Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவிலியன் ஒருவரை வடக்குக்கு ஆளுநராக நியமிக்க வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

gov.jpg

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரண ஆகிய இருவருமே ஆளுநரின் நியமனம் தொடர்பில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறுகையில்; வடமாகாண ஆளுநராக சிவிலியன் ஒருவரே நியமிக்கப்பட வேண்டுமென்பதை அரசுக்குள்ளிருந்து கொண்டே நாம் வலியுறுத்தி வருகின்றோம். போர் முடிந்து 5 வருடங்கள் கடந்துவிட்டன. எனவே வடபகுதி தமிழ் மக்களுக்கு இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக இருப்பதை அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகமாட்டார்கள்.
 
இராணுவப் பிடியிலிருந்து விடுதலை பெற்று ஜனநாயக உரிமைகளோடு வாழ்கிறோம் என்ற மனநிலையைத் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்த வேண் டியது அரசின் பொறுப்பு. 
 
அதற்கு, சிவிலியன் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவ்விடயத்தில் மீண்டும் பிழையான தீர்மானத்தை அரசு எடுத்திருக்கிறது என்றார். 
 
அமைச்சர் திஸ்ஸ விதாரண, 
வடமாகாண ஆளுநராக மீண்டும் மேஜர் ஜெனரல் சந்திரசிறியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டமைக்கு பின்னணியில் சிங்கள பெளத்த சக்திகளின் கடும் அழுத்தமும் காரணமாக அமைந்துள்ளது. 
 
சந்திரசிறி ஆளுநராக சிறப்பான முறையில் சேவைகளை முன்னெடுத்திருந்தார். இதன் காரணமாக அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் போர்க் காலத்தில் இராணுவத்தில் பணியாற்றியதன் காரணமாக வட மாகாண தமிழ் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க தயாரில்லை. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
சிவிலியன் ஒருவரையே ஆளுநராக நியமிக்க வேண்டும். மாறாக இந்தப் பதவி நீடிப்பானது கவலையளிக்கின்றது. சிவிலியன் ஒருவரை நியமிப்பதன் மூலமே மத்திய அரசுக்கும் வடமாகாண சபைக்கும் இடையே புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும் என்றார். 
 
சிங்கள பெளத்த அடிப்படைவாத சக்திகளைச் சந்தோ­ப்படுத்துவதற்காகவே அரசு, வடமாகாண ஆளுநராக மேஜர் ஜெனரல் சந்திரசிறியை மீண்டும் நியமித்துள்ளது.
 
வடக்கில் சிவில் ஆளுநர் ஒருவரை நியமிப்பதன் மூலமே, மாகாண சபைக்கும், மத்திய அரசுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும். இவ்வாறு  அரசில், அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=177453229116349133

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா இது, இன்னும் புலம்பிக் கொண்டு....

இவையளுக்க அடிபாடுவாற மாதிரி, 'எங்களுக்கு, சண்டை பிடியாமல், கதிரைக்கு பாரமாய், குந்திப்பிடிச்சுக் கொண்டிருந்த சந்திரசிறீ வேண்டாம். தீரமாய் சண்டை போட்ட ஜகத் டயஸ் அல்லது டீ சில்வா தான் வேணும்' எண்டு கூப்பாடு போடவேணும்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.