Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1வது இனக்கலவரத்தின் 100வது ஆண்டு – யூன் 2015 - ச. வி. கிருபாகரன்

Featured Replies

 
s-v-kirubakaran.jpg
இலங்கைத்தீவில் முதலாவது இனக்கலவரம் நடைபெற்று, அடுத்த ஆண்டு 2015, யூன் மாதத்துடன் 100வது ஆண்டு பூர்த்தியாகிறது.

இத்தீவின் சரித்திரத்தை ஆராயும் வேளையில், இங்கு இனக் கலவரம், சமயக் கலவரம், காலாச்சார கலவரம் போன்றவை பொதுவாக அரசியல் கலப்பு கொண்டதுடன், யாவும் சிங்கள பௌத்தவாதிகளினால், தமிழ், தமிழ் பேசும் முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

இலங்கைத்தீவில் முதலாவது இனக்கலவரம், 1915ம் ஆண்டு யூன் மாதம், தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கு எதிராக, சிங்கள பௌத்தவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டது. இந்த இனக்கலவரத்தில் - 136 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டும், 205 பேர் காயப்பட்டும், பாலியல் வன்முறைக்கும் ஆளாக்கப்பட்டிருந்தனர். அத்துடன் 85 பள்ளிவாசல்களும், 4,075 முஸ்லீம் வர்த்தக நிலையங்களும் நாசமாக்கப்பட்டிருந்தன. இந்த இனக்கலவரம் - மத்திய மாகாணத்திலிருந்து மேல், வட மேல் மாகாணங்கள் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

மிக அண்மையில் அளுத்கம, பேருவளை பகுதிகளில் முஸ்லீம் மக்கள் மீதும், அவர்களது பள்ளிவாசல்கள், வதிவிடங்கள், வியாபார நிலையங்களை மீதும் சிங்கள பௌத்தவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட அநாகரீகமான இனவாத தாக்குதல்களை, எந்தவித தயக்கமுமின்றி நாம் மிகவும் கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதுடன், இவற்றுடன் சம்பந்தப்பட்ட சிங்கள பௌத்தவாதிகள் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிறிலங்கா அரசிடம் வேண்டுகிறோம்.

முஸ்லீம் சகோதரர்கள் 

அளுத்கம, பேருவளை பகுதிகளில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சகோதரர்கள், குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, இவ்வளவு மோசமான ஓர் இனக் கலவரம் அரசாங்கத்தினுடைய மறைமுகமான அல்லது நேரடியான ஆதரவின்றி நடந்திருக்க முடியாது என்பதை மிக அழுத்தம் திருத்தமாக கூற விரும்புகிறோம்.

இதே மாதிரியான தாக்குதல்கள், தமிழ் மக்கள் மீது, 1956ம் ஆண்டு முதல் ஐந்து தடவைகள் – 1958, 1977, 1981, 1983 வரை சிங்கள பௌத்தவாதிகளினால் கட்டவிழ்க்கப்படடிருந்ததுடன், 1983ம் ஆண்டிற்கு பின்னர், 100க்கு மேற்பட்ட தமிழினப் படுகொலைகள் தமிழ் மக்களை இத்தீவிலிருந்து அழித்தொழிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவையாவும் உரிய முறையில் பல மனித உரிமை அமைப்புக்களினால் செவ்வனே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

முஸ்லீம் மக்களுக்கு எதிராக, சிங்கள பௌத்தவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல் கடந்த 100 ஆண்டுகளாக தொடர்கிறது.

புத்தளத்தில் இனக்கரவரங்கள்

புத்தளத்தில் 1974, 1976, 2002 காலப்பகுதிகளில் மிக மோசமான இனக்கரவரங்கள், அரச அதரவுடன், சிங்கள பௌத்தவாதிகளினால் முஸ்லீம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. இத் தாக்குதல்களினால் பல முஸ்லீம்கள் கொல்லப்பட்டும், பள்ளிவாசல்களும், வர்த்தக நிலையங்களும் நாசமாக்கப்பட்டன.

1976ம் ஆண்டு கலவரத்தின் போது, புத்தளத்தில் பொத்துவில் என்னுமிடத்தில் உள்ள கியுல்லா பள்ளிவாசல் முற்று முழுதாக அழிக்கப்பட்டதுடன், பள்ளிவாசல் ஒன்றில கூடிய 18 முஸ்லீம்கள் பொலிசாரினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

புத்தளத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இத் தாக்குதல்களை, அவ்வேளையில் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளே, சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1982ம் ஆண்டு யூலை ஆகஸ்ட் மாதங்களில், காலியில் ஏற்பட்ட சிங்கள-முஸ்லீம் இனக்கலவரம், கண்டி, மாவனெல்ல, கொழும்பு ஆகிய இடங்களுக்கு பரவியருந்தது

2002ம் ஆண்டு நவம்பர் மாதம், சிலாபம், புத்தளம், காலி ஆகிய பகுதிகளில் சிங்கள- முஸ்லீம்களுக்கிடையே ஏற்பட்ட கலவரத்தில், காலியில் ஓர் முஸ்லீம் இளைஞர் படுகொலை செய்யப்பட்டதுடன், புத்தளத்தில் உள்ள அகதி முகாம் தாக்கப்பட்டதனால், 75 முஸ்லீம குடும்பங்கள் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

முஸ்லீம் தலைவர்கள்

இப்படியாக கடந்த 100 ஆண்டுகளாக நடைபெற்று வருவம் சிங்கள-முஸ்லீம் மக்களுக்கிடையான இனக்கலவரங்களை, முஸ்லீம் தலைவர்கள் தமது சந்தர்ப்பவாத அரசியலுக்கு ஏற்றாற்போல் பாவித்து வந்துள்ளதையும் நாம் காணக் கூடியதாகவுள்ளது.

சிறிலங்காவின் மாறுபட்ட அரசுகள், சிறிலங்காவில் நடைபெற்ற நடைபெறுகின்ற இனக்கலவரங்கள் பற்றிய உண்மைகளை சர்வதேச சமூகத்திடம் இத்தகவல்கள் சென்றடையவிடாது திட்டமிட்டு மறைத்து, தடுத்து வருகின்றனர். முஸ்லீம் தலைவர்களிடையே காணப்படும் சந்தர்ப்பவாத அரசியல் இதற்கான முக்கிய காரணியாகும்.

சர்வதேச வரைவிலக்கணங்களுக்கு அமைய, இலங்கை வாழ் முஸ்லீம்களின் தாய் மொழி ‘‘தமிழ’;’ என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் சுயநல அரசியல் காரணங்களுக்காகவும், சிங்கள அரசுகளிடம் தமது தனிப்பட்ட சுகபோக வாழ்விற்காகவும், அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும், இலங்கை வாழ் முஸ்லீம்கள் “தமிழர்கள் அல்ல” என்ற விதண்டா வாதக் கருத்துக்களைக்கூட சில முஸ்லீம் அரசியல் தலைவர்கள் முன்வைத்துள்ளதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.

தமிழர்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கை பொறுத்தவரையில், முஸ்லீம்கள் மிக நீண்ட காலமாக தமிழ் அரசியல் கட்சிகளை ஆதரிப்பவர்களாகவும், தமிழ் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாகவும் பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியும் ஈட்டியுள்ளனர் என்பது சரித்திரம்.

அரசின் பிரித்தாளும் கொள்கை

தமிழ்-முஸ்லீம் மக்களுக்கு இடையிலான அரசியல் பூசல்கள், 1980ன் பிற்பகுதியிலேயே, சிங்கள அரசுகளின் விஷமத்தனமான 'பிரித்து ஆளும்’’ தந்திர உபாயத்தின் பலனாகவே ஏற்பட்டது என்பதனை யாரும் மறுக்க முடியாது.

கபட அரசியல் நோக்;கங்களுக்காக 'பிரித்து ஆளும்’’ கொள்கையில் பாண்டித்தியம் பெற்ற சிங்கள அரசுகள், தமிழ்; மக்களிடையே போன்று முஸ்லீம் மக்களிடையேயும் பல பூசல்களை ஏற்படுத்தியுள்ளன.

இதன் காரணமாக சிறிலங்கா வாழ் 'அகமதியா’’ முஸ்லீம்களுக்கும், மற்றைய முஸ்லீம்களுக்குமிடையே பல வன்முறைகள், கலவரங்கள் இடம்பெற்றுள்ளதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. இவை சிங்கள அரசுகளின் பின்னணியில் நடைபெற்ற காரணிகளினால், சிறிலங்கா அரசு இவற்றை கண்டும் காணாதவர் போல் பாசாங்கு செய்கின்றனர்.

முஸ்லீம்களுக்குள்ளான கலவரங்கள் பற்றி ஐ. நா. மனித உரிமை குழு கூட்டங்களில் பிரஸ்தாபிக்கப்பட்ட வேளைகளில், சிறிலங்காவின் பிரதிநிதிகள, இவை பற்றிய வினாக்களுக்கு திருப்தியான பதில் ஒன்றும் கூறாது மௌனம் சாதித்துள்ளார்கள்.

தற்பொழுது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் - படுகொலைகளும் இடப்பெயர்வுகளும் நிறைந்த ஓர் இனச்சுத்திகரிப்பு சிங்கள பௌத்த வாதிகளினால், வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படுகிறது. சந்ததி சந்ததியாக பல நூற்றாண்டு காலமாக தமது தாயக பூமியில் வாழ்ந்த தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டு – சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படும் அதேவேளை, தமிழ் பிரதேசங்களில் புத்தர் சிலைகள் ஆங்காங்கே நிறுவப்பட்டு வருவதுடன், கிராமங்கள், பட்டினங்கள், தெருக்களின் தமிழ் பெயர்கள் யாவும் மாற்றப்பட்டு சிங்களப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. இவை யாவும் சிங்கள அரசுகளினால் வடக்கு கிழக்கின் புவியியலை மற்றியமைக்கும் நோக்குடனேயே மேற்கொள்ளப்படுகின்றன.

பொது பல சேனாவின் மாநாடு

உலக சரித்திரத்தை நாம் பார்க்கும் பொழுது, மற்றைய இனத்தை தமது சுய அரசியல் நோங்கங்களுக்காக அழித்தொழித்து, குடியேற்றங்களை மேற்கொண்ட சர்வாதிகாரிகளின் கபட நாடகங்கள், நிலைத்ததாக சரித்திரம் இல்லை. இதற்கு விதிவிலக்காக சிங்களத் தலைவர்கள், விசேடமாக ராஜபக்சாக்கள் இருக்க முடியாது.

சர்வதேச சமுதாயத்தின் உதவியுடன் இலங்கைத்தீவில் அடக்கி ஆளப்படும் மக்கள் நீதி பெறும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

அளுத்கம, பேருவளை பகுதிகளில் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு, அப் பிரதேசத்தில் நடைபெற்ற பொது பல சேனாவின் மாநாட்டில், அதனது பொதுச் செயலாளாரான பௌத்த பிக்கு, கலகொடஅத்த ஞானசார தேரோவினால் ஆற்றப்பட்ட உரை, முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலை தூண்டியுள்ளது என்பது யதார்த்தமான உண்மை. இவற்றை சிங்கள, தமிழ், முஸ்லீம் ஆய்வு நிபுணர்கள் ஆதாரத்துடன் கூறிய பொழுதிலும், இன்று வரை ராஜபக்ச அரசினால், பௌத்த பிக்கு, கலகொடஅத்த ஞானசாரா தேரோ மீதோ, அல்லது அவர் சார்ந்த பொது பல சேனா மீதோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது, இத் தாக்குதலில் ராஜபக்ச அரசின் பின்புலம் வெளிப்படையாகியுள்ளது.

கண் முன் நடைபெறும் சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியாத ராஜபக்ச அரசு, கடந்த ஏப்ரல் மாதம், 10,000  மைல்களுக்கு அப்பால், வேற்று நாட்டில் நிலைகொண்டுள்ள 16 தமிழ் அமைப்புகளையும், 424 தனி நபர்களும் ஐ. நா. பாதுகாப்பு சபை பிரேரணை 1373க்கு கீழ் தடை செய்துள்ளது என்பது, எந்தவித நீதி நியாயமும் அற்ற பித்தலாட்ட நகர்வே.

பல பத்திரிகை செய்திகள், அரசியல் தலைவர்களின் கருத்தின் பிரகாரம், ஜனதிபதி ராஜபக்சவின் சகோதரரான, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பொது பல  சேனாவின் மிக தீவிர ஆதரவாளர் மட்டுமல்லாது, இவர் பொது பல சேனாவின் நிகழ்ச்சிகளில் வெளிப்படையாக கலந்து கொள்பவர் என்பதை யாவரும் அறிவார்கள்.

kotta-bbs.jpg

 

தற்போதைய நிலையில், ராஜபக்ச அரசு – தமிழ், முஸ்லீம் மக்களது ஆதரவை, மதிப்பை இழந்துள்ளது மட்டுமல்லாது, இந்தியா, சர்வதேச சமுதாயம் போன்றோரின் ஆதரவையும் இழந்து நிற்கிறது. ஆகையால் இதற்கான பெறுபேறுகளை, இன்னும் சில மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ ராஜபக்ச அரசு அனுபவிப்பார்கள்.

நிமல்கா பெர்னாண்டோ

சர்வதேச மட்டத்தில் புகழ் கீர்த்தியை பெற்று இன்று தமிழர்களது விடயத்திலும் மிகவும் கவனமாக வேலைத் திட்டங்களை முன்நகர்த்தும், நிமல்கா பெர்னாண்டோவை தெரியாத தமிழர் யாரும் இருக்க முடியாது. இன்று நேற்று அல்ல, கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக, இவர் தனது உயிரை பணயம் வைத்து, தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், இவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர் என்பதை துணிச்சலுடன் தெற்கில் முன்வைத்து வரும் ஒரு சிலரில், நிமல்காவும் ஒருவர்.

இவர் மிக நீண்ட காலமாக, இன,மத பேதமின்றி சர்வதேச ரீதியாக தமது செயற்பாடுகளை நகர்த்துவதை நாம் தினமும் காணக்கூடியதாகவுள்ளது. இவரது சர்வதேச செயற்பாடுகளில் அதிருப்தி கொண்ட ராஜபக்ச அரசும் அதனது, அமைச்சர்கள், ஆதரவாளர்கள், நிமல்கா பெர்னாண்டோவிற்கு பல தீமைகளை செய்ய முனைந்த வேளைகளில், ஐ. நா. மனித உரிமை சபை, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் முன்வந்து இவரை காப்பாற்றியதையும் அறியாதவர்கள் இருக்க முடியாது.

கடந்த 25வது கூட்டத் தொடரில், அமெரிக்காவினால் சிறிலங்கா மீது முன்னொழியப்பட்ட பிரேரணையை முன்னின்று ஆதரித்தவர்களில், நிமல்கா பெர்னாண்டோவும் ஒருவர் ஆவார்.

ராஜபக்ச அரசின் தமிழ் கைக்கூலிகள் சிலர்  இப் பிரேரணையை எந்தவித மானம் ரோசமின்றி சர்வதேசத்தின் கண் முன்னின்று எதிர்த்தனர் என்பதையும் பலரும் அறிவீர்கள்.

இவ்வேளையிலே, தம்மை ஓர் பெரும் புள்ளிகளாக காட்ட விரும்பும், சில புலம்பெயர்வாழ் தம்பட்டவாதிகளும் விடயம் விளங்காது அமெரிக்காவின் பிரேரணையை எதிர்த்தனர். அவ்வேளையில், நிமல்கா பெர்னாண்டோ கூறியதாவது,

“இந்த அமெரிக்கத் தீர்மானம் என்பது, இன்று நேற்று செய்யப்படும் வேலைகளின் பலனாக உருவாக்கப்பட்டது அல்ல, இவை பல தசாப்தங்களாக நாங்கள் இரவு பகலாக செய்த வேலையின் பலனாக உருவாக்கப்பட்டவையே. ஆகையால் விடயம் விளங்காதவர்கள், தயவு செய்து குறுகிய நோக்கத்துடன் இதை குழப்ப முனையாதீர்களென”, ஐ. நா. மண்டபத்தினுள் வைத்து ஓரு சில புலம்பெயர்வாழ் தம்பட்டவாதிகளுக்கு நிமல்கா பெர்னாண்டோ வேண்டுகோள் விட்டிருந்தார். இதனால் வெட்கத்தில் தலைகுனிந்த தம்பட்டவாதிகள், சந்தர்ப்பம் பார்த்திருந்து, இன்று திருமதி நிமல்கா பெர்னாண்டோ மீது விசமத்தனமான பிரச்சாரங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

கரி பூசுவதன் நோக்கம்

இதையிட்டு நாம் மிகவும் வெட்கப்பட வேண்டியுள்ளது. சர்வதேச பரப்புரையோ, சர்வதேச சந்திப்புக்கள் பற்றி எந்தவித அனுபவமோ அறிவோ அற்ற இவர்கள், மிக இலகுவாக மற்றவர்கள் மீது “கரி” பூசுவதன் நோக்கம் மிகவும் தெளிவானது. நீண்டகாலமாக சர்வதேச மட்டத்தில் வேலை செய்பவர்களை ஒதுக்குவதன் மூலமே, தம்மை மற்றவர்களிற்கு நிபுணர்களாக காண்பிக்க முடியுமென்ற தம்பட்டவாதிகளது சிற்றறிவே காரணமாகவுள்ளது. மிக நீண்டகாலமாக நிமல்கா பெர்னாண்டோ தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக செய்துவரும் சேவையின் ஒரு துளி தன்னும் இவர்களுக்கு தெரியுமா?

uno-nimalka.jpg

காகம் திட்டி மாடு சாகப் போவதில்லை. இப்படியான நாசகார வேலைகளை மேற்கொள்வோருக்கும் ராஜபக்ச அரசிற்கும் என்ன வித்தியாசங்களை காண முடிகிறது? இன்று எமது நிலையில், நிமல்கா பெர்னாண்டோ போன்றோரின் உதவிக்கரங்களை நாம் சர்வதேச மட்டத்தில் இழப்போமானால், சிங்கள அரசு எம்மை மிக இலகுவில் சர்வதேசத்தில் ஒரம் கட்டிவிடும்.

தம்பட்டவாதிகளே!  நீங்கள் ஐ. நா. மனித உரிமை சபை அமர்வு வேளைகளில் எப்படி, என்ன செய்கிறீர்கள் என்பதை நிமல்கா பெர்னாண்டோ உட்பட, நாம் நன்கு அறிவோம். கண்ணாடி அறையில் உள்ள நீங்கள், தயவு செய்து மற்றவர்கள் மீது கரி பூசுவதை நிறுத்தி, உங்களுக்கு, உங்கள் அமைப்பினால் தரப்பட்ட வேலையை ஒழுங்காக செய்யுங்கள்.

நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாட்டு என்பதுபோல், உங்கள் ஆளுமை, திறமையை பாவித்து சாதிக்க முடியாத விடயத்திற்கு, மிக இலகுவாக, நிமல்கா பெர்னாண்டோ மீது குற்றச்சாட்டை சுமத்தி விட்டு, நல்ல பிள்ளைக்கு நடிக்காதீர்கள். சுருக்கமாக கூறுவதானால், உங்கள் கடமையை நீங்கள் ஒழுங்காக செய்யாது, நிமல்கா பெர்னாண்டோ உங்களுக்கான வேலையை செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பது மிக மிலேச்சத்தனமானது.

இப்படியான குணம் படைத்த நீங்கள், எதிர்வரும் ஐ. நா. மனித உரிமை சபை கூட்ட அமர்வு வேளையில், என்ன முகத்துடன் நிமல்கா பெர்னாண்டோவைக் கண்டு வணக்கம் சொல்லி, அவருடன் விடயங்களை பரிமாறுவீர்கள்? ஐ. நா. செயற்பாட்டிற்கோ, சர்வதேச செயற்பாட்டிற்கோ வந்து ஒரு சில வருடங்களிலேயே, ஏற்கனவே உள்ள ஆதரவை குழப்பும் நீங்கள், எப்படியாக தொடர்ந்து தமிழீழ மக்;களுக்கு நன்மை தரும் வேலைகளை செய்வீர்கள்? 

ச. வி. கிருபாகரன் 

பிரான்ஸ். 

tchrfrance@hotmail.com

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.