Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழகத்தில் நிகாப் அணியத் தடை?

Featured Replies

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட முஸ்லிம் மாணவிகள் நிகாப் அணிவதற்கு மருத்துவ பீட நிர்வாகம் தடை விதித்துள்ளதாகத் தெரியவருகின்றது. 

இந்த நடைமுறை திங்கட்கிழமை (01) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

மருத்துவபீடத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகளில் ஒருவர் நிகாப் அணிந்து வருவதையிட்டே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இருந்தும், இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக இல்லாமல், மாணவிக்குத் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. 

இது தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில சோனகத்திங்க.. சேலைத்தலைப்பால மொக்காடு போட்டது தானே காலம் காலமாக இருந்து வந்த வழமை. அல்லது.. வெள்ளை சீத்தை துணிய வெட்டி தலையில முகத்தை மறைக்காம கட்டிப்பாங்க.

 

இப்ப என்ன விண்ணானத்துக்கு அரேபிய உடைகளை திணிக்கினம்..???! இந்த முஸ்லீம் மத அடிப்படைவாதம் தான் முஸ்லீம்கள் ஊர்களை விட்டே ஓட வேண்டிய நிலைக்கு அவர்களை தள்ளியது. உலகம் பூராவும் அவர்களை சந்தேகத்தோடு நடத்தவும் வழி செய்கிறது. ஏன் இந்த வேண்டாத வேலைகள்..????! :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தலையில முகத்தை மறைக்காம கட்டிப்பாங்க.

 

இப்ப என்ன விண்ணானத்துக்கு அரேபிய உடைகளை திணிக்கினம்..???! ..????! :icon_idea::rolleyes:

 

இந்துக்கள் இந்தியாவை பின்பற்றுவதும்,கிறிஸ்தவர்கள் மேற்கத்தைய உடைகளை பின்பற்றுவதும்,முஸ்லீம்கள் அரபிய யர்களை பின்பற்றுவதும் எழுதப்படாத சட்டங்கள் :D

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இந்துக்கள் இந்தியாவை பின்பற்றுவதும்,கிறிஸ்தவர்கள் மேற்கத்தைய உடைகளை பின்பற்றுவதும்,முஸ்லீம்கள் அரபிய யர்களை பின்பற்றுவதும் எழுதப்படாத சட்டங்கள் :D

 

இந்துக்கள்.. கிறிஸ்தவர்கள்.. அடிப்படை அடையாளத்தை மாற்றும் வகையில்.. உடை அணிவது பெரிய அளவில் நிகழ்வதாக இல்லை.

 

அரேபிய உடைகள்.. அந்த மண்ணின் காலநிலைக்கு வடிவமைக்கப்பட்டன. அதனால்.. அதனை அங்கு அணிகிறார்கள். அதனை சிறீலங்காவிலும் பிரான்சிலும்.. அவுஸிலும் அணிய வேண்டிய தேவை இல்லைத் தானே.

 

அவரவர் மத நிகழ்வுகளில்.. அதற்குரிய அணியை அணிந்து கொள்கிறார்கள். அது அவரவர் சுதந்திரம். ஆனால்.. பொது இடங்களில்.. பொது நிகழ்வுகளில்.. பிரதேசங்களுக்கு ஒவ்வாத உடை அணிவது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அது யாராகினும்..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

இ நிகழ்வுகளில்.. அதற்குரிய அணியை அணிந்து கொள்கிறார்கள். அது அவரவர் சுதந்திரம். ஆனால்.. பொது இடங்களில்.. பொது நிகழ்வுகளில்.. பிரதேசங்களுக்கு ஒவ்வாத உடை அணிவது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அது யாராகினும்..! :icon_idea::)

 

காலப்போக்கில் அரபிக்காரன் நீச்சலுடையில் நிற்பான்...உவையள் நிகாப் போட நிற்பினம்...நல்ல உதாரணம் சிட்னி முருகன் கோவில்,.......அவுஸ்ரேலியா பிறந்த எங்கன்ட பிள்ளைகள் கோவிலுக்கு போகும் பொழுது சுரிதார் மற்றும் சேலை அணிந்து செல்வார்கள் ...ஆனால் வட இந்தியாவிலிருந்து வந்தவையள் கோவிலுக்கு வரும் பொழுது ஜின்ஸ்,பான்ட்ஸ் அணிந்து கொண்டு வருவினம்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.