Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வறட்சியில் வடமாகாணம், 'தண்ணீர் அரசியலில்' கட்சிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வட மாகாணத்தில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவும் வேளையில், மத்திய-மாகாண அரசுகளுக்கு இடையேயான மோதல் வலுத்து வருகிறது.

இந்த விஷயத்தில் மத்திய அரசு 'தண்ணீர் அரசியல்' செய்கிறது என்று வட மாகாண விவசாய அமைச்சர் பொன். ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டுகிறார்.

அரசியல் இலாபங்களுக்காக, மாகாண அரசைத் தவிர்த்து, குடிநீர் விநியோகத்தில் நேரடியாக, தமக்கு சாதகமான வகையில் மத்திய அரசு ஈடுபகிறது என அவர் கூறுகிறார்.

'மத்திய அரசின் உதவிகள் இல்லை'
120822154819_sri_lanka_drought_vanni__30

வன்னிப் பகுதியின் நிலை

வறட்சி நிவாரணம் மற்றும் குடிநீர் விநியோகத் திட்டங்கள் ஆகியவை தொடர்பில், மாகாண அரசுக்கு மத்திய அரசு போதிய நிதியுதவிகளை வழங்கவில்லை எனவும் ஐங்கரநேசன் கூறுகிறார்.

எனினும் வட மாகாண சபை, நிதி நெருக்கடிகளுக்கு இடையே, தண்ணீர் வண்டிகள் மூலம் குடிநீர் விநியோகத்தை செய்து வருகிறது என்றும், கடல் நீரை நன்னீராக மாற்றி விநியோகம் செய்யும் ஒரு திட்டம் இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ஐங்கரநேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

வற்றியக் கிணறுகள்

குறிப்பாக தீவகப் பகுதிகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலைமை ஏனையப் பகுதிகளை விட மோசமாகவுள்ளது எனவு அவர் மேலும் தெரிவித்தார்.

120822154550_sri_lanka_drought__304x171_

தண்ணீர் வண்டியை எதிர்பார்த்து காத்திருப்புகள்

வட மாகாணத்தின் பல பகுதிகளிலுள்ள கிணறுகள் முற்றாக வற்றிவிட்டன என்றும், அவசரகால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறும் அவர், மத்திய அரசு மாகாண அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மக்களின் அன்றாடத் தேவையான குடிநீர் தட்டுப்பாடின்றி மக்களுக்கு கிடைக்கச் செய்வதில், புலம்பெயர்ந்த தமிழர்கள் தம்மால் இயன்ற உதவிகளை மாகாண அரசின் ஊடாகச் செய்ய முன்வந்தால் அது மிகவும் உதவிகரமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

http://www.bbc.co.uk/tamil/science/2014/08/140803_npwater_crisis.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.