Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு முடியாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டமைப்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு முடியாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை
 
பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருவதற்கு முன்னர் அரசாங்கத்துடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்தால் அதனை பரிசீலிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். கூட்டமைப்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு முடியாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
15549015_0_0.jpg
 
தீர்வு தேவையாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்நாட்டில் உள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கே வரவேண்டும். மாறாக இந்தியாவுக்கும் ஜெனிவாவுக்கும் விஜயம் செய்வதில் அர்த்தம் இல்லை. எமது ஜனாதிபதி எப்போதும் தேசிய ரீதியான தீர்வையே முன்னெடுப்பார். மனிதாபிமான நடவடிக்கை கூட தேசிய ரீதியிலேயே முன்னெடுக்கப்பட்டது என்றும் அமைச்சர் குறிப்பிடடார்.
 
மேற்கு நாடுகள் தலையீடு செய்த எந்த நாட்டிலும் சமாதானம் ஏற்படவில்லை. மாறாக அந்நாடுகளில் அரசியல் ரீதியான குழப்பங்களே ஏற்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.
 
கொழும்பில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேம்ஜயந்த அங்கு மேலும் கூறுகையில்
 
 
கூட்டமைப்பு இந்தியா விஜயம்
 
கேள்வி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய பிரதமர் மோடியுடன் மேற்கொண்ட சந்திப்பின்போது 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்ற தீர்வுக்கு தான் வலியுறுத்துவதாக மோடி கூறியுள்ளமை தொடர்பில் ?
 
பதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவ்வாறு கூறவில்லை. கூட்டமைப்பினர்தான் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்லவேண்டும் என்றும் விசேட பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படவேண்டும் எனவும் முதலமைச்சர் நிதியம் உருவாக்கப்படவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
 
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது தீர்வு தேவையாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கே வரவேண்டும். மாறாக இந்தியாவுக்கும் ஜெனிவாவுக்கும் விஜயம் செய்வதில் அர்த்தம் இல்லை.
 
இந்தியாவிடம் தெரிவித்த கருத்துக்களை பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறவேண்டும் எமது ஜனாதிபதி எப்போதும் தேசிய ரீதியான தீர்வையே முன்னெடுப்பார். மனிதாபிமான நடவடிக்கை கூட தேசிய ரீதியிலேயே முன்னெடுக்கப்பட்டது . அவ்வாறு தேசிய ரீதியிலான தீர்வுக்காகவே நாங்கள் முன்னிற்கின்றோம். நாங்கள் தேசிய ரீதியில் மனிதாபிமான செயற்பாட்டை வெறறிகொண்டமையினால்தான் மேற்கு நாடுகளுக்கு அது பிடிக்கவில்லை.
 
அரசியல் குழப்பங்கள்
 
ஆனால் மேற்கு நாடுகள் தலையிட்ட எந்தவொரு நாட்டிலும் சமாதானம் ஏற்படவில்லை. அரசியல் ரீதியான குழப்பங்களே ஏற்பட்டுள்ளன. உதாரணமாக லிபியா ஈராக் எகிப்து என கூறலாம். பிரச்சினைகளையே ஏற்படுத்தியுள்ளனர்.
 
கோரிக்கை விடுத்தால் பரிசீலிப்போம்
 
கேள்வி அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி அதில் எட்டப்படும் இணக்கப்பாட்டின் பின்னர் தெரிவுக்குழுவுக்கு வருவது குறித்து பரிசீலிக்க முடியும் என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சு நடத்தாமல் உள்ளதே?
 
பதில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருவதற்கு முன்னர் அரசாங்கத்துடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்தால் அதனை பரிசீலிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. கூட்டமைப்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு முடியாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை. தமிழ்க் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வருமுன்னர் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவேண்டும் என்று எம்மிடம் இதுவரை கோரவில்லை. அவ்வாறு கோரும் பட்சத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம். நாம் ஒருபோதும் இதுதரப்பு பேச்சு நடத்த முடியாது என்று கூறியதில்லை.
 
புதிய அரசியலமைப்பு சாத்தியமா?
 
கேள்வி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு வரைபை முன்வைக்கவேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி கோரிக்கை விடுத்துள்ளதே?
 
பதில் அரசியலமைப்பு என்பது அவ்வளவு இலகுவில் செய்யப்பட முடியாத விடயமாகும். 1970 ஆம் ஆண்டு எமது முன்னைய அரசாங்கம் குடியரசு அரசியலமைப்பை கொண்டுவந்தது. அரசியலமைப்பு சபையை உருவாக்கி சாட்சிகளை பெற்று இரண்டு வருடங்களில் இதனை நாம் செய்தோம். ஆனால் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பானது இவ்வாறு சபை உருவாக்கப்பட்டு சாட்சிகள் பெறப்பட்டு உருவாக்கப்படவில்லை.
 
எவ்வாறெனினும் தற்போதைய அரசியலமைப்புக்கு பதிலாக புதிய அரசியலமைப்புக்கு செல்வதாயின் அதற்கென கடைபிடிக்கவேண்டிய நடைமுறை உள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்து வரைபை தயாரிக்கவேண்டும். பின்னர் அதனை பாராளுமன்றததில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றி பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்லவேண்டும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.