Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள். கார்த்திகை .27. 2014.

 

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், வழமைபோல் இந்த ஆண்டும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளான கார்த்திகை 27 வீர வணக்க நாளை ஒரே இடத்தில் நான்கு நிகழ்வுகளாக ஒன்றிணைந்த கனடியத் தமிழ் மக்களின் எழுச்சி மிக்க வருகையுடன் உணர்வுபூர்வமாக நடாத்தவுள்ளது.

 

மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம் செய்து தாயகக் கனவுடன் வீரச் சாவடைந்த எமது மாவீரர்கள் அனைவரையும் வணங்கும் கார்த்திகை 27 ஈழத் தமிழர்களின் உன்னதமான நாள் ஆகும். ஒன்றுபட்ட சக்தியாகக் கனடியத் தமிழர்கள் அனைவரும் மாவீரர்களை வணங்கும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், தேசியப் பற்றாளர்கள், தமிழ் ஆர்வலர்கள். தன்னார்வத் தொண்டர்கள். இன உணர்வாளர்கள், இளையோர், கட்டமைப்புக்கள் என்று கனடா வாழ் ஈழத் தமிழர்கள் அனைவரதும் முழுமையான செயற்பாட்டுத் திறனோடு கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் நடாத்தவுள்ளது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

 

நன்றி.

 

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்.

கனடா10734087_812974228765966_588062952358247

416-450-9661

 

 

  • Replies 3.9k
  • Views 331k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10469747_781612265211325_315191374215088

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை வந்தால்

அது கனவு.

இரு முறை வந்தால்

அது ஆசை.

பல முறை வந்தால்

அது இலட்சியம்.!!

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை முறை சண்டை போட்டாலும் தேடித்,தேடி வந்து பேசும் உறவு உலகத்தில் ஒரே, ஒருவர் தான் 'அம்மா.'

 

மலரும் காலைப் பொழுதோடு இன்றைய நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!!

 

247046_492937390849280_30774325297288408

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10689556_883043838375599_636454276859551

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும்

மறுப்பது உளநோய் மருந்தெனச் சாலும்

மறுப்பது இனிநோய் வாரா திருக்க

மறுப்பது சாவை மருந்தென லாமே- திருமுலர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

404424_330551510312004_481254488_n.jpg?o

 

 

சிதம்பரத்தின் ஐந்து சபைகள்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பஞ்ச சபைகள் உள்ளன.அவை முறையே

சிற்றம்பலம்,பொன்னம்பலம்,பேரம்பலம்,நிருத்தசபை,ராஜசபை என்று அளைக்கப்படுகிறது.

சிற்றம்பலம்:நடராஜர் ஆடுகின்ற இடமான சித்சபையை சிற்றம்பலம் என்பர்.இங்கு நடராஜர் ஆடும் நடனத்தை, அவரது தேவி சிவகாமி எப்போதும் கண்டு மகிழ்கிறாள். இதற்கு "தப்ர சபா" என்றும் பெயர் உண்டு. இச்சபைக்கு இரண்யவர்மன் என்னும் மன்னன் பொன் வேய்தான்.

இதில் உள்ள படிகளை "பஞ்சாட்சரப்படிகள்" (நமசிவாய படிகள்)என்பர்.

பொன்னம்பலம்: சிற்றம்பலத்திற்கு முன் உள்ளது பொன்னம்பலம் என்னும் கனகசபை. இங்கு தான் நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும்.இவ்விடத்தில் ஸ்படிகலிங்கத்திற்கு ஆறுகால பூஜையும்,ரத்தினசபாபதிக்கு அபிஷேகமும் நடக்கிறது.

பேரம்பலம்:பேரம்பலத்திற்கு தேவசபை என்று பெயருண்டு. வினாயகர், முருகன், நடராஜர், சிவகாமி,சண்டிகேஸ்வரர் என்னும் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருள்வர்.இச்சபைக்கு பொன் வேய்ந்தவன் மூன்றாம் குலோத்துங்கன்.

 

நிருத்தசபை:நிருத்தசபை நடராஜருக்குரிய கொடிமரத்தின் தெற்கே உள்ளது.இங்கு அவர் ஊர்த்துவதாண்டவ கோலத்தில் காட்சியளிக்கிறார்.

ராஜசபை: இங்குள்ள ஆயிரங்கால் மண்டபமே ராசசபை,ஆனி,மார்கழியில் நடக்கும் விழாவில் தேரில் பவனி வரும் நடராஜர்,ராசசபைக்கு எழுந்தருள்வது வளக்கம்.ஆருத்ராதரிசனம் இங்கு தான் நடக்கும்.சிவகாமியம்மன் முன்னால்,நடராஜர் முன்னும் பின்னும் நடனமாடி தரிசனம் தருவார். இதற்கு "அனுக்கிரக தரிசனம்" என்று அளைப்பர்.

அனைத்து பதிவுகளும்/தகவல்களும் அருமை!!! தொடருங்கள் யாயினி.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து பதிவுகளும்/தகவல்களும் அருமை!!! தொடருங்கள் யாயினி.....

 

வேலைப்ப பழுக்களுகுக்கு மத்தியிலும் இந்தப் பக்கத்தையும் புரட்டிச் செல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள்.ஏதோ என் அறிவுக்கு எட்டியவரையில் இந்தப் பக்கத்தை நன்கு பராமரிக்கிறன் என்று நினைக்கிறன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10698658_709548219099536_340436467628027

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் வானொலி புதியவருக்கு

November 5, 2014 - கனடா, பிரதான செய்திகள் - no comments

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் வானொலி ஒலிபரப்பிற்கான அனுமதி குறித்த முடிவு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

குமாரகுலசிங்கம் நடராஜா(கீதவாணி நடா ஆர் ராஜ்குமார்) 8041393 Canada Inc. என்ற நிறுவனத்தின் பெயரில் முன்வைத்த விண்ணப்பத்தை CRTC ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன் மூலம் புதிய தமிழ் வானொலியொன்று கனடாவில் FM அலைவரிசையூடாக ஒலிக்கவுள்ளது.

புதிய வானொலி 102.7 அலைவரிசையில் ஒலிபரப்பாகவுள்ளது.

CRTC இன்று வெளியிட்ட முடிவு

http://www.crtc.gc.ca/eng/archive/2014/2014-574.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்.......

 

 

1483215_585294801524879_1083370132_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

905851_756154064448909_45917516713110611

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனை மனிதனாக ஆக்குபவகை உதவிகளும், வசதிகளும் அல்ல....அவனுக்கு ஏற்படும் இடையுறுகளும்,துன்பங்களுமே ஆகும்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை அழகு!

 

10665694_498505350292484_632169843939981

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நட்பிற்கூட இன்பம் தரும் நட்பு, துன்பம் தரும் நட்பு என்ற வேறுபாடு உண்டு. உண்மையுடனும் நேர்மையுடனும் எதையும் பொறுமையுடன் ஆராய்ந்து பார்ப்பவராய் வாழ்பவர் நட்பு இன்பம் தரும்.

 

தாந்தோன்றித்தனமானவராய் நாவடக்கம் இல்லாது அகந்தையுடன் சுயநலமாக வாழ்பவர் நட்பு துன்பம் தரும். நட்புக்கொண்டால் அதிலிருந்து விடுபட முடியாது. தமது உயிரைக் கொடுத்து எம்மைக் காப்பாற்றும் நண்பர் அமைவது போல, நம் உயிரையே எடுக்கும் நண்பரும் கிடைக்கலாம்.

 

எனவே மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பார்த்து நட்புக்கொள்ள வேண்டும்,.இல்லையேல் நாம் இறந்து போகக்கூடிய துயரத்தை அது கொடுக்கும் என்பது வள்ளுவர் முடிவு.

"ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்சாம் துயரம் தரும்"

 

 

படித்ததிலிருந்து.......

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கேப்ரியல் ரோஸாட்டி என்ற புகழ்பெற்ற ஓவியரை சந்திக்க கூடிய ஒருவர் தான் வரைந்த ஓவியங்களுடன் வந்திருந்தார்.

முதியவரை வரவேற்று வந்த விசயத்தை கேட்டார் ரோஷாட்டி.

அந்த முதியவர் தாங்களை நேரில் காண ஆவல்கொண்டிருந்ததாகவும் , அதோடு தான் வரைந்த ஓவியங்களை உங்களிடம் காட்ட விரும்புகிறேன் என்றும் கூறி அவரது ஓவியங்களைக் காண்பித்தார்.

வாங்கி பார்த்த கேப்ரியாட்டிக்கு அவ்வளவா திருப்தி இல்லாத ஓவியங்கள் அவை. முழுமனதோடு பாராட்டாமல் பரவாயில்லை என்றார்.

முகம் சுறுங்கிப்போன அந்த முதியவர் மேலும் சில ஓவியக்களை காட்டினார் . வாங்கி பார்த்த கேப்ரியாட்டிக்கு மகிழ்ச்சி. அருமையான ஓவியங்கள் என்றார். இது உங்க பேரன் வரைந்ததா? என்று கேட்டார்.

அதற்கு அந்த முதியவர் இதுவும் நான் வரைந்தது தான் நாற்பது வருடங்களுக்கு முன்பு. அன்று இப்படி ஒருவர் பாராட்டியிருந்தால் இன்று நானும் உங்க அளவுக்கு பேரும் புகழும் பெற்று இருப்பேன் என்றாராம் அந்த முதியவர்.

ஒரு சின்ன பாராட்டு மிகப்பெரிய சாதனைக்கும் உந்து சக்தி ஆகும்.

ஊக்குவிப்பவர்கள் ஊக்குவித்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்! என்ற கவிஞர் வாலியின் கூற்று ஆகப்பெரிய உண்மை தானே ?
 
1908438_1003198586372273_682548698511818
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கங்களையும்

எதிர்பார்ப்புக்களையும்,

சுமக்கும் இதயத்திற்கு

தான் தெரியும் ஏமாற்றத்தின்,

வலி என்னவென்று...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம் இந்த நாளும் அனைவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்...ஊரின் நினைவுகளோடு தினம்,தினம் புலரும் காலைப் பொழுதுகள்.

 

1546390_498755796934106_6774612493077161

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10444402_782450558460829_353039798766718

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதுரை ஆயிரங்கால் மண்டபம்.

கொஞ்சம் நினைத்து பாருங்களேன் நம்மில் பலருக்கு பென்சில் வைத்து நேராக ஒரு கோடு கூட போட வராது.

நம் முன்னோர் எப்படி அந்தக்காலத்தில் எந்த நுண்ணிய அளவுகோலும் இல்லாமல் இவ்வளவு நேர்த்தியாக கட்டியிருப்பர்.

 

1924377_783260998378702_3059083994572220

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவறே செய்யாத

மனிதன் இல்லை,

தவறை

திருத்திக்கொள்ளாதவன்

மனிதன் இல்லை..!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

393425_293502330683589_768985044_n.jpg?o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பான காலை வணக்கங்கள்.

 

10689974_883995344947115_600120021321857

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.