Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தில் மலேசியாவில் மூவர் கைது?

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவின் சிலாங்கூர் பிரதேசத்தில் இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மலேசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணைக்க முயற்சித்துள்ளதாக இவர்கள் மூவரும் கடந்த 15ஆம் திகதி கைதாகினர் என்று மலேசிய பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் குடிவரவுச் சட்டத்தின் கீழ் மலேசியாவில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.

 

malarum.com

  • தொடங்கியவர்

தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோலாலம்பூர், பி.ஜே. கிலாங் எனும் பிரதேசத்தில் வைத்தே இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மே மாதம் 15ஆம் திகதி அமைக்கப்பட்ட விசேட பயங்கரவாத குற்றப்பிரிவினரின் மூலமே குறித்த சந்தேக நபர்கள், கிலாங் மற்றும் பெடலிங் ஜெயா ஆகிய நகரங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையகத்தினால் அங்கீகாரிக்கப்பட்ட அட்டைகளை வைத்திருந்ததாகவும், முக்கியமாக தேசிய அளவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை  பரப்புவதற்காக முனைந்துள்ளனர் எனவும் சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் உயர் அதிகாரியான டான் ஸ்ரீ காலிட் அபூபக்கர் ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்துள்ளார்.

2004ஆம் ஆண்டிலேயே இவர்கள் இங்கு வந்திருப்பதாக தெரிவித்த அவர், அவர்களது இயக்கத்தை இந்த நாட்டினை அடிப்படையாக கொண்டு பிரசாரம் செய்யவும் முனைந்துள்ளதுடன் இயக்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக நன்கொடைகளையும் சேர்த்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்;கத்தை பிரசாரம் செய்யவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும், தொழிநுட்ப சாதனங்களும் மற்றும் 24 நாடுகளுக்கு சமனான வெளிநாட்டு பணம் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்நாட்டு அதிகாரிகளிடம் இருந்து மறைந்திருப்பதற்காகவே அவர், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையகத்தினால் அங்கீகாரிக்கப்பட்ட அட்டைகளை பயன்படுத்தியுள்ளார்; என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களிடம் உள்ள அடையாள அட்டைகள் சுரண்டப்பட்டுள்ளனவா என்றும் இந்நாட்டில் பயங்கரவாதம் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கைகள் முன்னெடுத்து சென்றுள்ளனரா என்பது தொடர்பாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையகத்திடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்வதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/111718-2014-05-25-05-16-10.html

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் கைதான புலிகள் வான்படை, புலனாய்வு, ஊடகப்பிரிவு தலைவர்களாம்

[ ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2014, 11:49 GMT ] [ தா.அருணாசலம் ]

மலேசியாவில் களாங் வலியில் இன்று பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மலேசிய காவல்துறைமா அதிபர் தன் சிறி காலித் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

பெட்டலிங் ஜாயா மற்றும் களாங் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் பிடிபட்டுள்ளனர்.

2004ம் ஆண்டு தொடக்கம் இவர்கள் மலேசியாவில் அகதிகள் என்ற போர்வையில் வசித்து வந்துள்ளனர்.

உலகெங்கும் திரட்டப்படும் நிதியைக் கொண்டு இவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுக்க முனைந்ததாகவும் மலேசிய காவல்துறை கூறியுள்ளது.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தோற்கடிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் என்று தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் மூவரும் குடிவரவுச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் புலிகளின் வான்புலிகளின் பிரதி தலைவர் என்றும், மற்றொருவர் புலனாய்வு தலைவர் என்றும் மூன்றாமவர், ஊடக விவகார தலைவர் என்றும் மலேசிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மூவரும் 30 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

இவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் தடைப்பட்டியலில் இடம்பெற்றவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

malaysia-arrest1.jpg

malaysia-arrest2.jpg

malaysia-arrest3.jpg

http://www.puthinappalakai.com/view.php?20140525110587

மலேசியாக்காரர் பிளேனை கண்டுபிடிசிட்டினமே?

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியப் பரதேசி நா......

 

2009 இலிருந்து மலலேசியா ஈழத்தமிழருக்கெதிராகச் செய்யும் துரோகம் தொடர்கிறது. சிங்களவனுக்குக் காவடி தூக்குவதற்காக மலேசிய அரசு செய்துவரும் துரோகம் ஈழத்தமிழருக்குப் பாரிய அழிவை ஏற்படுத்தி வருகிறது.

 

மலேசியாவில் இரண்டாம்தரக் குடிமக்களாகக், அடிமைகளாக நடத்தப்படும் தமிழர்களுக்கு ஈழத்தமிழர் மேல் இருக்கும் அனுதாபம், எங்கே ஒரு நாள் மலேசியாவிலும் தமிழ்த் தேசியம் வலுப்பெற்றுவிடுவதற்குக் காரணமாக அமைந்துவிடும் என்று அஞ்சும் இஸ்லாமியப் பயங்கரவாத ஆட்சியாளர்கள், ஈழத்தமிழன் என்றாலே உடனேயே புலிமுத்திரை குத்தி சிங்களக் காடை நாய்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். அதற்குப்பிறகு அந்த அப்பாவிகளுக்கு நடக்கப்போவது என்னவென்பதை நெடுங்கேணி புலி அடித்த நாடகத்தில் நாம் கண்ணுற்றோம். அநேகமாக இந்த மூவரும் கூட அப்படித்தான் புலிகளின் தலைவர்கள் என்று மலேசிய இஸ்லாமியப் பயங்கரவாதிகளாலும், சிங்களப் பெளத்த பயங்கரவாதிகளாலும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆகவே இவர்களும் நாடுகடத்தப்பட்டு, நெடுங்கேணியிலோ, மணலாற்றிலோ இன்னொரு 3000 சிங்களப் பேய்கள் கொண்ட இராணுவ நடவடிக்கை ஒன்றின்மூலம் சுட்டுக்கொல்லப்படப் போகிறார்கள்.  இது மலேசியாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் கடைசித் தமிழன் நாடுகடத்தப்பட்டு கொல்லப்படும்வரை தொடரத்தான் போகிறது. 

 

அகதிகளுக்கான ஐ. நா அமைப்பான UNHCR இந்த அகதிகளைக் கண்டுகொள்வதில்லை. பெரும்பாலும் உள்நாட்டு அதிகாரிகளைக் கொண்டியங்கும் இந்த அமைப்பு மலேசிய அரச பயங்கரவாதிகளுடன் நெருங்கிய உறவைப் பேணி வருகிறது, பெரும்பாலும் ஈழத்தமிழ் அகதிகள் தொடர்பான விடயங்களை இந்த உள்ளூர் அதிகாரிகளே மலேசிய பொலிசாருக்கு வழங்கிவருவதாகப் பரவலான குற்றச் சாட்டுக்கள் வெளிவந்திருக்கின்றன.

அகதிகள் கைது செய்யப்படும்போதும், விசாரிக்கப்படும்போதும் இந்த UNHCR உள்ளூர் அதிகாரிகள் நடந்துகொள்ளும் முறையைப் பார்க்கும்போது நாடுகடத்தல் நாடகங்களுக்கு இவர்களும் உடந்தைதான் என்று சந்தேகிக்கத் தோன்றுவதாக பல அகதிகள் கூறியிருக்கின்றனர். பல சந்தர்ப்பங்களில் அகதிகள் மேல் விசாரணை நடத்தப்படும்போது இந்த அதிகாரிகள் சமூகமளிப்பதே இல்லையெனவும், இதனால் இவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிட்டு நாடுகடத்துவது மலேசிய அரசாங்கத்துக்கு மிகவும் இலகுவாகி விடுகிறதென்றும் கூறப்படுகிறது.

 

சிங்களப் பயங்கரவாத அரசின் ராணூவ புலநாய்வுத் துறையுடன் நெருங்கி வேலை செய்யும் மலேசிய இஸ்லாமியப் பயங்கரவாத அரசு, தன்னிடமுள்ள பெரும்பாலான ஈழத் தமிழ் அகதிகளைப் புலிகள் என்கின்ற கண்ணோட்டத்திலேயே பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by ragunathan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.