Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை - தென்னாபிரிக்க முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம் : தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாடுகிறது

Featured Replies

இலங்கை - தென்னாபிரிக்க முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம் : தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாடுகிறது

இலங்கை-தென்­னா­பி­ரிக்க அணி­க­ளுக்­கி­டை­யி­லான 2 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முத­லா­வது டெஸ்ட் போட்டி இன்று காலியில் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க துடுப்பெடுத்தாடுகின்றது.


இலங்­கைக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள தென்­னா­பி­ரிக்க அணிக்கும் இலங்கை அணிக்­கு­மி­டை­யி­லான 3 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறை­வ­டைந்த நிலையில் இன்று இரு அணி­க­ளுக்­கு­மி­டை­யி­லான 2 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்­ப­மா­கியது.

ஒருநாள் தொடரை தென்­னா­பி­ரிக்க அணி 2-1 என வெற்றி கொண்­டி­ருந்­த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பித்துள்ளது.

இந்­நி­லையில் இன்று இரு அணி­க­ளுக்­கு­மி­டை­யி­லான முத­லா­வது டெஸ்ட் காலியில் ஆரம்­ப­மா­கியது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

அந்த வகையில் களமிறங்கியுள்ள தென்னாபிரிக்க அணி 13 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 58 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதேவேளை, ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் பறி­கொ­டுத்­துள்ள இலங்கை அணி டெஸ்ட் தொடரை வெற்றி கொள்ள போராடும் என்­பது நம்­பிக்கை. அதே­வேளை இத்­தொடர் மற்றும் பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான டெஸ்ட் தொடர்­க­ளுடன் டெஸ்ட் அரங்­கி­லி­ருந்து அணியின் சிரேஷ்ட வீரர் மஹேல ஜெயவர்தன ஓய்வு பெற­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளதால் இப்­போட்டி மீதான எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­துள்­ளது.

இத­னி­டையே மறு­பக்­கத்தில் புதிய அணித்­த­லைவர் ஹிசிம் அம்­லாவின் தலை­மையில் முதல் முறை­யாக கள­மி­றங்­க­pயுள்ள தெ.ஆ. அணி வெற்­றி­க்காக இறுதி வரை போராடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இரு அணி­களும் இது­வரை 20 டெஸ்ட் போட்­டி­களில் மோதி­யுள்­ளன. அதில் 10 போட்டிகளை தெ.ஆ. அணியும் 5 போட்டிகளை இலங்கை அணியும் வெற்றி கொண்டதுடன் 5 போட்டிகளில் முடிவு பெறப்படவில்லை.

 

http://www.virakesari.lk/articles/2014/07/16/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE

  • தொடங்கியவர்

டீன் எல்கர் சதம்: தென் .ஆப்ரிக்கா அபாரம்

ஜூலை 16, 2014.

காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில், டீன் எல்கர் சதம் அடித்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி வலுவான ஸ்கோரை நோக்கி முன்னேறுகிறது.

இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் ஆம்லா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

தென் ஆப்ரிக்க அணிக்கு அல்விரோ பீட்டர்சன் (34) சுமாரான துவக்கம் கொடுத்தார். பின் இணைந்த டீன் எல்கர், டுபிளசி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இலங்கை அணி பந்துவீச்சை பதம்பார்த்த எல்கர், டெஸ்ட் அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த டுபிளசி, தனது 5வது டெஸ்ட் அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்த போது, சுரங்கா லக்மல் பந்தில் எல்கர் (103) அவுட்டானார். கேப்டன் ஆம்லா (11) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய டுபிளசி (80) நம்பிக்கை தந்தார். டிவிலியர்ஸ் (21) நிலைக்கவில்லை.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்திருந்தது. குயின்டன் டி காக் (17), ஸ்டைன் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் சுரங்கா லக்மல், தில்ருவான் பெரேரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

http://sports.dinamalar.com/2014/07/1405530272/DeanElgarSouthAfricaSriLankaTestCricket.html

  • தொடங்கியவர்

டுமினி சதம்: தென் ஆப்ரிக்கா அபாரம்
ஜூலை 17, 2014.

காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில், டுமினி சதம் அடித்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 455 ரன்கள் குவித்தது.

இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்திருந்தது. குயின்டன் டி காக் (17), ஸ்டைன் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

டுமினி அபாரம்:

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் (3) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய குயின்டன் டி காக், டெஸ்ட் அரங்கில், தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 51 ரன்கள் எடுத்த போது, தில்ருவான் பெரேராவிடம் சரணடைந்தார். அடுத்து வந்த பிலாண்டர் (27), மார்னே மார்கல் (22) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய டுமினி, டெஸ்ட் வரலாற்றில் தனது 4வது சதம் அடித்தார்.

 

முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட்டுக்கு 455 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. டுமினி (100) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் தில்ருவான் பெரேரா 4, சுரங்கா லக்மல் 3 விக்கெட் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி, இரண்டாம் நாள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்து, 425 ரன்கள் பின்தங்கி இருந்தது. உபுல் தரங்கா (20), கவுஷால் சில்வா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

http://sports.dinamalar.com/2014/07/1405617821/duminysouthafrica.html

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சொதப்புது.சொந்த மண்ணிலே தோக்க போது வெட்கக்கேடு

  • தொடங்கியவர்

ஸ்டைன் மிரட்டல் பந்துவீச்சு: இலங்கை போராட்டம்

ஜூலை 18, 2014.

காலே: முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் வேகத்தில் அசத்த, இலங்கை அணி போராடுகிறது.

இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 455 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தது. உபுல் தரங்கா (20), கவுஷால் சில்வா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஸ்டைன் மிரட்டல்:

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணிக்கு ஸ்டைன் தொல்லை தந்தார். இவரது அசத்தல் பந்துவீச்சில் சில்வா (8), ஜெயவர்தனா (3) சிக்கினர். சங்ககரா (24) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய உபுல் தரங்கா (83) அரைசதம் அடித்தார். திரிமான்னே (38) பெரிய அளவில் சோபிக்கவில்லை.

மாத்யூஸ் அரைசதம்:

பின், பொறுப்பாக ஆடிய கேப்டன் மாத்யூஸ், அரைசதம் அடித்தார். இவர் 89 ரன்கள் எடுத்த போது, தாகிர் ‘சுழலில்’ சிக்கினார். ஸ்டைன் பந்தில் சண்டிமால் (6), தில்ருவான் பெரேரா (0), சரணடைந்தனர். லக்மல் (6) நிலைக்கவில்லை.

மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 283 ரன்கள் எடுத்தது. ஹெராத் (12), எரங்கா (0) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன் 5, மார்னே மார்கல் 2 விக்கெட் வீழ்த்தினர்.

http://sports.dinamalar.com/2014/07/1405704357/DaleSteyncricket.html

  • தொடங்கியவர்

இலங்கை அணிக்கு 370 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 370 ஓட்டங்களை வெற்றி இலக்காக தென்னாபிரிக்க அணி நிர்ணயித்துள்ளது.


காலியில் இடம்பெற்று வரும் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

எல்கார், டுமினி ஆகியோரின் சதத்தின் உதவியுடன் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டை இழந்து 455 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றது. இதில் உபுல் தரங்க 83 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 89 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

163 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2ஆவது இன்னிங்சை  ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களை பெற்ற வேளை தனது 2 ஆவது இன்னிங்சை நிறுத்திக் கொண்டது.

டிவில்லியர்ஸ் அதிக பட்சமாக 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் இலங்கை அணிக்கு 370 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

370 ஒட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்துள்ள இலங்கை அணி இன்றைய 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 110 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

குமார் சங்கக்கார 58 ஓட்டங்களுடனும் கௌசல் சில்வா 37 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.  5 ஆவதும் இறுதியுமான நாளை இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமாயின் 9 விக்கெட்டுகள் கையிலுள்ள நிலையில் 260 ஓட்டங்களைப் பெற வேணடும்.

 

 

http://www.virakesari.lk/articles/2014/07/19/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-370-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

  • தொடங்கியவர்

பந்தை சேதப்படுத்திய பிலாண்டருக்கு அபராதம்

 

 Sat, 07/19/2014 - 17:06

இலங்கைக்கு எதிராக காலியில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3 ஆவது நாளில் தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வெரோன் பிலாண்டர் பந்தை சேதப்படுத்தியமைக்காக போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 75 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.


பந்தின் மேற்பரப்பில் தனது விரல்களால் கீறி சேதப்படுத்தியமைக்காகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பந்தை சேதப்படுத்தியதற்காக பிலாண்டர் மீது ஐ.சி.சி. போட்டி நடுவர் நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் இந்த போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 75 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

பந்தை சேதப்படுத்தியதாக சிக்கிய 2ஆவது தென்னாபிரிக்கா வீரர் பிலாண்டர் ஆவார்.  கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்தியதாக டூப்ளசிஸ் சிக்கினார். அப்போது அவருக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2014/07/19/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

கரை சேர்ப்பாரா சங்ககரா: காலே டெஸ்டில் ‘விறுவிறு’

ஜூலை 19, 2014.

காலே: காலே டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சங்ககரா கைகொடுத்தால் இலங்கை அணி சாதிக்கலாம். தென் ஆப்ரிக்க அணி ஸ்டைனை பெரிதும் நம்பி உள்ளது.

இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 455 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 283 ரன்கள் எடுத்தது.

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. ஹெராத் 19 ரன்களில் அவுட்டானார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 292 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது.

பெரேரா அசத்தல்:

இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு எல்கர் (12) விரைவில் வெளியேறினார். திருவான் பெரேரா சுழலில் அல்விரோ பீட்டர்சன் (32), ஆம்லா (22) சிக்கினர். டிவிலியர்ஸ் (51) அரை சதம் கடந்து வலுசேர்த்தார். டு பிளசி (37), குயின்டன் (36) ஓரளவு கைகொடுத்தனர். தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. டுமினி (8) அவுட்டாகாமல் இருந்தார்.

சங்ககரா அரை சதம்:

இதனையடுத்து 370 ரன்கள் வெற்றி இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. உபுல் தரங்கா 14 ரன்களில் திரும்பினார். பின் இணைந்த கவுசல் சில்வா, சங்ககரா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சங்ககரா டெஸ்ட் அரங்கில் 49வது அரைசதத்தை பதிவு செய்தார். நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி 1 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்திருந்தது. சில்வா (37), சங்ககரா (58), அவுட்டாகாமல் இருந்தனர்.

இலங்கை வெற்றிக்கு இன்னும் 260 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன. ‘சூப்பர் பார்மில்’ இருக்கும் சங்ககரா கைகொடுத்தால், வெற்றியை வசப்படுத்தலாம். இதனை ஸ்டைன் தடுப்பாரா என பார்ப்போம்.

‘300’ அதிகம்

காலேயில் நடந்த டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்சில் எந்த அணியும் 300 ரன்களை தாண்டியதில்லை. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி (எதிர்: இலங்கை 2012) 300 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

பிலாண்டருக்கு அபராதம்

முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் பிலாண்டர், பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இது குறித்து ஐ.சி.சி., விசாரித்தது. உண்மை இருப்பது தெரியவர, பிலாண்டருக்கு போட்டி சம்பளத்திலிருந்து 75 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

http://sports.dinamalar.com/2014/07/1405788648/Sangakkarasrilanka.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முதல் டெஸ்டில் இலங்கையை வென்றது தென் ஆபிரிக்கா
2014-07-20 14:07:38

 

காலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்க 153 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

 

 

தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 455 ஓட்டங்களைப் பெற்ற தென் ஆபிரிக்கா ஆட்டத்தை இடை நிறுத்தியது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 292 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

 

பின்னர் 163 ஓட்டங்கள் முன்னிலையில் ஆட்டத்தை தொடர்ந்து தென் ஆபிரிக்கா 206 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. டி வில்லியர்ஸ் அதிகூடுதலாக 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

 

370 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இலங்கை அணி 219 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 153 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. சங்கக்கார 76 ஓட்டங்களைப் பெற்றார்.

 

தென் ஆபிரிக்க பந்து வீச்சாளர்களில் மோர்னி மோர்கல் மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

 

தொடரின் 2ஆவதும் இறுதியுமான தீர்க்கமான போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6234#sthash.oCJM29ev.dpuf

 

  • தொடங்கியவர்

34ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார் மஹேல ஜயவர்த்தன
2014-07-24 15:09:19

 

தற்போது எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவருமான மஹேல ஜயவர்த்தன தனது 34ஆவது டெஸ்ட் சதத்தினைப் பூர்த்தி செய்துள்ளார்.

 

தனது 147ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் மஹேல, முதல் நாள் தேனீர் இடைவேளைக்கு முன்பதாக 138 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் மற்றும் 13 பௌண்டரிகள் அடங்கலான சதத்தைப் பூர்த்தி செய்தார்.

 

தேனீர் இடைவேளையின் போது இலங்கை அணி 3 விக்கெட்களை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆடுகளத்தில் மெத்தியுஸ் 48 ஓட்டங்களுடனும் மஹேல 101 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6304#sthash.tRc9zhoC.dpuf

  • தொடங்கியவர்

இலங்கை - தென்ஆபிரிக்க இரண்டாவது டெஸ்ட்: முதல் நாள்
வியாழக்கிழமை, 24 ஜூலை 2014 18:24

 

இலங்கை, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் இன்று ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் நேர முடிவில் இலங்கை அணி 86 ஓவர்களை எதிர்கொண்டு 5 விக்கெட்கள் இழப்பிற்கு 305 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் மஹேல ஜெயவர்தன ஆட்டமிழக்காமல் 144 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 63 ஓட்டங்களையும் கௌஷால் சில்வா 44 ஓட்டங்களையும் பெற்றனர். மஹேல ஜெயவர்த்தனவின் 34ஆவது சதம் இதுவாகும். கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இவர் பெற்றுள்ள 11ஆவது சதம் இதுவாகும். தென் ஆபிரிக்கா அணியின் பந்துவீச்சில் டேல் ஸ்டைன், JP டுமினி ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

எஸ்.எஸ்.சி மைதானத்தில் இரு அணிகளும் 4 போட்டிகளில் மோதியுள்ளன. இரு போட்டிகளில் இலங்கை அணியும் ஒரு போட்டியில் தென் ஆபிரிக்கா அணியும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. இலங்கை அணி இந்த மைதானத்தில் விளையாடியுள்ள 36 போட்டிகளில் 17 இல் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள அதேவேளை 13 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் மாத்திரமே தொடரைக் கைப்பற்ற முடியும்.

 

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/119382-2014-07-24-12-56-52.html

 

  • தொடங்கியவர்

மஹேல 165, நிரோஷன் டிக்வெல்ல 72 இலங்கை அணிக்கு 421 ஓட்டங்கள்
2014-07-25 13:55:05

 

தென் ஆபிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட்கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 421 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதல் நாளான நேற்று இலங்கை அணி,   5 விக்கெட் இழப்புக்க 305 ஓட்டங்கள் எனும் நிலையில் இருந்தது. நேற்று 140 ஓட்டங்களுடன் இருந்த மஹேல ஜயவர்தன இன்று 165 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.


இலங்கை அணியின் சார்பில் இரண்டாவது அதி கூடிய ஓட்டங்களைப்பெற்றவர் அறிமுக வீரரான நிரோஷன் டிக்வெல்ல ஆவார். 21 வயதான நிரோஷன் 116 பந்துகளில் ஒரு சிக்ஸர் 12 பௌண்டரிகள் உட்பட 72 ஓட்டங்களைப் பெற்றார்.

மஹேல, நிரோஷன் டிக்வெல்ல இருவரும் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.


421 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இலங்கை அணியின் சகல விக்கெட்களும் வீழ்ந்தன.

 

தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்களில் வேர்ணன் பிலாண்டர் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டேல் ஸ்டெய்ன் 69 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜீன் போல் டுமினி 80 ஓட்டங்களுக்கு 2விக்கெட்களையும் வீழ்த்தினர். மோர்ன் மோர்கெல், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6329#sthash.i0goTUnD.dpuf

 

 

  • தொடங்கியவர்

முதல் டெஸ்ட் போட்டி : கன்னி அரைச்சதம் பெற்றார் நிரோஷன் டிக்வெல்ல

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்ல கன்னி அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.


இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று அவர் இந்த இந்த சாதனையை படைத்தார்.

டிக்வெல்ல ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களைப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2014/07/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2

  • தொடங்கியவர்

மஹேலவின் சதத்துடன் வலுவான நிலையில் இலங்கை

 

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மஹேல ஜெயவர்தனவின் சதம் கைகொடுக்க இலங்கை 421 ஓட்டங்களைப்பெற்று வலுவான நிலையில் உள்ளது.


இரு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று கொழும்பு எஸ்.எஸ்.ஸி மைதானத்தில் ஆரம்பமாகியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட முடிவுசெய்தது.

அதன்படி இலங்கை அணி சார்பாக களமிறங்கிய உப்புல் தரங்க 11 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின்னர் 2ஆவது விக்கெட்டுக் களமிறங்கிய சங்கக்காரா ஸ்டையினின் முதல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆரம்ப ஆட்டக்காரராக களமிறங்கிய சில்வா 44 ஓட்டங்களை பெற்ற நிலையில் வெளியேறினார். மெத்தியூஸ் 63 ஒட்டங்களும், டிக்வெல்ல 72 ஓட்டங்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த காரணமாக இருந்த ஜெயவர்தன சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். இவர் அபாரமாக 165 ஓட்டங்கள் குவித்த நிலையில் ரன்-அவுட் ஆனார்.

இலங்கை அணி போட்டியின் 2ஆவது நாளில் தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 421 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

இதைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஹசிம் அம்லா 46 ஓட்டங்களுடனும் டிவில்லியர்ஸ் 11 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.

 

http://www.virakesari.lk/articles/2014/07/25/%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

  • தொடங்கியவர்

282 ஓட்டங்களுடன் சுருண்டது தென் ஆபிரிக்கா; தில்ருவன் 69/5, ஹேரத் 71/4

2014-07-26 17:11:34

இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 282 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களை யும் இழந்தது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் தென் ஆபிரிக்க அணித்தலைவர் ஹஷிம் அம்லா ஆட்டமிழக்காமல் 139 ஓட்டங்களைப் பெற்றார். அவ்வணியில் வேறு எவரும் அரைச்சதத்தையும் நெருங்கவில்லை.

இலங்கை அணி பந்துவீச்சாளர்களில் தில்ருவன் பெரேரா 69 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ரங்கன ஹேரத் 71 ஓட்டங்களுக்கு விக்கெட்களையும் வீழ்த்தினர். சுரங்க லங்மால் 54 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 421 ஓட்டங்களை குவித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.metronews.lk/article.php?category=sports&news=6341

  • தொடங்கியவர்

இலங்கை ‘சுழலில்’ தப்புமா தென் ஆப்ரிக்கா

ஜூலை 27, 2014.

கொழும்பு: கொழும்பு டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கை அணியின் ‘சுழல்’ வலையில் சிக்கியுள்ள தென் ஆப்ரிக்கா தப்புவது கடினம் தான்.

இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற தென் ஆப்ரிக்கா 1–0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 421, தென் ஆப்ரிக்கா 282 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்தது. உபுல் தரங்கா (6), கவுசல் சில்வா (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

சங்ககரா அரை சதம்:

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. தரங்கா 30 ரன்களில் வெளியேறினார். மார்னே மார்கல் வேகத்தில் சில்வா (26) அவுட்டானார். இதன் பின் கைகோர்த்த சங்ககரா, கேப்டன் மாத்யூஸ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மழையால் போட்டி ஒரு மணி நேரத்திற்கு பாதிக்கப்பட்டது. இதன் பின் மீண்டும் துவங்க, இம்ரான் தாகிர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சங்ககரா அரை சதம் எட்டினார்.

மார்கல் அசத்தல்:

மார்னே மார்கல் தனது வேகத்தை காட்ட, சங்ககரா (72), விதாங்கா (7) அடுத்தடுத்து சிக்கினர். மாத்யூஸ் அரை சதம் அடித்தார். திருவான் பெரேரா (7) உள்ளிட்டோரும் விரைவில் திரும்ப, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. மாத்யூஸ் (63) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக மார்கல் 4 விக்கெட் வீழ்த்தினார்.

369 ரன்கள் வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு அல்விரோ பீட்டர்சன் டக்–அவுட் ஆனார். நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்தது. எல்கர் (13), குயின்டன் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 331 ரன்கள் தேவை. இலங்கையின் ‘சுழல்’ வீரர்களிடம் தாக்குப்பிடித்தால் மட்டுமே, தென் ஆப்ரிக்கா தோல்வியை தவிர்க்கலாம்.

மார்கல் ‘200’

நேற்றைய போட்டியில் 4 விக்கெட் வீழ்த்திய மார்னே மார்கல் டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட் கைப்பற்றிய 6வது தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை 58 போட்டியில் பங்கேற்று 201 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

http://sports.dinamalar.com/2014/07/1406484500/DaleSteyncricket.html

  • தொடங்கியவர்

2ஆவது போட்டி சமநிலை: தொடரை கைப்பற்றியது தென்னாபி­ரிக்கா, இலங்கையின் வெற்றிக்கு முட்டுகட்டையான மழை!

இலங்கை மற்றும் தென்னாபி­ரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்ததையடுத்து இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபி­ரிக்க அணி 1-0 என கைப்பற்றியது.

தென்ஆப்பிரிக்கா–இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்றது இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 421 ஓட்டங்களையும்;,தென்னாபி­ரிக்க 282 ஓட்டங்களையும் எடுத்தன. 139 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 3ஆவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 11 ஓட்டங்களை எடுத்திருந்தது.


இந்த நிலையில் 4ஆவது நாளான நேற்று ஞாயிற்றுக் கிழமை (27) தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 2ஆவது இன்னிங்சில் 53.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 229 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது.

குமார் சங்கக்கார (72 ஓட்டங்கள்), மெத்யூஸ் (63 ஓட்டங்கள்) அரைசதம் விளாசினர். முதலாவது இன்னிங்சில் சதம் கண்ட மஹேல ஜயவர்த்தன எவ்வித ஓட்டங்களும் பெறாது அரங்கு திரும்பினார். முன்னதாக உணவு இடைவேளையின் போது மழையால் ஆட்டம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது.

தென்னாபி­ரிக்க அணி தரப்பில் மோர்னே மோர்கல் 4 விக்கெட்டுகளும், ஸ்டெயின், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் மோர்னே மோர்கலின் ஒட்டுமொத்த டெஸ்ட் விக்கெட் எண்ணிக்கை 201–ஆக (58 டெஸ்ட்) உயர்ந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 6ஆவது தென்னாபி­ரிக்க பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் மோர்கல் பெற்றார்.

இதன் மூலம் இலங்கை அணி தென்னாபி­ரிக்காவுக்கு 369 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. குறைந்தது 127 ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியுடன் இலக்கை துரத்திய தென்னாபி­ரிக்க அணி 17 ஓவர்களில் அல்விரோ பீட்டர்சனின் (0) விக்கெட்டை இழந்து 38 ஓட்டங்களை எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததாலும், மழை குறுக்கிட்டதாலும் 4ஆவது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது டீன் எல்கர் (13 ஓட்டங்கள்), குயின்டான் டீ கொக் (21 ஓட்டங்கள்) களத்தில் இருந்தனர்.

5ஆவது மற்றும் இறுதி நாளான இன்றைய ஆட்டம் 15 நிமிடத்திற்கு முன்பாக காலை 9.45 மணிக்கு ஆரம்பமானது. தென்னாபி­ரிக்க அணி வெற்றி பெற மேற்கொண்டு 331 ஓட்டங்களை பெறவேண்டி இருந்தது.  ஆனால் இலங்கையின் சுழலை சமாளித்து இறுதி நாளில் மிகப்பெரிய ஓட்ட இலக்கை அடைவதே கடினமாகவே காணப்பட்டது.  எனினும் போராட்டத்துக்கு மத்தியில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை தென்னாபி­ரிக்க அணி பெற்றிருந்த போது ஆட்டம் நிறைவுக்கு வந்தது. டி கொக் 37, அம்லா 25 ஓட்டங்களை அதிகமாக பெற ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

போட்டி சமநிலையை மனதில் கொண்டே  தென்னாபி­ரிக்க வீரர்கள் விளையாடியமையால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதற்கு மழையும் இடை இடையே குறுக்கிட்டு தென்னாபி­ரிக்க அணிக்கு உதவியதோடு இலங்கையின் வெற்றிக்கு முட்டுகட்டையாக இருந்தது.

இலங்கை அணியின் பந்து வீச்சில் சுழலில் சிறப்பாக செயற்பட்ட ரங்கண ஹேரத் 5 விக்கெட்டுகளையும் டில்ருவன் பெரேரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக மஹேல ஜயவர்தன தெரிவு செய்யப்பட்டதோடு தொடர் ஆட்டநாயகனாக ஸ்டெயின் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் தென்னாபி­ரிக்க அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.virakesari.lk/articles/2014/07/28/2%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%C2%AD%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

  • தொடங்கியவர்

தென் ஆப்ரிக்கா மீண்டும் நம்பர்–1: பரபரப்பான டெஸ்ட் ‘டிரா’
ஜூலை 28, 2014.

 

கொழும்பு: பரபரப்பான கொழும்பு டெஸ்ட் போட்டியை டிரா செய்த தென் ஆப்ரிக்க அணி, தொடரை 1–0 என கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் மீண்டும் நம்பர்–1 இடத்தை பெற்றது. இலங்கை அணியின் போராட்டம் வீணானது.

 

இலங்கை சென்ற தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் வென்ற தென் ஆப்ரிக்கா 1–0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 421, தென் ஆப்ரிக்கா 282 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 8/229 ரன்களுக்கு ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் தென் ஆப்ரிக்காவுக்கு 369 ரன்கள் என்ற கடின வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்தது.

 

நேற்று கடைசி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. மழை அவ்வப்போது வந்து தொல்லை தந்தது. இதனால் ஆட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடைபட்டது. தென் ஆப்ரிக்க அணிக்கு எல்கர் (13) ஏமாற்றினார். ஹெராத் வலையில் குயின்டன் (37), டிவிலியர்ஸ் (12) சிக்கினர்.  திருவான் பெரேரா சுழற்பந்துவீச்சில் கேப்டன் ஆம்லா (25), டுமினி (3) அவுட்டாகினர். ஸ்டைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து தென் ஆப்ரிக்க அணி 8 விக்கெட்டுக்களை இழந்து தவிக்க, ஆட்டத்தில் சூடு பிடித்தது.

 

கடைசி ஒரு மணி நேரத்தில் எஞ்சிய இரு விக்கெட்டை கைப்பற்ற, இலங்கை அணி மேற்கொண்ட முயற்சிகள் வீணாகின. துாணாக நின்ற பிலாண்டர் கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து, போட்டியை ‘டிரா’ செய்தது. பிலாண்டர் (27), தாகிர் (4) அவுட்டாகாமல் .

21 ஆண்டுக்குப்பின்:

சுமார் 21 ஆண்டுகளுக்குப்பின் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென் ஆப்ரிக்க அணி(124 புள்ளிகள்), டெஸ்ட் தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தையும் பிடித்தது. இரண்டாவது, மூன்றாவது இடத்தில் முறையே ஆஸ்திரேலியா(123), பாகிஸ்தான் (103) அணிகள் உள்ளன. இந்திய அணி 102 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

 

 

http://sports.dinamalar.com/2014/07/1406568296/amlateam.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.