Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1380651_670352396311412_1850110117_n.jpg

அக்டோபர் 01 ⇨ சர்வதேச முதியோர் தினம்

சர்வதேச முதியோர் தினம், ஐ.நா சபையின் ஆதரவில் அக்டோபர் 01ம் நாளில் 1991ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1990 டிசம்பர் 14ம் திகதிய ஐ. நா பொதுச்சபைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முதியோரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும், அவர்களை கௌரவப்படுத்தி மதிக்க வேண்டிய அவசியத்தையும் இத்தினம் சிறப்பிக்கின்றது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல்களின் பிரகாரம், உலகளாவியரீதியில் 60 வயதினைக் கடந்த 600 மில்லியன் மக்கள் (பத்தில் ஒருவர்) வாழ்கின்றனர் எனவும், 2025ம் ஆண்டளவில் இத்தொகை 2 மடங்கால் அதிகரிக்கும் எனவும், 2050ம்ஆண்டளவில் இவர்களின் எண்ணிக்கை 2 பில்லியனாக (ஐந்தில் ஒருவர்) அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. இவர்களில் பெரும்பான்மையானோர் அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாடுகளினைச் சேர்ந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய சமூகத்தில் எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்நோக்கும் முதியோரை அரவணைத்து செயலாற்ற வேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும்.

  • Replies 3.9k
  • Views 330.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்டோபர் 1: 1971 ஆம் ஆண்டு இதே நாளில்தான், குழந்தைகளின் உற்சாக உலமான வால்ட் டிஸ்னி உலகம் புளோரிடாவில் உருவாக்கப்பட்டது.

12027290_631695473599665_372065781970583

**********************************************************************************************************************************************************************************************

ஐக்கிய இராச்சியத்தின் அரசியான இரண்டாம் எலிசபெத், அந்நாட்டு அரியணையில் அதிக காலம் ஆட்சிபுரிந்தவர் என்ற சாதனையினை ஏற்படுத்தியுள்ளார். கடந்த செப்டெம்பர் 09, 2015 அன்று இச்சாதனையினை அவர் புரிந்தார்.

செப்டெம்பர் 09, 2015 மாலை 5.30 (இங்கிலாந்து நேரப்படி) மணியளவில் அவர் 63 வருடங்கள், 7 மாதங்கள், 2 நாட்கள், 16 மணித்தியாலங்கள், 23 நிமிடங்களை அரியணையில் கழித்த அவரது முப்பாட்டியான அரசி விக்டோரியாவின் சாதனையே அவர் முறியடித்தார்.
 

12079059_1024473137586578_75578128895091

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

அக்டோபர் 1: 1931 ஆம் ஆண்டு இதேநாளில்தான் அமெரிக்காவின் ஜோர்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது.

12034366_631695003599712_816443305206127

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்டோபர் 1: 1869 ஆம் ஆண்டு இதேநாளில்தான் உலகின் முதல் தபால் அட்டை ஆஸ்திரியாவில் வெளியிடப்பட்டது.

12038488_631694690266410_777435171571640

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரமாயிரம் கவிதைகள் வடித்தான் எங்கள் கவிப்பேரரசு.
அகிலத்தமிழர் அனைவரையும் பாதித்தது இந்தக்கவிதையே !!

12036396_10156133558040154_2956562333108

  • கருத்துக்கள உறவுகள்

கவிப் பேரரசு வைரமுத்துவின்.... கவிதைகளில், எனக்கு மிகவும் பிடித்த கவிதை.
பகிர்விற்கு, நன்றி யாயினி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீன மொழியில் நமது திருக்குறள் ...

11949401_1618125605128450_15792448164618

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இன்று இரண்டாம் லெப். மாலதியின் நினைவு நாள்

 

 

12074744_10153373246183801_3217256061809

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் தமிழீழத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 10ம் நாளன்று எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழீழப் போராட்ட வரலாற்றிலே 1987இல் முதன் முதல் களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளியான இரண்டாம் லெப். மாலதியின் நினைவு நாளில் இது நினைவு கூரப்பட்டுவருகிறது.

1984 முதல் பெண்கள் ஆயுதப் போராட்டத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டனர். தொடக்கத்தில் பெண்போராளிகள் ஆண்போராளித் தளபதிகளின் கீழ் செயற்பட்டாலும், 90களின் பிற்பகுதியில் தனித்துவமாக செயற்படும் வகையில் பெண்கள் படையணி புலிகளால் கட்டியெழுப்பப்பட்டது. பெண்போராளிகள் புலிகளின் அனைத்து விதமான கட்டமைப்புக்குள்ளும் உள்வாங்கப்பட்டனர். அவர்கள் இராணுவ படையணியாக மட்டுமல்லாது, தொழினுட்பத்துறை, பொறியியல்துறை, மருத்துவம், கடற்படை, அரசியல், நிர்வாகக்கட்டமைப்பிலும் ஆண்போராளிகளுக்கு நிகராகவே உள்ளனர்.

தமிழீழ போராட்ட வரலாற்றில் இருந்து பிரிக்கமுடியாத சக்தியாக பெண்போராளிகள் வளர்ந்துள்ளனர். 1987 ஒக்டோபர் 10, இந்திய அமைதிப் படைகளுடன் விடுதலைப் புலிகள் மோதலை தொடங்கிய நாள் அன்று கோப்பாயில் இந்திய படைகளுடன் இடம் பெற்ற மோதலின் கொல்லப்பட்டவரே 2ம் லெப்.மாலதி ஆவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து திருவிழாக் காலம் தொடங்கி விட்டது. இந்த திருவிழா அமெரிக்காவிலும், கனடாவிலும் முக்கியமாக கொண்டாடப் படுகிறது. எல்லோருக்கும் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். ஆரம்பத்தில் இது கிருத்துவ மதத்தின்பேரில் கொண்டாடினாலும் இப்பொழுது மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த திருவிழா நடக்கிறது. இந்த நன்றி தெரிவித்தல் நாள் கிட்டத்தட்ட "பொங்கல்" மற்றும் "உழவர்" திருநாளைப் போலவே அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக் கிழமையிலும், கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட் கிழமையிலும் நடைபெறும்.

தோற்றம்
சுமார் 400 வருடங்களுக்கு முன்னால் இந்த திருவிழா ஆரம்பித்ததாக வரலாறு கூறுகிறது. 1620 இல் ஒரு கப்பல் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை இங்கிலாந்திலிருந்து அட்லான்டிக் கடல் மார்க்கமாக ஒரு புனிதப்பயணம் மேற்கொண்டது. அவர்கள் அமெரிக்காவில் மசாசூட் என்ற மாகாணத்தில் வந்து இறங்கினார்கள். அவர்கள் வந்து இறங்கிய நேரம் கடுமையான குளிர் மற்றும் பனியினால் அவதிப்பட்டார்கள். அந்த நேரம் அவர்களால் எதையும் பயிரிட்டு உண்ண முடியாமல் பசியால் வாடினார்கள். கடுமையான நோய்களும் அவர்களைத் தாக்கியது. அதில் சிலர் இறந்தும் போனார்கள். அந்த நேரம் அங்குள்ள சிவப்பிந்தியர்கள்(Red Indians) அவர்களுக்கு உணவு கொடுத்து, அந்த பரிச்சயம் இல்லாத மண்ணில் எப்படி பயிர்களை விளைவிப்பது என்பதையும், மீன் பிடிக்கவும் கற்றுக் கொடுத்தார்கள். 1621 ம் வருடம் அந்த மண்ணில் சோளக்கருது, பீன்ஸ், பார்லி மற்றும் பூசணிக்காய் போன்றவற்றை விளைவித்து அறுவடை செய்தார்கள்.

தக்க சமயத்தில் தங்களைக் காப்பாற்றியதற்காகவும், உணவுகொடுத்து ஆதரித்தமைக்காகவும் நன்றி செலுத்தும் விதமாக அமெரிக்கர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தார்கள். அந்த விருந்தில் வான்கோழி முக்கிய உணவாகப் பரிமாறப்பட்டது. விருந்து முடிந்ததும் சில விளையாட்டுக்களையும் அமெரிக்கர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். இதைத் தான் இன்றுவரை நன்றி தெரிவித்தல் நாளாக அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள்.

அதிலிருந்து அமெரிக்கா வந்த காலனிக்காரர்கள் ஒவ்வருவருடமும் அறுவடை முடிந்ததும் நன்றி தெரிவிக்கும் நாளை விருந்துடன் கொண்டாட ஆரம்பித்தார்கள். அமெரிக்கா தனிநாடாக அறிவிக்கப் பட்டதும், காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அதை நன்றி தெரிவித்தல் நாளாகவும், விடுமுறை நாளாகவும் அறிவித்தார்கள். ஜார்ஜ் வாஷிங்டன் நவம்பர் 26ம் தேதியை தேங்ஸ்கிவ்விங் டே என்று திட்டவட்டமாக அறிவித்தார். 1863ம் ஆண்டு ஆப்ரகாம் லிங்கன் நவம்பர் நாலாவது வியாழக் கிழமையை தேங்ஸ்கிவ்விங் டே என்று மாற்றினார். அதிலிருந்து நவம்பர் நாலாவது வியாழக் கிழமையை இன்றுவரை அமெரிக்கர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

வழக்கம்

நன்றி தெரிவித்தல் நாளை அதே கலாச்சாரத்துடன் பழமை மாறாமல் ஒவ்வருவருடமும் வழக்கமாக கொண்டாடி வருகிறார்கள்.பெற்றோரை விட்டு வெகு தூரத்தில் இருப்பவர்கள், உறவினரைப் பிரிந்தவர்கள் எல்லோரும் அந்த குடும்பத்தில் மூத்தவர் வீட்டில் அன்று கூடுவார்கள்.அன்று ஒருவருக்கொருவர் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வர். ஏழைகள் மற்றும் வீடு இல்லாதவர்களை தொண்டு நிறுவனங்கள் உணவு, உடை கொடுத்து பரிசுப் பொருட்களையும் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது வழக்கம்.

விருந்து

வியாழன் அன்று இரவு நன்றி தெரிவித்தல் நாள் விருந்து நடைபெறும். அன்று முக்கிய உணவாக வான்கோழி(Turkey), மக்காச்சோளம்(Corn), பூசணிக்காய் மற்றும் கிரேன்பெர்ரி(Cranberry) வகைப் பழங்கள் இருக்கும். வான்கோழியில் சில மசாலாக்களை வைத்து அடுப்பில் நீண்ட நேரம் அதை வறுத்து சுடச்சுட பரிமாறப்படும். கிரேன்பெர்ரியில் சில நோய்களைத் தீர்க்கும் மருந்து இருப்பதால் அதை பழமாகவோ, ஜூஸாகவோ பரிமாறப்படும்.

நன்றி தெரிவித்தல் நாளுக்கு அடுத்த நாள் வருவது பிளாக் ஃபிரைடே. இந்த நாளுக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்கள் உண்டு. இன்றிலிருந்து ஆரம்பித்து கிறிஸ்துமஸுக்கு முந்தின நாள் வரை பரிசு வாங்கும் படலம் தொடரும். இந்தப் பரிசு வாங்கும் காலத்தில்தான் அமெரிக்க சில்லறை வியாபார சங்கிலித் தொடர் கடைகளும் வணிக நிறுவனங்களும் அந்த வருடத்திய லாபத்தில் நாற்பது சதவிகிதத்தைச் சம்பாதிக்கின்றனவாம். அந்த லாபத்தில் பதினைந்து சதவிகிதத்தை இந்த வெள்ளிக் கிழமையும் அதை அடுத்து வரும் சனி, ஞாயிற்றுக்கிழமையும் சம்பாதிக்கின்றனவாம். கருப்பு வெள்ளிக்கிழமை என்றால் சோகமான வெள்ளிக்கிழமை என்று அர்த்தமல்ல. நஷ்டம் ஏற்பட்டால் வியாபாரிகள் சிவப்பு எழுத்தில் அதைக் குறிப்பிடுவார்களாம். அதனால் லாபத்தைக் குறிப்பிட கருப்பு எழுத்தில் எழுதுவார்களாம். அதீத லாபம் கொடுக்கும் இந்த நாளை கருப்பு வெள்ளி என்கிறார்கள்.

வியாழக்கிழமை இரவிலிருந்தே வாடிக்கையாளர்கள் அந்தக் கடைக்கு முன்னால் வரிசையில் நிற்பார்கள். இந்த தினம் நவம்பர் மாதம் கடைசியில் வருமாதலால் ஓரளவிற்குக் குளிர் இருக்கும்.நன்றி தெரிவிக்கும் பண்டிகையன்று உறவினர்களோடும் நண்பர்களோடும் பெரிய விருந்து உண்டு பிறகு அந்தக் குளிரில் வரிசையில் நின்று பரிசுப் பொருட்களை வாங்குவார்கள்.

 

http://bhrindavanam.blogspot.ca/2009/11/blog-post_11.html

எதிர் வரும் திங்கள் கனடாவில் நன்றி தெரிவித்தல் நாள் வருகின்றது கூடவே விடுமுறையும் :) நன்றி தெரிவித்தல் நாளை முன்னிட்ட பகிர்வு....

அனைவருக்கும் நன்றிகள்!!..

wishing you and your family a happy thanksgiving ....!!!

HappyThanksgiving.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் (World Day Against the Death Penalty) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தற்போது மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. குற்றம் புரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் மிக கொடுமையான தண்டனையான மரண தண்டனையைக் கொண்டுள்ள சில நாடுகளும் அதைக் கைவிட வேண்டும் என்ற நோக்கிலே “மரண தண்டனை எதிர்ப்பு நாள்” கடைபிடிக்கப்படுகிறது.

 

*******************************************************************************************************************************************************************************************

 

Flute. 

Dr.Ramani Passed Away.

 

Art-350.jpg

 

 

Dr. Natesan Ramani (born 1934) commonly known as N. Ramani or N. Flute Ramani, is an eminent Indian Carnatic flautist. Ramani is also credited for introducing the long flute in Carnatic music.
Ramani was born in Tiruvarur, a city in Tamil Nadu which is honoured by its association with the Trinity of Carnatic music. Ramani was born .

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12057002_1050142538375341_1336982732_n.p

Happy Thanksgiving, Yayini!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நவராத்திரி முதலாம் நாள்...!!!

 

12122854_929031190497194_342414192436065

 

11224832_1057905150916925_16002132486926

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12139954_10205376261470403_6613397806318

12068928_10205376257750310_5923965966474

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்காபுரோவில் காணாமல் போனதாக தேடப்படும் தமிழ் யுவதியும் அவரது புதல்வரும்

 
 
Tamil Ini FM - தமிழ் இனி FM's photo.
 

ஸ்காபுரோவில் காணாமல் போயுள்ள 33 வயதான தமிழ் யுவதி மற்றும் அவரது 5 மாத குழந்தையை கண்டுபிடிக்க உதவுமாறு ரொறன்ரோ காவல்துறையினர் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோ‌‌ள் ஒன்றை விடுத்துள்ளனர்.

நேற்று மாலை 6:30 மணிமுதல் 33 வயதான சுரேசினி சிவசுதன் மற்றும் அவரது 5 மாத குழந்தையான பாவேஸ் சிவசுதன் ஆகிய இருவரையும் காணவில்லை என காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இறுதியாக Sheppard வீதி கிழக்கு மற்றும் Morningside வீதி பகுதியில் காணப்பட்டுள்ளதாக கூறும் காவல்துறையினர் இவர்களது பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

இவர்கள் குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக காவல்துறையை தொடர்புகொள்ளவும்.

Call police @ 416-808-4200
Crime Stoppers anonymously @ 416-222-TIPS (8477)
Online @ www.222tips.com
Text TOR and your message to CRIMES (274637)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நவராத்திரி மூன்றாம் நாள்...!!!

12107020_929864197080560_729753485793574

12115488_909667935737446_767556725280458

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

எம் தேசத்துக்காக முப்பது ஆண்டுகள் தன்னைத் தந்து தமிழீழத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளராக விளங்கிய தமிழினி அக்கா இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரின் ஆன்மா சாந்தியடையப் இறைவனை வேண்டுகின்றேன்

                                                                  .11800090_1479793742317332_66041029285032

 

 

 

                                                                                                              12122946_200171700314277_287549466497428
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்ணுக்காக மடி சுமந்து மடிந்த தாயே! 

உன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12072825_628866313919989_323952286158357

 

 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நிமலராஜனின் 15 ஆவது நினைவு தினம்
 
CRrawjoUYAEV6cT.jpg
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11221280_10153128038333133_1380997413752

 

 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12045669_448084145402638_828715920404185

 

ஒஸ்லோவின் துணை முதல்வராகிறார்
ஒரு தமிழ்ப்பெண்!!
வாழ்த்துகள் கம்சாயினி!!

ஈழத் தமிழரது புலம்பெயர் வாழ்வில் இன்றைய தினம் முக்கியமாகிறது. முதற் தடவையாக ஐரோப்பியத் தலைநகர் ஒன்றில் - ஒஸ்லோ - துணை நகர முதல்வர் (Vice Mayor) பதவியை ஈழத் தமிழ்ப் பெண் ஒருவர் பெற்றிருக்கிறார்.
பதினெட்டு வருடங்களுக்குப் பின் ஒஸ்லோ ஆட்சியை மீண்டும் தொழிற்கட்சி (வேறிரு கட்சிகளுடன் இணைந்து) கைப்பற்றியுள்ளது. இதுபற்றி முன்பே பதிவிட்டிருக்க வேண்டும். தாமதம், இந்த நல்ல செய்தியைச் சேர்த்துப் பதிவிட வைத்துள்ளது.
பல்வேறு "புகழ்பெற்ற" தொழில்களை எமது இரண்டாம் தலைமுறையினர் (உண்மையில் பெற்றோர்கள்) தேடிக் கொண்டிருக்கையில் அரசியலைத் தனது முழுநேரப் பணியாக வரித்துக்கொண்ட கம்சி ஒஸ்லோ தொழிற்கட்சியின் துணைத் தலைவராக இளம் வயதிலேயே தெரிவானவர். இளைஞரணியில் தலைவராக இருந்து, கட்சியின் ஒஸ்லோ துணைத் தலைவராகப் பெரும் ஆதரவோடு தெரிவானவர்.
ஒப்பீட்டளவில் எம்மவர்கள் - குறிப்பாகப் பெண்கள் - அரசியலில் ஈடுபடுவது நோர்வேயைப் பொறுத்தவரை மிகக் குறைவு. பாகிஸ்தானியப் பின்னணி கொண்ட பெண்கள் பலர் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு, ஒருவர் கலாசார அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தாய்நாட்டை நோக்கிய அரசியற் செயற்பாட்டில் இருந்த ஈடுபாடு, எம்மிற் பலருக்கு இந்த நாட்டின் தேசிய அரசியலில் இருக்கவில்லை என்பதே உண்மை. இரண்டிலும் சரியான அக்கறையோடு பங்கேற்று இந்த உயரத்தை எட்டியிருக்கிறார் கம்சாயினி. ஒஸ்லோவில் மூன்றாம் இடத்தில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் அவர் வென்றார் என்பது அவரது உழைப்புக்கு வாக்காளர்கள் கொடுத்த பரிசன்றி வேறென்ன? 
பாரம்பரியமாகத் தமிழர்கள் தெரிவு செய்யும் கல்வி - தொழிலைத் தெரிவு செய்யாமல், அரசியலில் முன்னோடியாக வர அவரை ஊக்குவித்த பெற்றோருக்கும், அடிக்கும் அலையோடு அள்ளுண்டு போகாமல், இந்தத் துறையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி சூடியுள்ள கம்சாயினிக்கும் மனம் நிறைய வாழ்த்துகள்!!!
படம் `டாக்பிளாத` பத்திரிகையின் `உரிமை` என அறியக்கிடக்கிறது. அவர்களுக்கு நன்றிகள்! 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடிய மருத்துவர் ஒருவர் மதிப்புமிக்க சர்வதேச புகைப்பட போட்டியில் பரிசு பெற்றுள்ளார்.

மனிரோபாவில் சேர்ச்ஹில் வனப்பகுதிகளில் இவர் எடுத்த இரண்டு நரிகளின் அதிர்ச்சியான புகைப்படம் வெற்றி பெற்றுள்ளது.
டாக்டர். டொன் குற்சோகி ஒன்ராறியோவில் ஒரு விபத்து மற்றும் அவசரசிகிச்சை வைத்தியராவார். இங்கிலாந்து லண்டன் இயற்கை வரலாற்று காட்சியகம் கடந்த வாரம் நடாத்திய 2105ற்கான வனவிலங்கு புகைப்பட போட்டியில் இவர் வெற்றி பெற்றார்.
“A Tale of Two Foxes”என்ற இவரது புகைப்படம் சிவப்பு நரி ஒன்று இறந்த ஒரு ஆர்க்டிக் வெள்ளை நரியை இழுத்து செல்வதை சித்தரிக்கின்றது. 51-வருட பழைமை வாய்ந்த இப் போட்டியில் 40,000ற்கும் மேற்பட்ட உள்ளீடுகளை இவரது புகைப்படம் தோற்கடித்துள்ளது.
லண்டன் வரவேற்பில் மகத்தான பட்டத்தை பெற்றவர் என தனது பெயர் அறிவிக்கப்பட்டது ஒரு கனவு போன்றிருந்ததென குற்சோக்கி தெரிவித்தார்.
-30 C வெப்பநிலையில் கேப் சேர்ச்ஹில் தேசிய பூங்காவில் இந்த புகைப்படத்தை கடந்த நவம்பர் மாதம் எடுத்ததாக தெரிவித்தார்.

dog1
போட்டியில் வெற்றி பெற்ற சில புகைப்படங்கள்:

dog2dog3dog4dog6dog7dog9dog10

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10694273_819411248092769_202127247895913



#விஜயதசமி 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12038614_10205411482510907_9636493121580

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.