Jump to content

ஓட்ஸ் அடை


Recommended Posts

 

 

 
 
ஓட்ஸ் - ஒரு கப்

 

 

கடலைப்பருப்பு - கால் கப்

 

துவரம் பருப்பு - கால் கப்

 

உளுத்தம் பருப்பு - கால் கப்

 

பெரிய வெங்காயம் - 2

 

காய்ந்த மிளகாய் - 5

 

பூண்டு - 6 பற்கள்

 

இஞ்சி - ஒரு சிறு துண்டு

 

சோம்பு - ஒரு தேக்கரண்டி

 

சீரகம் - ஒரு தேக்கரண்டி

 

கொத்தமல்லித் தழை - ஒரு சிறிய கட்டு

 

உப்பு - தேவையான அளவு

 

 

 

A12080_01.jpg

பருப்பு வகைகளை ஒன்றாகச் சேர்த்து 3 முறை கழுவிவிட்டு, தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

 
A12080_02.jpg

ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். ஊற வைத்த பருப்பு வகைகளுடன் சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழையைச் சேர்க்கவும்.

 
A12080_03.jpg

அதனுடன் பொடி செய்த ஓட்ஸ் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

 
A12080_04.jpg

தோசை கல்லைச் சூடாக்கி, மாவை மெல்லிய தோசை போல ஊற்றி எண்ணெய் விட்டு வேகவிடவும்.

 
A12080_05.jpg

சற்று நேரம் கழித்து திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

 
A12080_06.jpg

சுவையான, சத்து நிறைந்த ஓட்ஸ் அடை தயார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://www.arusuvai.com/tamil/node/28999

 

 

 

Link to comment
Share on other sites

ஓட்ஸ் தோசை ரெசிபிக்கு நன்றி. 
 
மனுசியிடம் சொல்லிப் பார்ப்போம். 
 
எண்ணையில்லாமல் வேகவைத்தால் நல்லது... (Using Non stick pan..?? )
Link to comment
Share on other sites

எண்ணையில்லாமல் வேகவைத்தால் நல்லது... (Using Non stick pan..?? )

 

 

Non stick pan இல் சுட்டுப் பாருங்கோ (எதுக்கும் நல்லெண்ணையையும் வைத்திருங்கோ)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அடை என்பது கிட்டதட்ட தோசை போலதான் இருக்கிறது . 
 
 
இணைப்புக்கு நன்றி ஆரதி.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.