Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்

உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்

வேட்டை ஆடும் மானானேன்

வித்தை காட்டும் பொருளானேன்

காட்டில் வாழும் கிளியாகாமல்

நாட்டில் வாழும் பெண்ணானேன்

அன்னை பெற்றாள் பெண் என்று

அதனால்தானே துயர் இன்று

கண்ணைத் தந்த தெய்வங்களே

கருணை தந்தால் ஆகாதோ

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணில் என்ன கார்காலம்

கன்னங்களில் நீர்க்கோலம்

மனமே நினைவை மறந்து விடு

துணை நான் அழகே துயரம் விடு

விழியில் விழும் துளி என் மார்பில்

வீழ்ந்ததே கண்ணே

அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா

நியாயமா பெண்ணே

கண்ணில்...

நான் ஏங்கும் சுமையாக ஏன் வந்தேன்

சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்

நான் உறங்கும் நாள் வேண்டும்

சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்

என் கண்ணில் நீர் வேண்டும்

சுகமாக அழ வேண்டும்

கண்ணில்...

இருள் மூடும் கடலோடு நான் இங்கே

என் தோணி கரை சேரும் நாள் எங்கே

பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்

நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம்

கண்ணில்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்

என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்

எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்

சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்

இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்

என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்

எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்

சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்

  • கருத்துக்கள உறவுகள்

வா வா பக்கம் வா

பக்கம் வர வெட்கமா

வா வா பக்கம் வா

பக்கம் வர வெட்கமா

மன்மத மோகத்திலெ .ஏ .ஏ .ஏ.ஏ

வாலிப வேகத்திலே

ஏங்குது இளமை இன்பம் தரும் இனிமை காண வா(2)

வா வா பக்கம் வா

பக்கம் வர வெட்கமா

வா வா பக்கம் வா

பக்கம் வர வெட்கமா

ஆனந்த உலகம் அந்தி வரும் பொழுதினில் தொடங்கிடும் சுவையாக (2)

ஆசையில் தொடங்கி ஜாடையில் மயங்கி மசிந்திடும் பொதுவாக (2)

மாலை வேளை மன்னன் லீலை (2)

ஆடவர் வரலாம் அன்னங்களை தொடலாம்

அன்பில் நீந்தலாம்..

ஹேய் ஹேய் D..I..S..C..O ..... DISCO DISCO

மன்மத மோகத்திலே ஹோ ஹோ வாலிப வேகத்திலே

ஏங்கிடும் இளமை இன்பம் தரும் பதுமை இனிமை காண வா..

ஹே ஹே ஹே D.I.S.C.O

வாழ்வது எதற்கு வயகதில் சுகங்களை வாழ்கையில் பெறதானே (2)

கன்னியர் எதற்கு காமத்தில் மயங்கும் காளையர் தொடத்தானே (2)

காதல் மானே காவல் நானே (2)

ஆசைகள் இருக்கு அந்தரங்கம் எதற்கு அருகில் ஓடி வா

வா வா வா வா D.I..S..C..O. FABULOUS DISCO

மன்மத மோகத்திலே ஹோ ஹோ வாலிப வேகத்திலே

ஏங்கிடும் இளமை இன்பம் தரும் பதுமை இனிமை காண வா..

ஹே ஹே ஹே D..I..S..C..O

ஹே ஹே ஹே D..I..S..C..O

ANYBODY CAN KISS ME ..... ANYBODY CAN KISS ME

WAIT WAIT WAIT A MINUTE. WITHOUT TOUCHING ME

HEY MISS I CAN KISS U .. WITHOUT TOUCHING U

..MMMMMMMMMMM..... MAAAAA ...( APPLAUSE )

ஆடவரெல்லாம் ஆட வரலாம்

காதல் உலகம் காண வரலாம்

பாவையரெல்லாம் பாட வரலாம்

பாடும்பொழுதே பாடம் பெறலாம்

தேயும் நிலவு தேயும் வரைக்கும்

தென்றல் அடித்து ஓயும் வரைக்கும்

சாயும் அழகு சாயும் வரைக்கும்

சேர வரலாம் தினம் வரலாம்

பேசும் விழிகள் பேச வரலாம்

பிஞ்சு முகத்தைக் கொஞ்ச வரலாம்

ஆசை நதியில் நீந்த வரலாம்

அல்லிப்பூவில் மணம் பெறலாம்

Edited by அ

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா

சத்தமின்றி முத்தமிடும்..

பகலே போய்விடு..இரவே பாய் கொடு..

நிலவே பன்னீரைத்தூவி..ஓய்வெடு...

தூரல் போடும் இந்நேரம்..

தோளில் சாய்ந்தால் போதும்..

சாரல் பாடும் சங்கீதம்

கால்கள் தாளம் போடும்...

தெரிந்த பிறகு திரைகள் எதற்கு

மார்பில் சாயும் போது

தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா

சத்தமின்றி முத்தமிடும்..

பகலே போய்விடு..இரவே பாய் கொடு..

நிலவே பன்னீரைத்தூவி..ஓய்வெடு...

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

நாளை என் கீதமே எங்கும் உலாவுமே

என்றும் விழாவே என் வாழ்விலே

போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே

ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா

இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்

கேளாய் பூ மனமே...

உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே

நாளும் கனவுகள் ராக பவனிகள் போகின்றதே

எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே

கேளாய் பூ மணமே...

  • கருத்துக்கள உறவுகள்

தேன் சிந்துதே வானம்

உனை எனைத் தாலாட்டுதே

மேகங்களே தரும் ராகங்களே

எந்நாளும் வாழ்க

பன்னீரில் ஆடும் செவ்வாடை கால்கள்

பனி மேடை போடும் பால் வண்ண மேனி

பனி மேடை போடும் பால் வண்ண மேனி

கொண்டாடுதே சுகம் சுகம்

பருவங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்

உனை எனைத் தாலாட்டுதே

மேகங்களே தரும் ராகங்களே

எந்நாளும் வாழ்க

வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்

விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்

விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்

சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்

உனை எனைத் தாலாட்டுதே

கண்ணோடு கண்கள் கவிபாட வேண்டும்

கையோடு கைகள் உறவாட வேண்டும்

கன்னங்களின் இதம் பதம் காலங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்

உனை எனைத் தாலாட்டுதே

மேகங்களே தரும் ராகங்களே

எந்நாளும் வாழ்க

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க

பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க

வசந்தம் வரும் காலம்

விழியில் வண்ணக் கோலம்

கூ.கு....குக்குக்கூ.

கூ.கு....குக்குக்கூ.

சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே..!

நானுமோர் தென்றல் தான்,

ஊரெல்லாம் சோலை தான்,

எங்குமே ஓடுவேன்

நதிகளில் நீந்துவேன்,

மலர்களை ஏந்துவேன்,

எண்ணம் போல் வாழுவேன்

இளமைக் காலம் மிக இனிமையானது

உலகம் யாவும் மிகப் புதுமையானது

மாளிகைச் சிறையிலே

வாழ்ந்த நாள் வரையிலே

சுதந்திரம் இல்லையே

விடுதலை கிடைத்தது

வாசலும் திறந்தது

பறந்ததே கிள்ளையே

தந்தனத் தான தன

தந்தனத் தானனா,

நிலவும் நீரும் இந்த அழகுச் சோலையும்

எளிமையான அந்த இறைவன் ஆலயம்

ஊரெல்லாம் பாக்கு வைத்து

உறவெல்லாம் வரவழைத்து

மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்

நான் மலர்ந்த விழி மலர்ந்த படியே நின்றிருந்தேன்

நல்லதொரு நாள் பார்த்து நாயகனின் தோள் பார்த்து

மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்

நான் மலர்ந்த விழி மலர்ந்த படியே நின்றிருந்தேன்

ஊரெல்லாம் பாக்கு வைத்து

உறவெல்லாம் வரவழைத்து

மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

மலரும் விழிவண்ணமே - வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விடிந்த கலையன்னமே

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

நடந்த இளம் தென்றலே - வளர்

பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்குள்ளே இன்னார் என்று சொன்னாப்புரியுமா.

கொஞ்சிக்கொஞ்சி பேசிறது கண்ணில் தெரியுமா

உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும்

வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்

நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்

நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்

உண்மை இதை உணர்ந்து

நன்மை பெறப் படித்து

உலகினில் பெரும் புகழ் சேர்த்திடடா

பள்ளி சென்று கல்வி பயின்று

பலரும் போற்ற புகழ் பெறுவேன்

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன்

பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே

அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே - உன்

அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே

(அள்ளி)

முத்துக்களைச் சிந்திச் சிந்தி புன்னகை என்றாய்

மூடி வைத்த தேன் குடத்தைன் அங்கங்கள் என்றாய்

பத்துத் தரம் தொட்டு தொட்டு பாவனை செய்தாய்

பள்ளி கொள்ளும் முன்பு என்ன சோதனை செய்தாய்..

சோதனை செய்தாய்..

(பள்ளி)

தென்றல் வந்து மெல்ல மெல்ல உன்னைத் தழுவும்

தென்றலுக்குப் பாதை இன்றி என்னைத் தழுவு

உள்ள மட்டும் இன்பமெல்லாம் அள்ளி வழங்கு

உச்சி முதல் பாதல்ம் வரை உந்தன் விருந்து..

உந்தன் விருந்து

(பள்ளி)

மயிலே மயிலே எறகப்போடு......

ஆச வந்தா கடலப் போடு

வெடலப் பையன் கடலப் போட்டா

வயசுப் பொண்ணு தாங்க மாட்டா

வா நல்ல அழகா என்னை உருகவெச்சே மெழுகா

நீ என்ன அஸினா நெஞ்சில் ஒட்டிக்கிட்ட பிசினா

ஏழு எட்டு நாளாத் தூக்கங் கெட்டு

வந்து நின்னேனே ஓரங்கட்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய்ப் போனதேன்

(வா வெண்ணிலா)

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்

திரை போட்டு உன்னை மறைத்தாயே பாவம்

ஒரு முறையேனும் திருமுகம் காணும்

வரம் தர வேண்டும் எனக்கது போதும்

உனைச்சேர...உனைச்சேர எதிர்பார்த்து

முன்னம் ஏழு ஜன்மம் ஏங்கினேன்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்

கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி

அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி

ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித

இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்

நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை

நமக்காக நம் கையால் செய்வது நன்று

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை

இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை

பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்

பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க

அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க

வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க

எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி.பி: கற்பனைக்கு ஓருருவம் கண்மணி

வடிவம்

அற்புதக் கவி கூறும் ஆனந்தக் கலசம்

கற்பனைக்கு ஓருருவம் கண்மணி வடிவம்

அற்புதக் கவி கூறும் ஆனந்தக் கலசம்

சுசீலா: நற் தவம் புரியாமல் நான் இன்று

அடைந்தேன்

நாயகன் உனக்காக வாழ்ந்திடப் பிறந்தேன்

எஸ்.பி.பி: ராஜராஜேஸ்வரன் நினைவினில்

ராஜ ராஜேஸ்வரி

ராஜ ராஜேஸ்வரி

சுசீலா: சித்திரப் பூஞ்cஓலை சிரிக்கின்ற

மாலை

சிந்தனை அமுதூறி அழைக்கின்ற வேளை

சித்திரப் பூஞ்cஓலை சிரிக்கின்ற மாலை

சிந்தனை அமுதூறி அழைக்கின்ற வேளை

எஸ்.பி.பி: முத்திரைப் பசும் பொன்னை

முத்தங்கள் இடவா

நித்திரை சுகம் இன்று நான் இங்கு தரவா

சுசீலா: மாணிக்கத் தேரேறி மன்னவன்

வந்தான்

ஆலிலை தோரண வாசலில் நின்றான்

எஸ்.பி.பி: நாணித் தலை சாய்ந்தாள் ..

நாணித் தலை சாய்ந்தாள் நங்கை அவள்

நடமாடி வருகின்ற தோகை மகள்

சுசீலா: ராஜ ராஜேஸ்வரி அருகில்

ராஜ ராஜேஸ்வரன்

ராஜ ராஜேஸ்வரன்

எஸ்.பி.பி: ராஜராஜேஸ்வரன் நினைவினில்

ராஜ ராஜேஸ்வரி

ராஜ ராஜேஸ்வரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ

தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்

காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

  • கருத்துக்கள உறவுகள்

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே

மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

பன்னீரில் ஆடும் செவ்வாடை கால்கள்

பனி மேடை போடும் பால் வண்ண மேனி

பனி மேடை போடும் பால் வண்ண மேனி

கொண்டாடுதே சுகம் சுகம் பருவங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே

மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்

விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்

விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்

சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே

கண்ணோடு கண்கள் கவிபாட வேண்டும்

கையோடு கைகள் உறவாட வேண்டும்

கன்னங்களின் இதம் பதம் காலங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே

மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானம் பாடியின் வாழ்விலே சூர்யோதயம்

வண்ணப் பூங்குயில் பாடினால் சந்திரோதயம்

ஒரு கிளையின் காதில் நான் பாட

அதில் உயிரும் வந்து நடமாட

ஒரு செடியின் காதில் நான் பாட

அதில் ரோஜாப்பூக்கள் கூத்தாட

வானவில் வந்தது

வசந்தமும் வந்தது

பாட்டுக்கள் கேட்பதற்கு

  • கருத்துக்கள உறவுகள்

ரோஜா மலரே ராஜகுமாரி

ஆசைக் கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா... கோய்

வருவதும் சரிதானா...

உறவும் முறைதானா..

வாராய் அருகில் மன்னவன் நீயே

காதல் சமமன்றோ.. கோய்

பேதம் இலையன்றோ..ஓ..

காதல் நிலையன்றோ

ஏழை என்றாலும் ராஜகுமாரன்

ராஜா மகளின் காதல் தலைவன்

உண்மை இதுவன்றோ...ஓ...ஓ,,

உலகில் முறையன்றோ..

என்றும் நிலையன்றோ...

வானத்தின் மீதே பறந்தாலும்

காக்கை கிளியாய் மாறாது

கோட்டையின் மேலே நின்றாலும்

ஏழையின் பெருமை உயராது

ஓடி அலைந்து காதலில் கலந்து

னாட்டை இழந்தவர் பலரன்றோ

மன்னவர் நாடும் மணிமுடியும்

மாளிகை வாழ்வும் தோழியரும்

பஞ்சணை சுகமும் பால்பழமும்

படையும் குடையும் சேவகரும்

ஒன்றாய் இணையும் காதலர் முன்னே

கானல் நீர் போல மறையாதோ

(ரோஜா)

பாடும் பறவைக் கூட்டங்களே

பச்சை ஆடைத் தோட்டங்களே

விண்ணில் தவழும் ராகங்களே

வேகம் போகும் மேகங்களே

ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம்

வாழிய பாடல் பாடுங்களேன்

ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம்

வாழிய பாடல் பாடுங்களேன்

(ரோஜா)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி

வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டுச் சீட்டியடி

அன்புக்கு நீ அரிச்சுவடி அன்னைக்கு மேல் செல்வமடி

மழலையில் நான் சாய்ந்தபடி முதுமையிலும் வேண்டுமடி

ஏ பாட்டி என் ஸ்ஏT னீ இன்னும் ஏஊY ஏஊYயடி

ஏண்ஸெல்லாம் மாட்டிக்கோ ள்P-ஸ்ஈKக்கு போட்டுக்கோ

பொய் பேசும் நரையெல்லாம் மைபூசி மாத்திக்கோ

அடி ஆத்தி என்ன கூத்து என் வயசு பாதியாச்சு

  • கருத்துக்கள உறவுகள்

"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளிவரும் தயங்காதே..

தலைவன் இருக்கிறான் மயங்காதே

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளிவரும் தயங்காதே

தலைவன் இருக்கிறான் மயங்காதே

ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு

முன்னாலே இருப்பது அவன் வீடு

நடுவினிலே நீ விளையாடு

நல்லதை நினைத்தே நீ போராடு

நல்லதை நினைத்தே போராடு

உலகத்தில் திருடர்கள் சரி பாதி

ஊமைகள் குருடர்கள் அதி பாதி

கலகத்தில் பிறப்பதுதான் நீதி

மனம் கலங்காதெ மதிமயங்காதே

கலங்காதெ, மதிமயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்துவிடு

மானத்தை உடலில் கலந்துவிடு

இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு

இரண்டினில் ஒன்று பார்த்துவிடு

இரண்டினில் ஒன்று பார்த்துவிடு

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளிவரும் தயங்காதே

தலைவன் இருக்கிறான் மயங்காதே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.