Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூலை 15: தமிழ் கடல் மறைமலை அடிகள் பிறந்த தினம் இன்று..

மறைமலை அடிகள் புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர்.

சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுள் பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.

  • Replies 3.9k
  • Views 331.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஆடிப்பிறப்பு 16.07.2017

Image may contain: flower, plant, outdoor, nature and water
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17.07.2017
Image may contain: bird, flower, plant, sky, nature and outdoor

 

Image may contain: one or more people, sky, cloud and outdoor
Loganathan Kanapathipillai 

ஜூலை 17 ⇨ சர்வதேச குற்றவியல் நீதி தினம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தோற்றம்பெறுவதற்கு காரணமான ரோம் பிரகடனத்தில் பல உலக நாடுகள் கைச்சாத்திட்ட ஆண்டு நிறைவினை முன்னிட்டு இத்தினமானது பிரகடனப்படுத்தப்பட்டது.

2010ம் ஆண்டு ஜூன் 1ம் திகதி உகண்டா, கம்பாலா நகரில் நடைபெற்ற ரோம் உடன்படிக்கை மீளாய்வு மாநாட்டில் ஜூலை மாதம் 17ம் திகதியினை சர்வதேச குற்றவியல் நீதி தினமாக அங்கத்துவ நாடுகள் பிரகடனம் செய்தது.

1998 ஜூலை 17ம் திகதி இறுதிவடிவம் பெற்ற ரோம் உடன்படிக்கையில் இதுவரை 139 அங்கத்துவ நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.

ஜுலை 1, 2002ம் திகதி முதல் நெதர்லாந்தின், ஹேக் நகரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் செயற்பட்டு வருகின்றது. 
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் திட்டமிட்ட இனப்படுகொலைகள், சித்திரவதைகள், யுத்தக் குற்றங்கள், பாலியல் வன்புணர்வுகள், சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்துதல், பலவந்தமாக இடம்பெயரச் செய்தல் போன்ற பல்வேறு குற்றங்கள் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றன.

# ரோம் உடன்படிக்கையில் இதுவரை ஐ.நா வில் அங்கம் வகிக்கும் 41 நாடுகள் கைச்சாத்திடவில்லை. குறிப்பாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, சிரியா, மலேசியா, மியன்மார், இந்தோனேசியா, ஈராக், கியூபா போன்ற நாடுகளும் இதில் உள்ளடங்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person
 

July 18 : #MandelaDay

#OnThisDay

 · 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முதன் முதலாக இருதய மாற்று அறுவைச் சிகிக்சை( heart transplant,) வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார்கள். ஒரு குழுவாக இருதய மாற்று அறுவைச் சிகிக்சை நிபுணர்கள் செய்த அந்த வெற்றிச் செய்தியில் ஒரேயொரு தமிழர் இடம்பெற்று இருக்கிறார். இலங்கைத் தமிழர்கள் எல்லாருமே பெருமைப்பட வேண்டிய அந்த நிகழ்வில் தனிப்பட சந்தோசப்படுவதுக்கு முக்கிய காரணம் அந்த தமிழ் டாக்டர் யாழ் மத்திய கல்லூரியில் படித்த Consultant Cardiothoracic Surgeons டாக்டர் குமாரதாஸன் ஞானகாந்தன்.

 

Image may contain: 1 person, beard
 
சுவீடனிருந்து
நாவுக்கரசன்.....
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூலை 18: 'ஆப்ரிக்க காந்தி’எனப் போற்றப்படும் நெல்சன் மண்டேலா பிறந்த தின சிறப்பு பகிர்வு

தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, 1964 ஜுன் 12-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 46. கடந்த நூற்றாண்டில் அதிக ஆண்டு காலம் சிறையில் இருந்த அரசியல் தலைவர் நெல்சன் மண்டேலாதான். 27 வருடங்கள் சிறையில் இருந்தார். உடன் இருக்கும் கைதிகளுடன் பேசவும் அனுமதி இவருக்கு இல்லை.

இவரது மூத்த மகன் விபத்தில் இறந்தபோது, ‘மன்னிப்புக் கேட்டால் வெளியே விடுகிறோம்’ என்ற நிபந்தனை விதித்தது அரசு. கம்பீரமாக மறுத்தார் மண்டேலா. காந்தியின் சத்திய சோதனையைப் பொறுமையாக வாசித்தார். காந்தி மீது அபிமானம் ஏற்பட்டது. ‘எனக்கு எல்லை இல்லாத மன தைரியம் வழங்கியது காந்திஜியின் சத்திய சோதனைதான்’ என்றார். 1990-ல் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதி கிளார்க் முயற்சியால் விடுதலை ஆனார்.

Image may contain: 1 person, smiling
Image may contain: one or more people, people standing, cloud, sky, shoes and outdoor
 

World's Largest Nelson Mandela Statue - 29.5' (9m) @ Pretoria, South Africa 

July 18 # Nelson Mandela International Day

நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் (Nelson Mandela International Day) என்பது தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் நாளைக் குறிக்க ஐக்கிய நாடுகள் அறிவித்த சிறப்பு நாளாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று கவிஞர் வாலி அவர்களின் 4ஆவது நினைவு தினம் 18.07.2017.

Image may contain: 1 person

வாலி பெயர்க்காரணம்..

தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.

Image may contain: one or more people and beard
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்’இது கவிஞர் கண்ணதாசன் இறந்தபோது கவிஞர் வாலி சொன்னது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2017 ஜூலை 19 ஆம் திகதி சுவாமி விபுலாநந்த அடிகளின் 70வது நினைவு தினம் 2764.png<3

வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது

காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பிய கைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.
பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.
»»»சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892 – ஜூலை 19, 1947)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person
 
July 19, 2017 
 
மட்டக்களப்பு மாநிலத்தில் வாராது வந்துதித்து உலகின் எட்டுத்திசைகளிலும் தமிழ் மொழியின் எழிலைப்பரப்பியவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள். முத்தமிழ் வித்தகரான அந்த முனிவரின் தமிழ்ப்பணிகள் பற்றி எத்தனை மணிநேரம் பேசினாலும் எடுத்தியம்ப இயலாது
அத்தனை சிறப்போடு மொழியியல் விஞ்ஞானியாக, அறிவியல் கலைஞராக, ஆத்மீக ஞானியாக, ஆற்றல்மிகு பேராசிரியராக, இயற்றமிழ் வல்லுனராக, இசைத்தமிழ் ஆராய்சியாளராக, நாடகத்தமிழ் நல்லாசிரியராக நமது தாயக மண்ணிலே நற்பணிபுரிந்தவர்.
தமிழுக்காக, தமிழ் வளர்ச்சிக்காக, தமிழ் இனத்திற்காக, இனத்தின் கல்வி மலர்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள்.
சைவத்தின் காவலர்கள் என்று எழுந்தவர்கள், சாதித்துவத்தின் காவலர்களாகத் திகழ்ந்தார்கள். மக்களிடையே ஏற்றத் தாழ்வுகளை விதைத்தார்கள். மனித குலத்தின் மடமைத்தனத்தின் உச்சநிலையான வருணப் பாகுபாடுகளை வளர்த்தார்கள். ஆனால் சுவாமி விபுலானந்த அடிகளோ, மக்கள் எல்லோரையும் சமமாக மதித்தார். சாதிப் பிரிவுகளை நீக்க உழைத்தார். எல்லோரும் சமமானவர்களே என்ற எண்ணத்தை மக்களிடையே விதைத்தார். கல்வி எல்லோருக்கும் பொதுவானது என்று நினைத்தார். தீண்டத்தகாதவர் என்று தீயவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்கும் கல்வி கிடைப்பதற்கு வழிசமைத்தார்.
உலகத்திலேயே முதல் தமிழ்ப் பேராசிரியராக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே பதவி வகித்திருந்த சுவாமி அவர்கள் தமது பதவிக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும்கூட அடிமட்டத் தமிழ் மக்களுக்கு கல்வியறிவூட்டுவதில் அக்கறையோடு முனைந்தார்.
தமிழ்நாட்டு மக்களிடையே கல்விமறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தன்னிகரற்ற பணிகளை ஆற்றிய சுவாமி அவர்கள். ஈழத்திலும் ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு எழுத்தறிவித்த இறைவனானார். எவ்வித வேறுபாடுமின்றி எல்லா மக்களுக்கும் கல்வி கிடைப்பதற்காக யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் சுவாமி அவர்கள் ஆற்றிய பணிக்கு நிகராகப் பணிபுரிந்தோர் அவரதுகாலத்திற்கு முன்னர் என்றாலும் சரி, அவருக்குப் பின்னர் இன்றுவரை என்றாலும் சரி யாருமே பிறந்ததுமில்லை, உயர்ந்தவராய்த் திகழ்ந்ததுமில்லை, பணியிலே சிறந்ததுமில்லை.
தமிழர்களுக்குக் கல்வியுட்டுவதிலே தளராத அவரது முயற்சியினால் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் எண்ணற்ற தமிழ் அறிஞர்கள் தோன்றினார்கள். பேராசிரியர்களாக, பண்டிதமணிகளாக, புலவர்மணிகளாக உருவாகினார்கள். வாழையடி வாழையாகத் தமிழ் வளர்ச்சியின் எருவாகினார்கள். அதனால் சுவாமியவர்கள் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் மொழி வளர்ச்சியின் கருவாகினார்கள்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் ஆராய்ச்சித் துறைக்கான பாடத்திட்டத்தினைத் தயாரித்தவர் சுவாமி விபுலானந்தர் அவர்களே. அதன்மூலம் சீரியவழியில் தமிழ் ஆராய்ச்சிக்கல்வி வளர்வதற்கும், தமிழ் ஆராய்ச்சிக் கலை தொடர்வதற்கும், தமிழ்மொழியின் நிலை உயர்வதற்கும் காலாக அமைந்தவர் சுவாமிகளே.
சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கத்தால் அமைக்கப்பட்ட கலைச்சொல்லாக்கப் பேரவையின் தலைமைப்பொறுப்பை ஏற்று அறிவியல் தமிழை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் அடிகளார் அவர்களே.
கணிதம், வரலாறு, பொதிகவியல், தாவரவியல், விலங்கியல், இராசாயனவியல், உடல்நலவியல், புவியியல், விவசாயவியல் ஆகிய ஒன்பது துறைகளில் கலைச்சொற்களை ஆக்குதற்காக ஒன்பது அறிஞர் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த ஒன்பது குழுக்களுக்கும் பொதுத் தலைவராகவும், இரசாயனவியல் குழுவின் தலைவராகவும் விபுலானந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அடிகளாரின் தலைமையிலான அந்த அறிஞர் குழுக்களின் அரும்பணியினால் பத்தாயிரம் தமிழ்க்கலைச் சொற்களைக் கொண்ட கலைச்சொல் அகராதி 1938 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. உலகின் அறிவியல் மலர்ச்சிக்குத் தகுந்தவகையில் தமிழ் மொழியின் வளர்ச்சி அமைந்திட இந்த அகராதி பெரும் பக்காற்றிக்கொண்டிருக்கின்றது.
சுவாமி அவர்கள், இந்தியாவில் இராமகிரு~;ண மடத்தால் வெளியிடப்பட்ட வேதாந்த கேசரி என்றும் ஆங்கிலப் பத்திரிகைக்கும், இராமகிரு~;ண விஜயம் என்னும் தமிழ்ப் பத்திரிகைக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். அவரால் அவ்விதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளும், ஆசிரியர் தலையங்கங்களும் சமய உண்மைகளை விளக்குவனவாக மட்டுமன்றித் தமிழ் மொழி, தமிழ்ப்பண்பாடு என்பவற்றைப் பரப்புவனவாகவும் அமைந்திருந்தன.
தமிழ் இலக்கியம் பாரதிக்கு முன்னால் பாரதிக்குப்பின்னால் என்று இன்றைக்கு வரையறை செய்யப்படுகின்றது. அந்த அளவுக்குத் தமிழ் இலக்கியத்திலே தாக்கத்தை ஏற்படுத்தியவர் மகாகவி பாரதியார். பாரதியாரைப்பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் வந்துவிட்டன. இலட்சக்கணக்கான கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன. பாரதியைத் தெரியாத தமிழர்கள் பட்டிகளில், தொட்டிகளில்கூட இல்லை என்கின்ற அளவுக்கு அவரது பாடல்கள் படித்தவர்களையும், பாமரர்களையும் எட்டியிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் சுவாமி விபுலானந்த அடிகளே.
பாரதியாரின் முற்போக்குக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத சாதிவெறிவிடித்த பிராமணப் பண்டிதர்கள் பாரதியை அவமதித்தார்கள். அவரின் பாடல்களை வெறுத்தார்கள். அவற்றை இலக்கியமென்று ஏற்க மறுத்தார்கள். மக்களுக்குத் தெரியவராதபடி மறைத்தார்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் புறக்கணித்தார்கள்.
படித்தவர்கள், விவுலானந்தரின் அறிவை மதித்தவர்கள், அவருக்குப் பதவி அளித்தவர்கள்
எல்லோருமே பாரதியைக் குழிதோண்டிப் புதைத்தார்கள். இத்தனை பேருக்கும் எதிராக பாரதியை மகாகவியாக படித்த மக்களிடையே உலவவிட்டவர் விபுலானந்த அடிகள் என்றால் அவரது அஞ்சா நெஞ்சத்தை என்னென்பது?
விபுலானந்தர் தோன்றாதிருந்திருந்தால், தமிழ் நாட்டில் கால் ஊன்றாதிருந்திருந்தால், மகாகவி பாரதியாரை உலகம் காணாதிருந்திருக்கும் பாரதியின் தமிழ் வீணாக மடிந்திருக்கும். சங்ககாலத்திற்கு முன்னர் தோன்றிய எண்ணற்ற இலக்கியங்களை ஆற்று நீரிலே எறிந்து அழித்ததைப்போல, தீயிலே போட்டு எரித்ததைப்போல சாதிவெறிபிடித்த மேதாவிகள் பாரதியின் பாடல்களையும் அழித்திருப்பார்கள்.
சுவாமி விபுலானந்தர் அவர்கள் பல்கலைக்கழக மட்டத்திற்குப் பாரதியைக் கொண்டுசென்றதால் பாரதியை யாராலும் அழிக்க முடியவில்லை. விபுலானந்த அடிகளின் தமிழ்ப் பணிகளிலே இமயமென உயர்ந்து நிற்பவற்றிலே அவர் பாரதியாரின் பாடல்களுக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தமையும் ஒன்றாகும்.
சங்க இலக்கியங்களுக்கு நிகராக எண்ணப்படுகின்ற, கங்கையில் விடுத்த ஓலை என்னும் அடிகளாரின் கவிதை மலரும், மற்றைய இனிமையான கவிதைகளும், எண்ணற்ற கட்டுரைகளும், இயற்றமிழுக்கு அவர் ஆற்றிய பணியினை இயம்பிக்கொண்டிருக்கின்றன.
வெள்ளைநிற மல்லிகையோ, வேறெந்த மாமலரோ,
வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?
வெள்ளைநிறப் புவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.
காப்பவிழ்ந்த தாமரையோ, கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ?
காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது
பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ,
வாட்டமுறாதவர்க்கு வாய்த்த மலரெதுவோ?
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் புவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.
என்று “ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று” என்ற தலைப்பில் அடிகளார் பாடிய பாடல்கள் அறிஞர் பெருமக்களால் விதந்து போற்றப்படுகின்றன.
இருபதாம் நூற்றாண்டில் இசைத்தமிழுக்குச் சூட்டப்பட்ட மகுடமெனத் திகழ்கின்ற யாழ்நூல் விபுலானந்த அடிகளாரின் இசைத் தமிழ்ப் பணியினை இசைத்துக் கொண்டிருக்கின்றது. வழக்கொழிந்து போன பண்டைத்தமிழ் இசைநூல் இலக்கணத்தை யாழ்நூல் வகுத்துரைக்கின்றது. நூற்று மூன்று வகையான பண்களைப் பகுத்துரைக்கின்றது. மறைந்துகிடந்த தமிழிசை மரபுகளை எடுத்துரைக்கின்றது.
1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் 6ஆம் திகதிகளில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தினால் யாழ்நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
யாழ்நூல் அரங்கேற்றம் நடைபெற்றதன்பின்னர் நாற்பத்து ஐந்து நாட்களே அடிகளார் இவ்வுலகில் வாழ்ந்தார்கள். 1947 ஆம் ஆண்டு
பதினான்கு ஆண்டுகள் அடிகளார் அவர்கள் அயராது செய்த ஆராய்ச்சியின் பலனாக தமிழ் இசையின் தொன்மையைத் தமிழ் உலகம் அறிந்துகொண்டது. தமிழ் இசையின் அருமையைத் தமிழிசை உலகம் புரிந்துகொண்டது. தமிழ் இசையின் பெருமையை எல்லா உலகமும் தெரிந்துகொண்டது.
அவருக்குப்பின்னர் தமிழ் இசைபற்றி ஆராய்கின்ற அறிஞர்களுக்கு யாழ்நூலே ஆதாரமாய் அமைந்தது.
மதங்கசூளாமணி நாடகத்தமிழுக்கு அடிகளார் வழங்கிய நல்லதொரு நூல்
N~க்ஸ்பியருக்கு அடிகளார் வைத்த பெயரே மதங்கசூளாமணி என்பதாகும்.
N~க்ஸ்பியரின் பன்னிரண்டு நாடகங்களைத் தெரிந்தெடுத்து அவற்றின் சிறப்புக்களை இந்நூலில் ஆராய்ந்துள்ளார். அந்த ஆங்கில நாடகங்களில் சுவைமிகுந்த உரையாடல் பகுதிகளை சுவைகுன்றாமல் செய்யுள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நாடக இலக்கணங்கள் பற்றி நயம்பட எடுத்துரைத்துள்ளார். கூத்துக்களின் வகைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
பண்டைத்தமிழ் மக்களின் வாழ்வியலோடு கூத்துக்கள் கொண்டிருந்த தொடர்பு பற்றிக் கூறியுள்ளார். தமிழ்நூல்கள் தருகின்ற தகவல்களையும், இசைநாடக இயல்புகளையும் கருத்துரை செய்துள்ளார்.
1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் 13 ஆம் திகதிகளில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் 23 ஆவது வருடாந்த விழா.
அடிகளார் அவர்கள் முதல்நாள் “தமிழ் அபிவிருத்தி” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
இரண்டாம் நாள் கலாநிதி உ.வே. சாமிநாதையர் தலைமையில் “N~க்ஸ்பியரும் தமிழ் நாடகங்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்த உரையின் விரிவே மதங்கசூளாமணி என்ற நூலாகும். அது மதுரைத் தமிழ்ச்சங்கத்தினால் 1926 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இவ்வாறு, அண்ணாமலைப்பல்களைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக,
இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக,
சென்னைப் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளின் பங்காளராக,
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் கௌரவத்திற்குரியவராக,
மதுரைத் தமிழ்ச்சங்கத்தினால் பெரிதும் மதிக்கப்பட்ட அறிஞராக
அடிகளார் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன.
அடிகளார் அவர்கள் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்ப்பாடசாலைகளை அமைத்தார். வறிய மாணவர்களது கல்வி மேம்பாட்டுக்காக உழைத்தார். அதன்மூலம் தமிழையும் வளர்த்தார், தமிழ் மக்களின் கல்வியையும் வளர்த்தார்.
லண்டன் விஞ்ஞானப் பட்டதாரியான சுவாமி அவர்கள் இலங்கையின் முதலாவது தமிழ்ப்பண்டிதர் என்ற பெருமைக்குரியவர். கொழும்பு அரசினர் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் புனித பத்தரிசியார் கல்லூரியிலும் பௌதிகவியல் ஆசிரியராகப் பணி புரிந்த அடிகளார், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபராக மட்டற்ற பணியாற்றியவர்.
இன்று கொழும்பு மாநகரிலே சிறந்து விளங்குகின்ற விவேகானந்தா வித்தியாலயம், மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம், காரைதீவு சாரதா வித்தியாலயம் ஆகியவற்றை ஆரம்பித்தவர் சுவாமியவர்களே. அவை மட்டுமா? யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்;வரா வித்தியாலயம் விவேகானந்தா வித்தியாலயம், ஆகியவற்றை பொறுப்பேற்று நடாத்தியதுடன் வண்ணார் பண்ணையில் அநாதைச்சிறுவர் இல்லத்தினை அப்போதே ஆரம்பித்து வைத்தவர் விபுலானந்த அடிகளே.
ஈழமுதற்பனி இமயம் வரைக்கொடி கட்டும் இசைத்தமிழன்
இந்திய வாணியை ஆங்கிலபீடத் தேற்றிய புதுமையினோன்
தோழமை கொள்வட மொழிமயமாகிய தொன்மை யிசைத்தமிழைத்
தூயதனித்தமிழ் வடிவிற் தோற்றிய தந்தையெனுந் துணையான்
சூழமுதத் தமிழ் வாணர் மதிக்கொரு சோதிச் செஞ்சுடரோன்
சுவாமிசிவானந் தக்கடலாகிய படிமைத் தோற்றத்தோன்
என்று பாடினார் விபுலானந்த அடிகளாரின் மாணவர்களில் ஒருவரான புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்கள்.
முத்தமிழையும் வளர்த்தவர், முழுத் தமிழ் இனத்திற்காகவும் உழைத்தவர் சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்கள். அவருக்கு நிகராக அவருக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி இதுவரை யாரும் யாரும் இலங்கையில் தோன்றியவர் இல்லை என்றால் அதற்கு நியாயமான எதிர்வாதம் இருக்கமுடியாது.
வாழ்க விபுலானந்த அடிகளின் புகழ்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

World ice cream day...யாருக்கெல்லாம் ஐஸ்கிறீம் வேணும் எடுத்துக் கொள்ளுங்கள்!????

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

மரணம்...


நாள் கோள்
நற்பலன் பாராது
இயற்கையின்-இரக்கமற்ற
அழைப்பு.

நெடிய உயிர் துடிப்பின்
இயக்கம் நின்று விட்ட,
பொழுதுகள் மரணம்
என்ற பெயர் பெற்று
நிற்கும்..

ஜனனத்தின் போது
வாழ்த்துக்கள் கூறி
வரவேற்ற சொந்த 
பந்தங்கள் போகும் 
போது கண்ணீர்
அஞ்சலிகளோடும்
ஒப்பாரிகளோடும் 
வளி அனுப்பி
நிற்பர்...

கொடிய காலன் கோவம்
கொள்ளும் போது தன் 
பாசக்கயிற்றை வயது 
வரம்பின்றி வலையாய்
வீசி பார்க்கிறான்..

நாங்கள் என்ன 
மீனவன் வலையில்
சிக்கும் மீன்களா..
ஆனாலும் என்றோ 
ஓரு நாள் போவது
நிட்சயம்.

வாழும் மட்டும் 
புதிதாய் புலரும்
எல்லா நாளும் 
நாம் இறவா நாளே.


ஆக்கம்:- யாயினி

No automatic alt text available.
 
 

¤ ஒரே இடத்தில் நின்று பறக்கும் 
ஆற்றலுடைய பூச்சி:- 
பட்டாம் பூச்சி

Image may contain: plant, flower, outdoor and nature

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person
 

முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் ஆபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், “உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார் பாதிரியார்.
எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன் மட்டும் பேசாமல் நின்றார். “ஆபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம்.

“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.

1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, “தோல்விகளின் செல்லக் குழந்தை” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.

சோர்ந்து போயிருந்த லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாராபுஷ். ‘ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’. “நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!” என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்!

இப்போது லிங்கனுக்குத் தன் இலக்குப் புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்!.

இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால் தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியனால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.

மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது - மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது “மண வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்” என்று குறிப்பிட்டார்.

“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது ஆபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல…
நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி திருமந்திரம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person

சிவாஜி பற்றி சில துளிகள்

* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!

* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: night, sky and outdoor
 · The great lady of Paris!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய
வார விடுமுறையாகட்டும்!

No automatic alt text available.
 
 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: flower, plant, nature and outdoor
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் கனவுகள்
வினோதமானவை
கோளங்களற்ற பெருவெளியில்
உட்கார இடம்தேடுமொரு
பட்டாம்பூச்சியும்
வீழ ஒரு தளமின்றிப்
பயணித்துக் கொண்டேயிருக்கும்
அனாதை மழைத்துளியும்
வாரம் ஒருமுறை வந்துபோகும்
என் கனவில்
****கவிஞர்..வைரமுத்து*******

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு யூலை நினைவு நாள்.

No automatic alt text available.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: mountain, sky, outdoor and nature

ஜூலை 24, 1911 ⇨ உலக மரபுரிமை இடங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அமையத்தினால் அங்கீகரிக்கப்பட்டதும், நவீனகால உலக அதியங்களில் ஒன்றாக விளங்குவதுமான பெருவின் "மாச்சு பிச்சு" மலைத்தொடர் நகரம் தொடர்பாக வெளி உலகத்திற்கு தெரியவந்தது.

பெருநாட்டின் உருபம்பா பள்ளத்தாக்குப் பகுதியில் 15 ஏக்கர் விஸ்தீரணத்தில் அமைந்துள்ள இந்த புராதன நகரமானது கடல் மட்டத்திலிருந்து 2430 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது. இன்கா பேரரசர்களால் 15ம், 16ம் நூற்றாண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டதாகும் என கருதப்படுகின்ற இந்த மலை நகரமானது ஸ்பானிய படையெடுப்புக்களால் அழிவடைந்ததாக நம்பப்படுகின்றது.

"மாச்சு பிச்சு" மலைத்தொடர் நகரத்தினை, ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த ஆய்வாளரான பேராசிரியர் ஹிராம் பிங்ஹாம் என்பவரே கண்டுபிடித்தார். காடுகள் சூழ்ந்த மாச்சு பிச்சு புராதன மலை நகரத்திற்கு செல்வதற்கு 11 வயதேயான பவ்லிடோ அல்வரெஸ் என்கின்ற உள்ளூர் சிறுவன் இவருக்கு உதவி புரிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 4நாட்களில் பூலோகத்தவர் போற்றி வணங்கும் புண்ணியம்பதி நல்லையம்பதியானின் மஹோற்சவ பெருவிழா ஆரம்பம்
#துவஜாரோகணம் - 28/07/2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு

Image may contain: sky, cloud and outdoor

மாலை வேளையில் நல்லூர் கந்தன்- 24.07.2017

 
Image may contain: sky, cloud and outdoor
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வறட்சி பசிக்கு இலக்காகும் 
வன்னிப்பெரும்நிலப்பரப்பு .

Image may contain: plant and flower
Image may contain: 2 people, flower, plant, outdoor and nature
 

பாலபிரசன்னா பூந்தோட்டம் வவுனியா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.