Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வறட்சி காரணமாக 2.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வறட்சி காரணமாக 2.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- இணைப்பு 2

Varadsi_CI.jpg

2ஆம் இணைப்பு:- 14 மாவட்டங்களில் வரட்சி உதவிகள் இல்லை- கிளிநொச்சி- முல்லைத்தீவு மட்டக்களப்பு மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு-


இலங்கையில் தொடர்ச்சியாக நிலவும் வரட்சியினால் 14 மாவட்டங்களில் வாழும் மக்கள்; பாதிக்கப்பட்டுள்ளதாக அணர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


வடபகுதியில் யாழ்ப்பாணம், கிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் கிழக்கில் அம்பாறை, திருககோணமலை, மட்டக்களப்பு, மாவட்டங்களும் தென்பகுதியில் அம்பாந்தோட்டை மொனராகலை, பொலநறுவை உட்பட 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டள்ளது என்றும் நெற்செய்கை உட்பட விவசாய நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் அணர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.


உடனடியாக சிறியளவிலான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் முழுமையாக நிவாரணம் வழங்க போதிய நிதியில்லை எனவும்; பெயர் குறிப்பிட விரும்பாத அரச உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.


இதேவேளை வரட்சியால் கிளிநொச்சி, மன்னார் வவுனியா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுத்தமான குடிநீருக்கு மக்கள் பல மைல்களுக்கு அப்பால் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கரித்தாஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு பொது அமைப்புகள் உதவிகள் வழங்கி வருவதாகவும் ஆனால் சுத்தமான குடிநீர் வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்; மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
 

வறட்சி காரணமாக 2.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்-


வறட்சி காரணமாக நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.


வட மேல் மாகாணத்தில்     561216 பேர் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


வறட்சி காரணமாக குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111047/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் எத்தனையோ... சிங்கள ஊர் இருக்க....
வறட்சியும்.... போரினால் பாதிக்கப் பட்ட தமிழனையும், தமிழனின் நிலத்தையுமே.... பாதிக்கின்றது. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.