Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்களுக்கான உடை அழகு டிப்ஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டை என்றாலே அதிகம் பெண்கள் தான் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் அதில் எந்தவித ஆச்சர்யமுமில்லை. இதில் நான் கூறப்போவது ஆண்களுக்கு என்றாலும் பெண்கள் தங்களுடைய தம்பி, அண்ணன், ஆண் நண்பர் மற்றும் கணவருக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் தவறில்லை icon_smile.gif ஆண்களுக்கு இந்த வீணாப்போன பேன்ட்டும் சட்டையும் விட்டா என்னத்தைத்தான் போடுவது! என்று நினைத்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. உடை விசயத்தில் பெண்கள் அளவிற்கு ஆண்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும் தற்போது பல்வேறு வகையான மாடல்களை வெளியிட்டு கலக்கி வருகிறார்கள். நான் இதில் ரொம்ப மாடர்ன் அளவிற்கு எல்லாம் செல்லாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் உடைகளையே இன்னும் எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என்று கூறுகிறேன் காரணம் இன்னும் பலர் இதற்கே முக்கிட்டு இருக்காங்க அப்புறம் எங்க மாடர்ன் எல்லாம்.

உடை விசயத்தில் எப்போதுமே எனக்கு மிக ஆர்வம் மற்றும் ரசனை உண்டு. என்னுடைய அம்மா, அக்கா, மனைவி என் பையன் என்று அனைவருக்கும் அவர்களுக்கேற்ப உடை சரியாக தேர்வு செய்வேன். நான் தேர்வு செய்த உடைகளை என் அம்மா, அக்கா, மனைவி அணிந்து செல்லும் போது அங்கே உள்ள உறவினர்கள் புடவை சூப்பரா இருக்கே! யார் தேர்வு செய்தது? என்று அவர்களிடம் என் முன்னாடி கேட்கும் போது ரொம்ப பெருமையாக உணர்வேன். கிரி கலக்கிட்டேடா! என்று icon_smile.gif சில நேரங்களில் என் அக்கா என்னிடம்… தம்பி! இன்னைக்கு எல்லோரும் இந்தப் புடவை பற்றி கேட்டாங்க என்று என்னிடம் சந்தோசமாக கூறும் போது எப்பூடி! என்று காலரை தூக்கி விட்டுக்கொள்வேன். என் நண்பர்களுக்குகூட உடை தேர்வு விசயத்தில் நான் தான் அவர்களுடைய சாய்ஸ். சரி இப்ப எதுக்கு இந்த பில்டப்புன்னு கேட்கறீங்களா! நான் சொல்ற டிப்சை நீங்க பயப்படாம செயல்படுத்தலாம் என்பதற்குத்தான் icon_wink.gif

Casual Dress

Cotton-Shirt.jpgசில நேரங்களில் நம்ம பசங்க போட்டுட்டு வர உடையை பார்த்தால் செம்ம டென்ஷன் ஆகிடுவேன்.. என்னய்யா உங்க ரசனை? இப்படி மஞ்ச மாக்கான் மாதிரி ஒரு உடையைப் போட்டுட்டு திரியறீங்க என்று கோபமாக வரும். நம்ம இனத்தையே டேமேஜ் பண்ணுறீங்களே என்று ஆத்திரமாக வரும் icon_smile.gif பின்ன என்னங்க பசங்கனா ஒரு ஸ்மார்ட்டா இருக்க வேண்டாமா! ஒரு ரிசப்சன் போறோம் அல்லது சிறு விழாவிற்குப் போகிறோம் என்றால் உடனே கஞ்சி போட்டு அயர்ன் பண்ணுன ஒரு மொட மொட னு ஒரு சட்டையை எடுத்து மாட்டிட்டு முழுக்கைச் சட்டையாக இருந்தால் கையைக்கூட மடித்து விடாமல் அலுவலகத்துக்கு போகிற மாதிரி ஒரு கெட்டப்புல வந்து ஹி ஹி னு நின்னுட்டு இருப்பானுக. ஏன்டா! ரிசப்னுக்கு தானே வந்து இருக்கீங்க என்னமோ ஐ நா சபைல இந்தியா சார்பா பேசப்போகிறவன் மாதிரி (விஷயம் ஒன்றுமில்லை என்றாலும்) முறுக்கிக்கிட்டு வந்து நிற்கறீங்க! என்று கடுப்பாக இருக்கும்.

இதே குடும்பஸ்தன் என்றாலும் கல்யாணத்தில் இதே மாதிரி வந்து நிற்பார்கள்.. (கிராமம் என்றால் வேறு வழி இல்லை) விட்டா டையும் சேர்த்துக் கட்டிக்கிட்டு வருவாங்க போல இருக்கு. என்னய்யா மேட்டருன்னு கேட்டா டீசன்ட்டாம்! அது சரி.

அப்புறம் எப்படித் தாங்க இது மாதிரி நேரத்துல உடை அணிவது?

முதல்ல எல்லோரும் ஒண்ணு.. சரி இரண்டு மூன்று தெரிந்துக்குங்க icon_smile.gif அலுவலக நேரம் தவிர மற்ற எந்த நேரத்திலையும் (அதாவது ப்ரொஃபசனலா நடந்துக்க வேண்டிய இடம் தவிர்த்து) இந்த மாதிரி உடைகளை அணியவே கூடாது. professional dresses only for professional places not for casual places.

ஜீன்ஸ்

Lveis-male-jeans.jpgஇந்த உடை இருக்கு பாருங்க.. இதை அடித்துக்க உலகத்துலையே எதுவும் கிடையாது. அது பெண்களுக்காக இருந்தாலும் சரி ஆண்களுக்காக இருந்தாலும் சரி இதற்கு என்று உள்ள மதிப்பே தனி. அடிக்கடி துவைக்க வேண்டிய அவசியமில்லை icon_smile.gif அணிந்து கொள்ள எளிது பெரும்பாலான சட்டைகளுக்கு பொருத்தமாக இருக்கும். அதை விட உங்கள் வயதைக் குறைத்துக்காட்டும் அதைவிட முக்கியமாக உங்கள் அருகில் உள்ளவர்கள் கொஞ்சம் ரிலேக்சாக இருக்க முடியும். ப்ரொஃபசனலா உடை அணிந்து இருந்தீர்கள் என்றால் டேய்! மச்சி இவரு கணக்கு மாஸ்டர் மாதிரி இருக்காருடா! நம்மை வாய்ப்பாடு சொல்லச் சொல்லி கேட்பாரு போல இருக்கு கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்துக்க என்று பயப்படும் படி ஆகி விடும் icon_smile.gif நாம் என்னதான் ஜாலி டைப்பாக இருந்தாலும் நம்முடைய தோற்றம் தான் முதலில் அருகில் இருப்பவர்களுக்கு எந்த வித எண்ணத்தையும் தோற்றுவிக்கும்.

டி ஷர்ட் & காட்டன் ஷர்ட்

Jeans-and-Tshirt.jpgஜீன்ஸ் க்கு 100% பொருத்தமானது என்றால் யோசிக்காமல் டி ஷர்ட் என்று கூறலாம் அல்லது காட்டன் ஷர்ட்டை கூறலாம். நான் கூறிய அலுவலகம் தவிர மற்ற இடங்களுக்கு செல்லும் போது எடுத்துக்காட்டாக ரிசப்சன், திருமணம், நண்பர்கள் பார்ட்டி, சுற்றுலா, பிறந்தநாள் விழா, திரையரங்கு, கடற்கரை இதைப்போல இடங்களுக்கு சரியான தேர்வு ஜீன்ஸ் + டி ஷர்ட் அல்லது காட்டன் ஷர்ட் மட்டுமே. டி ஷர்ட்டில் காலர் வைத்தது காலர் வைக்காதது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. எடுத்துக்காட்டாக திருமணங்களுக்கு செல்லும் போது காலர் வைத்த டி ஷர்ட் அணிந்து செல்வது நாகரீகமா இருக்கும். காலர் வைக்காத டி ஷர்ட்டையும் அணிந்து செல்லலாம் இருப்பினும் அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

டி ஷர்ட் அணிவது என்றால் நம்மில் பெரும்பாலனவர்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனை தொப்பை. அவங்களுக்கு முன்னாடி அவங்க தொப்பை போயிட்டு இருக்கும் icon_smile.gif இவங்க காட்டன் டி ஷர்ட்டை உபயோகப்படுத்தி இதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். தயவு செய்து தொப்பை இருந்தால் உடற்பயிற்சி செய்தாவது குறையுங்க இப்படி நம்ம இனத்தின் மானத்தை வாங்காதீங்க icon_smile.gif நானும் பல நாட்டு மக்களை பார்த்துட்டேன் நம்ம பசங்க தான் தொப்பையோட குறிப்பா தென் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் இப்படி சுற்றிக்கொண்டு டென்ஷன் பண்ணுறாங்க. சரி! சட்டையை இன் (In) செய்வதாவது ஒழுங்கா செய்கிறார்களா என்றால் அதுவுமில்லை. ஒரு ஒழுங்கே இருக்காது சட்டையை பேன்டுக்குள்ள போட்டு திணித்து வைத்ததைப்போல பெப்பரப்பேன்னு நின்னுட்டு இருப்பாங்க சீராக இல்லாமல் அங்கங்கே ஏற்ற இறக்கமாக இருக்கும்.

அலுவலக உடை

நீங்க எத்தனை பேன்ட் வைத்து இருந்தாலும் நீங்கள் தவறாமல் வைத்து இருக்க வேண்டிய பேன்ட் கருப்பு வண்ணமாகும். எந்த சட்டைக்கும் பொருந்தக்கூடிய ஒரே வண்ணம் இது தான் (வெள்ளை சட்டை தவிர்த்து). அலுவலகத்திற்கு செல்பவர்கள் ப்ரைட்டான சட்டைகளை அதிகம் பயன்படுத்துங்கள் டார்க்கான சட்டை நம்மை டல்லாக காட்டும். ஒவ்வொருவரின் உடல் வாகிற்கு ஏற்றவாறு உடையை கூறலாம் என்று நினைத்தேன் ஆனால் இதுவே பெரிதாகி விட்டது அதனால் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அது பற்றி விரிவாகக் கூறுகிறேன்.

Read: ஸ்டைல்! ஸ்டைல்!! ஸ்டைல்!!!

Flat Front

Flat-front.jpgநீங்கள் Flat Front பேன்ட் அணிபவராக இருந்தால் கண்டிப்பாக துணியை அயர்ன் செய்யும் போது ஜீன்ஸ் பேன்ட்டை அயர்ன் செய்வது போல (இன்னும் பலர் ஜீன்ஸ் பேன்ட்டையே எப்படி அயர்ன் செய்வது என்று தெரியாமல் உள்ளனர்) பக்கவாட்டில் அயர்ன் செய்ய வேண்டும் வழக்கமாக மற்ற பேன்ட்களை அயர்ன் செய்வது போல செய்யக்கூடாது. பலர் இந்தத் தவறை செய்து கொண்டுள்ளார்கள். Flat Front என்பதன் அர்த்தமே முன் பகுதி எந்த பிளீட்டும் இல்லாமல் இருப்பது தான் அதில் நீங்கள் அயர்ன் செய்த கோட்டை வைத்தீர்கள் என்றால் அந்த பேன்ட் டிசைன் அர்த்தமே மாறி விடும். தற்போது ப்ளீட் வைத்து தைப்பது எல்லாம் Out of fashion ஆகி விட்டது எனவே உங்களுக்கு நான் Flat Front மாடலை பரிந்துரைக்கிறேன். இது வந்து ரொம்ப வருடங்களாகி விட்டாலும் இன்றும் அதே கவர்ச்சியுடன் உள்ளது. தொப்பை உள்ளவர்கள் Flat Front மாடல் பேன்ட்டை அணிய முடியாது நன்றாக இருக்காது அவர்களுக்கு ஒரே வழி ப்ளீட் தான் அதுனால மனதை தேத்திக்குங்க icon_smile.gif

உடைகளை தேர்வு செய்வதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். தற்போதெல்லாம் நிறைய வகை மாடல்கள் வந்துள்ளன அவைப் பற்றி பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகிறேன். ஏனோ தானோவென்று உடையணியாமல் சரியாக தேர்வு செய்யுங்கள். நம்முடைய உடை கூட நமக்கு அதிக தன்னம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய காரணிகளுள் ஒன்றாகும் எனவே இதை அலட்சியப்படுத்த வேண்டாம்.

கொசுறு 1

Kids-Tshirt.jpgஎன்னால ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு விஷயம் குழந்தைகளுக்கும் பெரியவங்க போடுற மாதிரி ஷர்ட் மற்றும் பெரிய பசங்க போடுற மாதிரி ட்ராயர் பெற்றோர் போடுவது தான். செம்ம கடுப்பாகிடுவேன். குழந்தைகளுக்கு அழகு அழகா எத்தனை உடைகள் உள்ளது அதெல்லாம் எப்படித்தான் அவங்க கண்ணுல பட மாட்டீங்குதுன்னே தெரியல.. தேடிப்போய் ஒரு மொக்கையா ஒரு உடையை வாங்கிட்டு வந்து குழந்தைக்கு மாட்டி விட்டு அது சோளக்கொல்லை பொம்மை மாதிரி சுத்திட்டு திரிவதை பார்த்துட்டு இருப்பாங்க. பெண் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை இல்லை ஆண் குழந்தைகளுக்குத்தான் இந்தப் பிரச்சனைகள்.

நான்கு அல்லது ஐந்து வயது வரை குழந்தையை வைத்து இருப்பவர்கள் தயவு செய்து பெரியவர்கள் போடும் பட்டன் வைத்த சட்டையையும் பெரிய பசங்க போடுற டிராயரையும் பேன்ட்டையும் போடுவதை நிறுத்துங்க. இதைப்போல குழந்தைகளுக்கு காலர் வைத்த, வைக்காத டி ஷர்ட் தான் அழகாக இருக்கும் குறிப்பாக மிக்கி மவுஸ், கார்ட்டூன் படங்கள் மற்றும் சுவாரசியமான வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட்டை அணிவியுங்கள். டிராயர் மொட மொட என்று இல்லாமல் ஜட்டி டைப்பில் மென்மையாக உள்ளதை தேர்ந்தெடுக்க வேண்டும் காரணம் குழந்தைகளுக்கு இதைப்போல அணிந்து இருப்பது உடலை உறுத்தாமல் சவுகரியமாக இருக்கும். சிறு வயதில் (இரண்டரை வயதிற்கு மேல்) இருந்தே குழந்தைகளுக்கு உள் ஜட்டி போட்டு பழக்கப்படுத்துவது நல்லது.

கொசுறு 2

பெண்களுக்கான உடை அழகு டிப்ஸ் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். அவர்களுக்கான மேக்கப் பற்றி எழுத வேண்டும் விரைவில் எழுதுகிறேன். சிங்கப்பூர் வந்த பிறகு ஒரு விஷயம் கண்டு பிடித்தேன் நம்ம இந்தியப் பெண்களில் (குறிப்பா தென் இந்தியப்பெண்கள்) பலருக்கு ஏன் மிடி போட்டால் நன்றாக இருப்பதில்லை என்பதை. இதைப்பற்றி பின்பு விரிவாக கூறுகிறேன். பெண்களுக்கான அழகுக் குறிப்புகள் பற்றி எழுத ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு காரணம் அழகு என்றால் அவர்கள் தானே முன்னணியில் இருக்கிறார்கள். பசங்க கொஞ்சம் ஓரமா நின்று கொள்ள வேண்டியது தான் icon_smile.gif

கொசுறு 3

அலுவலக வேலையாக இரு நாள் மலேசியா சென்று இருந்தேன். ஏற்கனவே ஒரு முறை சென்று இருந்தாலும் இந்த முறையும் நேரமில்லாததால் எங்கும் செல்ல முடியவில்லை. கோலாலம்பூரில் வழக்கம்போல போக்குவரத்து நெரிசல் தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த முறை கடந்த முறையை விட அதிகளவில் வெளிநாட்டினரை காண முடிந்தது. தமிழர்கள் ஏகப்பட்ட பேர் உள்ளனர் அதனால் வேற்று நாட்டில் இருக்கின்ற உணர்வே இல்லை. எங்கு பார்த்தாலும் வண்ண மயமாக இருக்கிறது குடும்பமாக சென்றாலும் நண்பர்களுடன் சென்றாலும் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. நான் பிரபலமான பெவிலியன் டவர் மற்றும் BB பிளாசா சென்றேன் ஆனால் நேரமில்லாததால் அருகிலேயே இருக்கும் ட்வின் டவர் செல்ல முடியவில்லை அந்த டவர் அருகே சென்றும் கூட. சிங்கப்பூர் ல் இருந்து மலேசியா செல்பவர்கள் இந்த ஆண்டு 2.4 % அதிகரித்து உள்ளார்களாம். சிங்கப்பூர் ல் Cost of living மிக அதிகம் எனவே அங்கே சென்று செலவு செய்கிறார்கள் போல உள்ளது. அங்கே மலேசியன் ரிங்கட் சிங்கப்பூர் டாலரில் பாதி தான்.

http://www.giriblog.com/2011/06/tips-for-gents-dress.html

  • கருத்துக்கள உறவுகள்

இது ஊர்ப்புதினமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா இப்போ இதுகள் தான் ஊர் புதினம் பாஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஊர்ப்புதினமா?

மன்னிக்கவும் தவறுதலாக ஊர்புதினத்தில் இனைக்கப்பட்டுவிட்டுது நிர்வாகம் கவனிப்பீர்களாக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.