Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ ஆட்சியின் கொடூரத்தை தாங்க முடியாமல் தவிக்கும் மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ `ஆட்சியின் கொடூரத்தை' தாங்க முடியாமல் தவிக்கும் குடாநாட்டு மக்கள்

எண்பதுக்கு முந்தைய காலத்தில் யாழ்ப்பாணச் சமூகம் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தது. இம்மக்களை வந்தாரை வாழவைக்கும் பண்பாட்டுச் சிறப்புமிக்க சமூகமாகவே உலக மக்கள் போற்றியதுண்டு. இன்றோ அவர்களின் நிலைமை கவலைதருவதாக பலரும் கூறுவதில் நியாயமில்லாமல் இல்லை. போர்ச்சூழலினால் அவன் இழப்பதற்கு எதுவுமில்லாமல் நடைப்பிணமாக சொந்த மண்ணில் வாழ்கின்றான்.

தேச விடுதலைக்காக அவன் சந்திக்கும் கொடூரங்கள், இழப்புகள் அக்கிரமங்கள் சர்வதேச மனித உரிமை இயக்கங்களால் கோடிட்டுக் காட்டப்படுகின்ற போதும் நிம்மதியான வாழ்வுக்காக மூன்று சகாப்தமாகக் போராடி வருகின்றான்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணக் குடாநாடு இருந்த காலத்தில் இம்மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு உத்தரவாதமிருந்தது. சட்டமும் ஒழுங்கும் பேணப்பட்டு வந்தது. உணவுக்காக அவன் ஒரு பொழுதேனும் ஏங்கியது கிடையாது. குடாநாட்டுக்குப் பொருளாதாரத் தடையை அரசு கொண்டுவந்தபோதும் சகல பொருட்களும் தட்டுப்பாட்டில்லாமல் கிடைத்திருந்தன.

பட்டினிக் கொடுமையால் எவரும் இறந்ததாக சரித்திரம் இருக்கவில்லை. அவசியம் ஏற்படும் போதெல்லாம் உயிரைப் பணயம் வைத்தே பயணங்களை மேற்கொண்டிருக்கின்றான். போஷாக்குக் குறைபாடுகளோ, சிசு இறப்புவீதமோ மட்டுப்படுத்தப்பட்டிருந்தத

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தரைப் பாதையைத் திறப்பதன் மூலம் அமைதி முயற்சிக்கும் வழி திறக்கலாம்

"ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது' என்பார்கள். யாழ். குடாநாட்டு மக்களின் இன்றைய அனுபவமும் அதுதான். யாழ்.குடாநாட்டுக்கான தரை வழிப்பாதை தடைப்பட்டு ஒன்றரை மாதங்களாகிவிட்டது. அங்கு அத்தியாவசியப் பொருள் களுக்கான பற்றாக்குறை மிக நெருக்கடியான கட்டத்தை அடைந்துள்ளது. குடாநாட்டுக்குத் தேவையான மூன்று மாத உணவுப் பொருள்கள் அங்கு அனுப்பப்பட்டு விட்டன என்கின்றது அரசு.

ஆனால், மூன்று வார காலத்துக்குத் தேவையான அத்தியா வசியப் பொருள்கள் மட்டுமே யாழ்ப்பாணத்தை வந்தடைந் திருக்கின்றன என்கின்றார் யாழ். அரச அதிபர்.

""யாழ். குடாநாட்டுக்கான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விநியோக நடவடிக்கை அரசின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. நிலைமை கையை மீறிப் போகவில்லை. எனவே, ஆரவாரப்படவோ, அச்சப்படவோ எந்தக் காரணமு மில்லை.

""நாட்டில் போதுமான உணவுப் பொருள்கள் கையிருப்பில் உள்ளன. எனவே, எங்கும் உணவின்மை என்ற மனிதாபிமானப் பிரச்சினையை நாடு எதிர்கொள்ளவில்லை. அப்படி நெருக்கடி உள்ளது என யாரும் முறைப்பாடு செய்யவுமில்லை. ஐ.நா. முக வர் அமைப்புகள் சில மட்டும் அப்படித் தகவல் வெளியிடு கின்றன. ஒன்றுக்கும் உதவாக் குப்பைத் தகவல்கள் அவை. அரசை விமர்சிப்பதைத் தவிர அவர்கள் வேறு எதுவும் உருப்படி யாகச் செய்யவில்லை.'' என்று சீறுகின்றார் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.டி. திவாரத்ன.

ஆனால், அகதிகளுக்கான ஐ.நா. தூதரின் தகவலோ இதற்கு முற்றிலும் மாறாக இருக்கின்றது.

""விநியோகங்கள் முடங்கி விட்டன. குடாநாட்டைப் பெரும் சிக்கல்கள் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலைமையில் அறுபதாயிரம் பேர் தத்தமது இடங்களிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர். அவர்களில் அரைவாசிப்பேர் சிறுவர் கள். மின்சாரமின்மை, குடி தண்ணீர் இன்மையால் பெரும் ஆபத்து உருவாகும் நிலைமை. கட்டுமான நடவடிக்கைகள் முடங்கி விட்டன. வன்முறை அதிகரிப்பால் வீதிகள் முடக்கப் பட்டு விட்டன. எரிபொருள் இல்லாததாலும் போக்குவரத்துக் குப் பெரும் பாதிப்பு. இதனால், பொருள் விநியோகமும் சீர் குலைவு. ""குடாநாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களில் அரைவாசியே கடந்த மாதம் வந்து சேர்ந்துள்ளது.

""இடப்பெயர்வாலும், பொருள் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பு என்பனவற்றாலும் அன்றாடம் உழைத்து உண்ணும் கூலித் தொழிலாளர் குடும்பங்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.'' என்று அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் கூறுகின்றது.

அங்கு அகதிகளுக்கு விநியோகிக்க அரிசிக்குக் கூட பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டிருக்கின்றது.

வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர்களும் ஒரே குரலில் இதைத்தான் தெரிவிக்கின்றனர்.

""யாழ். குடாநாடு ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலையாக உள்ளது. மக்கள் பணயக் கைதிகள் போல நடத்தப்படுகின்றார் கள். உணவுத் தட்டுப்பாடு காரணமாக சிறுவர்கள் பாடசாலை களுக்குச் செல்லாமல் கூட்டறவுக் கடைகளிலும், பேக்கரிகளின் முன்னாலும் அன்றாட வயிற்றுப்பாட்டுக்காகப் பாண் வாங்க வும், அத்தியாவசியப் பொருள்களைக் கொள்வனவு செய்யவும் வரிசையில் காத்து நிற்கின்றார்கள்.'' என்ற அதிர்ச்சித் தகவல் களை அவர்கள் வெளியிடுகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இவ்விவகாரம் தொடர்பாக விசேட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கும் யாழ். ஆயர் வண. தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை, குடாநாட் டில் தனியார் கடைகள், வர்த்தக நிலையங்கள் எல்லாம், பொருள் கையிருப்பு முடிவடைந்து காலியாகி விட்டன என்ற உண்மை யைச் சுட்டிக் காட்டியிருக்கின்றார். யாழ். குடாநாட்டுக்கான முகமாலை ஊடான "ஏ9' தரை வழிப்பாதையைத் திறப்பதில்லை என்பதில் பிடிவாதம் காட் டும் அரசுத் தரப்பு, யாழ். குடாநாட்டுக்கான அத்தியாவசியப் பொருள்களின் விநியோகத்தை கடல் வழியாக கப்பல்கள் மூலம் நிறைவு செய்யலாம் என உறுதியாகக் கூறுகிறது; அடித்து அழுத்தி தெரிவிக்கின்றது.

ஆனால், யதார்த்த நிலைமை அதுவல்ல என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள். இனிக் கடற்கொந்தளிப்புக் காலம். அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்கு வடக்கு கிழக்குக் கடல் பாதை ஊடாகப் பொருள் களைக் குடாநாட்டுக்கு எடுத்துச் செல்வதோ, இறக்குவதோ மிகவும் நெருக்கடியாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

மேலும், வட பகுதிக்கு அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் கப்பல்களுக்குச் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் வழித்துணை உதவியைப் பெறும் எத்தனமும் பயன்தரவில்லை. இதன் காரணமாக அத்தகைய கப்பல் சேவைகளுக் குத் தங்களால் வழித்துணை உதவி வழங்க முடியாது என செஞ் சிலுவைச் சர்வதேசக் குழு கைவிரித்து விட்டது.

இவ்விவகாரத்தில், செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவுடன் ஒத்துப்போக மறுத்தமைக்காக மனிதாபிமானப் பணிக்கான பொருள்களைக் கப்பல் மூலம் வடக்கே எடுத்துச் செல்லும் முயற்சி தொடர்பாக செஞ்சிலுவைச் சங்க சர்வதேசக் குழுவின் வழித்துணைக்கு இணங்க மறுத்தமைக்காக சர்வதேச சமூகத் தின் அதிருப்தியை, கடந்த வெள்ளியன்று புலிகளின் அரசி யல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை கிளிநொச்சி யில் சந்தித்துப் பேசிய சமயம் கொழும்புக்கான நோர்வேத் தூது வர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், சர்வதேச சமூகத்தின் சார்பில் புலிகளுக் குத் தெரியப்படுத்தினார் என்றும் கூறப்படுகின்றது.

எது, எப்படியோ, குடாநாட்டில் பற்றாக்குறையும், நெருக்கடியும், அமைதி வாழ்வு சீர்குலைவும் மோசமான கட்டத்தை அடைந் திருக்கின்றன என்பதே உண்மை. அப்படி நெருக்கடி ஏதும் இல்லை என்ற சாரப்பட விடப் படும் பத்திரிகை அறிக்கைகளும், அறிவிப்புகளும் பயன்தரப் போவதில்லை. மெருகூட்டப்பட்ட சொற்றொடர்கள் செயல் வடிவம் பெற்று எழுந்து பிரச்சினைத் தீர்வுக்கு உதவமாட்டா. அதை அதிகாரிகள் உணர்ந்துகொள்வது நல்லது.

"ஏ9' வீதியூடான தரைவழிப் போக்குவரத்தை மீண்டும் திறப்ப தன் மூலம் குடாநாட்டு மக்களின் மோசமான நெருக்கடியைத் தீர்ப்பது மட்டுமல்லாமல், அந்த அரசியல் நகர்வின் மூலம் அமை திப் பேச்சு மீண்டும் அரும்ப வழி செய்யவும் முடியும். சம்பந்தப்பட்டோரின் கவனத்துக்கு இது சமர்ப்பணம்.

- ஈழநாதம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டில் ஏற்பட்டுள்ள அவல நிலையால் 1 இலட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு

* சர்வதேச மன்னிப்பு சபைக்கு கடிதம்

யாழ். மாவட்டத்தில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 ஆயிரம் மாணவர்கள், உயர் கல்வி நிறுவனங்களை சேர்ந்த 3 ஆயிரம் மாணவர்கள், டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய 10 ஆயிரத்து 500 மாணவர்கள் உட்பட ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் இயல்பு நிலையைத் தோற்றுவித்து சுதந்திரமான கல்வியைக் கற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை ஊடாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைத் தீவிலே 1972 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்வித் தரப்படுத்தல் தொடக்கம்இன்று வரை தமிழ் மாணவர்கள், ஆட்சிக்கு மாறி மாறி வந்த ஷ்ரீலங்கா அரசுகளால் வேற்று நாட்டு மாணவர்கள் போலவே நடாத்தப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக தமிழ் மாணவர்கள் மீதான கல்வி ரீதியான நெருக்கடிக்கு அப்பால் தமிழ் மாணவர்கள் குண்டு வீசியும், சுட்டும் அழிக்கப்பட்ட சம்பவங்கள் நிறையவே உள்ளன. 1995 ஆம் ஆண்டு நாகர் கோவில் பாடசாலை மீதான குண்டு வீச்சில் 15 க்கு மேற்பட்ட அப்பாவி மாணவர்கள் கொல்லப்பட்டனர். 1996 ஆம் ஆண்டு சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமாரசாமி மானபங்கப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

யாழ். இந்து மாணவன் சோமசுந்தரம் சஞ்சீவன் 13.07.2000 ஆம் ஆண்டு வீதியில் வைத்து படையினரால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

திருகோணமலையில் எதுவித காரணமின்றி 2005 ஆம் ஆண்டு ஐந்து தமிழ் மாணவர்கள் படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இறுதியாக முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் 13.08.2006 அன்று விமானப்படையின் குண்டுவீச்சில் 61 மாணவிகள் படுகொலை செய்யப்பட்டதுடன், 100 இற்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

இவ்வாறு இன்று வரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் படையினரால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொன்றழிக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் தமிழ் மாணவர்கள் மறந்துவிடும் நிலையில் இல்லை என்பதுவே யதார்த்தம்.

அது மட்டுமன்றி இன்று வரை இராணுவ நெருக்கடி காரணமாக தமது கல்வியைத் தொடர முடியாமல் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.