Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டடைந்த கடவுள் துகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்டடைந்த கடவுள் துகள்

ப.ரகுமான்

P.%20Rahman%20(1).jpg

“மனித குலத்தின் கடந்த கால அனுபவத்தை அவசியம் நம்ப வேண்டும் என்பதல்லாமல், புதிய நேரடி அனுபவத்தின் மூலம் மீண்டும் சோதித்துப் பார்ப்பது பயனுள்ளது என்ற கண்டுபிடிப்பின் விளைவுதான் அறிவியல்.”

ஃபெய்ன்மேன்

(1966ம் ஆண்டில் நியூயார்க் நகரில் தேசிய அறிவியல் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஆண்டுக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் இருந்து...)

அறிவியல் என்றால் என்ன? உண்மையில் இதற்கு விளக்கம் தேவையில்லை. அறிவியல் என்ற சொல் அதனளவிலேயே (அறிவு+இயல்) விளக்கத்தைக் கொண்டது. அறிவு என்பது வேறு; அறிவியல் என்பது வேறு. குழந்தை ஊர்ந்து, தவழ்ந்து அதன் பிறகுதான் நடைபோடுகிறது, ஓடுகிறது. ஒவ்வொரு குழந்தையும் ஊர்ந்து, தவழ்ந்து அதன் பிறகுதான் நடக்கவும், ஓடவும் முடியும்.

ஆனால் மின்சாரம் என்றால் என்பதை ஒவ்வொரு மனிதரும் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. ஏனெனில் அது அறிவியல். தொகுக்கப்பட்டு கைமாற்றி வழங்கப்பட்டிருக்கும் அறிவு. அறிவைத் தொகுக்கும்போது அது ஒரு இயல் ஆகி விடுகிறது. சமூக அறிவியல், அரசியல் அறிவியல் என்று சொல்லும்போது அதைத்தானே குறிக்கிறோம். சமூகம் தொடர்பான அறிவைத் தொகுத்துக் கொண்டு கற்கும்போது, அது சமூகஅறிவியல் ஆகிவிடுகிறது. அரசியல் அறிவைத் தொகுத்துக் கொண்டு படிக்கும்போது அது அரசியல் அறிவியல் ஆகிவிடுகிறது.

அறிவைத் தொகுப்பதால் மட்டும் அறிவியலாகி விடுவதில்லை. கூடிவாழ்பவர்களுக்கும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அது கைமாற்றிக் கொடுக்கப்படவும் வேண்டும். ஆதியில் மனிதன் பெற்றதெல்லாம் அறிவுதான். அது தொகுக்கப்பட்டு கைமாற்றிக் கொடுக்கப்பட்டபோதே அறிவியல் உருவாகிவிட்டது. ஆதியில் அறிவின் தொகுப்பு எப்படிக் கைமாற்றிக் கொடுக்கப்பட்டிருக்க முடியும்? நம்பிக்கைகளின் தொகுப்பாகத்தான்.

நம்பிக்கைகளின் தொகுப்பாக அறிவியல் மாறும்போது, அது பெரும் இடர்ப்பாட்டையும், இடையூறையும் எதிர்கொள்கிறது. நம்பிக்கைகளின் தொகுப்பாக அது கைமாற்றித் தரப்படும்போது, அறிவீன இயலாக மாறும் சாத்தியத்தை தன்னுள் எப்போதும் கொண்டிருக்கிறது. அதை எப்படித் தடுப்பது?அறிவீன இயலாக மாறிவிட்ட பிறகு எப்படிச் சரிசெய்வது?

அறிவியல் முறை (scientific method) என்பதோடு இணைத்து, அறிவியல் என்பதற்கு நாம் நடப்பில் வைத்திருக்கும் வரையறை இந்தத் தேவையிலிருந்தே பிறக்கிறது. நம்பிக்கைகளின் தொகுப்பிலிருந்து அறிவியலைப் பிரித்துவிட்டால் எஞ்சியவை அனைத்தும் ஒழிந்துவிடுகிறதா என்ன? இல்லை பண்பாடாகவும் மதமாகவும் இன்னபிற நம்பிக்கைகளின் தொகுப்பாகவும் அது வடிவங் கொள்கிறது. மிகமுக்கியமாக அன்றாட அறிவு என்ற வகையிலும் தொடர்கிறது.

அறிவியல் துறைக்குள் காலடி எடுத்து வைக்க, அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள முதலில் செய்ய வேண்டியது, அதுவும் முதன்மையாகச் செய்ய வேண்டியது, அன்றாட அறிவைக் கேள்விக்குள்ளாக்குவதும் அன்றாட அறிவைக் கடந்து செல்வதும்தான். அன்றாட அறிவைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலமாகவே அன்றாட அறிவைக் கடந்து செல்ல முடியும். இரவு (இவ்வளவு) இருளாக இருப்பது ஏன்? இந்த கேள்வி எடுத்த எடுப்பில் கேலிக்குரியதாகத் தோன்றலாம்.

காரணம் இரவு இருளாக இருப்பது என்பது, கேள்விக்கிடமற்ற அன்றாட அறிவு. இதைக் கேள்விக்கிடமற்ற அன்றாட அறிவு என நாம் கருதலாம். ஆனால் நவீன இயற்பியலைப் பொறுத்தவரை இன்னும் விடை காணமுடியாத மிகமுக்கியமான தேடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. அன்றாட அறிவையே நல்லறிவுப் பார்வை என்று நம்பிக் கொண்டிருக்கும் வரை இப்படிப்பட்ட கேள்விகள் எழ வாய்ப்பில்லை. ஆதியில் அன்றாட அறிவாக இருந்த அறிவியல் வளர்ந்ததோ இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பித்தானே!

அன்றாட அறிவு என்பது “பொதுப் புத்தி” (காமன் சென்ஸ்) என்ற வடிவில் நடைமுறை அனுபவங்களை பொதுமைப்படுத்தி உருவாகிறது. உலகை முதன்முதலில் வலம் வந்து உலகம் உருண்டை என நிரூபித்தவர் மெகல்லன். ஆனால், மெகல்லனின் சமகாலத்தவர்களோ, உலகைச் சுற்றி வரும் கடற்பயணம் என்ற அவரது யோசனையை கடுமையாக எதிர்த்தார்கள். எதிர்த்தவர்களின் முதன்மையான வாதம் அன்றாட அறிவை அடிப்படையாகக் கொண்டதுதான்.

ஒரே திசையில் ஒருவர் நேர்கோட்டிலேயே பயணம் செய்தால் புறப்பட்ட இடத்தை எப்படி அடைய முடியும்? அது எப்படி சாத்தியம் என அவர்கள் ஆத்திரத்தோடு கேள்வி எழுப்பி னார்கள். அவர்களைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட கருத்தே கேலிக்குரியது. ஏனெனில் அவர்களால் அதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் எதார்த்தமோ மெகல்லனது கருத்துதான் சரி என நிரூபித்தது.

P.%20Rahman%20(2).jpg

பூமி உருண்டை என்ற கருத்து இப்படித்தான் நிராகரிக்கப் பட்டது. பூமி உருண்டை என்றால் எதிரெதிர் நிலமுகடுகளில் வசிக்கும் மக்கள் தலைகீழாக அல்லவா நடக்க வேண்டியிருக்கும்! கடல்நீர் கொட்டி விடாதா என்றும் ஆட்சேபம் எழுப்பப்பட்டது. ஆனால் இன்றோ உலகம் உருண்டை என்பது பள்ளிப் பிள்ளைகளுக்குக் கூடத் தெரிந்த சர்வ சாதாரண விஷயம். அன்றாட அறிவோ பொதுப் புத்தியோ விதிக்கும் வரம்பு களுக்குள் நின்று சிந்திக்க மறுத்தவர்களே எல்லா காலகட்டத்திலும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் என்பதுதான் வரலாறு உந்திச் செ(சொ)ல்லும் உண்மை...

கற்களை பயன்படுத்தி, கருவிகளையும் செய்து வேட்டை யாடிய காட்டு மாந்தர்கள் நெருப்பையும் உலோகத்தையும் சக்கரத்தையும் நெம்புகோலையும் கண்டடைந்து பயன்படுத்திய ஆதி மனிதர்கள் உழவுத் தொழிலுக்கு முன்னேறி ஏடறிந்த வரலாற்றுக்குள் நுழைந்த பிறகும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டவர்களே. இந்த வரலாற்றின் அடிச்சுவட்டை பற்றி பின்னோக்கிச் சென்றால்..

வாழ்வின் தேவைகளுக்காக தொழில்நுட்பத் தேடலால் உந்தப்பட்டு எகிப்தியர்கள், சுமேரியர்கள் (மெசபடோமியர்கள்), சீனர்கள், சிந்துவெளி நாகரிகத்தினர் அடைந்த அறிவியல்.அரிஸ்டாட்டில், ஆர்க்கிமிடிஸ், டெமாக்ரிட்டஸ், எபிகூரஸ், பித்தகோரஸ், ஹெராக்ளிட்டஸ் போன்றோரை உள்ளடக்கிய கிரேக்கப் பாரம்பரியத்தால் வளர்த்தெடுக்கப்பட்டு அரேபியர்களால் சுடர்விட்டுப் பிரகாசித்தது.

P.%20Rahman%20(3).jpg

அரிஸ்டாட்டிலிய சிந்தனைமரபு கெட்டித்தட்டி அறிவியலின் வளர்ச்சிக்கு எதிராக மாறிய பிறகோ அன்றாட அறிவை கேள்விக்குள்ளாக்கி அதைக் கடந்து சென்றதன் மூலம்தான்...பாரம்பரிய இயற்பியல் (classical physics) கட்டுடைத்துக் கொண்டு கிளர்ந்தெழுந்தது. ஒரு நாணயத்தை தரையில் உருளவிட்டால் அது ஓடி விழுந்து ஓய்ந்து விடும்.

வானத்தை நோக்கி விட்டெறியும் கல்லோ உயர உயரப் பறந்தாலும், கீழே விழுந்து ஓய்ந்து விடுகிறது. இதை காலங்காலமாக அவதானித்து வரும் மாந்தர்கள், “பொருளின் இயல்பான நிலவரம் ஓய்ந்திருப்பதே.’’ பொருள்களுக்கு ஓய்வே அடிப்படை நிலை என்று முடிவு கட்டினர். இந்த அன்றாட அறிவை கேள்விக்குள்ளாக்கியதே கோப்பர்நிக்கஸ், கலிலியோ, நியூட்டன் பாரம்பரியம்.

“விண்மீன்கள் நிரம்பிய வானை, நீண்ட கால இடைவெளிகளில் நோக்கி ஆய்வு செய்தபோது, வெளிப்படையாக தெரிந்த கோள்களின் இயக்கம் மிகவும் சிக்கலானதாக இருந்தது. முதலில் கோள்கள் முதலில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகர்ந்தன. பின்னர் திடீரென நகர்வை நிறுத்தி பின்வாங்கின. மீண்டும் அவை கிழக்கு நோக்கி நகரத் தொடங்கின. கோள்களின் தனிச்சிறப்பான இந்த சுழல் இயக்கம், வெறும் தோற்றப் பிழை மட்டுமே. சூரியனைச் சுற்றி வரும் பூமியில் இருந்து அவற்றை பார்க்கிறோம் என்பதில் இருந்து உருவாகும் தோற்றப் பிழை. இந்த புலப்பாட்டை சரியாகப் புரிந்து கொண்டு, அடிப்படையானதொரு முறையியல் கோட்பாட்டை (methodological principle) இயற்கை ஆய்வுத் துறைக்கு அறிமுமுகப்படுத்தியவர் கோப்பர்நிக்கஸ்தான்.

P.%20Rahman%20(4).jpg

நாம் நேரடியாக நோக்குபவற்றிலிருந்து மாறுபட்டதாக உலகம் இருக்கலாம். தற்சான்றாகத் தோன்றுவதன் பின்னணியில் மறைந்துள்ள புலப்பாட்டின் உண்மைத் தன்மையை நிறுவுவது அறிவியலின் கடமை என்பதுதான் அந்த முறையியல் கோட்பாடு. உலகின் சூரிய மையக் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்த இந்த கோட்பாடுதான் நவீன இயற்கை அறிவியல் முழுமைக்கும் அடிப்படையாக அமைந்தது.” என்கிறார் அறிவியலாளர் காமரோவ்.

அதைத் தொடர்ந்து “அறிவியல்பூர்வமான காரண-காரிய ஆய்வினை கலிலியோ கண்டுபிடித்து பயன்படுத்தியதானது, மனித சிந்தனையின் வரலாற்றில் மிகமுக்கியமான சாதனைகளில் ஒன்று. அதுதான், இயற்பியலின் உண்மையான தொடக்கத்தை குறிக்கிறது. உடனடியாக நோக்கியறிந்தவற்றின் அடிப்படை யிலான உள்ளுணர்வு சார்ந்த முடிவுகள் எப்போதுமே நம்பத்தகுந்தவை அல்ல. சில நேரங்களில் அவை தவறான துப்புகளுக்கு (clues) இட்டுச்சென்றுவிடும் என்பதை நமக்குக் கற்பித்தது கலிலியோவின் கண்டுபிடிப்புதான்” என்கிறார் ஐன்ஸ்டீன். (இயற்பியலின் பரிணாம வளர்ச்சி ஐன்ஸ்டீன்+லெப்போல்டு இன்ஃபெல்டு).

பாரம்பரிய இயற்பியல் (Classical physics) உருவானதும் இதன் அடிப்படையில்தான். ஓய்வல்ல இயக்கமே அறுதியானது என்ற பேரண்ட உண்மையை மாந்த இனம் விளங்கிக் கொண்டதே இந்த பாரம்பரியத்தின் அழிக்க முடியாத பெருமை. இடப்பெயர்ச்சி தொடர்பான இயக்கம் மட்டுமல்ல.

முரண்பாடுகள் முட்டிமோதுதல் அளவு மாற்றமடைதல் பண்பு மாற்றமடைதல் ஒரு நிலையை மறுத்து புதிய நிலை உருவாதல், அந்த நிலையை மறுத்து வேறு ஒரு புதிய நிலை உருவாதல் என பொருட்களின் ஒட்டுமொத்த இயக்கத்தை இயற்கையின் இயக்க இயலை அறிவின் இயலில் பிரதிபலித்த பாரம்பரியம் இது. வெளியும் அறுதியானதல்ல, காலமும் அறுதியானதல்ல. ஒளியின் வேகமே பிரபஞ்சத்தின் வரம்பு வேகம். அறிவியலின் விதிகள் எப்போதும் மாறுவதில்லை என்ற ஐன்ஸ்டீனின் சார்பியல் வழியாகப் பயணித்து, நவீன இயற்பியலின் உச்சமாக குவாண்டம் இயங்கியலை நாம் அடைந்ததும் அன்றாட அறிவைக் கேள்விக்குள்ளாக்கியதன் மூலமே. மண்ணைப் பொன்னாக்கும் ரசவாத வித்தையில் இருந்து ரசாயனவியலாக வேதியியல் முகிழ்த்தெழுந்ததும் கூட எப்படி? காற்றில் உள்ள ஃபுளோஜிஸ்தான் என்ற பொருளே தீப்பிடித்து எரிதலுக்குக் காரணம் என்பது எப்போது பொய்ப்பிக்கப்பட்டதோ பருப்பொருளின சாரமான “நிறைக்கு அழிவில்லை” என்ற விதி எப்போது நிறுவப்பட்டதோ அப்போதுதான் “மூலக்கூறு நிலைமாற்றங்களின் அறிவியலான” வேதியியல் முறையான அறிவியல் புலமாக நிலைமாற்றம் அடைந்தது.

அணுக் கொள்கை தனிமங்களின் ஆவர்த்தன அட்டவணை கரிமச் சேர்மங்களின் அமைப்பு என்ற வேதியியலின் வளர்ச்சி “மூலக்கூறு உயிரியல்”, “உயிரிவேதியியல்” மரபணுக்களின் (ஜீன்) மறைமொழியை படித்தறியும் மனித அறிவு செயற்கை உயிரிகளை உருவாக்கும் முயற்சி என உயிரியலிலும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளதே அன்றாட அறிவைக் கடந்து செல்லாமல் அது எப்படி சாத்தியமாகி இருக்கும்? இந்த அறிவியல் வரலாற்றின் ஊடே பயணிக்க நீங்களும் தயாரா?

http://uyirmmai.com/Contentdetails.aspx?cid=6513

  • கருத்துக்கள உறவுகள்

Oh! Utter waste of time.  What has happened to God Particles?

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் துகளைத் தேடிப்பானா.. அங்கிணை.. தேடாதது எல்லாம் கிளம்பி வருகுது. மூடிட்டாங்க. கடவுளைத் தேடின.. மிசின் களைச்சுப் போச்சாம்..! :lol::icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.