Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை உளவுபார்க்க பயன்படுத்திய தொழில்நுட்பத்தைக் கொண்டு அரசியல்வாதிகள் கண்காணிக்கப்டுகின்றனர் :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

question-1_CI.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளை உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு அரசியல்வாதிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்ட உளவு தொழில்நுட்பங்கள் தற்போது அரசியல்வாதிகள், முக்கியவர்த்தகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை கண்காணிக்கப் பயன்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.2008ம் ஆண்டு , தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை உளவு பார்ப்பதற்காக சீனாவிடமிருந்து அரசாங்கம் சில தொழில்நுட்பங்களைக் கொள்வனவு செய்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த நோக்கில் இவ்வாறு உளவு பார்க்கும் கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியது என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை உளவு பார்ப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கம் குறித்த உரிமைகளை மீறும் கண்மூடித்தனமான செயலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தள கணக்குகள், தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட சகல விதமான தொடர்பாடல் நடவடிக்கைகளும் உளவு பார்க்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தனிப்பட்ட நபர்களின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் கணனித் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களும் புலனாய்வுப் பிவிரினரும் ஒன்றிணைந்து முக்கிய வர்த்தகர்கள்,செல்வர்ந்தவர்கள் அரசியல்வாதிகள் தொடர்பிலான உளவுத் தகவல்களை திரட்டி கண்காணித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி ஆளும் கட்சியின் உறுப்பினர்களும் இவ்வாறு கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, மத்திய மாகாணசபையின் உறுப்பினர் அசாத் சாலி உள்ளிட்டவர்களும் ஏற்கவே இந்த உளவு பார்க்கும் நடவடிக்கை குறித்து சுட்டியிருந்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110038/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

எது நடக்கவேண்டியதோ அது நன்றாகவே நடக்கின்றது . :D

ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து இப்ப தங்களுக்குள் கடிக்க வெளிக்கிட்டினம் சுப்பர் அப்பு ..  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.