Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் நிறுவவிருந்த 4 தொழிற்சாலைகளுக்கான அனுமதி மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். குடாநாட்டில் புதிதாக நிறுவ பிரேரிக்கப்பட்ட நான்கு தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க மத்திய சூழல் அதிகார சபை மறுப்பு தெரிவித்துள்ளது.
 
நீர் நிலைகளுடன் தொடர்புடைய நான்கு திட்டங்களாக இவை அமைந்திருந்ததுடன், இந்த திட்டங்களை முன்னெடுப்பதற்கான அனுமதியை யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் மூலம் வழங்கப்பட்டு, சூழல் பாதுகாப்பு தொடர்பான உறுதிப்படுத்தலை பெற்றுக்கொள்ளும் வகையில், குறித்த திட்டங்கள் பற்றிய பிரேரணைகள் மத்திய சூழல் அதிகார சபையின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், குறித்த திட்டங்களுக்கு அமைய தொழிற்சாலைகள் யாழ்ப்பாண குடா பகுதியில் நிறுவப்படின், குடாநாட்டில் குடிநீர் தட்டுப்பாட்டை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிடுமென குறிப்பிட்டு, இந்த திட்டங்களை மத்திய சூழல் அதிகார சபை தள்ளுபடி செய்திருந்தது.

இதனை ஏற்றுக்கொள்ளாத முதலீட்டாளர்கள், ஜனாதிபதியினூடாக இந்த திட்டங்களுக்கு மீண்டும் அனுமதியை கோரியிருந்த போதிலும், குறித்த திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டால், யாழ். குடா பகுதியில் குடிநீர் பிரச்சினை பாரிய சிக்கல் நிலையை தோற்றுவிக்கும் என்பதை காரணம் காட்டி, மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.

பழரச உற்பத்தி தொழிற்சாலை, மென்பான உற்பத்தி தொழிற்சாலை, மினரல் வோட்டர் மற்றும் போத்தலில் அடைக்கப்பட்ட நீர் திட்டங்கள் இவ்வாறு நிறுவ மத்திய சூழல் அதிகார சபையின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

 

http://tamil.dailymirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/111568---4---.html

இந்த நிறுவனங்கள் போன இடம் எல்லாம் தண்ணீர் தட்டுபாடு.

சிங்கள பகுதிகளில் நீர்வளம் உள்ள பகுதிகளை விட்டு யாழை குறி வைப்பது கவனிக்க பட வேண்டியது.

ஆனானபட்ட நீர்வளம் நிறைந்த கேரளாவிலேயே கோக கோலா நிறுவனம் தண்ணீர் தட்டுபாடு வரவைத்தது.

போத்தல்கள் கழுவும் இரசாயன தண்ணீரும் ஆபத்தானது.

  • கருத்துக்கள உறவுகள்

  • பழரச உற்பத்தி தொழிற்சாலை,
  • மென்பான உற்பத்தி தொழிற்சாலை,
  • போத்தலில் அடைக்கப்பட்ட நீர்
குடிநீர் தட்டுப்பட்டால் கிளிநொச்சியில் உள்ள இரணைமடு குளத்தில் இருக்கும் நீரை யாழ்ப்பாணம் கொண்டுவருவது பற்றி கிளிநொச்சி விவசாயிகளுடன் அரசியல் தலைவர்கள் முரண்பட்டு நிற்கும் நிலையில் குடிநீரை மூலவளமாக கொண்ட இந்த தொழிற்சாலைகளை யாழ் குடாநாட்டில் நிறுவ அனுமதி மறுக்கபட்டது சரியான முடிவு.

கணணி அறிவும் முகப்புத்தகத்தில் வாழ்வுமாக காலம் தள்ளும் பெரும் தொகையான வேலையில்லா இளைஞர்களை கொண்ட யாழ்ப்பாணத்துக்கு தேவையானது தகவல்துறை தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களேயன்றி குடிநீர் சார்ந்த தொழிற்சாலைகள் அல்ல. இலங்கை அரசு இந்த விடயத்தில் சரியான முடிவை எடுத்து யாழ் மக்களுக்கு நன்மை செய்துள்ளது. பாராட்டத் தக்க முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்

.

Edited by Jude

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.