Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தத்துவக் கதைகள்!

Featured Replies

அப்படி நான் சொல்லவில்லை. உமக்கு விளக்கத்தை மட்டும் தான் தனித்து எழுதினேன். பிறகு விளக்கம் கேட்கக் கூடாது அல்லவா!

ஓ அப்படியா டென் தங் யு பிரதர்

:wink: :wink: :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை ஒரு பத்திரிகையாளர் மரணித்து, மேலுலகம் போனார். அங்கே, யமதர்மன், இவரது கடந்தகால நடவடிக்கைகளைப் பரிசீலித்து, இவருக்கு சொர்க்கத்தில் தங்க அனுமதி வழங்கினார். இவர் தான் பத்திரிகையாளராச்சே!

யமனிடம் ஒரு விண்ணப்பம் கேட்டார். "யமதர்மனே! சொர்க்கத்துக்கும், நரகத்தையும் நான், முதலில் பார்க்க அனுமதி வேண்டும் என்று!" உடனே யமனும் அதற்கு அனுமதி வழங்கினார்.

இவரும் யமதர்மனின் விருந்தினராக சென்று இரு இடங்களையும் வடிவாகப் பார்த்தார். இவருக்கும் இரண்டிலும் வேறுபாடு தெரியவில்லை. சந்தோசமான வரவேற்பு, குறைவில்லாத உபசரிப்பு என்று இரு இடங்களிலும், எவ்வித குறையும் இருக்கவில்லை.

இவருக்கு ஒரே ஆச்சரியம். இவ்வளவு அற்புதமாக இருக்கின்ற நரகத்தை ஏன் எல்லோரும் வெறுக்கின்றார்கள் என்று. எனவே சொர்க்கத்தை விட்டு, நரகத்திலேயே வாழ விரும்பினார். யமனிடம் அனுமதி கேட்டு, அங்கே வசிக்கச் சொன்றார்.

சென்றபோது, காட்சிகள் எல்லாம் மாறுபட்டிருந்தன. ஒரே அழுகுரல், ரத்தவாடை, என்று ஒரே, கொடுமை. இவர் உடனே யமனிடம் ஓடிச்சென்று விளக்கம் கேட்டார்." யமதர்மா! முதலில் சென்று பார்க்கும்போது நன்றாக இருந்ததே! இப்போது ஏன் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது" என்று.

அதற்கு யமன் சொன்னார். முதலில் நீங்கள் சென்றது விருந்தினராக. இப்போது சென்றது வதிவிடனாக என்று".

---------------------------------------------------------------

நமக்கும் பொதுவாக அப்படித் தான். நயக்கரா நீர்வீழ்ச்சி என்று பாய்ந்தடித்துப் பார்ப்போம். படமும் எடுத்துக் கொள்வோம். அல்லது சாய்ந்த கோபுரத்தைச் சுத்திச் சுத்திப் படம் எல்லாம் எடுப்போம். ஊர் சென்றால் அங்கே, ஒரு சின்னப் புல், செடியைக் கூட விட்டு வைக்காமல் படம் எடுப்போம்.

ஆனால், அங்கே வசிக்கின்றபோது, அல்லது வசிப்பவர்களுக்கு அது அதிசயமாகத் தெரிவதில்லை. அப்போது அதன் நிலை தரமிழந்து போய்விடும்.

என்ன நம்ம றோயல் பமிலி தூய்ஸ் அண்ணா தத்துவங்களாக பொழிந்து தள்ளுகின்றார். நல்லாய் றோயல் பமிலி அடிபட்டு வந்திருக்கு போல :wink:

கதைக்கு கருத்து பொருந்துவது மாதிரி தெரியவில்லை. :roll:

ஒரு முனிவரும் அவரின் சீடனும் கரையை ஆற்றின் கரையை கடக்க முயன்றார்கள் அப்போது ஒரு பெண்ணின் அவல குரல் திரும்பி பார்த்தார்கள் அங்கே அந்த பெண் ஆற்றில் விழுந்துவிட்டாள் காப்பாற்றும்படிகேட்டாள் உடனே முனிவரோ திரும்ப்பி பார்த்து விட்டு பார்க்காதபடி சென்றார் சீடனோ ஓடிசென்று காப்பாற்றிவிட்டு தூக்கி கொண்டு வந்து கரையில் விட்டான். விட்டுவிட்டு குருவை பின் தொடர்ந்தான் ஆனால் சிஷ்யனின் இவ் செயலால் குரு கடும் கோபத்திற்கு உட்பட்டிருந்தார் அவரால் பொறுக்கமுடியாமல் சில மணித்தியாலங்களிளின் பின் கேட்டார் ஏன் இவ்வாறு செய்தாய் என்று,உடனே சீடனோ என்ன குருவே என்று கேட்டான் அப்ப அவர் கூற தோடங்கினார் நாங்கள் முற்றும் துறந்தனாங்கள் இவ்வாறு ஒரு பெண்ணை தூக்குவதா அபச்சாரம் அபச்சாரம் என்றார்(அபச்சாரம் இது யமுனா இன்கூலூட் பண்ணினது) நீ இவ்வாறு செய்தது உனக்கு மனசில் ஆசையிருக்கு அதுஇது என்று கோபம் கொண்டார் முனிவர்.அமைதியாக சீடன் கூறினான் குருவே ஒருவன் அல்லூறும்போது காப்பாறுவதே நாம் இறைவனுக்கு செய்யும் தொண்டு அதுசரி குருவே நான் அந்த பெண்ணை ஆற்றோடு இறக்கி வைத்துவிட்டேன் ஆனால் நீங்கள் இன்னும் மனதில் அந்த பெண்ணை சுமந்து கொண்டு வாறீங்கள் அது தான் தப்பு என்று அமைதியாக யமுனாவை போல் பதிலளித்தான் இதில் இருந்து என்ன தெறிகிறது என்று விளங்கபடுத்த எனக்கு தெறியாது அதை சுண்டல்பாபா விளங்கபடுத்துவார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு கருத்து பொருந்துவது மாதிரி தெரியவில்லை. :roll:

:? :? :? :?

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

´Õ ºÁÂõ ÀÄò¾ Á¨Æ ¦ÀöÐ ¦¸¡ñÊÕó¾Ð. ±íÌõ ¦ÅûÇõ ¸¨ÃÒÃñÎ µ¼ Áì¸û ¾ò¾Ç¢ò¾É÷. ÀÄ÷ ¿£¡¢ø «ÊòÐî ¦ºøÄôÀð¼É÷. Á츨Çì ¸¡ôÀ¡üÈ ´Õ À¼Ì «ÛôÀôÀð¼Ð. Áì¸û ¾¡õ ¯Â¢÷ ¾ôÀ¢É¡ø §À¡Ð¦ÁýÚ ¾õ ¦À¡Õû¸¨Ç ±øÄ¡õ ÐÈóÐ À¼¸¢ø ²È¢É÷.

À½ ¬¨ºÔûÇ ´ÕÅý ¦ÅûÇõ ¾¢ÃñÎ ÅÕŨ¾ì ¸ñ¼Ðõ ӾĢø ¾ý À½ò¨¾¦ÂøÄ¡õ н¢Â¢ø ¨ÅòÐ ¾ý þÎôÀ¢ø ¦¸ðÊ¡¸ì ¸ðÊì ¦¸¡ñÊÕó¾¡ý. «ÅÛõ À¼¸¢ø ²È¢É¡ý.

¿£¡¢ø ¦ºýÚ ¦¸¡ñÊÕó¾ §À¡Ð ÝÈ¡ÅÇ¢ì ¸¡üÚ ÅçŠÀ¼Ì ¸Å¢úóÐÅ¢ð¼Ð. ¿£îºø ¦¾¡¢Â¡¾Å÷¸û ¿£¡¢ø Óú¸¢Å¢ð¼É÷. ¦¾¡¢ó¾Å÷¸û ¸¨Ã¨Â §¿¡ì¸¢ ¿£îºÄÊòÐì ¦¸¡ñÊÕó¾É÷.

À½ ¬¨ºÔûÇÅý ¿£îºøÅ£Ãý ±ýÚ ¦ÀÂ÷ ¦ÀüÈÅý. «Åý þÎôÀ¢ø ¸Éõ þÕ󾾡ø §Å¸Á¡¸ ¿£ó¾ÓÊ¡Áø ¾¢½È¢É¡ý. «Õ¸¢ø þÕó¾Å÷¸û þÎôÀ¢ø ¯ûǨ¾ «Å¢úòÐŢΠ¯Â¢÷¾ôÀÄ¡õ ±ýÈÉ÷. ¬É¡ø «Åý À½ò¨¾ þÆì¸ º¢È¢Ðõ Å¢ÕõÀÅ¢ø¨Ä. þÎôÀ¢ø ¸½õ «¾¢¸Á¡¸§Å ¿£ó¾ ÓÊ¡Áø ¸‰¼ôÀðÎ ¸¨¼º¢Â¢ø ¿£ÕìÌû ãú¸¢É¡ý. ¬Àò¾¢ø À½õ «Å¨Éì ¸¡ôÀ¡üÈÅ¢ø¨Ä. «Åý ¯Â¢ÕìÌ «Ð ±ÁÉ¡¸ «¨Áó¾Ð.

¬¨º§Â ¿õ ÐýÀò¾¢üÌ ãÄ ¸¡Ã½õ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்னாலிராமனின் கதை ஒன்று. அதில் எப்போதுமே ஒரு வித விவேகம் இருக்கும். ஆனால் இது தத்துவக் கதையா இல்லையா என்று சொல்ல முடியவில்லை. ஆனால் எனக்கு நினைவில் நிற்கின்ற கதைகளில் ஒன்று!

-------------------

ஒரு தடவை தேவராஜர மன்னருக்கு "குருடர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் எவர்" என்று ஒரு சந்தேகம்! வழமையாக வேலை வெட்டியில்லாத மன்னர்கள் இப்படி அடிக்கடி சந்தேகத்தை கிளப்புவது வழமை தான். மறுநாள் அரசசபை கூடிய போது இதே சந்தேகத்தை எல்லோரிடமும் கேட்டார்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் சொன்னார்கள். "கண்பார்வையில்லாதவர்கள் குருடர்கள்". என்பதே பலரின் விளக்கமாக இருந்தது. தென்னாலி ராமனின் முறை வந்தபோது அவன் சொன்னான். "அரசே! கண் பார்வையில்லாதவர்கள் எல்லோரும் குருடர்களும் இல்லை. பார்வையுள்ளவர்கள் எல்லோரும் பார்வையுள்ளவர்கள் அல்ல. உதாரணத்துக்கு நீங்கள் கூட பார்வைக்குருடர் தான் "என்றான். இதனால் கோபமடைந்த மன்னர். என்னும் ஒரு நாளுக்குள் அதை நீர் தெளிவுபடுத்தாவிட்டால், உமக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவைப் போட்டான்.

மறுநாள் காலை, அரண்மனை வாசலில், தென்னாலிராமன், ஒரு கட்டிலைப் போட்டு சவசாகமாகப் பின்னத் தொடங்கினான். இதைப் பார்த்த காவலர்கள், மன்னரிடம் போய்ச் சொன்னார்கள். மன்னரும் வந்து, "தென்னாலிராமா இங்கிருந்து என்ன செய்கின்றாய்" என்று கேட்டார். இவன் ஒன்றும் பேசவில்லை. அருகில் உள்ள ஏட்டில் குறித்து வைத்துக் கொண்டான். இப்படி மந்திரிமார்கள், பொதுமக்கள் என்று எல்லோரும் வந்து கேட்டுச் சொல்லும்போது ஒன்றும் பேசாமல் குறித்து வைததுக் கொண்டான்.

மறுநாள் காலை அரசசபை கூடியபோது, தென்னாலிராமன் போய் ஏட்டைக் காட்டினான்! "அரசே! நான் கட்டில் பின்னுவது தெரிந்தும், பார்த்து என்ன செய்கின்றாய் என்று கேட்ட, பார்வையுள்ள குருடர்கள் இவர்கள் என்று காட்டினான்." முதலாவது குருடராக அரசரின் பெயரே இருந்தது.

(வழமை போல தென்னாலிராமனின் புத்திக் கூர்மைக்கு மன்னர் பரிசில் வழங்கினாராம்) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாலிராமனின் கதை ஒன்று

யாழ்களத்தில் இப்படி நடந்தால் யார்ட்ட பெயர் முதலில் வரும் புத்தனின் பெயர் கடைசியில் தான் வரும்

:lol::lol::lol::lol::lol:

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

யாழ்களத்தில் இப்படி நடந்தால் யார்ட்ட பெயர் முதலில் வரும் புத்தனின் பெயர் கடைசியில் தான் வரும்

:lol::lol::lol::lol::lol:

அப்ப என்ட பெயர்

:P :P

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ட பெயர்

:P :P

உங்கட பெயரும் கடைசியில தானே வரும்...

உங்கட பெயரும் கடைசியில தானே வரும்...

அப்படியா மிக்க சந்தோசம் எனக்கு அப்பவே தெறியும் ஆனால் சும்மா கேட்டனான்

:wink: :wink: :wink:

கடவுள் எல்லாம் படைப்பாரா?

ஆம் என்னு ஒருவன்.......

கடவுள் ஒரு கல்லை படைப்பாரா?திரும்பவும் - ஆம்...

கடவுள் தானே தூக்க முடியாத - ஒரு கல்லை

படைப்பாரா?

ஆம்..

திரும்ப அந்த கல்லை தூக்குவாரா??

??????????????????????

கருத்து: உன்னை நீ நம்பு!

எங்கேயோ கேட்டது! 8)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கதைகளும் நன்றாக இருக்கின்றன வர்ணன். இரண்டாவது கதைக்கு ஒத்த புராணக் கதை ஒன்று ஏற்கனவே இருக்கின்றது.

ஒரு தடவை, ஒருவன் இறைவனை நோக்கிக் கடும்தவம் இருந்தான். இறைவனும் அவன் தவத்தைக் கண்டு மெச்சி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அவனும், நான் யாருடைய தலையில் கை வைத்தாலும் அவர் எரிந்து சாம்பலாக வேண்டும் என்ற வரத்தைக் கேட்டான். கடவுளும் வழங்கினார். ஆனால் அவனுக்கு சந்தேகம் வந்தது உண்மையில் வரம் தந்து விட்டாரா என்று.

அதனால் கடவுளின் தலையில் வைத்து பரீசோதிக்க விரும்பினான். இதனால் அச்சமுற்ற இறைவன், ஓடிச் சென்றார். அவனும் விடாமல் துரத்தினான்.

கடைசியில் விஸ்ணு, இறைவனைக் காப்பாற்ற பெண் வேடமிட்டு, வந்து இவனோடு ஆட, அவனும் அழகில் மயங்கி நிகராக ஆடி, தன் தலையில் கை வைத்து எரிந்து போனான்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மருத்துவமனை. அங்கே ஒருவர் படுத்திருந்தார். பக்கத்தில் அவர் மகன் நின்று கொண்டிருந்தான். படுத்திருந்தவர், நோயின் கடுமையால் மிகவும் பாதிக்கப் பட்டிருந்தார்.

மருத்துவரும் தன்னால் ஆன முடிந்த அளவுக்கு ஏதேதோ செய்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் அடுத்த ஊர்க்காரர் ஒருவர், அவரைப் பார்க்க வந்தார். மகனைத் தனியே அழைத்து, ‘‘தம்பி! உன் அப்பா எனக்கு ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும். அதை இப்போ கொடுத்தா எனக்கு மிகவும் உதவியா இருக்கும்!’’ என்றார்.

‘‘அப்படியா?’’ என்ற மகன் அவரை அழைத்துக் கொண்டு அப்பாவை நெருங்கினான்.

‘‘அப்பா...!’’ என்றான்.

அவர் மெள்ள கண் விழித்தார்.

‘‘அப்பா! இவருக்கு நீங்க ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டியிருக்காமே... சரிதானா?’’

அப்பா மிகவும் சிரமப்பட்டு வாயைத் திறந்து, ‘‘ப்பே... ப்பே... பா... பா...’’ என்றார். பேச்சு வரவில்லை. வந்தவர் பார்த்தார்.

‘‘தம்பி... பரவாயில்லை. பாவம்... அவரால் பேசக்கூட முடியவில்லை. நான் வருகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

கொஞ்ச நேரத்தில் இன்னொருவர் வந்தார்.

‘‘தம்பி... அப்பாவுக்கு நான் ஐயாயிரம் ரூபாய் தர வேண்டி இருக்கிறது...’’ என்று ஆரம்பித்தார்.

அப்போது படுக்கையில் இருந்தவர் பட்டென்று எழுந்து உட்கார்ந்தார். தெளிவாகப் பேசத் தொடங்கினார்:

‘‘ஆமாம்... ஆறு மாசத்துக்கு முன்னாடி அவசரத் தேவைனு வாங்கிக்கிட்டுப் போனீங்களே!’’ என்றார்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பேச முடியாத அந்த மனிதரால், இப்போது எப்படி இவ்வளவு நன்றாக பேச முடிந்தது?

இன்றைக்கு இப்படியும் சில பக்தர்கள் இருக்கிறார்கள். ஆண்டவனே சிபாரிசு பண்ணினாலும், அடுத்தவர்களுக்கு உதவத் தயங்குவார்கள்.

ஆனால், ஆண்டவனே ‘வேண்டாம்’ என்று சொன்னாலும் கூட, அடுத்தவர்கள் செய்கிற உதவிகளைப் பெற்றுக் கொள்ளத் தயங்க மாட்டார்கள்.

இப்படிப்பட்டவர்களைப் பற்றி என்ன நினைப்பது?

இவர்களை எல்லாம் ‘குதிரை விசுவாசிகள்’ என்று சொல்கிறார்கள் பெரியவர்கள்.

ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?

புல் என்றால் வாயைத் திறப்பதும், கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்வதும் குதிரைகள்தானே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.