Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருக்கள் மடம் சம்பவம்: (முஸ்லிம்களின்) சடலங்களை தோண்ட நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு குருக்கள் மடம் பகுதியில் வைத்து கடந்த 1990ஆம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் இடத்தினை எதிர்வரும் முதலாம் திகதி தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றம்  திங்கட்கிழமை(23)  களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் ஏ.எம்.றியாழ் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

கல்முனையிலிருந்து கடந்த 1990ஆம் ஆண்டு காத்தான்குடி நோக்கிச் சென்ற 165 பேர் குருக்கள்மடம் பகுதியில் வைத்து கடத்திச்செல்லப்பட்டதுடன் இவர்கள் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.  இவ்வாறு புதைக்கப்பட்டவர்களின்  சடலங்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய மார்க்க முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு காத்தான்குடி நகரசபை உறுப்பினர் மஜீத் ஏ றவூப் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 22.4.2014 அன்று முறைப்பாடு செய்தார்.

தனது உறவினர்கள் இருவர் இதில் கடத்திக் கொல்லப்பட்டு  இருப்பதாகவும் அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து களுவாஞ்சிகுடி பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திங்கட்கிழமை(23) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே முறைப்பாட்டாளரான காத்தான்குடி நகரசபை உறுப்பினர் மஜீத் ஏ றவூப், தமது உறவினர்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தினை களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அடையாளப்படுத்தியதாக தெரிவித்தார்.

பொலிஸார் கேட்டுக்கொண்டதற்கிணங்கள எதிர்வரும் (1) செவ்வாய்க்கிழமை உரிய இடத்தினை தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு நீதவான் றியாழ் உத்தரவிட்டார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/115418-2014-06-24-03-12-23.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.