BJP
22 மே 2014
lg-share-en.gif
 

'கொலைகாரன் கத்தி...மருத்துவர் கத்தி'

bjp_CI.jpg

வங்கதேசம் உருவானது போன்ற சூழல் இலங்கையில் தமிழீழம் உருவாகாது என்று உறுதியாக சொல்ல முடியாது என தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், இலங்கை தமிழர் நலனை விட்டுக்கொடுக்கும் வகையில் பாஜக நடந்து கொள்ளாது என்றும், தமிழர் நலன் கருதியே ராஜபக்சேவுக்கு பா.ஜ.க அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

சார்க் அமைப்பை சேர்ந்த நாட்டின் தலைவர் என்ற வகையில் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும், இலங்கை தமிழர் நலனை விட்டுக் கொடுக்கும் வகையில் பா.ஜ.க நடந்து கொள்ளாது என்றும், இலங்கை தமிழர்கள் சமஉரிமையுடன் வாழ தொடக்கமே இந்த முடிவு என்றும் அவர் தெரிவித்தார்.

ராஜபக்சவை காங்கிரஸ் அழைத்ததிலும், பா.ஜ.க அழைப்பதிலும் வித்தியாசம் உண்டு என்று கூறிய அவர், ஈழம் அமைத்து கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் ராஜபக்சே கையில் இருக்கிறது என்றும், அழிவை ஏற்படுத்திய ராஜபக்சவுக்கு துணையாக நின்றது காங்கிரஸ் அரசு என்றும் கூறினார்.

தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழர் வளர்ச்சிக்கு மோடியின் அரசு செயல்பட துணையாக இருப்போம் என்றார்.

மேலும், அடுத்த 6 மாத காலத்திற்கு அனைவரும் அரசை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், எந்த கட்சியாக இருந்தாலும் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

'கொலைகாரன் கத்தி...மருத்துவர் கத்தி'

முன்னதாக நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை என இன்று காலை கூறியிருந்த பொன்.ராதாகிருஷ்ணன்,  அன்று மன்மோகன் சிங் அழைத்திருந்தது கொலைகாரன் வைத்திருந்த கத்திக்கு சமம் என்றும், இன்று நரேந்திர மோடி அழைத்திருப்பது மருத்துவர் வைத்திருக்கும் கத்திக்கு சமம் என்றும்  தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107288/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.