Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க

அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு

சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை

வெளி வேட்டி கட்டியவனோ சொல்லு

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

தங்கத்துக்கு வேர்க்குது பாருங்க பாருங்க

சாந்து கண்ணும் மயங்குது ஏனுங்க ஆ

முத்தழகி இங்கே இல்லீங்க சொல்லுங்க

முத்தமிட்டு எங்கே தொடுங்க

மொத்தமாக சொல்லிக் குடுங்க

சொல்லிக் குடுங்க குடுங்க குடுங்க குடுங்க

கன்னிப் பொண்ணு நல்லா நடிப்பா அவ நடிப்பா

கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா

முத்தம் என்று தொடங்குங்க

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply

முத்தம் முத்தம் முத்தமா..

மூன்றாம் உலக யுத்தமா..

ஆசைக்கலையின் உச்சமா..

ஆயிரம் பாம்பு கொத்துமா..

ஒற்றை முத்தத்தில் உன்

ஒற்றை முத்தத்தில்

என் உள்ளங்கையில்

வெல்லம் போலே ஆகுமா..

.......இதழோடு இதமா

முத்தம் தந்தேன்.. சுகமா..

நீ வந்தாய்..

நீ வந்தாய்

என் நரம்பெல்லாம் பூவாய்ப் பூக்க

முத்தம் முத்தம் முத்தமா..

மூன்றாம் உலக யுத்தமா..

ஆசைக்கலையின் உச்சமா..

ஆயிரம் பாம்பு கொத்துமா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

இதழோடு சுவை சேர புதுப் பாடல் ஒன்று பாடப் பாட

நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க

நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன

நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க

நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன

இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ

உன் உயிரிலே என்னை எழுத பொன்மேனி தாராயோ

மனமே ஏன் மயக்கம்

துணை நான் வழித்துணை நான்

விதைக்கொரு வேரென நானிருப்பேன்

உன் இருதயம் சுமக்கின்ற பாரத்தை நான் சுமப்பேன்

கால் முளைத்த கனவுகளே

கண்களை மீறிடுமோ

நட்பை அறிந்தேன் என்னை புரிந்தேன்

உன் வெற்றி எந்தன் வெற்றியாகாதோ

நண்பியும் தாயும் இரண்டில்லையே

என்னைக் கொள்ளையிட்டுப் போகும் அழகே வா

என்னைக் கொன்றுவிட்டுப் போகும் மலரே வா

வாழ்க்கையின் உயிரே வாவாவாவா ஜீவா ஜீவா

என்னைக் கொள்ளையிட்டுப் போகும் அழகே வா

என்னைக் கொன்றுவிட்டுப் போகும் மலரே வா

வாழ்க்கையின் உயிரே வாவாவாவா ஜீவா ஜீவா

பூக்களையே ஆயுதமாய்க் கொண்டவன் நீதானே

பூவெறிந்து என்னுயிரைக் கொன்றவன் நீதானே

என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா

பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா

தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா

ஒரு பூவுக்குள் வசிக்கின்ற நிலவே வா

என் போர்வைக்குள் அடிக்கிற வெயிலே வா

புதுப் புன்னகை பூக்கும் பூவே வா ஜீவா ஜீவா

காதல் இல்லாத நகரம் அது காற்று இல்லாத நரகம்

காற்று இல்லாத இடமும் அட காதல் தெரியாமல் நுழையும்

கண்ணில் மணியாகி உன்னில் உயிராகிக் காதல் யோகம் கொண்டாடவேண்டும்

Edited by வெண்ணிலா

புவே புன்னகை காட்டு ஒரு போட்டோகிறாபிக்கு

அப்பிள் கன்னம் நீட்டு என் ஓட்டோகிறாபிக்கு

என் வாழ்க்கை என்னும் பட்டம்

உன் கூந்தலில் சிக்கியதென்ன

அடி எப்படிச் சிக்கல் எடுக்க

காற்று சிக்குவதில்லை உன் போட்டோகிறாபிக்கு

வானம் எட்டுவதில்லை உன் ஓட்டோகிறாபிக்கு

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பிள் பெண்ணே நீ யாரோ

ஐஸ்கிரிம் சிலையே நீ யாரோ

கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

பூவின் மகளே நீ யாரோ

புன்னகை நிலவோ நீ யாரோ

பாதி கனவில் மறையும் பார்வை யாரோ

என்னை நீ பார்க்கவில்லை

என்னுயிர் நொந்ததடி

பெண்ணே நீ போன வழியில்

என்னுயிர் போனதடி

பார்வை பார்வை பார்வை

குரு பார்வை பார்வை பார்வை

பார்வை பார்வை பார்வை

குரு பார்வை பார்வை பார்வை

முதல் நாளில் தாவணி போட்டு

கண்ணாடி பார்க்கிற பார்வை

பார்வை பார்வை பார்வை

அது கூச்சப் பார்வை பார்வை

காற்றாடி விடுவது போல

மேல் மாடி பார்க்கும் பார்வை

பார்வை பார்வை பார்வை

அது காதல் பார்வை பார்வை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் முதலாக முதல் முதலாக

பரவசமாக பரவசமாக

வா வா வா அன்பே!

ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக

இலவசமாக இவன் வசமாக

வா வா வா அன்பே!

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!

உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!

ஒரு சொட்டுக் கடலும் நீ! ஒரு பொட்டு வானம் நீ!

ஒரு புள்ளி புயலும் நீ! பிரம்மித்தேன்.

ஓ! ஓளி வீசும் இரவும் நீ! உயிர் கேட்கும் அமுதம் நீ!

இமை மூடும் விழியும் நீ! யாசித்தேன்.

ஒரு பார்வை நீளத்தை, ஒரு வார்த்தை நாணத்தை,

தாங்காமல் வீழ்ந்தேனே! தூங்காமல் வாழ்ந்தேனே!

நதி மீது சருகைப் போல் உன் பாதை வருகின்றேன்.

கரைத் தேற்றி விடுவாயோ? கதி மோட்சம் தருவாயோ?

மொத்தமாய் மொத்தமாய் நான் மாறிப் போனேனே!

சுத்தமாய் சுத்தமாய் தூள் தூளாய் ஆனேனே!

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!

உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!

நீ என்பது மழையாக, நான் என்பது வெயிலாக,

மழையோடு வெயில் சேரும், அந்த வானிலை சுகமாகும்.

சரி என்று தெரியாமல், தவறென்று புரியாமல்,

எதில் வந்து சேர்ந்தேன் நான், எதிர்பார்க்கவில்லை நான்.

என் வசம் என் வசம் இரண்டடுக்கு ஆகாயம்,

இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்.

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!

உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!

ஒரு சொட்டுக் கடலும் நீ! ஒரு பொட்டு வானம் நீ!

ஒரு புள்ளி புயலும் நீ! பிரம்மித்தேன்.

ஓளி வீசும் இரவும் நீ! உயிர் கேட்கும் அமுதம் நீ!

இமை மூடும் விழியும் நீ! யாசித்தேன்.

அன்பே சுகமா உன் கோபங்கள் சுகமா

அன்பே சுகமா உன் கோபங்கள் சுகமா

அன்பே சுகமா சுகமா

உன் தனிமை சுகமா சுகமா

வீடு வாசல் சுகமா

உன் வீட்டத் தோட்டம் சுகமா

பூக்கள் எல்லாம் சுகமா

உன் பொய்கள் எல்லாம் சுகமா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னைப் படைத்ததும் பிரம்மன்

ஒரு கணம் திகைத்து நின்றிருப்பான்

தங்கச்சிலை உந்தன் சிந்தும் அழகினில்

தன்னை மறந்திருப்பான் -

ஒரு காதல் தேவதை என்னை ஆளுகிறாள்

என் ஆசை கண்களில் ஊஞ்சலாடுகிறாள்

கல்லை தொட்டு வைரமாக்கும் காதல் பூ எங்கே

வெண்ணிலாவை காண ஏங்கும் வெள்ளை முகில் இங்கே

எங்கோ இருந்து என்னை அசைத்தாள்

எந்தன் நரம்பில் வீணை இசைத்தாள்

உனை தினம் தேடி தேடி நானும் பாடுகிறேன்.

கன்னம் கொண்ட நாணத்தில் சிவப்பு வண்ணம் அள்ளுவேன்

இரத்தம் ஓடும் நாளத்தில் பச்சை வண்ணம் கொள்ளுவேன்

அவளின் தேகம் எங்கிலும் மஞ்சள் வண்ணம் அள்ளுவேன்

ஆசை பொங்கும் கண்களில் நீல வண்ணம் கொள்ளுவேன்

இனியவள் கூந்தலில் கரு வண்ணமும்

பாதத்தின் அடிகளில் பால் வண்ணமும்

பெண்ணவள் நகங்களில் செவ்வண்ணமும்

ஜாசகம் கேட்டு வாங்கிடுவேன்

பெண்ணிடத்தில் சேகரித்த வண்ணங்கள் ஏழினிலே

வானவில்லையே நான் செய்து காட்டுவேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா?

எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா!

இசையின் ஸ்வரங்கள் தேனா?

இசைக்கும் குயில் நீதானா? வா....!

பனியில் நனையும் மார்கழிப் பூவே!

எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே?

உனக்கென பிறந்தவள் நானா?

நிலவுக்குத் துணை இந்த வானா?

வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்

வந்தாயே உறவாக இந்நாள்...!

சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்!

நகங்கள் பதிந்தால் காயங்கள் தோன்றும்!

உதடுகள் உரசிடத்தானே..!

வலிகளும் குறைந்திடும் மானே...!

நான் சூடும் நூலாடை போலே

நீ ஆடு பூமேனி மேலே...!

ஜம்மு இங்கையும் வந்துட்டன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பாருங்கோ.................... :P

மார்கழி பூவே மார்கழி பூவே

உன் மடி மேலே ஒரிடம் வேண்டும்

மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை

உன் மடி சேர்ந்தால் கனவுகள் தொல்லை

பூக்களை பிரித்து புத்தகம் படிப்பேன்

புல்வெளியில் முயல் போல் குதிபேன்

நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்

நடைபாதை கடையில் தேநீர் குடிபேன்

வாழ்கையில் ஒரு பாதி நான் என்று ரசித்தேன்

வாழ்கையில் மறுபாதி நான் என்று ரசிப்பேன்

காற்றில் வரும் மேகம் போல நான் என்றும் மிதப்பேன்

காவேரி கரையில் நடந்ததுமில்லை

கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை

சுகந்திர வானில் பறந்ததுமில்லை

சுடசுட மழையில் நனைந்ததுமில்லை

சாலையில் நானக போனதுமில்லை

சமயதில் நானாக ஆனதுமில்லை

ஏழை மகன் காணும் இன்பம் நான் காணவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை வாழ்க்கை மேகம் போல

மனிதர்கள் எல்லாம் அதன் துளி போலே

இணைந்திட்ட துளிகள் வேறிடம் விலகுமோ

பிரிந்திட்ட துளிகள் ஓரிடம் விழுமோ

இதுதான் காதலா

இதுதான் காதலா

மனம் ஏதோ ஒன்று நினைக்க

விதி எதோ ஒன்று நினைக்க

விதி எதோ ஒன்றில் இணைக்க

என்ன பெயர் சொல்லி நான் அழைக்க

இது காதலா

இதுதான் காதலாஇதுவும் காதலா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலா காதலா காதலின் சாரலா

தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா

கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா

மாறினேன் மீன்களாய்

காதலா காதலா காதலின் சாரலா

இதயத் துடிப்பினில் ஒசையில்லை எடுத்துச் சொல்லவும் பாஷையில்லை

இதற்குமுன் இந்த ஆசையில்லை இமைகள் விசிறிகள் வீசவில்லை

தனிமையில் இன்று நான் நகம் கடித்தேன் அடிக்கடி என்னை நான் தினம் ரசித்தேன்

கனவினில் உன்னை நான் படம்பிடித்தேன் தலையணையோடு நான் அடம்பிடித்தேன்

ஏனிந்த மாற்றமோ?

பெருகிப் பெருகி ஒரு அலையானேன் உருகி உருகி பனித் துளியானேன்

பறந்து பறந்து ஒரு சிறகானேன் நனைந்து நனைந்து இப்புல்வெளியானேன்

பூமியும் இங்கு பின் சுழல்வதென்ன வானவில் ஒன்று என்னை வளைப்பதென்ன?

மலர்களிலெல்லாம் பொன் முடைப்பதென்ன ரகசியம் சொல்லு என்னை ரசிப்பதென்ன?

ஏனிந்த மாற்றமோ?

தினமும் சிரிச்சு மயக்கி

என் வயசை கெடுத்த கிறுக்கி

ஏறெடுத்து பார்த்தாள்

பார்வை வலை போட்டாள்

அழகு பருவத்தில கணக்கு புரியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்

என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்

என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்

உன் பேரைச் சொல்லுமே

உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்

உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்

உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்

என் நெஞ்சைச் சொல்லுமே

வாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே மௌளனங்கள் கூடாது

வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது

வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது

மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது

ஆடிக்குப் பின்னாலே காவேரி தாங்காது

ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது

ஆசை துடிக்கின்றதே

சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே

சொல்லுக்குள் அர்த்தம் போலே சொல்லாமல் நின்றேனே

சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது

சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது

எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது

எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது

அல்லி குளத்து அன்ன பறவைகளே

வழி சொல்லக் கூடாதா

என் பாடல் வழி எங்கும்

நதி போல ஓடும்

நதியிலாடும் பூவனம்..

அலைகள் வீசும் சாமரம்...

காமன் கோவில் யாவிலும்..

ஒரு தேவ ரோஜா ஊர்வலம்..

நதியிலாடும் பூவனம்..

அலைகள் வீசும் சாமரம்.....

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா

பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா

அன்பே உந்தன் பெயரை தானே

விரும்பி கேட்கிறேன்

போகும் பாதை எங்கும் உன்னை

திரும்பி பார்க்கிறேன்

என்னையே திறந்தவள் யாரவளோ

உயிரிலே நுழைந்தவள் யாரவளோ

மொழியை பறித்தாள் மௌனம் கொடுத்தாள்

மேகமே மேகமே அருகினில் வா

தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா

மேகம் போலே என் வானில் வந்தவளே

யாரோ அவனுக்கு நீ தான் என்னவளே

மேக மேக மேக கூட்டம் நெஞ்சில் கூடுதே

உந்தன் பெயரை சொல்லி மின்னல் ஓடுதே

Edited by யாழ்வினோ

என்னவளே அடி என்னவளே

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

எந்த இடம் அது தொலைந்த இடம்

அந்த இடத்தையும் மறந்து விட்டேன்

உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று

உந்தன் காலடி தேடி வந்தேன்

காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று

உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன்

எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து

இரு கண்விழி பிதுங்கி நின்றேன்

(என்னவளே.............)

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்

இன்று வசப்படவில்லையடி

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா

ஒரு உருண்டையும் உருளுதடி

காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்

ஒரு நிமிஷமும் வருஷமடி

கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்

ஒரு கலக்கமும் தோன்றுதடி

இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி

நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்

உன் வார்த்தையில் உள்ளதடி

(என்னவளே...............)

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னைக்

கும்பிட்டுக் கண்ணடிப்பேன்

கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு

உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்

வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க

உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்

வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்

வடிகட்டி அனுப்பி வைப்பேன்

என் காதலின் தேவையை

காதுக்குள் ஓதி வைப்பேன்

உன் காலடி எழுதிய கோலங்கள்

புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்

(என்னவளே..........)

காதலே காதலே சுவாசம்

என் காதிலே சம்திங் சம்திங் பேசும்

காதலே காதலே சுவாசம்

என் காதிலே சம்திங் சம்திங் பேசும்

காதலே பரவசம் கனவுகள் இலவசம்

மௌனம் கூட அழகு

இருந்தும் பேச பழகு

காதலே வா.................

ஜீவனை தா................

தூசி ஒன்று கண்ணில் வந்து

விழுந்திட வேண்டுமே

ஊதி விடும் போது உந்தன்

விரல் நுனி தீண்டுமே

காதலே வா.................

ஜீவனை தா................

நீ கண்ணை மூடும் போதெல்லாம்

என் உலகம் இருண்டு போகிறது

உன் சுவாசம் என்பது என்

வாழ்வின் ஏற்ற இறக்கம்

என் கனவுகளை ஒரு போதும்

விற்க மாட்டேன்

அவற்றின் சொந்தக்காரி நீ

நான் தூங்க போகிறேன்

அங்கு மீண்டும் சந்திப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்

இணையான இளமானே துணையான இளமானே

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்

எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

சுட்டு விரல் நீ நீட்டு சொன்னபடி ஆடுவேன்

உன் அடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்

உன் உதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்

அங்கம் எங்கும் நான் ஓடி உள்ளழகைத் தேடுவேன்

தோகை கொண்டு நின்றாடும் தெங்கரும்பு தேகம்

முந்தி வரும் தேன் வாங்கி பந்தி வைக்கும் நேரம்

அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு

வம்புகள் என்ன வரம்புகள் விட்டு

கட்டிலிடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே

முல்லைக்கொடி தரும் அந்த பிள்ளைக்கனி வேண்டுமே

உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா

என்னுடைய தாலாட்டில் கண் மயங்கித் தூங்க வா

ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே

ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே

முத்தினம் வரும் முத்து தினம் என்று

சித்திரம் வரும் விசித்திரம் என்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சித்திரமே .. சித்திரமே .. சித்திரமே .. சித்திரமே ..

சித்திரமே சித்திரமே சிரிக்கக் கூடாதா?

சிறிது நேரம் அருகில் நீயும் இருக்கக் கூடாதா?

சித்திரம் போல் பிறந்து விட்டால் சிரிக்கக் கூடாது

சிரித்து விட்டால் பெண்மைஅயிலே மதிப்பிருக்காது

சொல்லுகடங்காமல் மலரும் தோகை உன் கண்களிலே

இரு நெல்லின் மணிகளைப் போல் எனது நிழலைக் காணுகின்றேன்

சொல்லுகடங்காமல் மலரும் தோகை உன் கண்களிலே

இரு நெல்லின் மணிகளைப் போல் எனது நிழலைக் காணுகின்றேன்

காணும் இடத்திலெல்லாம் உங்கள் காட்சி நிறைந்திருக்க

காணும் இடத்திலெல்லாம் உங்கள் காட்சி நிறைந்திருக்க

கண்கள் இரண்டில் மட்டும் உருவம் காண்பதில் எண்ணவில்லை

கண்கள் இரண்டில் மட்டும் உருவம் காண்பதில் எண்ணவில்லை

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.