Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸில் தற்கொலை செய்து கொண்ட லியோ வின் இறுதிச் சடங்கிற்கு பெற்றோரை அனுப்பும் கோரிக்கையும் போராட்டமும்

Featured Replies

தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் Facebook நிலைச் செய்தி இது.

 

(திருமுருகன் காந்தி அவர்களின் நிலைச்செய்திகள் அவரது முழு சம்மதத்துடனே யாழில் பிரசுரிக்கப்படுகின்றது)

 

------------------

 

இன்று மதியம் ஆரம்பித்த வலிநிறைந்த கோரிக்கைப் பயணம், இன்னும் முடியவில்லை.

ஆஸ்திரேலியாவில் அகதிகள் உரிமைக்கோரி தீக்குளித்து மரணித்த தோழர். லியோ சீமான்பிள்ளை அவர்களின் பெற்றோர்கள் ஆஸ்திரேலியாவின் துணைத் தூதரை சந்திக்க வருகிறார்கள் என்று அறி...ந்து அவர்களுக்கு உதவி செய்யவும், வழிகாட்டவும் தூதரகம் சென்றோம்.

உலகம் அறியா அப்பாவி உழைக்கும் மக்களாய் வலிசுமந்து நின்ற அவரது தந்தையையும் உறவினர்களையும் அழைத்துச் சென்று ஆஸ்திரேலியாவின் துணைத் தூத்ரகத்திற்கு சென்ற பொழுது மிக பவ்வியமாய் துணைத்தூதர் வந்து நேரில் பெற்றுக்கொண்டு ஆவண செய்வோம் என்றார்.

இலங்கை தூதரகம் அவசரத்தேவைக்காய் பாஸ்போர்ட் தருவார்கள் அங்கு சென்று வாருங்கள் என்றார்கள்.

இலங்கை தூதரகத்திற்கு இவர்களை தனியாய் அனுப்ப இயலாது, இவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது என்பதால் துணைக்கு நின்றிருந்தோம். இதற்கிடையே 30 நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் தில்லி தூதரகத்திலிருந்து அதிகாரிகள் பேசினார்கள். பரவாயில்லையே இவ்வளவு தூரம் அக்கறை எடுக்கிறார்களே என்று பேசினால், இலங்கையிடம் பாஸ்போர்ட் வாங்குங்கள் எங்களால் இயன்றதை செய்கிறோம் என்றார்கள்.

அவர்களிடம், “அகதிகளுக்கு எவ்வாறு இலங்கை பாஸ்போர்ட் வழங்கும் என்றேன்”, அதற்கு,” ஆஸ்திரேலியா ஒருவேளை இவர்கள் சென்றால் திரும்பி இந்தியா பெற்றுக்கொள்ளும் என்று கடிதம் அகதிகளுக்கான அலுவலகத்திடம் இருந்து பெற்றுத்தாருங்கள்” என்றார்கள். “முயற்சிக்கிறோம், ஆனால் இவர்கள் ஆஸ்திரேலியா சென்று அவரது மகனுக்கு இறுதிக்கடன் செய்ய உதவுங்கள் ” என்றேன். “ நிச்சயமாக, அதற்கான முதல்படியாக நீங்கள் விசா கொடுக்கும் இடத்திற்கு சென்று ஆவணங்களை பதிவு செய்யுங்கள் என்று சொல்லி அலுவலகத்தின் பெயரைக் கொடுத்தார். அது தனியார் நிறுவனம், “ இந்த நிறுவனம் பாஸ்போர்ட் இல்லாமல் விசா அப்ளிகேசனை வாங்க மாட்டார்களே” என்றேன்.

“ நீங்கள் சென்று கொடுங்கள்,அதைத் தான் சொல்ல இயலும், விவரமாக மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறோம். பாஸ்போர்ட்டுடன் செல்லுங்கள்” என்றார்கள்.

“அகதிகளுக்கு பாஸ்போர்ட் இருக்க வாய்ப்பில்லையே, ஆஸ்திரேலியா அக்திகளுக்கான உரிமைக்கான ஐநா சாசனத்தில் கையெழுத்திட்டிருக்குமே, ஐ,நாவின் அகதிக்கான சாசனம் பாஸ்போர்ட் தேவை என்று சொல்கிறதா?.. மனிதாபிமான அடிப்படையில் தானே அனுகவேண்டுமென்கிறது” என்றேன்..
தடுமாறியபடியே, “ அவற்றினை பரிசோதித்து பார்க்கிறோம், தற்பொழுது பாஸ்போர்ட் இல்லாமலும் கூட இந்த அலுவலகம் சென்று ஆவணங்களை பதியுங்கள், அது இல்லாவிட்டால் எங்களால் விசா அனுப்ப இயலாது “ என்றார்கள்.

இதற்கிடையில் கிட்டதட்ட 2மணி நேரத்திற்கும் அதிகமாக இலங்கை அதிகாரிகள் இவர்களை விசாரித்திருக்கிறார்கள். காவல்துறையிடம் இந்த தமிழர்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டுமென்று கேட்டோம். இலங்கை தூதரகத்தினை நம்ப இய்லாது ஆகவே ஆவண செய்யுங்கள் என்றோம். அகதிகளின் பாதுகாப்பிற்கு நாங்கள் உத்திரவாதம் தருகிறோம் கவலை கொள்ளாதீர்கள் என்றார்கள்.
மாலை வெகுநேரம் கழித்து வெளியில் அனுப்பபட்டவர்களிடம் பேசிய பொழுது, இலங்கையானது “ நீங்கள் கொழும்பு செல்ல மட்டுமே பாஸ்போர்ட் தர இயலும் , பின் அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல முயற்சி செய்யுங்கள்” என்றிருக்கிறார்கள்.

இரவு ஆஸ்திரேலிய தூத்ரகத்தின் மின்னஞ்சலை பார்த்தால் ” உங்கள் மகனின் மரணத்திற்கு வருத்தங்கள், உங்களிடம் தொலைபேசியில் பேசியபடி பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு விசாவிற்கு பதிவு செய்யுங்கள், அதற்கான விதிமுறைகள், கட்டணம் பின்வருமாறு:” என்று முடிந்திருக்கிறது.

லியோவின் உடலை இந்தியா அனுப்ப இயலாது ஏனெனில் அவர் இந்திய பிரஜை கிடையாது என்கிறார்கள். லியோவின் பெற்றோரை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப எங்களுக்கு ஆட்சேபனை இல்லை ஆனால் பாஸ்போர்ட் தேவை என்கிறார்கள். இலங்கையிடம் தான் பாஸ்போர்ட் பெறவேண்டுமென்று இந்தியா சொல்கிறது. இலங்கைக்கு செல்ல மட்டுமே பாஸ்போர்ட் தருவேன் என்கிறது இலங்கை. அகதிகள் பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவதில்லை என்று தெரிந்தும் ஆஸ்திரேலியா வஞ்சகமாய் பேசுகிறது.
ஏதும் புரியாமல் மகனை இழந்த சோகத்துடன் லியோவின் தந்தையும், தம்பியையும் பார்க்கும் போது மனம் கலங்குகிறது. தமிழனாய் பிறப்பதுவும், இந்தியாவிடம் அகதியாய் மாட்டிக்கொள்வதுவும், பெற்ற பிள்ளைகளை வெளிநாட்டில் பலிகொடுப்பதுவும், அவர்கள் உடலுக்கு மரியாதை கூட செலுத்தவிடாமல் சட்டம் பேசும் நாடுகளிடையே அல்லாடுவதையும் காண சகிக்கவில்லை.

ஆஸ்திரேலியா மனிதாபிமான அடிப்படையில் செய்யுமா என்று தெரியவில்லை. இந்தியா தனது அதிகாரவர்க்கத்தின் ஊடே இவர்களுக்கான உதவியை செய்யுமா என்று தெரியவில்லை. மகனின் முகத்தினை இறுதியாய் ஒருதடவை இவர்கள் பார்ப்பார்களா என்றும் தெரியவில்லை. இவர்களுக்கு எதுவுமே சாதகமாய் நிகழவில்லையெனில் என்ன செய்யப் போகிறோம் என்றும் புரியவில்லை. இவ்வார இறுதியில் லியோவிற்கு இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.

ஒட்டுமொத்த தமிழகத்தின் இயக்கங்களும், கட்சிகளும் எழுந்து நின்றால் ஒழிய இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கிடைக்காது.

என்ன செய்யப் போகிறது தமிழ்ச் சமூகம்?
 

இப் பெற்றோர்களை மகனது இறுதிச் சடங்கிற்கு அனுப்பும் கோரி அனுப்பக் கூடிய கடிதம்

 

------------

 

sent the mails to the below IDs:
immigration.india@dfat.gov.au
minister@immi.gov.au

==============
Subject: Please issue visa to the family of Leo Seemanpiallai
==============
Dear Sir,
As you know that, asylum seeker Leorsin Seemanpillai, 29, died last Sunday after taking his own lifei Australia.
The Tamil feared being returned to Sri Lanka because he thought he faced persecution from authorities.
Read the entire story here:
http://www.theguardian.com/.../the-life-and-awful-death...

His family who live in a refugee camp in Tamil Nadu in southern India say they fear for their safety if the funeral is held in Srilanka.
They are seeking visas to attend the funeral in Australia.
They said '“We want to be by our son’s side when his funeral takes place. That way our lives will be more peaceful.”

We Tamil community kindly request you to arrange the visa immediately on mercy basis.

Thanks

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை செல்லும் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு.. சென்னை-சிட்னி-சென்னை-கொழும்பு என்று விமானச் சீட்டு வாங்கி செல்ல முடியாதா? இப்படிச் செய்தால் அவுஸ் விசா தரமாட்டார்களா? தர்க்க அடிப்படையில் கொழும்பு செல்வதாகத்தானே அது இருக்கும்?  :unsure: பிறகு சென்னையில் இறங்கிக் கொள்ள ஏதாவது வழி கண்டுபிடித்தால் சரி. ஆனாலும் கஷ்டம் தான்.

அவர்கள் இலங்கை சென்று அவுஸ்திரேலிய விசா எடுத்தே செல்ல முடியும்.....அவர்கள் இலங்கை சென்றாலும் அவுஸ்திரேலியா கொடுக்குமா?

முதலாவது இந்தியாவிலிருந்து exit visa எடுக்க வேண்டும்..அதன் போது எவ்வளவு இவர்களிடம் கறக்க முடியுமோ அவ்வளவும் கறப்பார்கள்.......ஆனால் அவர்கள் அதன் பின் இந்தியா திரும்பவும் முடியாது....

மிகவும் மனவருத்தமான நிலை...

 

அகதியாக இருப்பவர்களிடம் இவ்வளவிற்கும் செலவு செய்யவும் எதுவித பணமும் இருக்காது....

Edited by naanthaan

இலங்கை செல்லும் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு.. சென்னை-சிட்னி-சென்னை-கொழும்பு என்று விமானச் சீட்டு வாங்கி செல்ல முடியாதா? இப்படிச் செய்தால் அவுஸ் விசா தரமாட்டார்களா? தர்க்க அடிப்படையில் கொழும்பு செல்வதாகத்தானே அது இருக்கும்?  :unsure: பிறகு சென்னையில் இறங்கிக் கொள்ள ஏதாவது வழி கண்டுபிடித்தால் சரி. ஆனாலும் கஷ்டம் தான்.

இல்லை இசை. அது சாத்தியமில்லை. சிங்களவன் All countries Passport இந்தியாவில் வைத்து கொடுக்கமாட்டான். ஒருமுறை இலங்கை செல்வதற்கான தற்காலிக கடவுச்சீட்டு மட்டும் வழங்குவார்கள். கொழும்பு போய்  All countries கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது இழுத்தடிப்பார்கள். மொத்தத்தில் அவுசும் இலங்கையும் அவர்கள் அவுஸ் செல்வதை விரும்பவில்லை.

பாதை மிகவும் கடினமானது. எமக்கென்று ஒரு நாடு கிடைக்கும்வரை எமது நிலை கவலைக்கிடம்தான் இசை. 

  • கருத்துக்கள உறவுகள்

They will never get their VISA from what I know about DIPB and Scott Morrison. AUS fears the parents or his bro will not go back. I believe his bro has got a 3 months visa now. Mods Sorry for Eng as on mobile device.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.