Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எட்டுவருடங்கள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை – மண்முனை மக்கள் கவலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எட்டுவருடங்கள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை – மண்முனை மக்கள் கவலை!

 

 

manmunai-300x173.jpgசுனாமி அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டு எட்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட தமக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கான ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்தப் பகுதியில் 1,476 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்ற போதிலும், 75 குடும்பங்களுக்கு மாத்திரமே காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வித வசதிகளுமற்ற இந்தப் பகுதியில் வசிக்கும் தாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கல்வி, தொழில்வாய்ப்பு, திருமணம் என்பன காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படாமையால் தடைப்பட்டுள்ளதாக சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

மண்முனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியிலுள்ள 243 குடும்பங்களும், பனிச்சையடி பிரதேசத்தில் 350 குடும்பங்களும், திராய்மடு சுவிஸ் கிராமத்தில் 424 குடும்பங்களும், உப்போடை கிராமத்தில் 43 குடும்பங்களும், நொச்சிமுனை பிரதேசத்தில் 341 குடும்பங்களும் இதுவரை காணி ஆவணங்கள் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ல்ஸ்சிடம் வினவியபோது, மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு பிம்சவிய திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும், அதன் கீழ் மக்களின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விரைவில் காணிப் பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ல்ஸ் மேலும் தெரிவித்தார்.

http://tamilleader.com/?p=40139

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.