Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா மனிதவுரிமைகள் செயலகத்தின் போர்க்குற்ற விசாரணையும் உதவிடும் அமைப்புகளும்!

Featured Replies

  • தொடங்கியவர்

சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அழைப்பு.

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமையகம் எடுத்துள்ள போர்க்குற்ற, இன அழிப்பு விசாரணையானது எமது விடுதலையைப் பெறுவதற்கு வலுச்சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன் சாட்சியங்களைச் சேகரிக்கும் பணி அனைத்துலக நாடெங்கும் இயங்கி வரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களாலும், மனிதநேயப் பணியாளர்களாலும், இளையோர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தாங்கள் அறிந்ததே.

எமது இடைவிடாத போராட்டங்களின் விளைவாக ஐக்கிய நாடுகள் சபையால் சேகரிக்கப்படுகின்ற தமிழினப் படுகொலைக்கான ஆதாரங்களைச் சாட்சியங்கள் ஊடாக வழங்கும் பணிக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் எம்மாலான அனைத்து வழிகளிலும் பலம் சேர்க்க வேண்டும் என்ற உறுதியோடு செயற்படுகிறது.

எனவே, எம் அன்பிற்கும், மதிப்புக்கும் உரிய உறவுகளே! இந்த மாபெரும் வரலாற்றுக் கடமையை உணர்ந்து உங்களாலான அனைத்து சாட்சியங்களையும் எதிர்வரும் 30.10.2014ற்கு முன்னதாக வழங்கி, சிங்கள இனவெறி அரசின் கபட முகத்திரையைக் கிழித்து, தமிழின அழிப்பிற்கு நீதி பெற வலுச்சேர்க்கும் வண்ணம் உரிமையுடன் வேண்டுவதுடன், சாட்சியாளர்களின் விபரங்கள் யாவும் இரகசியத்தன்மையுடன் பேணப்படும் என்பதையும் தங்களுக்கு உறுதியுடன் தெரிவிக்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு:

078 662 93 06 / 078 882 05 96

(Facebook)

Edited by துளசி

கனடிய தமிழ் மக்களுக்கு கனடிய தமிழர் தேசிய அவையின் அழைப்பு.

ஐ.நா விசாரணை குழு முன்பாக தமிழினப் படுகொலை என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம் !

அன்பான கனடியத் தமிழ் உறவுகளே. ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்றுக் கொண்டு இருப்பது தமிழினப் படுகொலை தான் என்பதை நிரூபிப்பதற்கு எமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு இது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால் அமைக்கப்பட்ட OHCHR விசாரணைக் குழு தமது விசாரணைக்கான ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இவ்விசாரணக்கு சரியான ஆதாரங்களை சரியான முறையில் சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதன் மூலம், எமது மக்களின் விடுதலைக்கான பாதையைத் திறப்போம்.

இவ்வருடம் ஒக்டொபர் மாதம் 31ம் திகதிக்கு முதல் ஈழத்தமிழருக்கு இலங்கை அரசு இழைத்த குற்றங்களை முன் கூட்டியே பதிவு செய்வோம். ஐ நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் முன்னெடுக்கும் விசாரணைக்குரிய கால எல்லையாக 21.02.2002 முதல் 15.11.2011 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்கும் பொழுது உங்கள் தனிப்பட்ட பாதிப்புகளை மட்டும் சமர்ப்பிக்காமல் உங்கள் நீண்ட கால பட்டறிவுகளையும் ஆதாரத்துடன் உள்ளடக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறான பதிவுகள் தான் விசாரணக்குழு அடுத்த கட்ட விசாரணையான இன அழிப்பிற்குரிய பாதையைத் திறந்து விடும்.

உங்கள் பதிவில் உள்ளடக்க கூடிய விபரங்கள்:

- அடிப்படை சுதந்திரங்களை மீறல்,

- சட்டத்துக்கு புறம்பான கொலை,

- சித்திரவதை,

- துன்புறுத்தல்,

- அச்சுறுத்தல்,

- காணாமல் போதல்,

- பாலியல் வல்லுறவு,

- கொத்துக் குண்டு,

- இரசாயன தாக்குதல்,

- வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள்,

- கைது செய்து காணாமல்போனோர்,

- நிலப்பறிப்பு மற்றும் குடிமனை அபகரிப்பு

போன்றனவற்றை கண்கண்ட சாட்சியங்களாகவோ ஆதாரமாகவோ பதிவு செய்யலாம். இத்துடன் இனப்படுகொலைக்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கலாம்.

கனடாவில் 2009 ம் ஆண்டுற்குப் பின் அனைத்து விதமான மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் 'போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் (Center for War Victims and Human Rights - CWVHR) ஈடுபட்டுள்ளது. இத் தன்னார்வ தொண்டர் நிறுவனம் இது வரைக்கும் நூற்றுக்கணக்கான ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கு தேவையான வடிவத்தில் மிகவும் கவனமான முறையில் அவ்வாதாரங்களை தொகுத்து வருகின்றது. இன்நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்கள் பதிவை விரைவில் மேற்கொள்ள வேண்டுகின்றோம்.

CWVHR மின்னஞ்சல்: info@cwvhr.org

உங்கள் தொகுதியில், உங்கள் தொடர்பில் இருக்கும் கனடியத் தமிழர் தேசிய அவை உறுப்பினர்களை அணுகினால் உங்களுக்கு தேவையான உதவிகளைப் புரிவார்கள். மேலதிக விபரங்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையின் தொடர்பு இலக்கமான 416.830.7703 ஐ தொடர்பு கொள்ளவும்.

கனடியத் தமிழர் தேசிய அவை

https://m.facebook.com/story.php?story_fbid=554849847977302&id=113938848735073

சாட்சியங்களின் பெறுமதியை கேள்விக்குறியாக்கும் மாதிரிப்படிவமும்; மூன்றாம் தரபுக்களின் தலையீடும்!

Published on September 7, 2014-10:47 am · No Comments

kirupakaran1ஐ. நா. விசாரணைகளை மேற்கொள்வதற்கு சாட்சியங்களை அனுப்புமாறு வேண்டியுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணையாளரின் காரியலயம், இதற்கான ஓர் மாதிரி விண்ணப்ப படிவத்தை உருவாக்காத நிலையில், இலங்கைதீவில் உள்ள ஓர் அரசியல் கட்சி, விசேடமாக, ஐ.நா. விசாரணையை முன்னெடுப்பதற்காக, ஐ. நா. மனித உரிமை சபையில் கொண்டுவந்த பிரேரணை எதிர்த்து மிகவும் மோசமாக வேலை செய்த கட்சி, தற்பொழுது ஓர் மாதிரி படிவத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது, மிக விசித்திரமானது.

உண்மையான சாட்சியங்கள் எழுதும் யாரும், இவ் மாதிரி படிவத்தை பாவித்து சாட்சியங்களை ஐ.நா.விசாரணை குழுவிடம் அனுப்பும் பொழுது, உள்ளடக்கம் வேறுபட்டதாக இருக்கும் பட்சத்திலும், சிறிலங்கா அரசு இவை யாவும் நன்றாக திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட சாட்சியங்கள் என்ற வாதத்தை முன்வைப்பதற்கு வழிவகுக்கிறது.

இதற்கு ஓர் ஊதாரணத்தை இங்கு தருகிறோம். ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலத்தில், புலம் பெயர் தேசங்களில் – பல மாதிரி மனுக்கள், கடிதங்கள் யாவும் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இவற்றை லட்சக்கணக்கான புலம் பெயர் தேசத்து ஈழத் தமிழர்கள் உட்பட, மாற்று இனத்தவர்களும், அவர்கள் வாழும் நாட்டு அரசுகளுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பி வைத்தனர். இவ் மனுக்களுக்கு இறுதியில் கிடைத்த பதில், “இவை யாவும், ஒரு குழு, ஓரு அமைப்பினால் தயாரிக்கப்பட்டு விநியோகிகப்பட்டவையே. ஆகையால் இவை சுயேட்சையான கருத்துக்களை கொண்டிருக்கவில்லை”.

இவ் நிலை, ஐ. நா. விசாரணை குழுவிடம் தமது உண்மையான சாட்சியங்களை அனுப்புவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதை மனதில் கொண்டு> இவ் பத்திரிகை செய்தியை நாம் வெளியிடுகிறோம்.

ஆகையால்> இப்படியான சர்ச்சைக்குரிய மாதிரிப் படிவங்களை கவனத்தில் கொள்ளாது, சாட்சியங்கள் அனுப்பும் ஓவ்வொருவரும் – தமது பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் போன்றவற்றுடன், 10 பக்கங்களுக்கு குறைவாக, தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தாம் நேரில் பார்த்த அனுபவித்த உண்மை சம்பவங்களை> தமது சாட்சியத்தில் எழுதி> மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது கடிதம் மூலம் அனுப்புவதே> தனி நபருக்கு மட்டுமல்லாது> தமிழீழ மக்களுக்கு பலன் தரும் செயற்பாடாகும்.

மின் அஞ்சல் : OISL_submission@ohchr.org

அஞ்சல் முகவரி : OISL, UNOG-OHCHR, 8-14 Rue de la Paix, 1211 Geneva 10, SWITZERLAND

ஐ. நா. விசாரணைக்கு அனுப்பும் உங்களது சாட்சியம், 2002ம் ஆண்டு பெப்ரவரி 21ம் திகதிக்கும், 2011ம் ஆண்டு நவம்பர் 15ம் திகதி உட்பட்ட காலமாக இருக்க வேண்டும். இக் காலத்திற்கு முந்திய அல்லது பிந்திய காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றிய சாட்சியங்களை அனுப்புவதால் எந்த பிரயோசனமுமில்லை. உங்கள் சாட்சியத்தை> 2014 ஓக்டொபர் 30ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ் சாட்சியங்களுக்கு ஓர் சமாதான நீதவனின் உறுதிப்படுத்தலோ அல்லது சத்திய கடுதாசி போன்று அனுப்ப வேண்டிய அவசியமில்லை. இவற்றை செய்வதன் மூலம் உங்கள் சாட்சியத்தின் அந்தரங்கத்தை (ரகசியத்தை) நீங்கள் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இதேவேளை இப்படியான விதிமுறைகளின் அடிப்படையில்> எந்த சாட்சியத்தையும் ஐ.நா. விசாரணை குழு உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

உங்கள் சாட்சியங்களுக்கான படங்கள், வீடியோக்கள் போன்று ஏதும் ஆதாரம் இருப்பின், இவற்றை உங்கள் சாட்சியத்துடன் அனுப்புவதை தவிர்த்து கொள்ளுங்கள். உங்கள் சாட்சியங்களில் இவை உங்களிடம் உள்ளதாக எழுதினால், அவை தேவைப்பட்டால், ஐ. நா. விசாரணைக் குழு உங்களை தொடர்புகொள்வார்கள்

எழுத்து மூலமான சாட்சியங்களின் வரவிலக்கணக்கம் என்பது - கீறிமினல் அல்லது விபத்துக்கள் பற்றிய வழக்குகள் விசாரணைகள் என்ற அடிப்படையில், சந்தர்பங்களை பொறுத்து மாறுபடும். ஐ.நா. விசாரணைக்களுக்கான சாட்சியத்தை பொறுத்தவரையில், “ஒருவர், ஓர் சம்பவத்தில் நேரில் பார்த்தவராகவோ அல்லது அது பற்றிய ஆதரங்களுடன் அறிந்தவராகவோ, இருக்க வேண்டும். இவர்களின் சாட்சியம் என்பது உண்மைகளை அடிப்படையாக கொண்டதாக உள்ள அதேவேளை,அவர்களது அபிப்பிராயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும்”.

இவ் அடிப்படையில் எப்படியாக எல்லா தமிழர்களும் ஐ. நா. விசாரணைக்கு சாட்சியம் கூற முடியும்? இப்படி செய்யுமாறு அழைப்பு விடுவது கபடம் நிறைந்து காணப்படுகிறது!

மின் அஞ்சல் மூலம் தமது சாட்சியங்களை அனுப்புவது பாதுகாப்பு அற்றது என கருதுபவர்கள், கடிதம் (அஞ்சல்) மூலமாக அனுப்பலாம்.

இலங்கைதீவிலிருந்து தமது சாட்சியங்களை அனுப்ப விரும்புபவர்கள், தமது சாட்சியங்களை வெளிநாடுகளில் உள்ள, தமது உறவினர்கள் அல்லது தமக்கு மிக நம்பிக்கையான நண்பர்களுக்கு அனுப்பி, அவர்கள் மூலம் ஐ.நா. விசாரணை குழுவிற்கு சேர்பிப்பதே பாதுகாப்பானது.

அல்லற்படும் தமிழீழ மக்களுக்கு நாம் செய்வதற்கு எந்தனையோ சேவைகள் இருக்கும் இவ் வேளையில், எல்லாவற்றிற்கும் “கீரை கடை” போடுவதன் மூலம், அவர் அவரது கபட நோக்கங்களை யாவரும் இலகுவாக புரிந்து கொள்ள வழிவகுக்கிறது. ஐ.நா விசாரணை பற்றிய விடயத்தில் நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும்> சில அமைப்புக்கள் தம்மை மூன்றாம் தரப்பினர்களாக காண்பிக்க முயல்வது> சிறிலங்கா அரசு சாட்சியங்கள் யாவும் நன்றாக திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டவை என்ற வாதத்தை முன்வைப்பதற்கு வழிவகுப்பதுடன்> ஒருவரது உண்மை சாட்சியம் கேள்விக்குறியாக்கப்படும்.

கடந்த 24 வருடங்களுக்கு மேலாக ஐ.நா. மனித உரிமை அமர்வுகளில் பங்கு பற்றுவதுடன்> பல விதப்பட் விடயங்களை> மிக நீண்ட காலமாக ஐக்கிய நாடுகள் சபையின் பல பிரிவுகளுக்கு சமர்பித்து வந்த தமிழர் மனிதர் உரிமை மையத்தினர் ஆகிய நாம்> ஐ. நா. விசாரணைக்களுக்கு சாட்சியங்களை அனுப்புவர்களது பாதுகாகப்பு> நன்மை போன்றவற்றுடன்> தமிழீழ மக்களது நன்மையும் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு இவ் பத்தரிகை செய்தியை வெளியிடுகிறோம்.

நன்றி

ச. வி. கிருபாகரன்

பொதுச் செயலாளர்

தமிழர் மனிதர் உரிமைகள் மையம் - TCHR

பிரான்ஸ்

  • தொடங்கியவர்

Gari அண்ணா, இதை நீங்கள் ஏன் கனேடிய தமிழர் தேசிய அவையை சுட்டிக்காட்டி எழுதுகிறீர்கள்?

புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்புகள் ஆதாரங்களை அனுப்புவதற்கு உதவி செய்கிறார்களே தவிர மாதிரி படிவம் தாமே தயாரிக்கவில்லை என நினைக்கிறேன்.

இலங்கையில் தமிழில் மாதிரி படிவத்தை வெளியிட்டது தமிழ் தேசிய மக்கள் முன்னணி. (அதை பயன்படுத்தலாமா இல்லையா என எனக்கு தெரியாது.)

Edited by துளசி

Gari அண்ணா, இதை நீங்கள் ஏன் கனேடிய தமிழர் தேசிய அவையை சுட்டிக்காட்டி எழுதுகிறீர்கள்?

 

புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்புகள் விசாரணைகளை அனுப்புவதற்கு உதவி செய்கிறார்களே தவிர மாதிரி படிவம் தாமே தயாரிக்கவில்லை என நினைக்கிறேன்.

 

இலங்கையில் தமிழில் மாதிரி படிவத்தை வெளியிட்டது . (அதை பயன்படுத்தலாமா இல்லையா என எனக்கு தெரியாது.)

உங்களுடைய இணைப்புகளுக்கும் ,பதிவுகளுக்கும் பாராட்டுகள் .

மக்கள் அவையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் .இரு அமைப்புகளும் இணைந்து தான் இந்த தீர்மானத்தை எதிர்த்து மகாநாடு நடத்தியவர்கள் ,இவர்களின் சதிவேலையால் கடைசி நேரத்தில் சுமந்திரன் ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது .

Press Conference at the Geneva Press Club

Friday 21 March

Is the Sri Lanka resolution at the UNHCR part of the problem or part of the solution? Representatives of the Eelam Tamils and their supporters speak out:

Gajendrakumar Ponnampalam (Tamil National People’s Front);

Ananthy Sasitharan (NPC, Tamil National Alliance);

Kumaravadivel Guruparan (Tamil Civil Society);

Dr. Sri Ranjan (International Council of Eelam Tamils)

Krisna Saravanamuttu (International Council of Eelam Tamils)

Dr. Jude Lal Fernando (Irish Forum for peace in Sri Lanka);

Dr. Andrew Higginbottom (Prosecutor at the ‘People’s Tribunal on Sri Lanka)

நாங்கள் கொடுத்த அழுத்தத்தினால் ஆனந்தியை இதில் கலந்து கொள்ளாமல் தடுத்தனாங்கள் .அப்பொழுது இதனை எதிர்த்து செயற்பட்டு இப்பொழுது ஆதரிக்கும் நிலையானது இந்த இரு அமைப்புகளுக்கும் சாதாரணம் .இந்த இரு அமைப்புகளும் தாயகத்திலோ அல்லது புலம்பெயர் நாடுகளிலோ எதாவது உருப்படியாக செய்துள்ளார்களா ?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=140967&hl=

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138399&hl=

Edited by Gari

  • தொடங்கியவர்

Gari அண்ணா,

உப்புச்சப்பில்லாத பிரேரணை என்று எதிர்த்தாலும் சர்வதேச விசாரணை, பொதுவாக்கெடுப்பு ஆகியவற்றை நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கூறி வந்தார்கள்.

இப்பொழுது குறிப்பிட்ட காலப்பகுதிக்காவது சர்வதேச விசாரணை என்று வரும்போது அதை மேற்கொள்ள ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

இந்த ஐ.நா விசாரணை கூட ஒரு முழுமையான விசாரணை அல்ல. மட்டுபடுத்தப்பட்ட காலப்பகுதிக்குள் மட்டும் விசாரிக்கிறார்கள். எனவே இந்த விசாரணை ஒரு விதத்தில் நன்மையளித்தாலும் ஒரு விதத்தில் ஏமாற்றப்படுகிறோம். ஆனாலும் இது முன்னேற்றத்துக்கான ஒரு சிறுபடிக்கல்லாக அமையும் என்பதால் இதற்கு ஆதரவளிக்கிறோம்.

நீங்கள் குறிப்பிடும் இரு அமைப்புகளும் எதுவும் செய்யவில்லை என்று கூறாதீர்கள். அவர்கள் நடத்திய போராட்ட தகவல்களை நானே யாழில் இணைத்து இருக்கிறேன்.

உதவும் அமைப்புக்களை உதவ விடுவோம்.

Edited by துளசி

  • தொடங்கியவர்

பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்கனவே உதவி செய்து வரும் நிலையில் அவர்களுடன் தொடர்புகொள்ளக்கூடிய மேலும் சில தொடர்பு முகவரிகள்,

British Tamils Forum

Unit 1, Fountayne Business Centre,

Broad lane, London N15 4AG

Telephone: +44(0)20 8808 0465

E-mail : admin@tamilsforum.com

பிரித்தானிய தமிழர் பேரவை

(Facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்

மேலும் சில உதவி செய்யும் அமைப்புகளின் தொடர்பிலக்கங்கள்.

கனடா - போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் (CWVHR)

தொலைபேசி எண் : 416 628 14 08

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு –பிரித்தானியா

தொலைபேசி எண் : 079 18 32 41 00

சுவிஸ் அக்கினிப் பறவைகள் - புதிய தலைமுறை அமைப்பு

தொலைபேசி எண் : 0041 79 19 38 668

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – அவுஸ்திரேலியா

தொலைபேசி எண் : 046 90 89 883

நோர்வே ஈழத்தமிழர் அவை

தொலைபேசி எண் : 0047 90 64 16 99 – 0047 93 42 22 29

டென்மார்க் - டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்.

தொலைபேசி எண் : 0045 21 73 41 79

இத்தாலி - தமிழ் அமைப்புகள் ஒன்றியம்

தொலைபேசி எண் :

பலர்மோ : 32 98 51 97 46

மேற்பிராந்தியம் : 32 92 41 09 80

நெதர்லாந்து தமிழர் அவை

தொலைபேசி எண் 0031 64 02 29 481

தமிழர் பண்பாட்டுக் கழகம் - பெல்ஜியம்

தொலைபேசி எண் : 0032 49 21 98 664

நியூசிலாந்து மக்கள் அவை

தொலைபேசி எண் : 0064 21 07 50 029

தமிழ் சங்கம் - பின்லாந்து

தொலைபேசி எண் : 0035 84 65 76 75 47

(Facebook)

  • தொடங்கியவர்

ஐ.நா விசாரணை குழு முன்பாக தமிழினப் படுகொலை என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம் டென்மார்க் தமிழீழ உறவுகளே!

அன்பான டென்மார்க் தமிழீழ உறவுகளே,

ஜக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக்குழுவிற்கு தேவையான சாட்சிகளை சேகரிக்கும் வேலைத்திட்டங்கள் டென்மார்க்கிலும் ஆரம்பமாகியுள்ளது. எமது மக்களின் உயிர்களை வதையெடுத்த சிங்கள அரசின் காட்டுமிராண்டித்தனத்தை ஆதாரத்துடன் நிருபிப்பதற்கான காலம் இது. 2002 - 2011 காலப்பகுதியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ (உங்கள் உறவுகள் பாதிக்கப்பட்டாலோ) பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல்களை அவர்களிடம் வழங்குதன் மூலம் எங்களிற்கான நீதியினைப்பெற்றுக் கொள்ளமுடியும். அத்துடன் எமது இனத்திற்கு எதிராக திட்டமிட்ட முறையில் நடாத்தப்படும் இனப்படுகொலையினை அம்பலப்படுத்துவதற்கும் இதுவொரு வாய்ப்பாகும்.

இப்பதிவுகள் யாவும் இரகசியமாக பேணப்படுமென்பதனை மனித உரிமைகள் ஆணையகம் உறுதிசெய்துள்ளது. இதனை எமது பணியாளர்களும் கடைப்பிடிப்பார்கள் என்பதனைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உங்கள் பதிவுகளிற்கோ அல்லது மேலதிக விபரங்களிற்கோ தொடர்பு கொள்ளவேண்டிய இலக்கங்கள்:

- 21734179 – 91823342

நன்றி

http://www.pathivu.com/news/34102/57/d,article_full.aspx

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

பிரித்தானியாவில் இந்த கிழமைக்கும் அழைப்பு விட்டிருந்திருக்கிறார்கள். நடந்ததை தெரியப்படுத்துவதற்காக இணைக்கிறேன்.

"Collecting Evidence & Witness Statements from Tamils by ICPPG"

International Centre for Prevention & Prosecution of Genocide will be collecting evidence & witness statements from Tamils for OHCHR - UNHRC.

Tamils are invited to give evidence & witness of GENOCIDE happened to them to get Justice, Peace for our Tamils.

We need to submit this evidence to OHCHR before 30th October 2014, we

have "2 MORE WEEKS LEFT" to do this. Please come forward and do your duty for our people.

Dates: This week.....

Tue 14/10/2014 at 4:30PM

Wed 15/10/2014 at 7PM

Thu 16/10/2014 at 7PM

Fri 17/10/2014 at 6PM

Sat 18/10/2014 at 10AM

Sun 19/10/2014 at 10AM

EASTHAM:

Tue 14th Oct on 4:30pm at

Trinity Community Centre,

East Ave, Eastham, E12 6SG.

WEMBLEY:

On 15, 16, 18 & 19th Oct on 10AM at

TGTE Office, 227 Preston Rd, Wembley, HA9 8NF

CROYDON:

Friday 10th Oct on 6pm at

229-231 London Road, Croydon, CR0 6DT 2RL (Behind Paddy Power via Summer Road)

Organised by ICPPG

www.icppg.org

For further details call :

07869133073, 07877204123 07929349302(Wembly) 07920787576(Croydon),

07832954281 & 07960899219 (Eastham)

(Facebook)

Edited by துளசி

  • 1 month later...

உண்மையான சாட்சியங்கள் எழுதும் யாரும், இவ் மாதிரி படிவத்தை பாவித்து சாட்சியங்களை ஐ.நா.விசாரணை குழுவிடம் அனுப்பும் பொழுது, உள்ளடக்கம் வேறுபட்டதாக இருக்கும் பட்சத்திலும், சிறிலங்கா அரசு இவை யாவும் நன்றாக திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட சாட்சியங்கள் என்ற வாதத்தை முன்வைப்பதற்கு வழிவகுக்கிறது.

சொன்னபடியே நடந்துள்ளது .இந்த மாதிரி படிவத்தை பயன்படுத்தி ஸ்ரீலங்கா அரசு மிகப்பெரிய குற்றச்சாடுக்களை கொழும்பிலுள்ள பல வெளிநாட்டு தூதுவராலயங்கலுக்கு அனுப்பியுள்ளது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.