Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காட்டிக்கொடுப்பவர்களிற்கு வீரர்களிற்கு சிலை வைக்க தகுதியில்லை! சிறீதரன் சீற்றம்!

Featured Replies

இனத்தின் விடுதலைக்காக போராடியவர்களுக்கு சிலையெழுப்புவதற்கு யாருக்குத்தகுதி இருக்கிறதென்பதைத் திறக்கின்றவர்கள் சிந்திக்க வேண்டுமெனத்தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன். தனது இனத்தைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கும் சிதைப்பவர்களுக்கும் அந்தத்தகுதியில்லை என்றும் அவர் ஈபிடிபியையும் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் அவர் சாடியுள்ளார்.

sritharan_thevu_1.jpg

தீவுப் பகுதிக்கு விஐயம் மேற்கொண்டு கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் ஏற்பாட்டில் நேற்று தீவுப் பகுதி விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

sritharan_thevu.jpg
இதன் போது அங்குள்ள மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடியதுடன் இந்த உதவிகளை வழங்கி வைத்து உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து தெரிவிக்கையில்..

தீவுப் பகுதி மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்ற அதே வேளையில் பல்வேறு தேவைகளும் இருக்கின்றன. இதில் குறிப்பாக குடிநீர்ப் பிரச்சனையே தற்பொது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கின்றது.

இந்நிலையில் இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்கு மாகாண சபையினூடாக அமைச்சர் ஐங்கரநேசன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அத்தோடு தொடர்ந்து தீவுப் பகுதியின் நீர் நிலைகள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொண்டு நீரை வழங்குவது தொடர்பிலான மாநாடொன்றும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

இதே வேளையில் இந்த மண்ணில் தமிழ் மக்கள் தமது தாயக பூமியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்ற வரலாறுகள் அழிகின்றன. இதனை திட்டமிட்டுச் செய்கின்றவர்களினால் எமது அடையாளங்களையும் வராலாறுகளையும் பாதுகாக்க முடியாது.

இந்த மண்ணிலிருந்து வெள்ளைக்காரர்களை வெளியேற்றி இனத்தின் விடுதலையை பெற்றுக்கொள்வதற்காகவே சங்கிலியன், பண்டார வன்னியன் ,பரராஐசேகரன் போன்ற மன்னர்கள் போராடினார்கள். ஆனால் அவர்களின் கொள்கைகள் தியாககங்களுக்கு முன்னால் நிற்கத் தகுதியிலாதவர்கள் அவர்களுக்குச் சிலை அமைக்கின்றனர்.

அதாவது இனத்திற்காகத் தம்மை அர்ப்பணித்தவர்களுக்கு இனத்தையே காட்டிக் கொடுத்து விற்றுப் பிழைப்பு நடத்துகின்றவர்கள் சிலை அமைத்து திறந்து வைப்பதை அவர்களே சிந்தித்துச் செயற்பட்டிருக்க வேண்டுமென்றும் சிறிதரன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் கூட்டமைப்பின் பிரதிநிதியும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொதுச் செயலாளருமான கென்றி மகேந்திரன் ஆகியொரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

http://www.pathivu.com/news/33101/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

-----

இந்த மண்ணிலிருந்து வெள்ளைக்காரர்களை வெளியேற்றி இனத்தின் விடுதலையை பெற்றுக்கொள்வதற்காகவே சங்கிலியன், பண்டார வன்னியன் ,பரராஐசேகரன் போன்ற மன்னர்கள் போராடினார்கள். ஆனால் அவர்களின் கொள்கைகள் தியாககங்களுக்கு முன்னால் நிற்கத் தகுதியிலாதவர்கள் அவர்களுக்குச் சிலை அமைக்கின்றனர்.

 

அதாவது இனத்திற்காகத் தம்மை அர்ப்பணித்தவர்களுக்கு இனத்தையே காட்டிக் கொடுத்து விற்றுப் பிழைப்பு நடத்துகின்றவர்கள் சிலை அமைத்து திறந்து வைப்பதை அவர்களே சிந்தித்துச் செயற்பட்டிருக்க வேண்டுமென்றும் சிறிதரன் குறிப்பிட்டார்.

-----

 

சிறிதரனின் கூற்று சரியானதே.....

செய்யிறதையும்.... செய்து விட்டு, இப்போ... பத்தினி வேசம் போடுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.