Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கங்கள்...

 

 

17692_975140362505301_496789798164535962

  • Replies 3.9k
  • Views 330.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

World Turtle Day..

 

1280px-Chelonia_mydas_is_going_for_the_a

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11350455_922661171128064_342289636442325

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வெள்ளையாக தெரிவது தான் ஒட்டகம் .. கறுப்பாக இருப்பது அதன் நிழல் தான்... 

Best picture award வாங்கிய ஒரு புகைப்படம் ...

 

10845827_935066673192870_481548012783274

 

பார்த்த,படித்த இடங்ககளில் இருந்து காவிட்டு வருவது..

 

வித்தியாசமான கோணத்தில் எடுக்கப் பட்ட, அழகிய படம். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10923555_700830966697322_186322227862467

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கங்கள்...

 

 

 

11026812_116429068688541_564159372247925

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கங்கள்

இன்றய நாள் அனைவருக்கும்

இனிமை மிகுந்த நன்நாளாக 

அமைய உளமார்ந்த வாழ்த்துக்கள்! 

 

886088_116990815299033_57101853500530671

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10986631_116993545298760_828692774420346

 

 

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் - International Missing Children's Day

காணாமல் போகும் குழந்தை களுக்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 25ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

உங்கள் குழந்தைகள் எங்களதும் இந்த உலகத்தினதும் எதிர்காலத்தின் சொத்துக்கள்.

அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எம் அனைவரதும் கடமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பறவைகள் விதவிதம்!

 

 

 

Flamingos_Laguna_Colorada.jpg

 

 

ப ழவேற்காடு 15 ஆயிரம் ஹெக்டர்களுக்குமேல் பரப்பு அளவு கொண்டது. இங்கே பதினான்கு வகைக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வலசைக்கு வருகின்றன.

p4.jpg

ரோஜா நிறத்தில் காணப்படும் ஃப்ளமிங்கோ பறவை, நீண்ட கழுத்து மற்றும் காலுடன் நான்கு அடி உயரத்திற்கு வளர்ந்திருக்கும். எப்போதும் தண்ணீரில் தலையை மூழ்க வைத்திருக்கும். மீனைப் பிடித்து சுத்தம் செய்து சாப்பிடும். ஒரு பறவையிடம் தப்பித்து நழுவிவிட்ட மீனை அடுத்த பறவை பிடிக்கும். சேற்றைக் குழைத்து கோபுரம் போல் ஆக்கி அதையே தன் கூடாகப் பயன்படுத்தும்.

லிட்டில் ஈக்ரெட் என்று அழைக்கப்படும் வெண் கொக்குகள் தலையில் வெள்ளை நிறத்தில் குஞ்சம் போலக் காணப்படும்.

p4a.jpg

நைட் ஹெரான், இரவில் இரைதேடச் சென்றுவிட்டு பகலில் தூங்கும் வழக்கம் கொண்டது.

லார்ஜ் ஈக்ரெட்டிற்கு அலகு மஞ்சள் நிறத்திலும் பாதம் கருப்பு நிறத்திலும் காணப்படும்.

ஒயிட் பெல்லீட் சீ ஈகிள் என்கிற பறவை ‘ஆலா’ வகையைச் சேர்ந்தது. மீன்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் இந்தக் கழுகுகள் வானில் வட்டம் இட்டபடி இருக்கும். இந்தப் பறவை ஆண்டுக்கு இரண்டு முட்டைகள்தான் இடும்.

கல்ஸ் பறவை எப்போதும் படகுகள் கரை ஒதுங்கும் இடங்களில் இருக்கும். இதற்கு துப்புரவு பறவை என்றும் ஒரு பெயர் உண்டு.

p4b.jpg

ரிவர் டேர்ன் என்ற பறவை, எப்போதும் ஆறு, கடல் போன்றவற்றில் செல்லும் படகு, கப்பல் மேல் பறக்கும். படகில் மோதும் மீன்களைச் சாப்பிடும்.

கிரே ஹெட்டட் கல் பறவையின் தலை கோடை காலத்டில் காப்பி நிறத்தில் இருக்கும். மழைக் காலத்தில் வெண்மையாக மாறிவிடும்.

p5.jpg

தஞ்சையில் இருக்கும் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வடுவூர் பறவைகள் சரணாலயம்.

வானவில்லின் நிறங்களை அள்ளித் தெளித்தது போன்ற விதவிதமான பறவைகள் இங்கு வருகின்றன. நாமக்கோழிகள் என்கிற பறவைகள் நூற்றுக்கணக்கில் ஒரே இடத்தில் கூடி இரை தேடுவது பார்க்க சுகமான காட்சி. வித்தியாசமான கலர் பறவைகள், நீர்க்காகம் இதையெல்லாம் பாத்து ரசிக்கவே இங்கே பலர் வருகிறார்கள்.

வேட்டங்குடி சரணாலயம், 1977-லிருந்து செயல்பட்டு வருகிறது.

p5a.jpg

இங்கே உள்ள பறவைகளின் எண்ணிக்கை 29,000 முதல் 30,000 வரை.

இங்கே நான்கு வகையான வெளிநாட்டுப் பறைவகள் மட்டுமே உள்ளன. இவை செப்டம்பர் முதல் மார்ச் வரை வேட்டங்குடியில் தங்கும். சரணாலயத்தின் மொத்த அளவு 38 ஹெக்டெர்.

வெள்ளை அரிவாள் மூக்கன் எட்டு முட்டைகள் இடும். ஆனால் அவை அளவில் சிறியவை.

p5b.jpg

நத்தை கொத்தி நாரை ஆறு முட்டைகளே இடும். ஆனால் அவை அளவில் பெரியவை.

பொதுவாகவே பறவைகளுக்கு பார்வைத் திறனும், கேட்கும் திறனும் மிக அதிகம். சுவை உணர்வும், வாசனையும் சிறிதும் கிடையாது.

 

கட்டுரை: சி.திலகவதி, வ.குணசீலன், ம.விஜயகாந்த்

படங்கள்: நந்தினி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாட்டை வீணாக்காதீங்க...ஆச்சி...மனோரமா!

 

11295925_973863915986707_243753976250724

 

ஒரு வீட்டில் சுமார் இரண்டு மாதம் வேலை செய்திருப்பேன். ஒருநாள் என் அம்மா நான் வேலை செய்து கொண்டிருந்த வீட்டு வேலையை வேண்டாம் என்று கூறிவிட்டு என்னைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார்.

நானோ, எனக்கு மேல் உயரமான அண்டா குண்டா பாத்திரங்களை உருட்டித் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தேன். ஏராளமான பாத்திரங்களுக்கு மத்தியில் மிகவும் அவலமான நிலையில் பார்த்த அம்மா, கண்ணீர் விட்டுப் புலம்பத் தொடங்கியதுடன், என்னை வேலையில் சேர்த்துவிட்ட அம்மாவைக் கண்டுபிடித்து சண்டை போட்டு, உடனே என் பிள்ளையைக் கூட்டி வா என்று துரத்தியிருக்கிறார்.

அந்த அம்மாள் வந்து “உன்னோட பாட்டி செத்துப் போனதா தந்தி வந்திருக்குடி, உன் ஆத்தா அழுதுக்கிட்டு இருக்கு உன்னைக் கூட்டியாரச் சொன்னா வாடி” என்று சொல்லி கூட்டிப் போய் என் அம்மாவிடம் விட்டு விட்டார்.

இப்போது எனக்கும் வேலை இல்லை. என் அம்மாவுக்கும் வேலை இல்லை. மீண்டும் வந்தது சாப்பாட்டுக் கவலை.

அன்று நான் சாப்பாட்டிற்காக பட்ட கஷ்டங்களின் விளைவு இன்று நான் சாப்பிட்டு எழும்போது எனது தட்டில் அல்லது இலையில் ஒரு பருக்கையோ காய்கறிகளோ வீணாக இருக்காது. இந்தப் பழக்கத்திற்கு மற்றோர் நிகழ்ச்சியையும் காரணமாகக் கூறலாம்.

ஒருமுறை ஏ.வி.எம்.மின் ‘நானும் ஒரு பெண்’ படத்தின் வெற்றியையொட்டி ஏவி. மெய்யப்ப செட்டியார் எங்களுக்கெல்லாம் ஒரு விருந்து கொடுத்தார்.

சாப்பாட்டின் போது ஏ.வி.எம். செட்டியார் என் கண் பார்வை படும் இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டார். தனக்கு வேண்டியதை தேவையான அளவு கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார். அவர் சாப்பிட்டு முடிந்து எழுந்த போது அவர் சாப்பிட்ட இலை அப்போதுதான் புதிதாக போடப்பட்டது போல் இருந்ததே தவிர ஒருவர் சாப்பிட்ட இலை அது என்ற அடையாளமே தெரியவில்லை.

அந்த அளவிற்கு எந்தப் பொருளையும் வீணாக்காமல் விரயம் செய்யாமல் சாப்பிட்டிருந்தார்.

எவ்வளவு பெரிய கோடீஸ்வரர். அவர் நினைத்தால் நாளொன்றுக்கு ஒரு ஓட்டலையே விரயம் செய்யக்கூடிய சக்தி படைத்தவர். எவ்வளவு பக்குவமாகச் சாப்பிட்டிருக்கிறார். என்பதைக் கண்டபோது நான் அசந்துவிட்டேன்.

இந்த நிகழ்ச்சியும் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. சாப்பாட்டில் என்னை மிக கச்சிதமாக ஒழுங்குபடுத்திக் கொள்ளச் செய்த நிகழ்ச்சி அது!

இது மட்டுமில்லை எந்த இடத்தில் எது கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டு மனத்திருப்தி அடைந்துவிடும் பக்கவமும் எனக்குண்டு.

தாயும் மகளும் வேலையை விட்டு விட்டோம். இனி என்ன செய்வது?

மறுபடியும் அம்மா பலகாரக்கடையை ஆரம்பிக்கலாம் என்றால் மீண்டும் ரத்தப் போக்கு நோய் வந்துவிட்டால் என்ன செய்வது?

ஆணிவேர் இல்லாத மரமாக அல்லாடிக் கொண்டிருந்தோம். ஆனாலும் வழக்கம்போல் ஊரார் வீடுகளில் மங்கள நிகழ்ச்சிகளில் எனது இலவச பாட்டுக்கச்சேரி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் எங்கள் ஊருக்கு அண்மையில் உள்ள கோட்டையூரில் ‘ஏகாதசி’ நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்றை தினம் இரவு அந்த ஊரின் செட்டியார்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘அந்தமான் காதலி’ என்ற நாடகத்தை நடத்தினார்கள்.

அந்த நாடகத்தில் பெண் வேடம் போட்டவருக்குப் பாட வராது. அதனால் அவருக்காகப் பாடவும் நாடகத்தில் இடையிடையே நடனமாடவும் ஒரு பெண்ணைத் தேடியிருக்கிறார்கள். அப்போது “யாரோ” என்னைப்பற்றி சொல்ல என்னை வந்து அழைத்து போனார்கள். என்னுடைய கலை உலகப் பயணம் இங்கே இருந்து தான் ஆரம்பமானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாக்ரடீஸ்...

 

“கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீஸின் சிறப்பு பகிர்வு...

 

சாக்ரடீஸ்-பள்ளி போய் படிக்காத, குளிக்க ஆர்வமே இல்லாத, அழுக்காடை அணிந்த வெண்மையான சிந்தனைக்காரர் அவர் .இளைஞர்களை சிந்திக்க சொல்லித்தூண்டினார் . மதம், கடவுள், அரசு, நம்பிக்கைகள் எல்லாவற்றையும் மனித சிந்தனையின் ஆய்வுக்குரியவை என்றார் .எல்லாவற்றின் புனிதத்தையும் கேள்வி கேட்க சொன்னார் .

ஒருவருடன் பேசும் பொழுது வாதத்தை கேள்விகள் மூலம் எழுப்பி உண்மையை உணரும் முறையை உருவாக்கினார் ;இளைஞர்கள் அவர் இருக்கும் இடம் தேடி கூட்டம் கூட்டமாக போனார்கள் .உன்னையே நீ அறிவாய் என பகுத்தறிவை வலியுறுத்தினார் .டெல்பி ஆலய அசரீரி நாட்டிலேயே அறிவாளி யார் என்கிற கேள்விக்கு சாக்ரடீஸ் என பதில் சொன்னதும்,அதற்கு இவர் ,"எனக்கு எதுவுமே தெரியாது என்று எனக்கு தெளிவாக தெரியும் அதுவே காரணமாக இருக்கலாம் "என்றார் .

தெருவின் ஊடாக பல கடைகள் வழியாக போனார் ;எதிலும் எதையும் வாங்கவில்லை ."ஏன் "எனக்கேட்டதற்கு ,"எத்தனை பொருட்கள் இல்லாமல் நிறைவான வாழ்வு வாழமுடிகிறது என சோதித்து பார்த்தேன் ."என்றார் .அவரின் பேச்சுக்களை பிளாட்டோ முதலிய சீடர்கள் தொகுத்தார்கள் .

அரசாங்க விருந்தில் ஒரு பிரமுகருக்காக சாக்ரடீஸ் வெகுநேரம் காத்திருந்தார் .அவர் வருகிற மாதிரி தெரியவில்லை ;கிளம்ப எத்தனித்தார் அவர் .,நண்பரோ ,"அவர் கோவித்துக்கொள்வார் .அரசாங்க பகை வேண்டாம் ."என்றதும் ,"அரசாங்கம் என்னை கைது செய்ய முடிவு செய்துவிட்டால் தானே காரணங்களை கண்டுபிடித்து கொள்ளும் ."என்றுவிட்டு வெளியேறினார் .மதநம்பிக்கையை கேலி செய்கிறார் ,இளைஞர்களை தவறான பாதைக்கு தூண்டுகிறார் என இவர் மீது அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும்,லைகோன் எனும் மேடைப் பேச்சாளனும் வழக்கு தொடுத்தனர் .

வழக்கின் பொழுது மக்களை சிந்திக்க தூண்டியது தவறு என நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ;கடவுளை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் நாத்திகம் ;ஆராய்ச்சிக்கு உட்படுத்தி பார்ப்பது அன்று என வாதிட்ட சாக்ரடீஸ் மன்னிப்பு கேட்டால் விடுதலை தருவதாக சொன்னார்கள் .கம்பீரமாக மறுத்தார். .மரண தண்டனைக்கு ஆதரவாக 281 ஓட்டும்,எதிராக 220 ஓட்டும் விழுந்தன .சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார். தப்பித்து போக நண்பர்கள் ஏற்பாடு செய்ய முற்பட்ட பொழுது ,"எனக்கும் அரசாங்கத்துக்கும் ஒரு சமூக ஒப்பந்தம் உண்டு. அந்த அமைப்புக்குள் இருந்து கொண்டு தான் நான் கேள்வி கேட்பேன். அதை மீறி சென்று நான் தவறான எடுத்துக்காட்டு ஆகமாட்டேன் !" என்றார் அவர்.

.ஹெம்லாக் மரத்து விஷம் குடித்து சாக வேண்டும் என்று தீர்ப்பு சொல்லப்பட்டு இருந்தது. .சிறையில் இசைக்கருவி வல்லுநர் ஒருவரிடம் இசை கற்றுக்கொண்டார் அவர் .சாகிற பொழுத எதற்கு இது ?என கேட்டதற்கு ,"சாவதற்கு முன் புதிதாக எதையாவது கற்க வேண்டும் !"என்றார் .

விஷம் கொடுக்கப்பட்டதும் ,வாங்கி சிரித்துக்கொண்டே அதை பதிவாக எழுத சொன்னார் ."அருந்திவிட்டேன் ;கால்கள் மரத்து போகிறது .இதயம் படபடக்கிறது .மயக்கமாக இருக்கிறது ;போர்வையை போர்த்தி படுத்துக்கொள்கிறேன் "என தன் மரணத்தை பதிவு செய்த முதல் ஆள் சாக்ரடீஸ் தான் .சாவதற்கு கொஞ்சம் முன்," எதிர்வீட்டுகாரனுக்கு கோழிக்குஞ்சு கடன் ,மறக்காமல் கொடுத்து விடு !"என மனைவியிடம் சொல்லி சாகும் பொழுது கூட கடன்காரனாக சாக விரும்பாமல் கம்பீரமாக இறந்த அவருக்கு கடன்பட்டிருக்கிறது இச்சமூகம்

- பூ.கொ.சரவணன்..

11074173_118032061861575_916055115758004
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

yarl-library.jpg

 

:rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும்,

மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,

இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும்

உண்ண வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் International Day of United Nations Peacekeepers எனப்படுவது ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு சாராரையும் கௌரவப்படுத்துவதற்கும், சமாதானத்திற்கான இந்நடவடிக்கைகளின்போது உயிர் நீத்தவர்களை ஞாபகமூட்டுவதற்காகவும் 2001ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை பிரகடனப்படுத்திய தினமாகும். இத்தினம் மே 29ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது.

 

11064787_118807711784010_835006953923357

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"எட்டாத் தண்ணீரல்லவா-அது

கசக்கும்!"

 

10336710_119071081757673_796540557685839

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10498368_122077358123712_133032421743370

11110870_122077404790374_297602552755197

 

 

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வு ஆகும். இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.

நோக்கம்

சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.

நீதியான, தாங்குநிலை சார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதில் மக்கள் தங்கள் நேரடியான பங்களிப்பைச் செலுத்துவதற்கு அவர்களை ஊக்குவித்தல், சூழல் தொடர்பான விடயங்களில், மக்களுடைய மனப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டிய பொறுப்பு சமுதாயங்களுக்கு உண்டு என்ற புரிந்துணர்வை உருவாக்குதல், பாதுகாப்பானதும், வளமுள்ளதுமான எதிர்காலத்தை பல்வேறு நாடுகளிலும் வாழுகின்ற மக்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காகக் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளை இந்த நிகழ்வுகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன் சிவகுமாரன் நினைவு நாள் இன்று...

பொன்னுத்துரை சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 - ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.

 

Sivakumar.jpg

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10931025_1110899638927431_76832163248356

 

 

தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வரலாறு ........!

தாமஸ் ஆல்வா எடிசன் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்பு களுக்கு காப்புரிமை பெற்றார். ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, அதற்கான பாராட்டுகளைப் பெற அவர் அங்கே இருக்கமாட்டார். அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சிக் கூடத்துக்குள் போயிருப்பார். இதுபற்றி கேட்டால், ‘நேற்றைய கண்டு பிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்பார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் அல்ல. எடிசனின் வாழ்கையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இக்கட்டுரையில் காணலாம்.

தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்க மர வியாபாரி. தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் எழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார்.

சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க் கப்பட்டார். பள்ளியில் அவர் மந்தமாக இருந்ததால் படிப்பு ஏறவில்லை. ஆசிரியர் திட்டியதால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார்.

பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் 10 சென்ட் அளித்து உற்சாகப்படுத்தினார். ரிச்சர்ட் பார்க்கர், தாமஸ் பைன், சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்கள் உட்பட ஏராளமான புத்தகங் களை 11 வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார் எடிசன்.

அவருக்கு இயற்கையிலேயே எதைப் பார்த்தாலும் ஏன்? எப்படி? என்று கேள்வி கேட்பதோடு ஆராய்ச்சி செய்து பார்க்கும் துறுதுறுப்பு அவரிடம் இருந்தது. ஒருமுறை கோழி அடைகாத்து குஞ்சு பொறிப்பதை பார்த்து தானும் முட்டைகள் மேல் அமர்ந்து குஞ்சு பிறக்குமா? என்று முயன்று பார்த்திருக்கிறார் எடிசன். நமக்கு நகைப்பாக இருக்கலாம். ஆனால் பிஞ்சு வயதிலேயே கேள்வி கேட்கும் அவரின் செயல்பாடுகள்தான் பிற்காலத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்த அவருக்கு உதவியது.

ஆரம்பித்திலேயே எடிசன் பள்ளியைவிட்டு வெளியேறியதால் அவர் இரயில் வண்டியில் தந்தி இயக்குபவராக வேலை பார்க்கத்தொடங்கினார். அங்கும்கூட அவர் ஒரு ரயில்பெட்டியில் ஒரு சிறு அச்சு இயந்திரத்தை பெட்டியையே அச்சகமாக மாற்றி ‘வீக்லி ஹெரால்டு’ வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார். மேலும் இரயில் வண்டியின் ஒரு சிறிய ஆராய்ட்சி கூடத்தை உருவாக்கி நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெவ்வேறு ஆராய்ட்சிகளை செய்துபார்ப்பார்.

ஒருமுறை இரயில் குலுங்கி நின்றபோது அவரது ஆய்வுகூடத்தில் இருந்த பாஸ்பரஸ் கீழே கொட்டி இரயில்பெட்டி தீப்பிடித்துக்கொண்டது. ஆத்திரமடைந்த இரயில் அதிகாரி எடிசனின் அச்சு இயந்திரத்தையும், ஆய்வுகூடப் பொருட்களையும் வீசி எறிந்ததோடு, எடிசனின் கன்னத்தில் தன் பலம் கொண்ட மட்டும் ஓங்கி அறைந்தார். அந்த அடியின் தாக்கத்தால் எடிசனுக்கு வாழ்நாள் முழுவதும் ஒருபக்கம் காதுகேளாமல் போனது என்பது வரலாற்று உண்மை.

அந்த அதிகாரியால் எடிசனின் உடலில் மட்டும்தான் காயம் விளைவிக்க முடிந்ததே தவிர அவரின் உள்ளத்தையும் வைராக்கியத்தையும் துளிகூட அசைக்க முடியவில்லை. அந்த விபத்து நிகழ்ந்த அதே இரயில் நிலையத்தில் ஒரு சிறுவன் தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனை நோக்கி ஒரு ரயில்வண்டி விரைவதைக்கண்ட எடிசன் தான் கையிலிருந்த செய்தித்தாள்களை தூக்கி எறிந்துவிட்டு ஓடிப்போய் தகுந்த நேரத்தில் அந்த சிறுவனைக் காப்பாற்றினார்.

அந்த ரயில் நிலையத்தின் தலைமை அதிகாரியான அச்சிறுவனின் தந்தை மகிழ்ந்துபோய் எடிசனுக்கு நன்றி சொன்னதோடு அவருக்கு தந்தி அனுப்பும் முறையை கற்றுக்கொடுத்தார். அதனை விரைவாக கற்றுக்கொண்ட எடிசன் தந்தி அனுப்பும் வேலைக்கு மாறினார். அந்த வேலையில் சேர்ந்தபிறகுதான் அவர் ஒவ்வொரு கண்டுபிடிப்பாக நிகழ்த்த தொடங்கினார்.

எடிசன் இரவு நேரங்களில் இரயில் அதிகாரிகள் ஒவ்வொரு மணி நேரமும் சமிக்ஞை அனுப்ப வேண்டிய அவசியம் இருந்த்து. அதனை ஏன் தானியக்க மயமாக்ககூடாது என்று சிந்தித்த எடிசன் அந்த முறையை கண்டுபிடித்தார். பின்னர் ஒரு முறை ரயில் நிலையத்தில் இருந்தபோது அங்கு எலித்தொல்லை அதிகமாய் இருப்பதை பார்த்தார். உடனே எலிகளை செயலிழக்க செய்யும் கருவியை கண்டுபிடித்தார். இப்படி பார்வையில் பட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் அவர் தீர்வு காணத்தொடங்கினார்.

1877 இல் எதிர்பாரதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, தொழில்நுட்ப முன்னோடிச் சாதனம், ஒலிவரைவி (கிராமஃபோன்) ஆகும்.

பிரான்சு நாட்டைச் சேர்ந்த லியான் ஸ்காட் 'ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும்' என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதியிருந்தார்.

அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு (Phonography) எனப்பட்டது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச்சுவடுகள் பாரபின் தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், கிறுக்கப் பட்டு நுணுக்கமாகத் தாளில் வரையப்பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது!

ஒலிக்கான சாதனத்தை உருவாக்கியபிறகு அவரது கவணம் ஒளியின் பக்கம் திரும்பியது. எடிசனின் மின்விளக்கு குறித்த ஆய்வுகளுக்கு, 'எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை' துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக 30,000 டாலர் தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக அறிவியல் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் (Francis Upton) எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் எடிசனுக்குக் கிடைத்தது. மின்விளக்குகளைப்பற்றி ஆராயத் தொடங்கினார் ஒரே மின்னலையில் பல விளக்குகளை ஒளிரச் செய்ய முடியுமா? என எடிசன் சிந்தித்தார். நிச்சயம் முடியாது என்று அடித்துக்கூறினர் சமகால விஞ்ஞானிகள்.

ஆனால் முடியாது என்ற சொல்லையே தனது அகராதியிலிருந்து அகற்றியிருந்த எடிசனுக்கு அது தீர்க்ககூடிய சவாலாகவேபட்டது. அவரும் அவரது 50 உதவியாளர்களும் பணியில் இறங்கினர். எடிசனுக்கு தேவைப்பட்டது மின்சக்தியின் தாக்கத்தை தாங்ககூடிய அதே நேரத்தில் சுற்றளவு குறைவாக உள்ள ஒளிரும் ஒரு பொருள் அதாவது விளக்குகளின் உட்பகுதியில் உள்ள ஃபிளமெண்ட். பல்வேறு கனிமங்களை கொண்டு கிட்டதட்ட 1500 சோதனைகளை செய்துபார்த்தார் எடிசன்.

அதன்மூலம் மின் விளக்குகளைப்பற்றி ஒன்றல்ல இரண்டல்ல சுமார் மூவாயிரம் கோட்பாடுகளை வகுத்தார். அவற்றுள் ஒரே ஒரு கோட்பாடுதான் அவர் தேடிய விடையைத் தரக்கூடியாதாக இருந்த்து. ஒரு நூலிழையில் கார்பன் சேர்த்து ஐந்து மணிநேரம் தீயில் சூடுகாட்டி பின்னர் குளிரவைத்தார். அந்த கார்பன் இழையை காற்று அடைப்பட்ட ஒரு கண்ணாடிக்குள் வைத்து அதனுள் மின்சாரம் பாய்ச்சிபார்ப்பதுதான் எடிசனின் நோக்கம்.

அந்த கார்பன் இழை மிகவும் மெல்லியதாக இருந்ததால் பலமுறை ஒடிந்துபோனது. ஆனால் ஒடியவில்லை எடிசனின் தன்னம்பிக்கை. பலமுறை முயன்று கடைசியாக 1879 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள் அந்த கார்பன் இழையை ஒடியாமல் கண்ணாடிக்குள் வைத்து மின் விசையை அழுத்தினார். மின் விளக்கு எறிந்தது. சமகால விஞ்ஞானிகளின் கூற்று சரிந்தது. எடிசனின் அதீத திறமை உலகுக்கு புரிந்தது.

கிராம போன் ஒலித்தட்டு ஆய்வில் வெற்றி பெற்ற எடிசன் அடுத்து, 1880 களில் திரைப்பட படப்பிடிப்புக் கருவி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எடிசன் நகரும் திரைப்பட படப்பிடிப்புக் கருவியை உருவாக்க, அதுவரை வெளிவந்த ஆய்வு முயற்சிகளையும், தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார்.

இந்த எண்ணம் எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது, 'கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் 'நகரும் படம் 'மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை திரைப்பட படப்பிடிப்புக் கருவியுடன் இணைத்துப் 'பேசும் படம்' என்னால் தயாரிக்க முடியும் '

முதல் நகரும் படம் வெளிவரப் உதவியாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் என்பவராவார். 1888 இல் எடிசன் முதலில் படைத்த திரைப்பட படப்பிடிப்புக் கருவி கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் என்பவர் ஒருவிதப் பதிவு நாடாவைப் பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் படப்பிடிப்புக் கருவியை விரிவாக்கி, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த திரைப்பட படப்பிடிப்புக் கருவியை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார்.

தன்பிறகு டைனோமோ, பல்வேறு அளக்கும் கருவிகள், எக்ஸ்ரே படங்களை பார்க்க உதவும் கருவிகள் என அவரது கண்டுபிடிப்புகள் தொய்வின்றி தொடர்ந்தன.

எடிசன் 84 வயதில் மறைந்தார். அவரது உடலை அடக்கம் செய்யும்போது, அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் உத்தரவின் பேரில், அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன.

தாமஸ் ஆல்வா எடிசன் தமிழ் பொன்மொழிகள்

திருப்தியின்மை, ஏக்கம் ஆகிய இரண்டும் வளர்ச்சிக்கு அவசியமானவை.

நான் தோல்வியுறவில்லை; மாறாக நான் கண்டுபிடித்த 10,000 வழிமுறைகளில் எதுவும் சரியில்லை.

வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை - இம்மூன்றும் இருந்தால் போதும்.

கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்காமல் கடினமாக உழைத்ததால்தான் என்னால் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது.

மதிநுட்பம் என்பது 1 விழுக்காடு ஊக்கம் 99 விழுக்காடு வியர்வை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மாணவர் எழுச்சி நாள் ஆண்டு தோறும் ஜூன் 6 ஆம் நாள் தமிழீழம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே மாய்த்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் பொன். சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாணவர் எழுச்சி நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

சிவகுமாரனின் நினைவு நாளாகிய ஜூன் 5 இல் உலக சூழல் நாள் வருவதால் அதற்கு மதிப்பளித்து ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.

 

 

11428061_122613578070090_198338709049365

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர்க்களத்தில் ஒருவர் புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தார்.ஒருநாள் அந்த நபரைப் பார்த்த ஒரு பெண்மணி கேட்டார், ‘ஏன் எல்லோரும் ஓய்வெடுத்து உறங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் நீ மட்டும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று.

அதற்கு அந்த நபர் சொன்னார், ‘இன்று சிப்பாயாக பணிபுரியும் நான் இந்தப் படைக்கு ஒருநாள் தலைவனாக ஆக வேண்டுமென்று’.
அப்படித் தன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நபர் பின்னாளில் அந்தப் படைக்கு மட்டுமல்ல, அந்த நாட்டுக்கே மன்னன் ஆனார்.
அவர் வேறு யாருமில்லை பிரான்ஸ் நாட்டையாண்ட மாவீரன் நெப்போலியன் தான்.

 

11249406_122602441404537_407624739574579

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகு...

 

11427880_122788648052583_64487811835266911391428_122788711385910_82498776896577211401223_122788814719233_61771306654133911063817_122788881385893_701742053406673

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை தெரியாதவர்கள் யாராச்சும் எப்படி இருப்பீங்கள் என்று கேட்டால் இந்த ஆச்சியை ( பரவை முனியம்மா) போல் இருப்பேன் என்று சொல்லி  கொள்வது வழமை....சில இடங்களில் இவரின் பேட்டி கேட்டு இருக்கிறன்.அதன் பின் இந்த ஆச்சியில் நிறைய பிடிப்பு ..

 

 

10462454_872939579467476_531652580072451

 

 

திரும்பி பார்க்க...

பரவை முனியம்மா என்ற துணை நடிகை தூள் படத்தின் மூலம் அறிமுகமாகி,சினிமாத்துறையில் அவரது பாடல்கள் ஒளிபரப்பாகி நல்ல நிலையில் இருந்தார்.75 படங்களில் நடித்தும் இருக்கிறார்.பல மேடைக் கச்சேரிகளில் இவரது பாடல்கள் ஒலிக்காத இடங்களே இல்லை என சொல்லலாம்.வெளிநாடுகளுக்குச் சென்று கூட பாடியிருக்கிறார்.கடைசியாக மான்கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் கூட ஒரு பாடல் காட்சியில் தோன்றினார்.அதன்பிறகு காணாமல் போன பரவை முனியம்மா என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்த எனக்கு ஒரு வார இதழில் அவரின் தற்போதைய நிலமையைக் கண்டு மிக வருத்தமாக இருந்தது....

பரவை முனியம்மா தற்போது குரல் உடைந்துபோய் பாட முடியாமல்,தைராய்டு மூட்டுவலி,என பல உடல் உபாதைகளால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்.அதனால் கச்சேரி,பட வாய்ப்புகள் இல்லாமல் மிகவும் கஷ்டமான சூழலில் சில குழந்தைகள் பெற்றாலும்,ஒரே ஒரு மகளின் வீட்டில் மருமகனின் கரிசனத்தோடு மருத்துவச் செலவிற்கே பணம் செலவளிக்க வழியில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பது தான் மிகவும் கொடுமை.அவரது கணவர் இறந்த சோகம் ஒருபுறமும், நடிப்பையும்,பாட்டையும் நம்பியே வாழ்ந்துகொண்டிருந்த இவருக்கு,இப்போது நடிக்க முடியாமல் தன் குரலும் உடைந்துபோய்விட்டதால்,தன்னால் பேசக்கூட முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டோமே என்றக் கவலை பரவை முனியம்மாவிற்கு பெருத்த சோகமாக குடிகொண்டு இருக்கிறது.பலருடன் நடித்த பறவை முனியம்மாவிற்கு விவேக்,சிவகார்த்திகேயன்,சந்தானம் உள்ளிட்டவர்கள் கூட உதவி செய்ய முன்வரவில்லை என்பது மட்டுமல்ல,தன்னை சந்திக்கக்கூட செல்லவில்லை என்பது தான் சினிமாத்துறை ஒருபுறம் நல்லநிலையிலும்,ஒருபுறம் மிகவும் மோசமான நிலையிலும் இருப்பதை காட்டுகிறது.

விதவை பென்சனாவது தனக்குக் கிடைத்தால் மருத்துவ உதவிக்கு வசதியாக இருக்கும் ஆனால் அதுகூட தனக்கு கிடைக்கவில்லை என்கிறார்.நடிக சங்கங்கள் இவரைப்போன்றோருக்கு உதவி செய்ய வேண்டும்,துணை,இணையாக நடிக்கும்,நடிகர்,நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் கொட்டி கொடுக்காவிட்டாலும்,நடிப்பவர்களுக்கு தகுந்த அளவில் சம்பளப்பணத்தை அதிகரிக்கச் செய்யலாம்.இல்லை வாழ்நாள் முழுதும் கஷ்டப்படாமல் இருக்க நடிக சங்ககளில் இருந்து பென்ஷன் போன்ற ஏதாவது திட்டங்கள் கொண்டுவரலாம்..பறவை முனியம்மாவைப் போல் எத்தனை பேர் நடிப்பை நம்பி,சம்பளம் குறைவாகப்பெற்று,நடிக்க வாய்ப்பில்லாதபோது,தங்கள் கடைசி காலங்களில் சாப்பிடக்கூட வசதியில்லாமல்,கஷ்டப்பட்டு கண்ணீர் விட்டுக்கொண்டுருக்கிறார்கள் என்பதற்கு பறவைமுனியம்மாவின் வாழ்க்கை ஒரு உதாரணம்..

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Very cool!!

 

11350410_478182075668275_169349445311613

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குப்பைவாளிக்கும் குஞ்சரம் வைச்ச பாவாடை கட்டி அழகு பார்க்கிறது அதன் நிழல். ஒஸ்லோவில் உள்ள மிகப் பழமையான ஆர்கிஸ்ஹுஸ் பெஸ்ட்னிங் கோட்டையின் சுற்றுப்புறத்தை அழகாக சுத்தமாக வைத்திருகிறது இந்த குப்பைவாளி ! 

 

11412002_10206453321113034_1285768871659

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்ததில் பிடித்தது ....

வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா ? என்று.

ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான்.

ஆசிரியர் : அப்படியெனில், சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?

மாணவன் அமைதி காக்கிறான்.

சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான்.

ஆசிரியர் அனுமதிக்கிறார்.

மாணவன் : 'குளிர்நிலை' என்று ஏதேனும் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது.நீ குளிரை உணர்ந்தது இல்லையா?

மாணவன்: மன்னிக்கவும்.தங்கள் பதில் தவறு.குளிர் என்ற ஒன்று இல்லை.அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம்.

இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர் : ஆம், இருக்கிறது.

மாணவன் : மன்னிக்கவும்.மீண்டும் தவறு.இருள் என்ற ஒன்று இல்லை.ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம்.

உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம்.குளிரையும் இருளையும் அல்ல.

அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை.

உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின் , நம்பிக்கையின் பாற்றாக்குறை.

அந்த மாணவன் வேறு யாருமில்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

# ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய 'God Vs Science' புத்தகத்திலிருந்து...!!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.