Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இராணுவக் கருத்தரங்கில் இந்திய உயர் இராணுவ அதிகாரிகளுடன் சுப்பிரமணியசுவாமி தலைமையில் பா.ஜ.க.!

Featured Replies

swamy%2066540142.jpg

 

கொழும்பில் வரும் ஓகஸ்ட் 18 முதல் 20 ஆம் திகதி வரை இலங்கை இராணுவம் நடத்தும் வருடாந்தக் கருத்தரங்கில் இந்திய இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகளும், பாரதீய ஜனதாக் கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி தலைமையிலான குழுவினரும் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஒப்புதல் கடிதம் இரு தரப்பில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையில் 2009இல் விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு, 2011ஆம் ஆண்டு முதல் இராணுவ உயர் மட்டக் கருத்தரங்குகளை இலங்கை அரசு நடத்தி வருகிறது. இம்மாநாடுகளில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் சர்வதேச நாடுகளின் இராணுவம் மற்றும் பொலிஸ் போன்றவை கையாளும் உத்திகள் உள்ளிட்ட பல விவரங்கள் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், வரும் ஓகஸ்ட் 18 முதல் 20 ஆம் திகதி வரை 3 நாள்கள் கருத்தரங்கு கொழும்பில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கை பாதுகாப்பு அமைச்சு செய்து வருகின்றது. இக்கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இராணுவ உயரதிகாரிகள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இராணுவத் தலைமையகத்துக்கும், சில அரசியல் தலைவர்களுக்கும் இலங்கை அழைப்பு அனுப்பியுள்ளது. இதையடுத்து, அக்கருத்தரங்கில் பங்கேற்க தமது அதிகாரிகளை இந்திய இராணுவம் அனுப்பி வைக்கும் என்றும், பா.ஜ.க. சார்பில் அதன் மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி தலைமையில் ஒரு குழுவினர் கருத்தரங்கில் பங்கேற்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கு 'இலங்கை: வளரும் நாடு எதிர்கொள்ளும் சவால்கள்' என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.
 
இலங்கைக்கு நட்பு நாடுகளும், பிற உலக நாடுகளும் எத்தகைய பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்க முடியும் என்பதை அறிய இக்கருத்தரங்கு உதவியாக இருக்கும் என்று இலங்கைத் தரப்பில் கூறப்பட்டது. தேசிய வளர்ச்சி, பயங்கரவாதத் தடுப்பு உள்ளிட்டவைகள் தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்று கருத்து வெளியிடுவர். ஆனால், இந்தியாவின் பங்களிப்பைத்தான் இலங்கை மிகவும் உயரியதாகக் கருதுகிறது என்று இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
 
http://malarum.com/article/tam/2014/07/28/4027/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-.html#sthash.6YY9zlei.dpuf
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவக் கருத்தரங்கில் இந்திய உயர் இராணுவ அதிகாரிகளுடன் சுப்பிரமணியசுவாமி தலைமையில் பா.ஜ.க.!

சாமி தலைமையில் பாகிஸ்தான் மீது இந்தியா படையெடுக்க சொறி லங்காவிடம் பாடம் எடுக்குது போல.....கிழிஞ்சிது.....

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் ராஜீவ் காந்தியையும்.. காங்கிரஸையும் தலையில் வைத்து ஆடிய சாமி.. அவர்களுக்கு அளித்த பரிசை.. மோடி தலைமையிலான பா.ஜ.க மறந்து ஆடுகிறது ஆட்டம். உது நல்லதுக்கில்ல..!

 

சுப்பிரமணியம் சுவாமி என்றும் இல்லாத அளவுக்கு 2009 மே க்குப் பின் சிறீலங்காவுக்கு வெளிப்படையாகவே.. அடிமை சேவகம் செய்வதன் நோக்கம்.. மிகவும் சந்தேகத்துக்குரிய ஒன்றாக இருப்பதோடு.. இவர் செய்த கடந்த காலச் செயல்களை மறைக்கும் நோக்கமும் தன்னை தற்காக்கும் நோக்கமும்.. அதில் அடங்கி இருக்கலாம்..!

 

சுப்பிரமணியம் சுவாமி தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு நபர். விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒருவர். இவர் பிராந்திய தமிழர்களின் நலனுக்கு எதிரான ஒருவர்..! இதனை இட்டு உலகத் தமிழர்கள் விழிப்போடு செயற்படுதல் அவசியம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கொசு தொல்லை தாங்க முடியலப்பா ....... இந்த கொசுவை யாராவது மருந்தடிச்சு கொல்ல மாட்டார்களா 

  • தொடங்கியவர்
இலங்கை இராணுவக் கருத்தரங்கில் இந்தியா பங்கேற்கக்கூடாது! வைகோ அறிக்கை -
 
VAIKO%206569894.jpg
 
ஐ.நா. மனித உரிமைகள் குழுவில், இலங்கை அரசு நடத்திய தமிழ் இனப்படுகொலைகளை விசாரிப்பதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடைபெற வேண்டும் என்று உலகின் பல நாடுகள் வற்புறுத்தி வரும் நிலையில், இந்திய இராணுவத் தளபதிகளும், பா.ஜ.க. குழுவும் இலங்கை இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்பது என்பது சகிக்க முடியாத, மன்னிக்க முடியாத மாபாதகச் செயலாகும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலர் வை.கோ. இதுகுறித்து அவர் இன்று விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
 
தமிழ் இனப் படுகொலை நடத்திய சிங்கள அரசு, கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திததி வரை இராணுவக் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்து இருக்கின்றது. இந்தக் கருத்தரங்கில் இந்திய இராணுவத் தளபதிகளும், அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள் என்றும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சுப்பிரமணியசுவாமி உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொள்வர் என்றும் செய்தி வெளியாகி இருக்கின்றது. இந்தத் தகவல் தமிழ் மக்களுக்குக் கடும் அதிர்ச்சியையும் மனவேதனையையும் தருகிறது. அண்மையில் சுப்பிரமணியசுவாமி, சேஷாத்திரி சாரி உள்ளிட்டவர்கள் சிங்கள ஜனாதிபதியைச் சந்தித்து, இலங்கை அரசுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும், ஐ.நா. மனித உரிமைக்குழுவில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் இந்திய அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்தனர் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. குழந்தைகள், வயது முதிர்ந்தோர், பெண்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த மஹிந்த அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு செயற்படும் என்று இந்திய அரசின் சார்பில் அவர்கள் தெரிவித்த கருத்து, தாய்த் தமிழ்நாட்டு மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. இந்த நிலையில், இலங்கை அரசு நடத்தும் இராணுவக் கருத்தரங்கில் இந்திய இராணுவ உயர் அதிகாரிகளும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒரு குழுவும் பங்கேற்பது தமிழர்கள் மீது நெருப்பை அள்ளிக் கொட்டுவதாகும். சிங்கப்பூரில் நடந்த ஒரு கருத்தரங்கில் பாரதிய ஜனதா கட்சி வெளிவிவகாரக் கொள்கையின் தேசிய அமைப்பாளர் சேஷாத்திரி சாரி பேசும்பொழுது, "வெளிநாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு, மேற்கு வங்காள மாநிலங்களைக் கருதி தீர்மானிக்க முடியாது” என்று குறிப்பிட்டு இருக்கின்றார். அப்படியானால் இலட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்டதை சர்வ சாதாரணமாக நினைக்கிறாரா? இதுபோன்ற மிகவும் ஆபத்தான நச்சுக் கருத்தை சேஷாத்திரி சாரி தெரிவித்து இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். உலகம் தடை செய்து இருக்கின்ற இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியும், குண்டுகளை வீசியும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்து மனிதப் பேரழிவை நடத்திய மஹிந்த அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை சனல்-4 தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. ஐ.நா. சபை அமைத்த மூவர் விசாரணைக்குழுவும் இதனை உறுதி செய்து இருக்கின்றது. பன்னாட்டு நீதிமன்றத்தில் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய இலங்கை ஜனாதிபதிக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்திய அரசு மேற்கொள்வது, இலங்கை அரசோடு சேர்ந்துகொண்டு நீதியை குழிதோண்டிப் புதைக்கப் போகிறதோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது. ஏழரைக் கோடித் தமிழர்களின் உணர்வுகளை மதித்துச் செயல்படும் வகையில், இலங்கை இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்கும் முடிவை இந்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.-என்றுள்ளது.
 
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.