Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டிஜிட்டல் தொலைக்காட்சி ஒளிபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற ஆண்டு டிசம்பர் 31ம் திகதியுடன் ஆவுஸ்திரேலியாவில் ஆரம்பகால தொலைகாட்சி ஒளிபரப்பு (broadcast) முறையான ‘அனலாக்' (analogue) ஒளிபரப்பு முற்றாக நிறுத்தப்பட்டது. இதன் மூலம் ஆவுஸ்திரேலியாவில் ‘டிஜிட்டல்’ (digital) தொலைக்காட்சி ஒளிபரப்பின் அறிமுகம் பூர்த்திசெய்யப் பட்டுள்ளது.

தொலைக்காட்சி ஒளிபரப்பின் தொழில்நுட்ப பின்னணியையும் டிஜிட்டல் ஒளிபரப்பின் அனுகூலங்களையும் விளக்கும் ஒரு கட்டுரை இது.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒலி, ஒளி என இரு வேறு சமிஞ்சைகளை (signals) கொண்டுள்ளது. ஒலி அலைகள் ஒலி வாங்கிகள் மூலம் (microphone) பெறப்பட்டு மின்னியல் (electrical) சமிஞ்சைகளாக மாற்றப் படுகிணன்றன. காட்சிகள் ஓளிப்பட கருவிகள் (camera) மூலம் பெறப்பட்டு மின்னியல் சமிஞ்சைகளாக மாற்றப் படுகின்றன. நேரடி ஒளிபரப்பானால் (உதாரணம் – செய்தி வாசிப்பு) ஒளிபரப்பு வலையமைப்பு (broadcast network) மூலம் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு அனுப்பப்படுகின்றன. அல்லது சேமிப்பு ஊடகங்களில் (storage media) பதிவு செய்யப் படுகின்றன.

tv-station.png

டிஜிட்டல் தொழில்நுட்பம் ஒலி / ஒளி சேமிப்பு ஊடகங்களில் பலகாலமாகவே பாவனையில் உள்ளது. நுகர்வோர் பாவனையில் VCD, DVD, Blu-ray மற்றும் Hard disk, Flash memory ஊடகங்கள் எல்லோருக்கும் பரீட்சயமானவை. (அனாலாக் சமிஞ்சைகளை டிஜிட்டல் சமிஞ்சைகளாக மாற்றும் தொழில்நுட்பம் பற்றி பின் ஒரு கட்டுரையில் பார்ப்போம்.) ஒளிபரப்பு வலையமப்பில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அறிமுகம் சிலவருடங்களுக்கு முன்னமே ஆரம்பமானது. இதன் மெதுவான அறிமுகத்திற்கான பிரதான காரணம், ஒளிபரப்பு நிலையங்கள் (broadcast station) மட்டுமன்றி, வீடுகளில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளும் மாற்றப் படவேண்டும். அவுஸ்திரேலியாவில் டிஜிட்டல் ஒளிபரப்பு முதன் முதலில் 2001ம் வருடம் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பமானது. கட்டம் கட்டமாக ஒவ்வொரு பிராத்தியத்திற்கும் அறிமுகப்படுத்தப்பட்டு அனலாக் ஒளிபரப்பு நிறுத்தப்பட்ட்து. 2013ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி அவுஸ்திரேலியாவின் கடைசி அனாலக் ஒளிபரப்பு நிலயம் தனது சேவையை நிறுத்தியது.

தொழில்நுட்பப் பின்னணி

தொலைக்காட்சி ஒளிபரப்பானது ஒலி/ஒளி சமிஞ்சைகளை ஒர் உயர் அதிர்வெண் (frequency) கொண்ட மின்காந்த அலைகளின் (electromagnetic waves) மேல் பண்பேற்றம் (modulate) செய்யப்பட்டு வான்வழியே அனுப்புவதன் மூலம் மேற்கொள்ளப் படுகின்றது. இந்த உயர் அதிர்வெண் அலைகள் எமக்குத் தேவையான ஒலி/ஒளி சமிஞ்சைகளை வான்வழியே காவிக்கொண்டு வருவதால் இவை ‘காவி அலைகள்’ (carrier waves) எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த காவி அலைகளின் அதிர்வெண்களைக் கொண்டு தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கான அலைவரிசைகள் (channel) வகுக்கப் பட்டுள்ளன.

ஒவ்வொரு ஒளிபரப்பு நிலையத்திற்கும் ஒரு அலைவரிசை வழங்கப்படும். ஒளிபரப்பு நிலையம் தன் ஒளிபரப்பு கருவியின் (transmitter) வலுவிற்கு (power) ஏற்ப ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு தனது சேவையை ஒளிபரப்பு செய்யும். அலைவரிசைகளை நிலையங்களுக்கிடையில் பங்கீடு செய்யும் போது அருகில் உள்ள பிராந்தியங்களுக்கு ஒன்றோடொன்று குறுக்கீடு (interfere) செய்யாதவகையில் வேறு வேறு அலைவரிசைகளை தேர்வு செய்து வழங்க வேண்டும். குறித்த ஒரு அலைவரிசை அதன் அண்மையில் இல்லாத வேறு ஒரு பிராந்தியத்திற்க்கு மீளவும் வழங்கப் படலாம். தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கான VHF (very high frequency - 30 to 300 MHz) அலைவரிசை தொகுதி (band) அவுஸ்திரேலியாவில் 13 அலைவரிசைகளாக (channels) வகுக்கப் பட்டுள்ளது. இந்த 13 அலைவரிசைகளும் நாடு முழுவதிலும் உள்ள நிலையங்களுக்கு முன்னர் விளக்கிய முறைக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் இந்தப் பணியை ACMA (Australian Communications and Media Authority) அமைப்பு செய்து வருகிறது.

டிஜிட்டல் ஒளிபரப்பு அறிமுகம் பூர்த்திஅடையும் வரை (3 வருடங்கள்) அனாலாக் ஒளிபரப்பு சேவைகளை தொடரவெண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் டிஜிட்டல் ஒளிபரப்பிற்கு UHF (ultra high frequency – 300 to 3,000 MHz) அலைவரிசை தொகுதி தேர்வு செய்யப்பட்டது. இது தவிர UHF அலைவரிசை தேர்விற்கு வேறு சில தொழில்நுட்ப காரணங்களும் அனுகூலங்களும் உள்ளன. UHF அலைவரிசை தொகுதியானது அவுஸ்திரேலியாவில் 42 அலைவரிசைகளை கொண்டுள்ளது. இவை தொலைக்காட்சி நிலயங்களுக்கு ACMAயினால் பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளது.

 

ஏன் டிஜிட்டல் ஒளிபரப்பு?

சற்றே நீண்ட அறிமுகத்திற்குப் பிறகு, டிஜிட்டல் ஒளிபரப்பின் நன்மைகளையும் அனுகூலங்களையும் பார்ப்போம்.

அனாலாக் ஒளிபரப்பு முறையில் ஒரு அலைவரிசயில் ஒரு சேவையை (service) மட்டுமே வழங்கமுடியும். டிஜிட்டல் ஒளிபரப்பு முறையில் ஒன்றிற்கு மேற்பட்ட சேவைகளை வழங்க முடியும்.

multiplexing.png

இது தொழில்நுட்பரீதியாக மட்டுமன்றி வியாபாரரீதியாகவும் ஒரு மிகப்பெரிய அனுகூலமாகும். இது ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு ஒளிபரப்பு காலத்தை (air time) சிறிய முதலீட்டுடன் பன்மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. ஒளிபரப்பு மூலம் கிடைக்கும் வருமானம் ஒளிபரப்பு காலத்திற்கு நேர்விகித சமனானது. உதாரணமாக ABC நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் அவர்கள் ABC2/ABC4, ABC3, ABC News 24 என மூன்று புதிய தொலைக்காட்சி சேவைகளையும் Dig Music, ABC Jazz என இரு வானொலி சேவைகளையும் ஒரே UHF அலைவரிசையில் வழங்குகிறார்கள். தொலைக்காட்சி அலைவரிசயில் வானொலி சேவையை வழங்குவது இன்னுமொரு புதிய பொறிமுறை. இதன் அறிமுகத்திற்கு காரணம் இதற்கு மிக மிகச் சிறிய முதலீடு மட்டுமே தேவை. ஆனால் வருமான வாய்ப்புக்களும் வியாபார அனுகூலங்களும் அதிகம். தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் புதிய சேவைகளையும் 24 மணிநேர விளம்பர சேவைகளையும் அறிமுகப்படுத்தி உள்ளன.

ஒலி/ஒளி தரம்

டிஜிட்டல் ஒளிபரப்பில் காட்சிகளினதும் ஒலியினதும் தரம் (quality) ஒளிபரப்பின் போது பங்கம் (deteriorate) அடைவது ஈடுசெய்யப்படுகின்றது. இது நெயர்களுக்கு தரமான சேவைகளை வழங்குவதை உறுதிப்படுத்துகிறது. டிஜிட்டல் சமிஞ்சை ஒலி/ஒளி தகவல்களுடன் ஒளிபரப்ப்பின் போது சமிஞ்சைகளிக்கு ஏற்படுக்கூடிய பங்கத்தை கண்டுபிடிப்பதற்கும் (error detection) தானாகவே திருதிக்கொள்வதற்கும் (error correction) தேவையான கூடுதல் தகவல்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் ஒளிபரப்பில் ஏற்படும் குறைகளை டிஜிட்டல் தொலைகாட்சி தானாகவே சரி செய்துகொள்ளும்.

கூடுதல் தகவல்கள்

சமிஞ்சைகளில் ஏற்படும் குறைகளை திருத்துவதற்கான தகவல்களைவிட, மேலும் நேயர்களுக்கு உபயேகமான தகவல்கள் பலவும் டிஜிட்டல் சமிஞ்சையில் உள்ளடக்கப் படுகின்றன. இருவழி (stereo) மற்றும் 5.1 பலவழி (multi-track), பல மொழி (multi-lingual) ஒலி சமிஞ்சைகள், உப தலைப்புக்கள் (subtitles), இலத்திரனியல் நிகழ்ச்சி கால அட்டவணை (electronic program guide - EPG), நிகழ்சிகளின் தரம் சம்மந்தமான வகைப்படுத்தல் விபரம் (content rating) என்பனவும் சேர்த்து ஒளிபரப்பப்படுகின்றன. இருவழி ஒலி தவிர ஏனையவை அனலாக் ஒளிபரப்பில் சாத்தியமில்லை. இது டிஜிட்டல் ஒளிபரப்பினால் நெயர்களுக்கான புதிய சேர்க்கைகள்.

உயர் துல்லியமான (high definition - HD) காட்சிகளை ஒளிபரப்ப முடிவது டிஜிடல் ஒளிபரப்பின் இன்னுமொரு புதிய வரப்பிரசாதமாகும்.

ஒரே அதிர்வெண் வலைஅமைப்பு

அனலாக் ஒளிபரப்பில் அருகருகே இருக்கும் இருவேறு ஒளிபரப்பு நிலையங்கள் இருவேறு அதிவெண்கள் கொண்ட அலைவரிசைகளை பயன்படுத்த வேண்டுமென முன்னர் பார்த்தேம். ஆனால் டிஜிட்டல் ஒளிபரப்பில் அருகருகே இருக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட நிலயங்கள் ஒரே அதிர்வெண்கொண்ட அலைவரிசயை பயன்படுத்தி இயங்க முடியும்!

sfn.png

இது சில தொழில்நுட்ப நியதிகளுக்கமைய நிலயங்களை அமைப்பதன் மூலம் சாத்தியமாகிறது. அலைவரிசைகள் இயற்கை வளங்கள் போல் மட்டுப்படுத்தப் பட்ட வளங்கள். எனவே ஒரே அதிர்வெண் அலைவரிசைகளை மேலும் சரளமாக மீள உபயேகிக்க முடிவது ஒரு தேசிய அளவிலான அனுகூலம்.

ஒளிபரப்பு செலவு

ஒரு குறித்த பிராந்தியத்திற்கு சேவையை வழங்குவதற்கு தேவையான ஒளிபரப்பு வலு (transmit power) அனலாக் ஒளிபரப்பைவிட டிஜிடல் ஒளிபரப்பில் பல மடங்கு குறைவு. இதனால் டிஜிடல் ஒளிபரப்பு சாதனாத்தின் அளவும் அது இயங்கும் போது வெளிவிடும் வெப்பத்தின் அளவும் குறவு. மொத்தமாக ஒரு நிலையத்தை இயக்குவதற்கு தேவையான எரிபொருள் செலவு மிக மிக குறவானதாகும். இது தொலைக்காட்சி சேவை நிறுவனத்தை நடாத்தும் (operating) செலவினை குறைக்கும்.

 

டிஜிட்டல் தொலைகாட்சி பெட்டிகள்

டிஜிட்டல் ஒளிபரப்பினை அனலாக் தொலைக்காட்சிகளில் பார்க்க முடியாது. எனவே டிஜிட்டல் தொலைக்காட்சிகள் சந்தைக்கு வந்தன. பெரும்பாலான டிஜிட்டல் தொலைக்காட்சிகளில் ஆனலாக் சேவைகளையும் பார்க்க முடியும். நெயர்களுக்கு டிஜிட்டல் தொலைக்காட்சி வாங்கும் செலவை குறைப்பதற்கு அல்லது பின்போடுவதற்கு வசதியாக டிஜிட்டல் சமிஞ்சைகளை பெற்று அனாலக் தொலைகாட்சிக்கு எற்றவாறு மாற்றித்தரும் கருவிகளும் (set top box / digital television receiver) சந்தையில் அறிமுகமாகின. இவைபற்றி வாசகர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என்பதால் அதிகம் விளக்கத் தேவையில்லை என் நினைக்கிறேன்.

டிஜிட்டல் ஒளிபரப்பு நியமங்கள்

டிஜிட்டல் ஒளிபரப்பு செய்வதற்கும் பல்வேறு நியமங்கள் (standards) உள்ளன. ஒரு நாட்டில் டிஜிட்டல் தொலைக்காட்சி சேவையை நடாத்துவதற்கு ஒரு ஒளிபரப்பு நியமத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அவுஸ்திரேலியாவில் DVB-T (Digital Television Broadcast for Terrestrial) என்னும் ஐரேப்பிய நியமத்திற்கு அமைவாகவே சேவைகள் ஒளிப்ரப்பப்படுகின்றன. நெயர்களின் தொலைகாட்சிப் பெட்டிகளும் இந்நியமத்திற்கு அமைவானவயாக இருத்தல் அவசியம். இதே ஐரோப்பிய நியமங்களின் வரிசையில் DVB-S செய்மதி மூலமான டிஜிட்டல் ஒளிபரப்பிற்கும் DVB-C கேபிள் மூலமான டிஜிட்டல் ஒளிபரப்பிற்கும் பயன்படுத்தப் படுகின்றன.

ATSC (அமெரிக்கா), DTMB (சீனா) மற்றும் ISDB (ஜப்பான்) என்பன உலகளாவியரீதில் பயன்படுதப்படும் ஏனைய சில நியமங்களாகும். கிழே உள்ள உலகப்படம் டிஜிட்டல் தொலைகாட்சி நியமங்களின் பரம்பலை காட்டுகிறது.

 

dvb-t-world-map.png

[CC] BY SA Wikipedia

[CC] BY SA Wikipedia

வாசகர்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில் ஒர் நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு டிஜிட்டல் தொலைக்காட்சிப் பெட்டிகளை அனுப்பும் போது அல்லது கொண்டுசெல்லும் போது அந்தந்த நாடுகளின் ஒளிபரப்பு நியமங்களை சரிபார்த்துக் கொள்வது ஏமாற்றங்களைத் தவிர்க்கும்.

 

டிஜிட்டல் ஒளிபரப்பு தொலைக்காட்சி வரலாற்றில் இன்னுமொரு முக்கிய மைல் கல். அவுஸ்திரேலியா டிஜிட்டல் ஒளிபரப்பின் அறிமுகத்தை பூர்த்தி செய்திருப்பது நமக்கு பெருமைதானே!

http://www.kathir.com.au/ta/technology/15-digital-television-broadcasting?showall=&start=2

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

HD தொழில் நுட்பமுறையில் வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் போது கண்ணிற்கு குளிர்மையாக இருக்கின்றது.அதிலும் உதைபந்தாட்ட நிகழ்ச்சிகள் இன்னும் பிரமாதம்.

 
இணைப்பிற்கு நன்றி பெருமாள்.
  • கருத்துக்கள உறவுகள்
இணைப்பிற்கு நன்றி பெருமாள்.
 
பயனுள்ள கட்டுரை. இணைப்பிற்க்கு நன்றி பெருமாள்.
முன்னெரெல்லாம், இந்த சற்றலைற்றில் அனலொக், டிஜிற்றல் ஒளிபரப்பைப் பற்றி யாரும் கேட்டால் இப்படி விளக்கமாக சொல்லத்தெரியவில்லை. 
நம் மூத்த உறவினர்கள் யாராவது கேஎட்டால், ஒரு இடத்துக்கு இங்கிருந்து போகும் தெருவை உதாரணமாக காட்டி சொல்வேன். 
 
அனலொக் ஒளிபரப்பு என்றால் ஒரு ட்ரான்ஸ்பொண்டரில் ஒருசணல் மட்டும்; அதாவது சாதாரண ஒருவழிப் பாதையில் ஒரேநேரத்தில் ஒரேஒரு வாகனம் செல்லுவ‌து போன்றது.
 
இதுவே டிஜிற்றல் ஒளிபரப்பு என்றால் ஒரேநேரத்தில் பலவாகனங்கள் செல்லும் மோட்டவே பெருந்தெருவைப் போல் ஒரு ட்ரான்ஸ்பொண்டரில் பல சணல்கள் என்பேன். 
 
 

 

HD தொழில் நுட்பமுறையில் வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் போது கண்ணிற்கு குளிர்மையாக இருக்கின்றது.அதிலும் உதைபந்தாட்ட நிகழ்ச்சிகள் இன்னும் பிரமாதம்.

 
இணைப்பிற்கு நன்றி பெருமாள்.

 

 
முன்பெல்லாம் பெரிய விலை கொடுத்து HD  டிவி வாங்கிவிட்டு செய்திவாசிக்கும் ஒரு பெண்ணின் மிகச்சிறிய முகச்சுருக்கத்தையும் பார்க்கக்கூடியதாக உள்ளதாக அலட்டிக்கொள்வார்கள்.. ஆனால் அப்போதெல்லாம் SKY channels தவிர வேறுயாரும் HDயில் ஒளிபரப்பியது கிடையாது. HD ready  என்றுதான் கடைக்காரர்களும் விற்பார்கள்.
 
தற்போது UHDTV, அல்ட்ரா ஹை definition TV என்றும் வந்துவிட்டது. ஆனால் அதன் விலைதான் மிக மிக அதிகம். அதுமட்டுமல்ல, இதன் அடுத்த அடுத்த ஜெனெரேஷன்களும், 4K UHDTV 3840 x 2160 pixels,  8K UHDTV 7680 x 4320  pixels-இது தற்போதைய HDTV ஐவிட 16 மடங்கு துல்லியமானதாம், இவையாவும் வரும் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப் பட இருக்கின்றன‌. 
 
சரி இந்த அல்ட்ரா ஹை definition ஒளிபரப்பு தொடங்கிவிட்டார்களா என்றால் எனக்குத் தெரியாது.
 
யாரும் தலையில் தண்ணீர் ஊற்றாதீர்கள், ஜலதோஷம் வரும் என்று பலகையை வத்துவிட்டு,  பேசாமல் மெஸப்பெத்தேமியா அக்காவின் கணவரின்  பழைய CRT TV கட்சியில் சேருவது பரவாயில்லைப் போல் உள்ளது. 
 
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்பெல்லாம் பெரிய விலை கொடுத்து HD  டிவி வாங்கிவிட்டு செய்திவாசிக்கும் ஒரு பெண்ணின் மிகச்சிறிய முகச்சுருக்கத்தையும் பார்க்கக்கூடியதாக உள்ளதாக அலட்டிக்கொள்வார்கள்.. ஆனால் அப்போதெல்லாம் SKY channels தவிர வேறுயாரும் HDயில் ஒளிபரப்பியது கிடையாது. HD ready  என்றுதான் கடைக்காரர்களும் விற்பார்கள்.

 
தற்போது UHDTV, அல்ட்ரா ஹை definition TV என்றும் வந்துவிட்டது. ஆனால் அதன் விலைதான் மிக மிக அதிகம். அதுமட்டுமல்ல, இதன் அடுத்த அடுத்த ஜெனெரேஷன்களும், 4K UHDTV 3840 x 2160 pixels,  8K UHDTV 7680 x 4320  pixels-இது தற்போதைய HDTV ஐவிட 16 மடங்கு துல்லியமானதாம், இவையாவும் வரும் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப் பட இருக்கின்றன‌. 
 
சரி இந்த அல்ட்ரா ஹை definition ஒளிபரப்பு தொடங்கிவிட்டார்களா என்றால் எனக்குத் தெரியாது.
 
யாரும் தலையில் தண்ணீர் ஊற்றாதீர்கள், ஜலதோஷம் வரும் என்று பலகையை வத்துவிட்டு,  பேசாமல் மெஸப்பெத்தேமியா அக்காவின் கணவரின்  பழைய CRT TV கட்சியில் சேருவது பரவாயில்லைப் போல் உள்ளது. 
 

 

 

அதையேன் பேசுவான்.......உந்த வீடியோக்காரர் கண்டகண்ட புது ரெக்னிக்கிலை  படம் எடுக்கவெளிக்கிட்டு சாமத்தியவீடு கலியாணவீடுவளியை எங்கடை சனம் படுறபாடு கொஞ்சநஞ்சமில்லை.. :(  :(

சுருக்கு மட்டுமில்லை வேறைவேறை பிரச்சனையளும் அச்சடிச்சமாதிரி வெளியிலை தெரியுதாம்..... :o

எங்கடையளின்ரை சீர்சிறப்புக்கு கறுப்புவெள்ளைதான் சரி..... :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.