Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

STATEMENT BY THE PRIME MINISTER OF CANADA ON THAI PONGAL

  •  
Ottawa, Ontario
14 January 2016

The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on Thai Pongal:

“Today, Tamils both in Canada and around the world come together with friends and family to celebrate Thai Pongal, the four-day Tamil harvest festival.

“As the harvest season comes to an end, each day of this festival has its own special meaning and traditions which are tied to abundance, peace and happiness.

“Thai Pongal reminds us of the many cultures and traditions that we are privileged to enjoy here in Canada. Our rich diversity is a source of strength, which should be cherished and celebrated.

“This is also a time for all Canadians to recognize the important contributions the Tamil community has made and continues to make across our country.

“On behalf of our family, Sophie and I wish everyone celebrating Thai Pongal a joyful harvest festival

http://pm.gc.ca/eng/news/2016/01/14/statement-prime-minister-canada-thai-pongal#sthash.whqpN64P.gbpl&st_refDomain=www.facebook.com&st_refQuery=/

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய பிரதமரின் பொங்கல் வாழ்த்துகளோடு,

தைத் திரு நாளைக் கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும்,

மனங்களில் சாந்தியும்
சமாதானமும் பெருகி
இன்னல்கள் விலகி
துயர் இருள் மறைந்து
அன்பு ஒளி அகலவிரிந்திட
இத் தைத்திருநாள்
அமையவேண்டுமென 
வாழ்த்துகின்றேன்.

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!!!

 

:)Wish you a Happy Thai Pongal 2016.:)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விக்கிப்பீடியா  15ம் ஆண்டு நாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிரினங்களை நீர் வாழ்வன, நிலம் வாழ்வன என வகைப்படுத்தியுள்ளனர். நிலம் வாழ்வனவற்றில் ஊர்வன, பறப்பன பாலூட்டிகள் என இன வகைகள் உண்டு. பாலூட்டி இனத்தில் பெரும்பாலான இனங்கள், அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

உலகில் ஒரு லட்சம் வரை பாலூட்டிகள் இருந்ததாகவும் தற்போது நாலாயிரம் மட்டுமே இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. பாலூட்டிகளில் வவ்வால் இனம் ஒன்றே பறக்கக்கூடிய தன்மையைப் பெற்றது.

இவற்றில் பழம் தின்னி, பூச்சித்தின்னி என, இருவகை உள்ளன. இரவில் விழித்து, பகலில் பதுங்கி, மனிதன் நலமுடன் உயிர் வாழ பல உதவிகளை செய்யும் வவ்வால் இனம், கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாக பறவை ஆராய்ச்சி வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

பழம் தின்னிகள்: பெரிய கண்கள், குழல் போன்ற மூக்கு, சிறிய காது, கொண்ட இதன் இறக்கைகளுக்கு இடையே 20 செ.மீ., நீளம், இருக்கும். இவ்வகை வவ்வால்கள், இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன.

இவை 2 கிலோ எடை வரை இருக்கும். பழம் தின்னி வவ்வால்கள் திருநெல்வேலி பகுதியில் காணப்படுகின்ற ஓங்கி வளர்ந்த நூறாண்டு பழமையான மருதமரங்களின் உச்சாணி கொப்பில் தொங்கிக் கொண்டு பகலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றன.

இரவு வந்துவிட்டாலோ இரை எடுக்க ஈழத்து வவுனியா காடுகளுக்கு பறந்து சென்று அங்குள்ள பழங்களை உண்டு விடியும் வேளையில் திருநெல்வேலி மருத மர கிளைகளுக்கு வந்து உறங்கி ஓய்வு எடுக்குமாம்.

இது நெடுநாளாய் நடந்து வரும் ஒரு நிகழ்வு என்று அந்தப் பகுதி மக்கள் தகவல் தருகிறார்கள். சமீப காலங்களில் இந்த பழம் தின்னி வவ்வால் இனத்தின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது என்பது பறவை ஆர்வலர்கள் வேதனையுடன் தரும் தகவல்.

பழம் தின்னி வவ்வால் கறியில் காணப்படும் மருத்துவ குணத்தின் காரணமாக இவை வரைமுறையில்லாமல் வேட்டையாடப்படுவது தான் முக்கிய காரணம் என்பதும் அவர்கள் தரும் கூடுதல் தகவல்.

 

தகவல்:-வெள் உவன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உழவுக்கு வந்தனம் செய்வோம்...!

 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் 

தொழுதுண்டு பின்செல் பவர்.
 

என்று உழவுத் தொழிலின் மகிமையினை போற்றுகின்றார் திருவள்ளுவர்.

ஆம்…! 
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் - யாவரும் உண்ணும்வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டுவாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்;மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் -மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது, அதனால் தாம்உண்டு அவரைப் பின்செல்கின்றவர். ['மற்று' என்பதுவழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட்பிறப்பினராய்வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம்உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பதுகருத்து) - பரிமேலழகர் உரை

அந்தவகையில், நெற் பயிர்ச்செய்கை தொடர்பிலான சில சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக…!

 

உலகில் நெற்செய்கையானது கி.மு 5000 ஆண்டுகளுக்குமுன்பிருந்தே பயிரிடப்பட்டு வருகின்றது.


 

நெல்லின் குடும்பப் பெயர்  ஒறைசா சற்றைவா ஆகும்.  

 உலகில், பயிரிடக்கூடிய 14000 இற்கும் மேற்பட்டநெல்லினங்கள் இருப்பினும், சில குறிப்பிட்டஇனங்களே(100+) தொடர்ந்து நிலைத்திருக்கின்றனவாம்.

 பாரம்பரிய முறையில் 1ஹெக்டெயரில் நெல்விதைப்பினை மேற்கொள்வதற்காக ஒரு விவசாயி, 80கிலோமீற்றருக்கும் அதிகமாக தூரம் மாட்டுடன்நடக்கின்றானாம்.

 1கிலோகிராம் நெல்லினை உற்பத்தி செய்வதற்கு 5000லீற்றர் நீர் தேவைப்படுகின்றதாம்.

 உலகில் மில்லியன் கணக்கான ஏழை மக்கள், தமதுவருமானத்தில் 50 – 75 சதவீதத்தினை அரிசியின் நுகர்வில்செலவிடுகின்றனர்.

 

பெருமளவான ஆசிய மொழிகளில் உணவு, அரிசி ஆசியசொற்கள் ஒரேமாதிரியான அர்த்தம் கொண்டவையாகும். (உ+ம் :- சீன மொழியில் அரிசி, உணவு ஆகிய இரண்டும்குறிப்பது ஒரே சொல்லாகும்)

 திருமண நிகழ்வுகளின்போது புதுமணத் தம்பதியினரைஅரிசியினால் ஆசிர்வதிப்பது குழந்தைப் பாக்கியம்,அதிர்ஷ்டம், செல்வம் ஆகியவற்றுக்கானஅடையாளமாகும்.

 

 அண்மைய ஆய்வுகளின் பிரகாரம், உலகவெப்பமயமாதலின் காரணத்தினால் அரிசி உற்பத்தியானதுவீழ்ச்சியடைந்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றமைகுறிப்பிடத்தக்கதாகும்.

 சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவகம் பிலிப்பைன்ஸ்தலைநகர் மணிலாவில் அமைந்துள்ளது. இது 1959ம்ஆண்டு, டிசம்பர் 9ம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.

 

***

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

12540927_10156531847555637_7424058552298

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனவரி 16: திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இரண்டடியில் வாழ்க்கை தத்துவத்தை போதித்தவரும், தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழும் திருவள்ளுவர் பிறந்த தினம் இன்று கொணாடப்படுகிறது.

இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு பிடித்த திருக்குறளை பகிர்ந்து அவரை போற்றுங்கள்.

'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்'

 
Sahana Sahana's photo.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூப்பூத்த மஞ்சள்...........

12509901_859753907471896_578589710911819

வெள் உவன்...........

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தவுடன் சட்டென்று பிள்ளையார் சிலை என்று எண்ணத் தோன்றினாலும் இது அப்படி அல்ல. நெற்றியில் தரித்திருக்கும் திருமண்ணினால் வைணவ மரபில் 'தும்பிக்கை ஆழ்வார்' என்று குறிப்பிடப்படுகிறது.
ஆழ்வார்திருநகரியில் ஒரு மண்டபத்தின் முகப்பில் காணப்படும் "தும்பிக்கை ஆழ்வார்"

10372772_851892268258060_769587015527642

வெள் உவன்...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11958103_741771132595771_840539810649813

12185284_761067927332758_838356833393748

12188112_761799713926246_150840409385759


" அழகியல் , பூந்தோட்டம் , வவுனியா "

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
12493661_857604987686788_752392857560053
 
தமிழகத்தில் பெண்கள் நாடண்ட வரலாறு கொஞ்சமே. அந்தக் கொஞ்சமான வரலாற்றில் இராணி மங்கம்மாள் முக்கியமானவர். மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மரணத்திற்கு பின் அவரது மனைவியான இவர் அடுத்துப் பட்டத்துக்கு வர வேண்டிய தனது மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இளம் பிள்ளையாக இருந்ததால் மகனுக்குத் துணையாக காப்பாட்சியாளாராக இருந்து மதுரையை ஆண்டவர்.
 
தனது ஆற்றலாலும் மதி நுட்பத்தாலும் மிகச் சிறந்த முறையில் தமிழகத்தை பதினெட்டு ஆண்டுகாலம் ஆண்ட பெண்ணரசி ஆவார்.
 
 
தென் தமிழகத்தில் உள்ள முக்கியமான சாலைகளில் பல ராணி மங்கம்மாள் அமைத்தவையே. இந்தச் சாலைகள் இன்றும் மங்கம்மா சாலை என்று மக்களால் அழைக்கப்படுகிறது. அந்த நெடுஞ்சாலகளில் பயணிகள் தங்கி ஓய்வெடுக்க ஆங்காங்கே கல் மண்டபங்களைக் கட்டினார்.
 
கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் சிதலமாகிய நிலையில் காணப்படும் ஒரு மண்டபம் தான் படத்தில் காண்பது. நீண்ட தூர சாலைகளில் குதிரைகள், பசுக்கள், காளைகள் போன்றவை நீர் அருந்துவதற்காக சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கவும் ஆணையிட்டார்.
 
 
மாட்டு வண்டிகளை நிறுத்த வண்டிப் பேட்டைகள் அமைக்கப்பட்டன. சாலையை மையப்படுத்தி சிறிய நகரங்கள் உருவாகின. அவ்வாறு உருவான புதிய நகரங்கள் தான் இன்றைக்கு முக்கிய நகரங்களாக விளங்கும் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி, கயத்தாறு போன்றவை. இன்றும், கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை மங்கம்மாள் சாலை என்றே குறிப்பிடுகின்றனர் மக்கள்.
 
 
வெள் உவன்...........
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் பல் துலக்க வேண்டும்...

 

தினமும் காலை, இரவு என இரண்டு நேரமும் கட்டாயம் பல் துலக்குவதுதான் இதைத் தடுக்க முக்கியத் தீர்வு. சிலர், கடமைக்கு சில நொடிகளிலேயே பல் துலக்கிவிடுவர்.

 
சிலரோ, பிரஷ் தேய்ந்துபோகும் அளவுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பற்களைத் தேய்ப்பர். இரண்டுமே தவறான விஷயங்கள். அதிக அழுத்தம் கொடுத்தோ, அழுத்தமே இல்லாமலோ பல் துலக்கக் கூடாது. மிதமான அழுத்தம் கொடுத்து (படத்தில் காட்டியிருப்பது மாதிரி) குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும்.

 

ஜெல் உள்ள பற்பசையைக் கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது. அதில் உள்ள சிலிக்கா பவுடர், பல்லின் எனாமலைப் பாழாக்கிவிடும். பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும்.

 

வாய் துர்நாற்றம் நீங்க....

 

அஜீரணம், அதிக அமிலத்தன்மை, அதிகப் பித்தம் ஆகியவை வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள். இதைப் போக்க சீரகத்தைத் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி அருந்தலாம். 


பல் ஈறுகளில் ரத்தம் வடிதல், வாய்ப் புண் ஆகியவற்றாலும் துர்நாற்றம் ஏற்படலாம். இவை ஆரம்ப நிலை சர்க்கரை நோயின் அறிகுறியாக இருப்பதால், அந்தப் பாதிப்பு உள்ளவர்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதிப்பது நல்லது. 


கிராம்பு, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்களை வாயில் அசைபோடலாம். இந்தப் பொருட்கள் துர்நாற்றத்தைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்துவதுடன், அஜீரணத்தையும் குணமாக்கும்.

 

 
அழகோவியம்'s photo.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


At London Lumiere Festival. லண்டன் மாநகரில் முதல் தடவையாக  கடந்த 3 நாட்களாக லைற் பெஸ்ரிவல் என்று சொல்லிக் கொள்வதோடு கொண்டாட்டமாக முன்னெடுகப்பட்டுள்ளது...மின்சார விளக்குள் கொண்டு அலங்கரிகபட்டு காட்சிப்படுத்தபடும் ஒரு நிகழ்வாக இருக்கிறது...

 

12417680_10156446244600554_1097280517504

12507515_10156446244565554_8046319586973

12509041_10156446244760554_7838343069094

12400515_10156446244890554_1706955739162

12507318_10156446244955554_6468991318244

 

12565508_10156446244470554_5053730244228

different artists participate this festival..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

17.01.2016

WEATHER 

MOR
8.png
-11°C
AFT
16.png
-7°C
EVE
38.png
-9°C
NIGHT
38.png
-14°C
SNOW SHOWERS | -11°C | Humidity: 7

Parts of the GTA may be in for snow squalls today

 

odi Wilson, CP24.com 
Published Monday, January 18, 2016 6:39AM EST 
Last Updated Monday, January 18, 2016 8:14AM EST

Parts of the GTA could be in for a blustery day with strong winds and flurries in the forecast today.

Environment Canada has issued a special weather statement for Hamilton, Halton, Peel, Vaughan, Richmond Hill, Markham, Newmarket, and Georgina and these regions could see brief periods of snow squalls today.

"The winds are going to be strong enough to carry lake effect snow bands quite far inland from Lake Huron and Georgian Bay today. As a result there is a chance that snow squalls may briefly affect parts of the Greater Toronto area later today and this evening," an advisory on the national weather agency's website says.

PHOTOS

 
snow, Toronto

A man walks up the middle of a street in Toronto as a snow storm hits with strong winds and heavy snow on Monday, February 2, 2015. THE CANADIAN PRESS/Darren Calabrese

While snowfall amounts will range from four to eight centimetres in areas across the GTA, gusty winds combined with freshly fallen snow is expected to reduce visibility for motorists.

"The lake effect snow bands may have quite the impact on the afternoon commute if they are able to extend into the region. Motorists should be prepared for rapidly changing and suddenly poor winter driving conditions, as low visibility in blowing snow or bursts of heavier snow are quite possible," the weather statement cautions.

Meanwhile in Toronto, an extreme cold weather alert remains in effect and flurries are also in possible for the city later this morning and this afternoon.

During the cold temperatures, the city is recommending that residents dress in layers and cover all exposed skin, stay dry, and avoid recreational outdoor activities.

Throughout the months of January and February, two 24-hour warming centres will always be open at 323 Dundas St. E and 25 Augusta Ave.

cp24.com

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பட்டுப்போன 
பனை மரத்தின் 
உச்சியில் துளிர்த்தது......

அரச இலை செடி........

உபயம் - பறவையின் எச்சம்.

12009572_1551733365087215_68491136365463

 
  • கருத்துக்கள உறவுகள்

சித்தி பெறத் தர்மர் பனையேறாமல் விட்டால் சரி....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10259713_851336298313657_427794247021258

ஆழ்வர்திருநகரியில் தாமிரபரணி ஆற்றின் கரையிலேயே அமைந்திருக்கும் ஒரு மண்டபத்தின் மதில் சுவர் தான் இது. இந்த மதில் சுவரின் கற்களில் சில சிறிது வெளியே துருத்திக் கொண்டிருக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மதில் சுவர் இப்படியான விதத்தில் அமைத்திருப்பதற்கான காரணத்தை ஒரு உள்ளூர்காரர் இப்படி விளக்குகிறார். வெள்ள காலங்களில் வேகமாக வரும் வெள்ள நீரின் ஆற்றலை குறைக்கும் நோக்கில் தான் இவ்வாறான அமைப்பில் சுவர் கட்டப்பட்டிருக்கிறது. சுவரை நோக்கி வேகமாக வரும் வெள்ள நீர் முதலில் இந்த துருத்திக் கொண்டிருக்கும் கற்களில் மோதி சிதறுகிறது. இதனால் வெள்ள நீரின் வேகமும் ஆற்றலும் வெகுவாகக் குறைக்கப்படுகிறதாம். அதன் விளைவாக மதில் சுவரும் பாதிப்பிலிருந்து பாதுகாகப்படுகிறதாம். இது தான் அந்த உள்ளூர்காரரின் விளக்கம். கட்டுமானங்களின் வெள்ள பாதிப்பைக் குறைக்க இவ்வாறான எத்தனையோ தொழில்நுட்பங்களை நமது முன்னோர்கள் கையாண்டு வந்திருக்கின்றனர். ஆனால் நாம் அவ்வாறான சிறப்பு வாய்ந்தத் தொழில் நுட்பங்கள் பலவற்றையும் புரிந்து கொள்ளாமலும் தெரிந்து கொள்ளாமலும் தொலைத்துக் கொண்டே வந்திருக்கிறோம் என்பது தானே யதார்த்த நிலைமை. .

வெள் உவன்...........
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் செய்ய முடியாத வேலையை,செய்யத் தெரியாத வேலையை செய்து முடிக்கும் போது ஏற்படும் மனை நிறைவுக்கு அளவே இல்லை...

கொப்பி றைற் யாயினி 2016 :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வைப் பற்றிய ஒரு கருத்துப் பரிமாற்றம்...

ஒரு கடற்கரைக் கிராமம். அங்குள்ள ஒரு மீனவ இளைஞனைப் பார்த்து வேறு ஒருவர் கேட்கிறார், "கடல் ஆபத்தான இடமாயிற்றே... எப்படி நீ துணிச்சலுடன் மீன் பிடிக்கப் போகிறாய்?''

இளைஞன் சொல்கிறான், "என்ன செய்வது... நான் மீன் பிடித்தால்தான் உணவு உண்ண முடியும்.''

கேட்டவர், சட்டென்று கேள்வியின் திசைகளை மாற்றுகின்றார்-

"அது சரி... உன் தந்தை எப்படி இறந்தார்?''

"அவர் மீன் பிடிக்கச் செல்லும்போது புயலில் சிக்கி இறந்தார்.''

"உன் தாத்தா?''

"என் தாத்தா ஒருமுறை அலையில் மாட்டிக் கொண்டு கடலலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு அவரும் கடலுக்கு இரையானார்.''

"இவ்வளவு நடந்து முடிந்தபிறகும் எப்படி உன்னால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடிகிறது?''

இப்போது அந்த இளைஞன் கேட்டவரைப் பார்த்து, "உங்கள் தந்தை எப்படி இறந்தார்?'' என்று கேட்டான்.

"நோய்வாய்ப்பட்டு இறந்தார்.''

"உங்க தாத்தா..?''

"அவரும் படுக்கையில் நோயில் கிடந்து பாடையாகிப் போனார்.''

"இப்படி உங்கள் பரம்பரையே படுக்கையில் கிடந்து இறந்து போயிருக்கிறார்கள். அப்புறம் எப்படித் தினமும் நீங்கள் தைரியமாகப் படுக்கப் போகிறீர்கள்?'' என்று பதிலுக்குக் கேட்டான்.

பதிலின்றி மவுனமானார் அவர். வாழ்க்கை, ஆபத்துகளும், துக்கங்களும், துயரங்களும் நிறைந்ததுதான். அதை நினைத்துக் கொண்டிருந்தால் வாழ முடியுமா? புறநானூற்றுப் புலவன் சொல்வானே, `நீர் வழிப்படும் புனைபோல' என்று. அதாவது ஆற்றின் ஓட்டத்தில் செல்லும் படகானது அதன் ஓட்டத்தோடு செல்வதைப் போல வாழ்க்கையும் சென்று கொண்டே இருக்க வேண்டும். அந்தப் படகை வழிநடத்திச் செல்கிற ஆற்றைப் போல பிறருக்குப் பயன்படுகிற விதத்தில் இருக்க வேண்டும். யாரும் இங்கே வீணாகி விடக் கூடாது.

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல ,,
சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான்
ந ட் பு .. காலை நல் வணக்கம்.....

 

12509499_1561768737417174_61018810425753

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலையில் ஆயிரத்து 939 பேர் பட்டங்களை பெறுகின்றார்கள்: குளோபல் தமிழ்ச் செய்தியாளா்:-

 

 

12605396_1717306925173468_84002538609977

1509_1717306355173525_683520951381235775

12552608_1717306395173521_41636419640077

12605313_1717306758506818_69573472117389

12491837_1717306635173497_78645139540693

12491869_1717306658506828_18566461256853

12493736_1717306561840171_70194240315476

12487243_1717306625173498_36608411825081

12494881_1717306501840177_23900415379011

12615149_1717306715173489_59034319732778

12471901_1717306795173481_18147961075406

 

யாழ்.பல்கலைகழகத்தின் 31 ஆவது பொது பட்டமளிப்பு விழா யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.
 
யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமான பட்டமளிப்பு விழா புதன்கிழமையும் இடம்பெறும். இரு நாட்கள் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஆயிரத்து 939 பேர் பட்டங்களை பெறுகின்றார்கள்.
 
மாணவர்களுக்கான பட்டங்களை யாழ்.பல்கலைகழக வேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.பத்மநாதனும் , துணைவேந்தர் வசந்தி அரசரட்ணமும் வழங்கி வைத்தனர்.
 
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விண்வெளியில் மலர்ந்த முதல் மலர்...
சமீபத்தில் விண்வெளி வீரர் Scott Kelly என்பவர் தன் வலைதளத்தில் விண்வெளியில் பூத்த முதல் மலரைப் பதிவுசெய்திருக்கிறார். ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் இந்த மலர், மனித வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாகும்.

12524101_668568876578991_209688799752340

12573096_668568873245658_296347014077370

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

WEATHER 19.01.2016

MOR
2.png
-11°C
AFT
2.png
-4°C
EVE
33.png
-6°C
NIGHT
33.png
-7°C
SCATTERED CLOUDS | -11°C | Humidity: 67

 

600_cp24_temps_regions.jpg?ver=2422110

 

600_cp24_radar_regions.gif?ver=2422110

cp24.com

 

 

 


 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சக்கர நாற்காலியிலிருந்து மரணத்தால் விடுதலை பெற்ற தன் ஆருயிர் மகனுக்காக ஒரு தந்தை அமைத்த கல்லறை.

பார்த்த கணமே இதயம் கனத்துப்போன புகைப்படம்.
 

12439139_10204968204917411_1569273680712

ஒவ்வொருவரது 
தீர்க்க முடியாத ஏங்கங்களும் 
ஆசைகளும் தீர்ந்து 
போகா வண்ணம்,,,
மனதின் ஓரத்திலோ இல்லை,
எங்கோ ஓர் மூலையில் தான் 
ஆணி அடித்தால் போலவோ...
இல்லை தூசி தட்டப்படாமலோ 
அதுவும் இல்லையன்றால் 
தந்தியறுந்த வீணை போல் 
நாதம்  இழந்து மீட்டப்படாலோ தான்...

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

WEATHER..19.01.2016

AFT
2.png
-4°C
EVE
33.png
-6°C
NIGHT
33.png
-7°C
T.MOR
3.png
-6°C
SNOW SHOWERS | -5°C | Humidity: 59

 

 

600_cp24_5day.jpg?ver=2422133

cp24.com

 

 

 

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.