Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில விடையங்களை மன ஆறுதலுக்காகவாவது சொல்லிக் கொண்டும் நினைச்சுக் கொண்டு வாழ்ந்துட்டுப் போகலாம்..அதில் இதுவும் ஒன்று.

 

10420172_996760343682764_128617000310256

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1780905_996504620375003_4555447701775015

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொறன்ரோவின் புதிய நகரபிதாவாக John Tory (யோன் ரோரி) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

John Tory elected as the new mayor of Toronto.

இரண்டாவது தடவையாக நகரபிதா பதவிக்குப் போட்டியிட்ட 60 வயதான John Tory ரொறன்ரோவின் 65ஆவது நகரபிதாவாகத் தெரிவாகியுள்ளார்.

இன்று நடைபெற்ற தேர்தலில் அதிகளவில் வாக்குக்களை பெற்று புதிய நகரபிதாவாக John Tory தெரிவாகியுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடைபெற்று முடிந்த நகரசபைத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

லோகன் கணபதி மீண்டும் நகரசபை உறுப்பினராகவும், ஜினித்தா நாதன் மீண்டும் கல்விச்சபை உறுப்பினராகவும் தெரிவாகியுள்ளனர்.

ரொரன்ரோவின் 18ஆவது வட்டாரத்தில் புதிய கல்விச்சபை உறுப்பினராக பார்த்திபன் கந்தவேல் தெரிவாகியுள்ளார்.

தவிர இந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஏனைய தமிழ் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கங்கள்......good morning.இன்றைய பொழுது ஜோன் ரோறி Toronto (John Tory) அவர்களின் வெற்றியோடு புலருகிறது..அவரைத் தொடர்ந்து Mississauga (Bonnie Crombie) மற்றும் Brampton (Linda Jeffrey) நகரசபைகளில் புதிய நகரபிதாக்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

10421155_570383369772508_602206835715308

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய நகர பிதாக்களாக பதவி ஏற்று இருப்பவர்கள் தங்கள்,தங்கள் அறிவுக்கு,ஆற்றல்களுக்கு ஏற்ப  எமது தாயகத்தை போல்,  முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்ற தொனியில் கருத்துக்களைக் முன் வைத்து சென்றுள்ளதாகவும் அறியக் கூடியதாக இருக்கிறது. உதாரணத்திற்கு தனது பகுதியை மட்டக்களப்பின் சகோதர நகரம் என ஆக்குவேன் எனக்  கூறிச் சென்று இருக்கிறார்  Mississauga நகரில் வெற்றி பெற்று இருக்கும் புதிய நகர பிதா(Bonnie Crombie)அவர்கள்.. Toronto, யாழ்ப்பாணத்தின் சகோதர நகரம்,Mississauga, மட்டக்களப்பின் சகோதர நகரம் போன்று எதிர் காலத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.இப்படியாகத் தான் அவர்களது தேர்தல் பிரச்சாராம் அமைந்து வெற்றியை எட்டியிருக்கிறார்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Broadcast time: 17:05

Monday, October 27, 2014

42 Division

416-808-4200

The Toronto Police Service is requesting the public's assistance locating a missing woman and her two children.

Rebekah Isaac, 34, Jonathan Isaac, 7, and Joylin Isaac, 5, were last seen on Monday, October 27, 2014, in the morning, in the Neilson Road and McLevin Avenue area.

Rebekah Isaac is described as brown, 5'0" to 5'2", 120 lbs., with straight black hair and gold earrings. She was last seen wearing black pants, a red-and-white striped shirt and a light brown three-quarter-length hooded jacket. She was carrying a black and blue knapsack.

Jonathan Isaac is described as brown, 4'4" to 4'5", with a slim build and short black hair. He was last seen wearing a pull-over sweater with brown and blue horizontal stripes and blue jeans.

Joylin Isaac is described as brown, 4'0" to 4'2", 35-50 lbs., short black hair with gold dangly earrings.

Police are concerned for the family's safety.

Anyone with information is asked to contact police at 416-808-4200, Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477), online at www.222tips.com, text TOR and your message to CRIMES (274637), or Leave A Tip on Facebook. Download the free Crime Stoppers Mobile App on iTunes, Google Play or Blackberry App World.

For more news, visit TPSnews.ca.

 

NR.30357.1414440556.jpg

 

 

http://www.torontopolice.on.ca/newsreleases/30357

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உருத்திராட்சம்.

 

1505243_10154796007610512_32080880089245

 

10690281_10154796007405512_3955492155279

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10687079_877455638940596_678732960532459

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

* தைரியம் மிக்கவனைத் தீரன் என்று போற்றுவர். தீரன் என்பதற்கு துணிவு உள்ளவன் என்பதோடு அறிவுள்ளவன் என்றும் பொருளுண்டு.

* கோழை ஒருவன் என்ன கற்றிருந்தாலும் பயனில்லை. அவனை யாரும் நம்பக் கூட மாட்டார்கள்.

* அச்சம் இருக்கும்வரை ஒருவனை அறிவாளி என்று சொல்ல முடியாது. அவன் படித்திருந்தாலும் முட்டாள் தான்.

* ஆபத்திலும் உள்ளம் நடுங்காமல் துணிவுடன் அதை எதிர்கொள்ள நிற்பவனே உண்மையான ஞானி.

- பாரதியார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்டோபர் 28: பில் கேட்ஸின் பிறந்த நாள் இன்று.

 

'பில்’ என்று அழைக்கப்பட்ட அவன், ஒரு வழக்குரைஞரின் மகன். அம்மா, பள்ளி ஆசிரியை. எப்போதும் தொணதொண என்று பேசுவதனால், பில்லும் வக்கீல் ஆகிவிடுவான் என்றே நினைத்தார்கள். ஆனால், பில் தனது ஐந்தாவது வயதில் வீட்டில் உள்ள வானொலி, எதிர் வீட்டு சோஃபா, பக்கத்து வீட்டு சைக்கிள் என எல்லாவற்றையும் கழற்றிப்போட்டு, பழைய நிலைக்குச் சேர்க்க ஆரம்பித்தான்.

 

பாடங்களைச் சற்று நேரத்துக்கு மேல் கவனிக்க, படிக்க முடியாதவனாக பில் இருக்கிறான் என்று பள்ளி ஆசிரியர்கள் புகார் செய்தார்கள். கணிதம் என்றாலே, அவனுக்குக் கசந்தது. அந்தப் பாட வேளையில் அவன், நூலகத்தில்தான் இருப்பான். அங்கேயும் புத்தகங்களைப் படிப்பது இல்லை. அவற்றைக் கலைத்துப் போட்டு, வேறுவேறு முறைகளில் அடுக்குவான். ஆறு வயதுச் சிறுவன், ஆயிரக்கணக்கான புத்தகங்களை விதவிதமான முறையில் நேர்த்தியாக அடுக்குவதைக் காணவே, ஒரு கூட்டம் இருந்தது. அட்டவணை முறையில் புத்தகங்கள் எந்த அடுக்கில் உள்ளது என்று சொல்லும் நவீன முறையும் பில்லுக்கு அத்துபடி.

 

சிறுவன் பில்லுக்கு 13 வயது ஆனபோது, அவனது பள்ளித் தாய்மார்கள் குழு, கம்ப்யூட்டர்களை பள்ளிக்கு வரவழைக்கப் பொருளுதவி செய்தது. அப்போது ஓர் அறையையே அடைத்துக்கொள்ளும் பெரிய வால்வுகள் பொருத்திய, 'டெலிமாடல் 33’ என்கிற ஏஎஸ்ஆர் மின் கணினிதான் பயன்பாட்டில் இருந்தது. அங்கே சென்று, பேஸிக் (Basic) எனும் முறையை முழுமையாகக் கணினி மொழியாக்கும் வேலையில் பில் உதவினான்.

 

நூலகத்தில் அவன் கற்ற கேட்டலாகிங் முறை ஒரு வகையில் கைகொடுத்தது. அந்த வேலையில் அமர்த்தப்பட்டவர்கள் ஆறு நாட்களில் செய்யும் ஒரு வேலையை, அவன் நான்கு மணி நேரத்தில் முடித்தான்.

பில், தனது கணக்குப் பாட வேளையில் கணிதத்துக்குப் பதில், கணினிப் பாடம் கற்கலாம் என்று பள்ளி நிர்வாகம் அனுமதித்தது.

 

பில்லும் அவனது நண்பர்களுமாகச் சேர்ந்து, உலகில் முதன்முறையாக டிக்-டேக்-டோ எனும் புதிய வகை புரோகிராமை ஏற்படுத்தினார்கள். அந்த ஆய்வகத்தில் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும். பள்ளியின் தலைமை ஆசிரியை, சந்தேகத்தோடு திடீர் சோதனை மேற்கொள்வார். அங்கே, ஊரின் சிறார்களும் சில பெரியவர்களும் கணினியோடு சீட்டாட்டம், செஸ் என்று விளையாடிக் கொண்டிருப்பார்கள். இந்தக் கணினி விளையாட்டு புரோகிராமை பில் கண்டுபிடித்து அறிமுகம் செய்தபோது, அவன் வயது 13.

மிகுந்த போக்குவரத்து நெரிசல்கொண்ட பகுதியில் இருந்த அவர்களது வீட்டின் அருகே இருந்த சிக்னலில், பில்லும் அவனது தந்தையும் காரில் செல்லும்போது அடிக்கடி சிக்கினார்கள். ஒருநாள், ''அந்த சிக்னல் இயங்கும் விதம் பற்றி அறிந்துவருகிறேன்'' என்று சென்றான். இரண்டு நாட்கள் கழித்து அவன் வந்தான். அவனது 14 வயதில் கணினிமயமான முதல் போக்குவரத்து சிக்னல் உருவானது. காவல் அதிகாரிகள் அவனை வீடு தேடிவந்து பாராட்டியபோது அப்பா அசந்துபோனார்.

 

ஒருநாள் கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷன், அதன் நிர்வாகிகளைப் பள்ளிக்கு அனுப்பியது. பள்ளியில் அவர்கள் சப்ளை செய்திருந்த கணினியில், வித்தியாசமான வைரஸ் தாக்கி இருந்தது. பல மணி நேரம் போராடியும் முடியவில்லை. மதர் போர்டு (பிரதான மின் அமைப்பு) டெக்ஸ் மாற்ற வேண்டும் என 16 வயது பில் பேசுவதை அவர்கள் அதிர்ச்சியோடு பார்த்தார்கள். 'இனி, பில் பள்ளியில் கணினி பயன்படுத்தக் கூடாது. ஆனால், நேரம் கிடைக்கும்போது அவர்களது தொழிற்சாலைக்கே வரலாம்’ என்று புதிய உலகை அவனுக்குத் திறந்துவிட்டார்கள்.

 

பின்னாட்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை உருவாக்கி, தனது 'விண்டோஸ்’ மூலம் உலகையே கணினிமயமாக்கிய பில்கேட்ஸாக உருவெடுத்த பில், ஒரு சுட்டி நாயகனாக மிளிர்ந்தான்.

 

-ஆயிஷா நடராசன்,
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் நாகேஷின் பழைய பேட்டி ஒன்றை தற்செயலாகப் படிக்க நேர்ந்தது...

 

10590590_729441340443632_784516946702213

 

நடிகர் நாகேஷின் பழைய பேட்டி ஒன்றை தற்செயலாகப் படிக்க நேர்ந்தது...

ஒரே நாளில் ஐந்து படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்கும் அளவு, "பிசி"யாக இருந்த நாகேஷின் குஷியான பேட்டி இது...

நகைச்சுவையும் , நக்கலும் துள்ளி விளையாடுகிறது நாகேஷின் பதில்களில் !!!

கேள்வி : “உங்களிடம் இப்பொழுது என்னென்ன படங்கள் கைவசம் இருக்கின்றன?”

நாகேஷ்: “எங்கிட்ட இப்போ கைவசம் இருக்கின்ற படம் முருகன் படம், ராமர் படம், ஆஞ்சநேயர் படம், திருவள்ளுவர்... இதுமாதிரி நிறையப் படங்கள் இருக்கு”

கேள்வி: “நடித்துக் கொண்டிருக்கின்ற படங்களைக் கேட்டேன்..”

நாகேஷ்: “இப்ப யார் நடிக்கலேங்கிறீங்க? ஒவ்வொரு வீட்டிலேயும் அம்மா, பையன், பேத்தி, மாமன், மச்சான் எல்லோரும் ஒருத்தொருக்கொருத்தர் நடிச்சுக்கிட்டுத்தான் இருக்கிறாங்க..”

........இப்படியே கலகலப்பாக போகிறது இந்தப் பேட்டி...!

ஆனால் இதே வேளையில் , என்னைக் கலங்க வைத்த ஒரு செய்தியும் என் கண்ணில் பட்டது..

ஒரு முறை, ரசிகர் ஒருவர் நாகேஷிடம், "உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே... எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது?"என்றாராம்..

அதற்கு சிரித்தபடியே நாகேஷ் சொன்ன பதில் :

"உங்கள் வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா... அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா... மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும். என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல்தான். ஆண்டவன் "அம்மை"என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனால் தான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது”

# ...முகத்தில் ஒரு பரு வந்தாலே ,முக்காடு போட்டு மூலையில் உட்கார்ந்து விடும் இந்த சமூகத்தில் ....

தன் முகத்தில் தழும்புகளை ஏற்படுத்தி விகாரப்படுத்திய இயற்கையை ..இறைவனை குறை ஏதும் சொல்லாமல் ,அதை நிறைவோடு ஏற்றுக் கொண்டு ..இறைவனைப் போற்றியதோடு ..எதிர்நீச்சலும் போட்டு திரை உலகில் வெற்றி பெற்ற நாகேஷை நினைக்கையில் ..அவர் நடித்த

"எதிர்நீச்சல்"பாடல்தான் என் நினைவுக்கு வருகிறது...!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாரம் கனேடிய பாரளுமன்றில் நடைபெற்ற சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட கனேடிய படை வீரர் நதன் சிரில்லோவின் இறுதி நிகழ்வுகள் இன்று மதியம் கமில்டன் நகரில் நடைபெற்றது.

10670218_676043319160451_376787617245454

 

 

 

10665851_377217305761512_196994820261607

 

10402717_377133755769867_535592122726829

 

 

 

10694212_377209445762298_456361564803246

 

மனிதர்க்கு இல்லாத குணம்..நன்றியுள்ள ஜீவன் என்பதை உணர்த்தும் விதம்..

capt2.jpg

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே..

 

அனைவருக்கும் இனிய பொழுதாக அமைய வாழ்த்துக்கள்.!!!

 

10612674_570953513048827_406517919742857

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன்னிகரற்ற வரிகள் இவை !

 

இறைச்சி பதப்படுத்தும் தொழிற் சாலையில் வேலைசெய்யும் ஒருவர் ,ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் Freezer அறைக்குள் எதோ வேலையாக இருந்தபோது எதிர்பாராத விதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக் கொண்டு விட்டது.

 

உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்… இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப் போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தார் அவர்.

 

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உயிர் வந்தவனாய் வெளியே ஓடி வந்தார். தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தான். சந்தோஷத்தில் அவ னை கட்டி தழுவிக்கொண்டார்.

 

அவனிட ம் ”நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?” என்று கேட்டார்.

“சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்…

 

நீங்க ஒருத்தர் மட்டும்தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும் சாயங்காலம் குட்பை ரெண்டும் சொல்றவர்.

 

இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க.. ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை. உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்… அப்போ தான் உங்கள் கண்டு பிடிச்சேன்…” என்றான்

ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறை வாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை செலு த்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும் ஒரு விஷயம் தானே.

 

படித்ததிலிருந்து......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

• மலையக தமிழர்களின் தொடரும் துயரம்!

பதுளையில் ஏற்பட்ட மண் சரிவில் இதுவரை

 

• 10 தமிழர்கள் சடலஙடகளாக மீட்பு

 

• 300 பேர் வரையில் இறந்திருக்கலாம் என ஊகிப்பு

 

• 600பேர் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

ஒவ்வொரு வருடமும் அந்த மக்களை இவ்வாறான துயர சம்பவங்கள் தொடருகின்றன. ஆனால் எந்த அரசும் அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைக்கூட செய்து கொடுக்காமல் புறக்கணித்து வருகின்றன.

 

ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட தமிழ்மக்கள் மலையகத்தில் குடியமர்த்தப்பட்டனர். அன்று ஆங்கிலேயர் அமைத்து கொடுத்த லயன் வீடுகளிலேயே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எந்தவித அபிவிருத்தியும் இவர்களுக்கு இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.

 

மலையகத்தில் இருக்கும் இந்த பத்து லட்சம் தமிழர்கள் “தமிழீழ” தனி நாடு கோரவில்லை. இருப்பினும் இவர்கள் தமிழர்கள் என்பதால் இலங்கை அரசு தொடர்ந்து இவர்களை புறக்கணித்தும் கொடுமைப்படுத்தியும் வருகிறது.

 

அனைத்து மலையக தமிழ் மக்களுக்கும் தற்போது பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. இது ஒன்றுதான் இலங்கை அரசால் அந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரேயொரு சலுகையாகும். அதுகூட வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் போராட்டத்தினால் விளைந்த ஒரு நன்மையாகும்.

 

இலங்கையின் அதிக ஏற்றுமதி வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் இந்த மலையக மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய கொடுமையாகும். மனித இனம் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலையிலேயே அவர்கள் வைக்கப்ட்டிருக்கின்றனர்.

 

மலையக தமிழ்மக்கள் தங்கள் உரிமைகளையும் அடிப்படை வசதிகளையும் பெற்றுக்கொள்ள வடக்கு கிழக்கு தமிழ் தலைமைகள் மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கும் தமிழ் தலைமைகளும் குரல் கொடுக்க வேண்டும்.

 

மலையக மக்கள் தமிழர்கள் மட்டுமல்ல அவர்களும் மனிதர்களே!

10426283_479266032216564_819384326864753

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும்

நல்லவர்களாக இருக்க

முயற்சிக்கும் போது தான்

கெட்டவர்கள் என்ற பெயரை

சம்பாதிக்க வேண்டியவர்களாகி

விடுகின்றோம்..

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10410340_10154351982935088_6661920113407

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெறுக்க நினைப்பவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் அது தீயதாகவே  தெரிவது வழமை..!!!

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாகும் பொழுதும் தமிழ் படித்து சாக வேண்டும் என் சாம்பலும் தமிழ் மணம் கமழவேண்டும் ..அனைவருக்கும் இனிய காலை வணக்கம் .....!!!

 

 

10712768_571379649672880_231608849775439

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளைகள் அற்ற மரத்திலேயே

அமர்ந்து விடலாம் ஆனால்

நம்பிக்கையற்ற மனதில்

சிறு விநாடியம் இருந்துவிட இயலாது...!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

486389_169041946572161_1231568180_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன் வண்டு

1380437_358848394259341_1884775277_n.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்  பிள்ளாய்...........

தொடர்ந்து வாசித்து வருகின்றோம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிசா பிரமிடு வளாகம்

(Great Pyramid of Giza

 

பட்டியலில் ஒன்று மதிப்புமிக்கது என்னும் கவுரவ அந்தஸ்தை கொண்டது: கிசா பிரமிடு வளாகம்.(உலகின் பழைய அதிசயங்களில் எஞ்சியிருக்கும் இறுதியானது. கெய்ரோ, எகிப்து..

 

165620_178591258841364_4503213_n.jpg?oh=

 

 

 

 


நந்தி.....

தஞ்சைப் பெரிய கோவில் நந்தி 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 18.25 அடி அகலம் கொண்டதாகும். அதை ஒரே பாறை கொண்டு செதுக்கியுள்ளர்கள். அந்த பாறை 2500 எடை கொண்டதாக சொல்லப்படுகிறது.
அந்த பாறை பெரம்பலூர் அருகேயுள்ள பச்சைமலை என்னும் இடத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாக வரலாறு சொல்லுகிறது. வேறு சில அறிஞர்கள், வடக்கிலிருந்து நர்மதை நதி மூலம் கொண்டு வரப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

 

164756_178662165500940_2553843_n.jpg?oh=

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.