Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்பெண்ணொருவர் கொல்லப்பட்டு உள்ளார்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்பெண்ணொருவர் கொல்லப்பட்டு உள்ளார்:
02 ஜூலை 2014
woman%201_CI.jpg
 
லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்பெண்ணொருவர் கொல்லப்பட்டு உள்ளார்:
லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டு உள்ளார். இன்று (02.07.14)  அதிகாலை 2.10 மணியளவில் ஏற்பட்ட தீயினால் மரணம் அடைந்த பெண் வீட்டின் முதலாவது தளத்தில்; சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணின் கணவர்  வீட்டில் இருந்து வெளிப்புறமாக பாய்ந்து தீயின் புகையினாலும் காயங்களாலும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
வோத்தம்ஸ்ரோ, வூட்போர்ட், லெயிஸ்ரன் பகுதிகளில் இருந்து சென்ற தீயணப்புப் படை வீரர்கள் அதிகாலை 3.05 மணியவில் தீயைக் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்துள்ளதாகவும் தீயிற்கான காரணம் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கொல்லப்பட்டவர் 55 வயதுடைய தமிழ்ப் பெண்ணொருவர் என அடையாளம் காணப்பட்டு உள்ள போதும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவற்துறையினரால் இதுவரை பெயர் வெளியிடப்படாமையினல் இங்கு பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108841/language/ta-IN/article.aspx
  • கருத்துக்கள உறவுகள்

மின் ஒழுக்கு தான் முக்கியமான காரணமாக இருக்கலாம்.

 

எம்மவர்கள் ஊரில் உள்ளது போல சிக்கனம் பிடிக்கிறம் என்று.. ஆண்டாண்டுக்கு பரிசோதனை செய்து பாவிக்க வேண்டிய மின் உபகரணங்களைக் கூட வருடக்கணக்கில்.. மதிப்பீட்டுக்கு இடமில்லாமல் அவை தாமாக பழுதாகும் வரை.. பாவிப்பது மட்டுமன்றி.. பிரதான மின்குதங்களில் (electrical sockets) பல அடுக்கு குதங்களை திணித்து குறுஞ்சுற்றுக்கள் ஏற்பட வழிவகுப்பதோடு.. இரவில்.. பல மின் உபகரணங்களை  முற்றாக மின் அறுப்புச் செய்யாமல்.. பகுதியாக நிறுத்தி விட்டு.. அல்லது மியூட் செய்துவிட்டு.. பஞ்சியோடு.. படுத்து தூங்கி விடுகின்றனர்.

 

அண்மையில் கிழக்கு லண்டனிலும்.. ஒரு தமிழர் வீடு தீக்கிரையாக.. அவர்களின் தொலைக்காட்சி பெட்டியில் ஏற்பட்ட மின் ஒழுக்கே காரணம். மலிவு விலையில் வாங்கிய புதிய தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றை.. பாவித்த பின் முற்றாக மின் அறுப்புச் செய்யாமல்.. பகுதியாக ஆவ் செய்து வைத்ததால் ஏற்பட்ட குறுஞ்சுற்றில் இருந்து பெறப்பட்ட தீப்பொறியே விபத்துக்கு காரணம் என்று ஊடகங்களுக்கு தீயணைப்புத்துறை கூறி இருந்தது.

 

ஆண்டுக்கு இல்லை என்றாலும்.. உயர் அழுத்த மின் உபகரணங்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தரப் பரீட்சைக்கு.. கார்களுக்கு எம் ஒ ரி செய்வது போல..செய்து பாவிக்கும் வழக்கத்தை எம்மவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 

மேற்கு நாடுகளுக்கு வந்து பேர்த்டே பாட்டி.. சாமத்திய வீடு கொண்டாடுவது அல்ல முக்கியம். வீடும் வாங்குவதல்ல முக்கியம். அந்தந்த நாட்டு நடைமுறைகளை சரியாகப் பின்பற்றப் பழகிக் கொள்வது எல்லாவற்றிற்கும்.. மேலாய் மிக முக்கியம். அதை விடுத்து..  இன்னும் முட்டாள்களாய் இருப்பதில் இருந்து இவர்களின் அறிவுமட்டம் குறித்து சந்தேகமே கிளம்புகிறது. இந்த முட்டாள் தனங்கள் தான் இப்படியான விபத்து மரணங்களுக்கும் சொத்திழப்புகளுக்கும் முக்கிய காரணம். :icon_idea:


'Blunder' fires increasing say Electrical Safety Council
_63067082_n2skkoup.jpg
 
 
The Electrical Safety Council's campaign is being backed by the Chief Fire Officers Association
 

There has been a rise in fires caused by the misuse of appliances in the home, according to the Electrical Safety Council.

 

Common 'blunders'

 

Phil Buckle, director general of the ESC, said: "People think that they are behaving safely but the majority of people we surveyed had put themselves at risk by unknowingly making a safety blunder.

 

"Fires caused by misuse of appliances - the vast majority of which are electrical - are so easy to prevent but they will keep increasing unless people understand the simple things that can and do cause fires."

 

According to the ESC, common "safety blunders" in homes include:

  • Creating a fire hazard by using the microwave as an additional surface and blocking air vents (33% of those surveyed)
  • Increasing the risk of serious fire spreading by leaving the tumble dryer running unattended or overnight (9%)
  • Blocking air vents by failing to clean behind their fridge/freezer (44%)
  • Overloading adaptor sockets, causing an unsafe rise in temperature (16%)
  • Leaving an electrical appliance on while unattended, only to be alerted by a burning smell (9%)

http://www.bbc.co.uk/news/uk-19696912

 

ம்.. இலண்டன் படித்த முட்டாள்களின் செயல்!  :o  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.