Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தஞ்சக்கோரிகள் தற்கொலை முயற்சி கண்டு பணிய மாட்டோம்: அப்பாட்

Featured Replies

 
140428065929_cn_tony_abbott_304x171_reut

தஞ்சக் கோரிக்கையாளர்கள் முறையாக நடத்தபபடுவதாக அப்பாட் வலியுறுத்துகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களில் சிலர் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வந்துள்ள நிலையில், "இப்படியெல்லாம் மிரட்டி" ஆஸ்திரேலிய தஞ்சக் கோரிக்கை கொள்கைகளை மாற்றிவிட முடியாது என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறியுள்ளார்.

கிறிஸ்துமஸ் தீவில் தாய்மார்கள் சுமார் ஒரு டஜன் பேர், தற்கொலைக்கு முயன்றதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டிருந்தன.


கிறிஸ்துமஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களில் தாய்மார்கள் சிலர், தாம் இறந்தால் தமது பிள்ளைக்காவது அகதித் தஞ்சம் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் தற்கொலைக்கு முயன்றதாக ஆஸ்திரேலியாவின் ஃபேர் ஃபேக்ஸ் மீடியா செய்தி வெளியிட்டதை அடுத்து பிரதமரின் இந்த பதில் வந்துள்ளது."தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு உணவு, உடுப்பு, உறைவிடம் எல்லாம் நாங்கள் ஒழுங்காக வழங்குகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். நவுருவில் வைக்கப்படுபவர்கள் எவ்விதமான தண்டனைக்கோ கஷ்டங்களுக்கோ ஆளாகப்போவதில்லை." என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் தீவிலிருந்து நவுருவுக்கோ, மனுஸ் தீவுகளுக்கோ கொண்டுசெல்லப்படலாம் என்று தெரியவந்ததை அடுத்து, மிகவும் கலங்கிப்போன தஞ்சக் கோரிக்கையாளர்கள், இறந்து விடுவதே நல்லது என நினைத்து தற்கொலைக்கு முயன்றதாக அவர்களது சட்டத்தரணிகளை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியா நோக்கி படகில் சென்றபோது அண்மையில் இடைமறிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 153 பேர் இலங்கைக்கே திருப்பியனுப்பப்படுவார்களா என்பதை பிரதமர் அப்பாட் தெளிவுபடுத்த பிரதமர் மறுத்திருந்தார்.

அவர்களைத் திருப்பியனுப்ப ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையில், அவர்களைத் திருப்பியனுப்புவதாக இருந்தால், 72 மணி நேரத்துக்கு முன்கூட்டியே அது பற்றி அவர்களிடம் தெரிவிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு உத்தரவாதம் அளித்திருந்தது.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/07/140709_asylum_suicide_attempt.shtml

 

  • கருத்துக்கள உறவுகள்

இவன் ஒரு white supremist எண்டால் மிகையாகாது. இந்த நிலை தொடர்ந்தால் எமது தமிழ் ஒஸ்ரேலியன்சையும் பிரஜா உரிமையை பறித்து இலங்கை நேவியிடம் ஒப்படைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் நல்லா ஜோக் அடிக்குறீங்க இப்பிடி தினமும் ஒரு ஜோக் அடிச்சு எங்கள சிரிக்க வைங்க.....:D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் ஹிட்லரின் ஆரம்ப காலத்தில் பலயூதர்களும், சிறுபானமையினரும் ஜோக்கடித்தபடி இருந்தார்கள்!

This is a slippery slope. Today it's the boat people tomorrow it will be you.

Once you let them function outside the control of law, and justify their actions, even just once, there is no turning back.

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் அப்புறம் வேற? இம்புட்டு தானா இன்னும் இருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இருக்கு. காலியில் சந்திக்கும் போது சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாய் காலைத்தூக்குவது போல

இங்குள்ள  சிக்கலுக்கெல்லாம்  நம்மைத்தாக்குகிறார்கள்

 

இது தொடரும்

 

எமது தாயகத்தை நாம் காக்க  தவறினால்

கோசான்  சொன்னது போல

காலி  முகத்திடலில் தமிழரெல்லாம் முளங்காலில் சிங்களவன் முன் நிற்கும் காலம் வரும் :(  :(  :(

"This is a slippery slope. Today it's the boat people tomorrow it will be you.

Once you let them function outside the control of law, and justify their actions, even just once, there is no turning back."

 

இதை நிறுத்துவதற்காக தான் அவுஸ் அரசும் கடுமையாக நடக்கிறது என நினைக்கிறன்....இப்போது கடல் பயணங்கள் இலகுவாகி விட்டது....ஆகவே அவுஸ் அரசும் கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் இப்படி அளவு கணக்கில்லாமல் வரும் வள்ளங்களை எப்படி கட்டுபடுத்த முடியும்???

 

மற்றது இப்படி வருபவர்களுக்கு "camp" வாழ்வு தான் என்றும் முடிவு எடுத்து விட்டார்கள்....அதை எப்படி மாற்றமுடியும்?  அதை மாற்ற கூடிய சட்டங்கள் உள்ளதா? (அப்போதும் அந்த காம்பில் உள்ள மக்களின் வாழ்வு சூனியம் தான்....

 

நீங்கள் அகதியை பார்கிறீர்கள்...அவஸின் நிலையையும் பாருங்களேன்....இருபக்கத்தையும் பார்த்து முடிவுக்கு வருவதே நல்லது...ஒரு பக்கம்..மற்ற பக்கத்தை குற்றம் சொல்லி....எதுவும் முடிய போவதில்லை..

 

எந்த நாடுகளுமே அவுசை குற்றம் சொல்லுவதாக தெரியவில்லை..ஆகவே சட்ட ரீதியாக அவர்களின் செயலில் பிழை இருப்பதாக தெரியவில்லை..

(மலேசிய விமானத்தை தேடி 800மில்லியன் செலவழித்தது...இப்படி கப்பலில்  வருபவர்களுக்காக அடுத்த காம்ப் செட்டப் செய்ய தான்...ஏனென்றால்...முதல் அவுஸ் கேட்ட பொழுது மலேசியா மறுத்து விட்டது....இனி மலேசியாவும் அவுசுக்கு ஆதரவாக இருக்கும்....)

இப்போவே பில்லியன்களுக்கு மேல் இப்படி வருபவர்களின் காம்ப் களுக்காக செலவு செய்து விட்டார்கள்...அந்த பணத்தை வந்தவர்களிடம் பிரித்து கொடுத்திருந்தாலே...எல்லாரும் சந்தோசமாக இருந்திருக்கலாம் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.