Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12728818_587501564730717_760451555668422

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10941872_1410711002554778_10462918883325போலியோ சொட்டு மருந்து தினம் 

ஜனவரி 18 மற்றும் பிப்ரவரி 22 

ஊனமில்லா வாழ்க்கைக்கு 
இரு துளி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12250032_547945175369287_764548256585652பனை மரங்களின் அழகு'' 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12105880_408025702727515_366400109856513

கபடமில்லாமல்
சிரிக்கிறார்கள்...
இதழ்கள் விரித்து.!!!
‪#‎பூக்கள்‬

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தருக்கு மரம் ஒன்று... 
ஆசையை துறக்கக் கற்று தந்தது ! 
நியூட்டனுக்கு ஆப்பிள் மரம் ஒன்று... 
ஈர்ப்பு விசையை கற்று தந்தது !
எந்த மரத்தையும் வெட்டாதீர்கள், 
எதாவது ஒன்று கற்று தரும்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12705698_758422710959533_839840950623188

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
(தொல்காப்பியம் மரபியல்)

6+senses.jpg

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படைப்பாளி வியாபாரியாகவும் செயற்படவேண்டும் – கல்லாறு சதீஸ்

sathees-aகவிதை என்­பது சிறு­நொ­டியில் எழு­தக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. ஆனால், சிறு­கதை அவ்­வா­றில்லை. திட்­டமிட்டு அதன் உத்தி, நடை, கரு என்­ப­வற்றை பின்­பற்றி எழு­தக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. எனவே, வேக­மான இந்த உல­கத் தில் நுட்­பங்­களைப் பின்­பற்றி சிறு­கதை எழுதும் பொறுமை எழுத்­தா­ளர்­க­ளிடம் இல்லை என கல்­லாறு சதீஸ் தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்பு கோட்டைக்கல்­லாறை பிறப்­பி­டமாகக் கொண்ட கல்­லாறு சதீஸ், தற்­போது சுவிட்ஸர்­லாந்தில் வசித்து வரு­கிறார். கோட்டைக் கல்­லாறு தமிழ் வித்­தி­யாலம், கல்­முனை உவெஸ்லி கல்­லூரி, சம்­மாந்­துறை தொழி­ல்நுட்பக் கல்­லூ­ரி­களின் பழைய மாண­வ­ரான இவர், சுவிட்ஸர்­லாந்தில் நிதி நிறு­வனம் ஒன்றை தொழில் ரீதி­யாக நடத்­திக்­கொண்டு அங்கு இலக்­கியம் படைக்­கிறார்.

வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு அவர் வழங்­கிய செவ்­வியின் விபரம் வரு­மாறு:

கேள்வி: தங்­களின் ஆரம்­ப­கால இலக்­கிய முன்­னெ­டுப்­புகள் பற்றி…

பதில்: நான் ஏரா­ள­மான கட்­டு­ரை­களை பத்­தி­ரி­கையில் எழு­தி­யுள்ளேன். அவை அர­சியல் சாராத அறி­வு­பூர்­வ­மான கட்­டு­ரைகள். 1990ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தி­யி­லேயே ஏரா­ள­மான கட்­டு­ரை­களை எழு­தி­யுள்ளேன். எனினும், அதற்குப் பின்னர் சுவிட்ஸர்­லாந்தில் எனது நிறு­வனம் உரு­வாக்­கப்­பட்ட பின்னர் எழுத்­துத்­து­றை­யூ­டான பங்­க­ளிப்பு சற்றுக் குறை­வ­டைந்­தது எனலாம்.

எனினும், அதன் பின்னர் தன்­னம்­பிக்­கை­யூட்டும் உரை­களை பல நாடு­க­ளுக்கும் சென்று ஆற்றி வரு­கிறேன். அது மாத்­தி­ர­மல்­லாமல், பல நாடு­க­ளுக்கும் சென்று எழுத்­த­ாளர்­களின் நூல்­களை வெளி­யிட்டு வைக்கும் பணி­யிலும் ஈடு­பட்டு வரு­கிறேன்.

கேள்வி: நூல்­களை வெளி­யிட்டு வைப்­ப­தற்கு தங்­களை அழைப்­ப­தற்­கான பின்­னணி என்ன?

பதில்: சுவிட்ஸர்­லாந்தில் தமிழ் சிறு­கதைத் தொகு­தியை முதன்முதலில் வெளி­யிட்­ட­வ­னாக நான் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளேன். 1999ஆம் ஆண்டு வெளி­யிட்ட ‘பனிப்­பா­றை­க ளும் சுடுகின்­றன’ எனும் சிறு­கதை மூலமே அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள் ளேன்.

அந்த சிறு­கதைத் தொகுதி புலம்­பெயர் தேசத்தில் விரும்பி வர­வேற்­க ப்­ப­டு­கின்ற நூலாகும். அந்­நூலில் பிர­சு­ ர­மா­கி­யுள்ள ‘பனிப்­பா­றை­களும் சுடு­ கின்­றன’ எனும் கதை சக­ல­ராலும் சிலா

கித்து பேசப்­பட்­டது.

புலம்­பெயர் வாழ்வு இப்­ப­டிப்­பட்­டதா? எனும் வகையில் புரட்­ட­லுக்­கு­ரிய கதை­யது. அந்தக் கதை ஐரோப்­பிய நாடு­களில் புலம்­பெ­யர்ந்து வாழும் தமிழ் மக்கள் எதிர்­நோக்கும் கலா­சார சீர­ழி­வு­களை புடம்­போட்டுக் காட்­டி­யுள்­ளது. மேலும் அது புலம்­பெயர் வாழ் மக்­களின் வாழ்க்­கை­யினை சித்­த­ரிக்கும் பெரி­ய­தொரு தொகு­தி­யா­கவும் இருக்­கி­றது.

குறித்த கதைக்­காக இந்­தி­யாவில் ‘லில்லி தேவ­சி­கா­மணி நினை­வி­லக்­கிய விருது’ கிடைத்­தது. எனினும் கிடைத்த பணப்­ப­ரிசை இந்­தி­யாவில் நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த எழுத்­தாளர் ஒரு­வரின் சிகிச்­சைக்­காக அன்­ப­ளிப்பு செய்தேன். மேலும், அந்தக் கவிதைத் தொகு­திக்­காக சுவிட்­ஸர்­லாந்து கலா­சார அமைச்­சி­னாலும் கௌர­விக்­கப்­பட்டேன்.

எனது இரண்­டா­வது சிறு­கதைத் தொகுதி ‘சுவர்க்­கங்­களும் தண்­டிக்­கின்­றன’. இது 2002ஆம் ஆண்டில் வெளி­வந்­தது. அதில் இடம்­பெற்­றுள்ள ஒரு கதை குடி­போ­தைக்கு எதி­ரா­ன­தாக அமைந்­தி­ருக்­கி­றது. எனவே, அந்தக் கதை பேர்ன் பல்­க­லைக்­க­ழக பாடத்­திட்­டத்­திலும் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளது.

கேள்வி: சுவிட்ஸர்­லாந்தில் தங்­களின் நூல்­களை வாசகர் மத்­தியில் கொண்டு சேர்ப்­பதில் எவ்­வா­றான சவால்­களை எதிர்­கொண்­டீர்கள்?

பதில் : நான் நூல்­களை வெளி­யி­ட­வ­துடன் மாத்­திரம் நின்­று­வி­டாமல், அவற்றை மக்கள் மத்­தியில் கொண்டு சேர்ப்­ப­தற்­கான அணு­கு­மு­றை­யொன்­றையும் மேற்­கொண்டேன்.

ஆகை­யினால், வார இறுதி நாட்­களில் அங்­குள்ள ஒவ்­வொரு மாநி­லங்­க­ளிலும் புத்­தகக் கண்­காட்­சி­யையும் நடத்­தினேன்.

எனவே, புத்­தகக் கண்­காட்­சிக்­காக எனது நூல்­களை மாத்­தி­ர­மல்­லாமல் இன்னும் சில பிர­பல எழுத்­தா­ளர்­களின் புத்­த­கங்­க­ளையும் இறக்­கு­மதி செய்து அத­னையும் கண்­காட்­சியில் விற்­பனை செய்தேன். அக்­கா­லப்­ப­கு­தியில் சுவிட்ஸர்­லாந்தைப் பொறுத்­த­வ­ரையில் அங்கு தமிழ் நூல்­களைப் பெறு­வ­தென்­பது மிகவும் சிர­ம­மான விட­ய­மாகும்.

எனவே, இந்தக் கண்­காட்­சி­யி­னூ­டான புத்­தக விற்­ப­னையில் நான் பாரி­ய­ள­வான சிர­மங்­களை எதிர்­கொள்­ளாது, மக்கள் மத்­தியில் நூல்­களைக் கொண்டு சேர்த்தேன். எனவே, அது எனக்கு பொரு­ளா­தார ரீதி­யி­லான வச­தி­களை ஏற்­ப­டுத்­தி­ய­துடன், மக்கள் என்னைப் பற்றி அறிந்து கொள்­வ­தற்கும் பெரிதும் வழி­கோ­லி­யது. எனவே, படைப்­பாளி படைப்­பா­ளி­யாக மாத்­திரம் இருந்தால் அதில் வெற்­றி­பெற முடி­யாது. படைப்­பாளி வியா­பா­ரி­யாக மாறும்­போ­துதான் இரு­வி­த­மான வெற்­றி­க­ளையும் கண்­டு­கொள்ள முடியும்.

கேள்வி: சுவிட்ஸர்­லாந்து பல்­க­லைக்­க­ழக பாடத்­திட்­டத்தில் இணைக்­கப்­பட்­டுள்ள ‘இரண்­டா­வது தாய­கத் தில் தம­ிழர்­களும் ஆல­யங்­களும்’ எனும் நூலில் தங்கள் பங்­க­ளிப்பு எவ்­வாறு அமைந்­துள்­ளது?

பதில்: அதா­வது புலம்­பெ­யர்ந்து வாழும் இலங்கைத் தமி­ழர்­களின் வாழ்­வி­யலை பல்­க­லைக்­க­ழக பாட­வி­தா­னத்­திற்­கு­ரிய நூலாக்கும் முயற்­சியில் மார்ட்டின் தௌமான் என்­கிற பேரா­சி­ரியர் ஈடு­பட்­டி­ருந்தார்.

ஜேர்­ம­னிய மொழியில் ‘டெம்பில் உன் தமிழன் என் சுவைத்தல் ஹைமாட்’ (இரண்­டா­வது தாய­கத்தில் தமி­ழர்­களும் ஆல­யங்­களும்) எனும்

தலைப்­பி­லேயே அந்த நூலை தொகுக் கும் பணியில் ஈடு­பட்­டி­ருந்தார்.

எனவே, எனது சிறு­க­தை­யொன்றை பல்­க­லைக்­க­ழக பாடத்­திட்­டத்தில் பாட­மாக்க விரும்­பு­வ­தாகக் குறிப்­பிட்டு அவர் எனக்கு மின்­னஞ்சல் ஒன்றை அனுப்­பி­யி­ருந்தார்.

அதற்­கி­ணங்க, அதற்­கான அனு­ம­தியை நான் வழங்­கினேன். ஆகை­யினால் எனது சிறு­கதை அந்த நூலில் இடம்­பெற்­றுள்­ளது. அந்­நூலில் இடம்­பெற்­றுள்ள ஒரே­யொரு தமிழ் படைப்­பா­ளியின் சிறு­க­தை­யென்றால் அது என்­னு­டை­ய­துதான். ‘எதிரி யார்’ என்­கின்ற சிறு­க­தையே அந்­நூலில் பதி­வா­கி­யுள்­ளது.

கேள்வி: சிறு­கதை தவிர, சுவிஸ் சினி­மாத்­து­றையில் தாங்கள் பங்­க­ளித்­தி­ருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றதே…

பதில்: எனது நூலைப்­ ப­டித்த திரைப்­ப­டத்­து­றையைச் சேர்ந்த இருவர் என்னை சந்­தித்து, சுவிஸ் மக்­க­ளையும் தமி­ழர்­க­ளையும் இணைத்து திரைப்­படம் ஒன்று தயா­ரிக்­க­வுள்­ள­தா­கவும் அப்­ப­டத்தில் என்னை திரைக்­க­தைக்­கான ஆலோ­ச­க­ராக கட­மை­யாற்­று­மாறும் வேண்­டிக்­கொண்­டனர்.

பாரி­ய­ள­வான நிதி முத­லீட்டில் தயா­ரிக்­க­ப்பட்ட Madly in love என்ற அந்த திரைப்­ப­டத்தில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பிர­பல நடிகை நடித்­தி­ருந்தார். அத்­தி­ரைப்­ப­டத்­திற்­கான பாடல் ஒன்­றையும் நான் எழு­தி­யுள்ளேன். அப்­பா­ட ­லுக்­காக இரண்­டா­யிரம் சுவிஸ் பிராங் ­கு­களை எனக்கு ஊதி­ய­மாக வழங்­கினர்.

கேள்வி: ஏரா­ள­மான கவி­ஞர்கள் உரு­வா­கின்ற போதிலும் சிறு­கதை எழுத்­தா­ளர்­களின் எண்­ணிக்கை குறைவ­டைந்­து­கொண்டு செல்­வ­தற்­கான காரணம் என்ன?

பதில்: கவிதை என்­பது சிறு­நொ­டி யில் எழு­தக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. ஆனால், சிறு­கதை அவ்­வா­றில்லை. திட்­ட­மிட்டு அதன் உத்தி, நடை, கரு, இவை­க­ளை­யெல்லாம் பின்­பற்றி எழு­தக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. சர்­வ­தேச தரத்தில் நோக்­கினால் ஒரு சிறு­கதை நான்கு அல்­லது ஐந்து பக்­கங்­க­ளா­க­வா­வது அமைய வேண்டும்.

ஆனால், கவி­தை­களை ஒரு பக்­கத்­திலும் எழுத முடியும். எனவே, வேக­மான இந்த உல­கத்தில் நுட்­பங்­களைப் பின்­பற்றி சிறு­கதை எழுதும் பொறுமை எழுத்­தா­ளர்­க­ளிடம் இல்லை என்றே கரு­து­கிறேன்.

எனினும், ஆழ­மான நுட்­பத்­து­டனும் சமூக அக்­க­றை­யு­டனும் கவிதை படை க்கும் கவி­ஞர்­களும் இருக்­கி­றார்கள். உண்­மை­யான கவி­தைகள் என்­பது நாம் பூமியில் இருந்­து­கொண்­டி­ருக்க எமது ஆத்மா பிர­பஞ்ச வெளியில் பிர­வே­சிக்க வேண்டும்.

 

http://www.supeedsam.com/?p=26336

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12734053_1048408145223199_29933350425599 தாழம் பூ

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகனே என் மகனே.... நடிகர் விவேக்கின் உருக்கமான கட்டுரை

சில மாதங்களுக்கு முன்பு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னகுமார் (14), காலமானார். இதனையடுத்து தன் மகனைப் பற்றி இணையத்தளத்தில் விவேக் எழுதியுள்ள கட்டுரை:

சமீபத்தில் மறைந்த... என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி மனம் திறக்கச் சொல்கிறார்கள். இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..? அவனை நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறது. கண்கள் தளும்புகிறது. எழுதும் பேனா அழுது தீர்ந்துவிடுகிறது. இதயம் சோர்ந்துவிடுகிறது. அடுக்கடுக்காக அவன் நினைவுகள் கண்ணீர்மேகமாய் என்னைச் சூழ்ந்துகொள்கின்றன.

Vivek's heart touching article on his late son
பிரசன்ன குமார் - என் பிரசன்னா. 13 வருடங்கள் ஆயிற்று; 14 -ம் வருட வாழ்வு போயிற்று. அக்டோபர் 23 -ல் பிறந்தவன். அக்டோபர் 29 -ல் விடைபெற்றான். 14 வருடங்களின் வருடல் இனி என் நினைவுப்பரப்பில் என்றும் கதறல். இன்னும் கொஞ்சம் அதிகம் பழகி இருக்கலாமோ? இத்தனைக்கும் அவன் நிறையப் பேசுபவன் அல்ல. அவன், அவனது பியானோ, அமர்சித்ரகதா, வீடியோ கேம்ஸ், கால்பந்து, குறிப்பிட்ட சில நண்பர்கள் என்ற ஒரு சிறிய வட்டம் அவன் உலகம்.

எப்போதாவது பேசுவான். கேமரா, பேட்டி என்றால் கூசுவான். அவனுக்கு எல்லாமே அவன் அம்மாதான். அந்த வளரிளம்பருவக் குழந்தைக்கு, அம்மாமேல் கால்போட்டுக்கொண்டால்தான் தூக்கம் வரும்.

வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது மனிதருக்கு தோழமை பாப்பா! தெருவில் திரியும் நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்துவந்து, ‘இதை வளர்ப்போம் டாடி!' எனும்போது கண்கள் மிளிர்ந்து நிற்பான். அவனுடன் நான் பேசிய பேச்சுகள் மிக மிகக் குறைவு. காரணம் அவன் பதில்கள் ‘ஓ.கே.', ‘உம்', ‘சரி', ‘மாட்டேன்' என ஒற்றை வார்த்தையில் முடிந்துவிடும். ஃபோட்டோவுக்கு நிற்க மாட்டான்; கட்டாயப்படுத்தி நிற்கவைத்தாலும் முகத்தை அஷ்டகோணலாக்கி... அந்த ஃபோட்டோவை பயன்படுத்த முடியாமல் செய்துவிடுவான். அவனுக்குத் தெரியாமல், அவன் புத்தகம் படிக்கும்போது, பியானோ வாசிக்கும்போது, வீடியோ கேம்ஸ் விளையாடும்போது, தூங்கும்போது என எடுத்த ஃபோட்டோக்கள்தான் என் ஃபோனில் உள்ளன இப்போது.

அவனுக்கு ஒரு நல்ல நண்பனாக இருக்க நான் போராடிக்கொண்டிருந்தேன். அவனைத் திட்டியதில்லை, அடித்ததில்லை, ஏன், அவனைக் கொஞ்சியதும் இல்லை. காரணம் அவன் விடுவதில்லை. அவன் அம்மாவே அவனை முத்தமிட முடியாது. பிடிக்காது. விடமாட்டான். அது என்ன கூச்சமோ?!

தன்னைச் சுருக்கிக்கொண்டு வாழ்ந்தாலும் அவனிடம் ஏதோ ஒரு புனிதம் இருந்தது. அவனை எல்லோருக்கும் பிடித்துப்போனது. இளையராஜா, அவனை அழைத்து மடியில் அமர்த்தி ஃபோட்டோ எடுக்கச் சொல்வார். ஏ.ஆர்.ரஹ்மான் அவனைப் பியானோ அருகில் நிற்கவைத்து ஃபோட்டோ எடுப்பார். ‘இவனுக்கு 18 வயசு வரும்போது முழு இசைக்கலைஞன் ஆகிவிடுவான்' என்பார் (முந்திக்கொண்டானே!). ஹாரிஸ் தனது ஸ்டுடியோவைச் சுற்றிக் காட்டுவார். தன்னோடு அணைத்து ஃபோட்டோ எடுக்கச் சொல்வார். அவர் மகன் நிக்கோலஸும் இவனும் அப்துல் சத்தார் மாஸ்டரிடம் பியானோ கற்றுக் கொண்டிருந்தார்கள்.

அது ஒரு காலம். ஷுட்டிங் இல்லாத நாட்களில் நானே அவனை பியானோ கிளாஸுக்குக் கூட்டிச் செல்வேன். டீக்கடையில் பட்டர் பிஸ்கெட்டும், டீயும் வாங்கிக் கொடுப்பேன். அவன் அம்மாவுடன் சென்றால், இந்தச் சின்னச் சின்ன சந்தோஷங்கள் கிடைக்காது என்பான்.

இந்த வருடம் ஏழாவது கிரேடு பியானோ எக்ஸாம் எழுத வேண்டியது. எட்டாவது கிரேடுடன் நிறைவடைகிறது. இப்போது அந்த பியானோ, வாசித்தவன் எங்கே போனான் என்று யோசித்துக் கிடக்கிறது. அவன் விளையாடிய ஃபுட்பால் உதைக்க ஆள் இல்லாமல் ஹாலின் மூலையில் உறைந்து கிடக்கிறது. அவன் விளையாடிய வீடியோ கேம்ஸ், வீணே கிடக்கிறது. தூசி படிந்த அவன் புத்தகங்கள், அயர்ன் செய்துவைத்த யூனிஃபார்ம்கள், பிடித்து வாங்கிய ஷூக்கள்... என வீட்டின் ஒவ்வொரு சதுர அடியிலும் கசிந்துகொண்டிருக்கின்றன அவன் ஞாபகங்கள். தோட்டத்தில் உலவினாலும் தொடர்ந்து வரும் சோகங்கள்.

இதுவரை ‘புத்திர சோகம்' என்பது ஒரு வார்த்தைத் தொடர் எனக்கு. இப்போதுதான் புரிகிறது அது வாழ்வைச் சிதைக்கும் பேரிடர். கையில் முகர்ந்த வாழ்வெனும் வசந்தத்தை விரலிடுக்கில் ஒழுகவிட்டுவிட்டேன். இழந்த பின்னர் இன்னும் அடர்த்தியாய் மனதில் இறங்குகிறது மகனின் அருமை. அவன் விட்டுச்சென்ற வெறுமை.

அருமைப் பெற்றோரே... உங்களுக்கு சில வார்த்தைகள்..!

குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள்.

உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம். கார் மெக்கானிஸத்தில் காதல்கொண்ட மகனை டாக்டர் ஆக்கப் போராடாதீர்கள். ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிப்புக்குப் பச்சைக்கொடி காட்டி, தொடர்ந்து பக்கபலமாக இருங்கள். அவன் வாழ்வு ஒரு மகிழ்ச்சிப் பூங்கா ஆவதைப் பார்ப்பீர்கள். தோனியைப் பார்த்துவிட்டு, பையனை கிரிக்கெட் கோச்சிங் அனுப்பாதீர்கள். அவனுக்கு ஓவியத்தில் விருப்பம் இருக்கலாம். டென்னிஸில் காதல்கொண்ட மகளை பரதநாட்டியத்துக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய வேண்டாம்.

அவர்கள் ஆன்மிகமும் படிக்கட்டும்; அனிருத்தும் கேட்கட்டும். வீட்டுக்குள் அடைத்து, ஏ.சி. ரூமில் டிவி பார்த்துக்கொண்டே சிப்ஸ் கொறிக்க வைக்க வேண்டாம். தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும், கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்!

பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்த்தெடுங்கள். எதிர்காலம் புதிர்காலமாகும் சூழலில், அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம். ‘ரேப்பிஸ்ட்'களுக்கு உதவித்தொகையும், தையல் மெஷினும் வழங்கும் ஜனநாயகம் இது. பெண்கள், அவர்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

பாரதியாரையும், விவேகானந்தரையும் உங்கள் வீட்டுச் சின்னஞ் சிறு மனிதர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். மனம் வளம் பெறும். மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு... இவை உயிர், உடல் காக்கும் நம் மண்ணின் மூலிகைகள். அதை நம் பாட்டி கொடுத்தபோது வாங்கிக் குடித்தோம். நம் பிள்ளைகளுக்குக் கொடுக்க மறந்தோம். ஃபார்மஸியில் மாத்திரைகள் வாங்கி விழுங்கினோம். இனியாவது புராதனங்களை மீட்டெடுப்போம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமூட்டுவோம், அறிவூட்டுவோம், அன்பூட்டுவோம்!

பின் குறிப்பு: எப்போதுமே முத்தமிட அனுமதிக்காத என் மகன்... ஒரு முறை அனுமதித்தான். அவன் இறந்த பின், எரியூட்ட அனுப்பும் முன், அவன் நெற்றியில் ஒருமுறை முத்தமிட..!

ஒவ்வொரு சனிக்கிழமையும் சாயி பாபா கோவிலில் அன்னதானம் செய்து வந்தோம். வருகிறோம். அந்த அன்னதானத்தில் சிப்ஸ் கொடுக்குறது என்னோட பையன் பிரசன்னா. அவன் ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது கூட அன்னதானம் பண்றத நிறுத்தல. ரொம்ப விரும்பி அவன் அதை செய்றதைப் பாத்திருக்கேன். அதனால அவன் திரும்பி வர்ற வரைக்கும் அவனோட பணியை நானே செய்யலாம்னு நெனச்சு, நான்தான் அப்போ சிப்ஸ் கொடுத்துட்டு இருந்தேன். எப்பொழுதும் நானே கொடுக்கும்படி ஆகுமென்று நினைக்கவில்லை.

வீட்டுல எப்பவாச்சும் இரவு கட்டில்ல உக்காந்து நாங்க ரெண்டு பெரும் தலையணை சண்டை போடுறது உண்டு. நான் ஃப்ரீயா இருக்கும்போது என்கூட சண்டை போட அவனும், அவன் கூட சண்டை போட நானும் விரும்புவோம். அவன் இறுதி நாட்களை எடுத்துக்கொண்ட மருத்துவமனை கட்டில், ரிமோட்டின் உதவியால் மேலும் கீழும் அசையுற மாதிரி இருந்துச்சு. அந்த சூழ்நிலையிலும் அந்தக் கட்டிலை ரிமோட் ஊஞ்சலா மாத்தி விளையாடிட்டு இருந்தோம். அந்த கட்டில் இப்போது அவனைத்தேடும். என் வீட்டுக் கட்டிலும், தலையணையும் எப்போதும் அவனைத் தேடும்.

‘The Good, The Bad and The Ugly' என்றொரு இத்தாலிய சினிமா. நான் வீட்டில் இருக்கும்போது யார் என்னை தொலைபேசியில் அழைத்தாலும் எனது பதில், பிரசன்னாவுடன் ‘The Good, The Bad and The Ugly' படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதுதான். எத்தனை முறைதான் அந்தப் படத்தைப் பாப்பீங்க என்று அவர்கள் கேட்கும் கேள்வியின் பதிலை இப்போதுச் சொல்கிறேன். இசையமைப்பாளர் ‘என்னியோ மொரிக்கோன்' இசையமைத்த அந்தப் படத்தின் பின்னணி இசைக்காகவே அத்தனை முறைப் பார்ப்பான் என் பிரசன்னா. அவனோடு சேர்ந்து நானும். இனி யாருடன் பார்ப்பேன்? யாருக்குப் புரியும் அவனது ரசனையும், அவன் ரசித்த அந்த இசையும்!

நடிகன் என்ற கர்வம் சிறிதேனும் என்னிடம் அவ்வப்போது வெளிப்பட்டு விடும். நடிகனின் மகன் என்ற கர்வம் ஒருபோதும் அவனிடம் வெளிப்பட்டது கிடையாது. எங்கள் ஏரியா சிறுவர்களுடனேயே தொடர்ந்து விளையாடும் பழக்கம் உள்ள அவனுக்கு நண்பர்களும் அவர்களே. அடிக்கடி என்னிடம் பணம் வாங்கிக் கொள்வான். வாங்கும் பணத்தை என்ன செய்கிறான் என்று விசாரித்தபோது, இருபது ரூபாய்க்கு கிடைக்கும் டிவிடி - க்களை வாங்கி அதில் வீடியோ கேம்ஸ் ஏற்றி அவன் நண்பர்களுக்கு கொடுக்கிறான் என்று தெரிந்து சந்தோஷப்பட்டேன். சந்தோஷப்படுகிறேன்.

நேரத்திற்கு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லை எனக்கு. எப்போதாவதுதான் பேசும் அவன், அடிக்கடி பேசும் வார்த்தை. ‘அப்பா! தண்ணி குடிச்சீங்களா?'. என் கைபேசியில் ஒரு அப்ளிகேஷன் வைத்திருக்கிறேன். நேரத்திற்கு தண்ணீர் குடிக்கச் சொல்லி அலெர்ட் செய்யும் என்னை அது. இப்போது அந்த அப்ளிகேஷன் ‘Please drink water Daddy by prasanna' என்று என்னை அலெர்ட் செய்கிறது.

மனம் திறந்து : கடைசி முத்தம்!

  • கருத்துக்கள உறவுகள்
On 21/02/2016 at 5:19 PM, யாயினி said:

12250032_547945175369287_764548256585652பனை மரங்களின் அழகு'' 

எத்தனை இரசனையுடன்  நட்டுள்ளனர்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எத்தனை இரசனையுடன்  நட்டுள்ளனர்

உங்களைதான் இப்ப பிடிச்சு நடவேனும் ....
இவளவு நாள் கொம்புடரில் இருக்கிறீங்கள் 
இதுகூட புரியவில்லையா ?

இது கொம்புட்டர் மிர்றோர் இமேஜ் 
ஒரே படம் இருமுறை இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

அது விளங்குது. ஒரு பக்கத்துக்கு   பாத்தால் அதுகூட உள்வளைந்து காணப்படுகிறதே அதைத்தான் எழுதினேன். அதுகூட கணணி விளையாட்டா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Mars recalls chocolate in 55 countries

Mars and Snickers chocolate bars

Chocolate maker Mars has ordered a recall of chocolate products in 55 countries.

In the UK the products affected include funsize Mars and Milky Way bars and boxes of Celebrations.

In the Netherlands Mars and Snickers bars were also affected.

It comes after a customer in Germany found bits of plastic in a Snickers bar in January. The plastic was traced back to the Mars factory in the southern town of Veghel in the Netherlands.

A Mars Netherlands spokesperson said: "We cannot be sure that this plastic was only in that particular Snickers. We do not want any products on the market that may not meet our quality requirements, so we decided to take them all back."

The recall only involved products manufactured at the Dutch plant.

It covers mostly countries in Europe and does not extend to the US, where Mars is based.

The company has not said how many bars are affected or how much the recall will cost.

The UK's Food Standards Agency (FSA) advised consumers not to eat the affected products and to contact Mars' consumer care team on 0800 952 0084, recall@uk.mars.com or by post at Mars R1, FREEPOST, Mars Consumer Care.

The products in the UK include Mars, Milky Way, Snickers and Celebrations in various package sizes:

  • 250g bags of Mars Funsize (product code AV39F) with a best before date from 11/09/16 to 02/10/16
  • 227g bags of Milky Way Funsize (product code AV39J) with a best before date of 02/10/16
  • Variety Funsize - Family Favourites (product code AV33W) with a best before date from 29/05/16 to 14/08/16
  • Variety Funsize - Party Mix (product code AV33T) with a best before date from 15/05/16 to 07/08/16
  • 388g boxes of Celebrations (product code AJ46N) with a best before date from 08/05/16 to 28/08/16
  • 245g boxes of Celebrations (product code AJ46R) with a best before date from 08/05/16 to 28/08/16
  • 2.5kg catering cases of Snickers Miniatures (product code YF413) with a best before date of 07/08/16 and 14/08/16

Mars is one of the world's biggest food companies, with 29 chocolate brands including M&M's, Galaxy, Twix, Bounty and Maltesers. It also makes Wrigley gum, Uncle Ben's Rice, Dolmio pasta sauce and Pedigree pet food.

The company is one of the largest privately owned businesses in the US and had global sales of $33bn last year.

http://www.bbc.com/news/business-35642075

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அவள் குழந்தையாகிறாள்.
~~~~~~~~~~~~~~~~~~`~~~~~~~~~~~

12728765_10156555378835717_5566135930475

கருவறை கிழித்துப்
பெருவலி கொடுத்து
கூச்சலிட்ட
குழந்தை முகம்பார்த்து
பொக்கிஷமாயவள்
பெற்றவலி மறந்து
பொங்கியணைத்து
புது யுகமானாள்..

வேதனை மடியில்
இரவும் பகலும்
ஈடு கொடுத்து
இடையில் தாங்கி
நடைகள் மறந்து
தொடையில் தாங்கியும்
துன்பம் மறந்த அம்மா...

போதும் போதும்
என்றாகுமுன்னே
பொன்னும் மண்ணும்
பொலிவுற சேரும்
இனிதான வாழ்வும்
இணைத்தவள்
பாவி
பேரன் பேத்தியை
உயிராய் வளர்த்து
காலத்தோடு 
கலந்தே
காற்றுப்போல
எடையும் குறைந்து
மீண்டுமவள்
குழந்தையாகிறாள்..

பிள்ளைகளேனோ
பிரிவினை காட்டி
முதியோர் 
இல்லம் தேடுவதில்
முன்னோடிகளாக.....
.
.
அருள் நிலா வாசன்.
22.02.2016

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12744378_1041600295911973_45216075025239

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே மிக மட்டமான பிற்போக்குத்தனங்களின் குகையாகக் காணப்படும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டுமொருமுறை மிக அழுத்தமாக, தனது உளப்பிறழ்வு மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது.
"கலாசாரத்தைக்" காப்பாற்றுமுகமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெண் மாணவர்களும் உத்தியோகத்தர்களும் கட்டாயம் சேலை அணிய வேண்டும் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அவ்வாறு அணியாதவர்களைக் "கண்காணித்து" அறிவுறுத்தப் போவதாக வேறு மிரட்டுகிறது. டெனிம் அணியக்கூடாது, ஆண் மாணவர்கள் தாடி வைக்கக்கூடாது என்று மேலும் சில விதிமுறைகளையும் வகுத்துள்ளது.
கிறித்துவ மாணவிகள், முசுலிம் மாணவர்களுக்கு இது செல்லுபடியாகுமா என்று விளக்கமில்லை.
பண்பாடு/கலாசாரம் என்றவுடன் பெண்களின் உடையையும் ஆட்களின் வெளித்தோற்றத்தையும் மட்டுமே தூக்கிப்பிடிப்பதென்பது தற்செயலானதோ அறிவுகெட்டத்தனமானதோ அல்ல; அது மிக மோசமான பின்னணிகளைக்கொண்ட வன்முறை.
எது உண்மையான மனிதப் பண்பாடு? எது தமிழருக்கு நாகரிகம்?
மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் தொல்லைக்குட்படுத்தும் விரிவுரையாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பேர்போன பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறியப்படுகிறது. தமக்குச் சேவகம் செய்யாத மாணவர்களைத் தேர்வுகளிலும் வேறு விதமாகவும் தண்டிக்கும் ஆண்டான் -அடிமை முறை இறுக்கமாக நிலவும் பல்கலைக்கழகம் அது. சமூகத்தின் எந்தவொரு போராட்டத்திற்கும் சீர்திருத்தத்திற்கும் முற்போக்கான எதிர்ப்புகளுக்கும் முன்னே வந்து நின்று தோள்கொடுக்காத; குரல் கொடுக்காத பேராசிரியப் பெருந்தகைகளின் கூடாரம் அது. அப்படியான போராட்டங்களில் முன்னிற்கும் மாணவர்களை அச்சுறுத்துவதிலும் முன்னிற்பவர்களின் கூடாரமும் அதுதான்.

பல்கலைக்கழகத்தின் இவ்வாறான செயல்கள்தாம் தமிழரின் - மனிதரின் நாகரிகத்துக்கும் பண்பாட்டுக்கும் முற்றிலும் எதிரானவை.

தாம் அடிமுதல் நுனிவரை மனித நாகரிகத்துக்கும் பண்பாட்டுக்கும் எதிராக நிற்பதை மறைத்து, தமது கீழ்த்தரமான வன்முறைகளை மூடிவைத்து நாடகமாடுவதற்காகவே இந்த "கலாசாரத்தைக் காப்பாற்றும்" வேடத்தை ஏற்கிறார்கள்.
மாணவர்களைச் சேலை அணியவோ, புர்கா/அபாயா அணியவோ, சேலை அணிய வேண்டாம் என்றோ, அபாயா/புர்கா அணிய வேண்டாம் என்றோ, வேட்டி அணிய வேண்டாம் என்றோ எந்தப் பல்கலைக்கழகம் கட்டாயப்படுத்தினாலும் அந்த அதிகாரத்தை மாணவர்கள் மறுக்க வேண்டும். பெற்றோர்களும் மக்களும் எதிர்க்க வேண்டும். ஆடையைத் திணிப்பது பாசிசத்தின் முதல் நகர்வு.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்த வன்முறையை மாணவர்களும் பெற்றோரும் மக்களும் அம்பலப்படுத்தி எதிர்த்து நிற்க வேண்டும். இப்படியே விட்டால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறிதேனும் எஞ்சியிருக்கும் பண்பாட்டையும் நாகரிகத்தையும் காப்பாற்றவே முடியாமற் போகும் ஒரு நிலை ஏற்பட்டுவிடும்.

இப்பதிவின் நியாயங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மட்டுமல்ல, மாணவர் மீது "கலாசாரம்" என்ற கபட முகமூடியுடன் ஆடைகளைத் திணிக்கும் பாசிசத்தன்மைகொண்ட எல்லாப் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும்.

இப்பதிவின் நியாயங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மட்டுமல்ல, மாணவர் மீது "கலாசாரம்" என்ற கபட முகமூடியுடன் ஆடைகளைத் திணிக்கும் பாசிசத்தன்மைகொண்ட எல்லாப் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும்

By - Muralitharan Mayuran Mauran

 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

 

 

இயன்றவர்கள் பகிருங்கள். உதவுங்கள்.....................

 

12795372_1136722616368511_139244556417461779837_1136722639701842_141310784490860

 

 


Student urgently looking for stem donor within two months to save her life....
பிரித்தானியாவில் மரணத்துக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் உயிருக்கு போராடும் இலங்கை பெண்

இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிர்வாழும் நிலையில் உள்ள பெண் ஒருவர் தனது உயிரை காப்பாற்ற (குருத்தணு) Stem தானம் செய்பவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானியாவின் லண்டனில் உள்ள வோல்தம்ஸ்டோ (Walthamstow) பகுதியை சேர்ந்தவர் வித்யா அல்போன்ஸ்.
இலங்கையை சேர்ந்த இவர் அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கண் தொடர்பாக படித்து வருகிறார்.

காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரது இரத்தத்தை பரிசோதித்து பார்த்த மருத்துவர் லூக்கிமியா என்னும் இரத்த புற்றுநோயால் வித்யா பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகுதியாக உள்ளதால் ஏற்படும் இந்நோய் இரத்த அணுக்கள் உருவாகும் இடத்தில் ஏற்படுவதாகும்.

மேலும் சில மாதங்களில் அவர் இறந்துவிடுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வித்யா அதிர்ச்சியடைந்துள்ளார்.

சில வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யா மேல் சிகிச்சைக்காக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு உடனடியாக குருத்து அணு மாற்று சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரது சகோதரரின் குருத்து அணுவை மருத்துவர்கள் சோதித்ததில் 50 சதவீதம் மட்டுமே ஒத்துப்போனது.

எனவே அவருக்கு குருத்து அணு தானம் பெறுவதற்காக குருத்தணு தானம் தொடர்பான விழிப்புணர்வை அவரது பெற்றோர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக வித்யா கூறுகையில், ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் எனக்கு ஆதரவாக குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர். எனக்கு நம்பிக்கையாக உள்ளது.

இந்த விழிப்புணர்வு மூலம் எனக்கு நன்மை ஏற்படவில்லை என்றாலும் கண்டிப்பாக யாருக்காவுது நன்மை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

WEB Student urgently looking for stem donor within two months to save her life.............

A 24-year-old student has just two months to find a stem cell donor to save her life after being diagnosed with cancer.

Just a few months ago, Vithiya Alphons, who lives next to Banbury Reservoir, Walthamstow, had just started back at Cardiff University for her final year.

But just days into her final year studying optometry, with a graduate job at Specsavers secured, she was given the shattering news that she had an aggressive form of leukaemia.

She had just finished unpacking in her my new room when she came down with a fever, severe sickness and pain in her leg.

Vithiya then went to see her GP, had a blood test and was told she had Acute Myeloid Leukaemia, cancer of the blood.

She was put onto chemotherapy and her parents and brother Clime, 22, rushed to Cardiff to be by her side.

She added “From the first symptom to being diagnosed, it was only five days.

“I’d been absolutely fine before that.

“My whole life changed in under a week.

“I’m blessed to love what I do, so I was desperate to get back to my studies.

“I asked if I could go back to uni, and I remember the doctors looking at me and saying no way.

“They explained, ‘If you’d left it a few more days, your parents would have been organising your funeral this week.’

"It was a shock. I just thought, ‘thank god I’m still alive.’”

Over the next four weeks, Vithiya suffered from the chemotherapy which made her vomit six or seven times a day.

When she was well enough to travel, she was transferred back to London for treatment at University College Hospital.

Further tests showed the leukaemia was still there in her blood and she will relapse in under a year unless she has a stem cell transplant within two months.

Sadly her brother Clime is only a 50 per cent match.

Blood cancer charity Anthony Nolan is now searching the world’s donor registers for a donor whose tissue type matches Vithiya’s.

But the search is more complex due to her Sri Lankan background.

She added: “I knew it was going to be difficult because there aren’t many people from South Asian backgrounds who are signed up as donors.

“It’s frustrating but I don’t think it’s about Asian people not wanting to sign up.

“They just don’t know what it is – they think it’s taking something from your bone.

“We have to raise awareness.”

Vithiya’s friends and family have now launched social media appeals to raise awareness and recruit stem cell donors.

She said: “I’ve been blown away by the support.

“I’ve had thousands of messages from people I don’t even know, saying they’ve signed up and are spreading the word.

“Some of my friends are hoping to arrange donor drives at their universities.

"It’s been incredible.

“My family have been amazing too.

“My auntie and cousins have made home-cooked food for me every day and Clime has been my personal delivery man, bringing it into the hospital for me.

“I’m a big believer that everything happens for a reason.

"Maybe it will make sense one day.

"In the meantime I’m determined to raise awareness in my community.

“Even if it doesn’t help me, it could help someone else.”

Share article

To sign up to the donor list go to www.anthonynolan.org if you’re 16-30.

For more information phone the charity on: 0303 303 0303

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12670386_683662318402980_821214027475309

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12809522_10154557182855744_386411883947012495252_10154557246200744_340935980216112798829_10154557253755744_173723326131010430842_10154557253800744_289952536644512800376_10154557253775744_14728403185203528_10154557253825744_21169232875930420

செங்கை ஆழியான் காலமானார்
.
சாகித்திய ரத்னா செங்கை ஆழியான் (க. குணராசா) இன்று பிற்பகல் 2 மணியளவில் யாழ். பிறவுண் வீதி நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 02.03.2016 இடம்பெறவுள்ளன. 
.
செங்கை ஆழியான், இலங்கைத் தமிழ் இலக்கிய உலகில் ஓர் அத்தியாயமாகக் கொள்ளத்தக்கவர். யாழ். வண்ணார்பண்ணையில் உள்ள கலட்டியில் 1941 சனவரி 25இல் பிறந்தவர். தந்தை கந்தையா. வணிக முயற்சிகளில் ஈடுபட்ட ஒருவர்;. தாய் அன்னம்மா. குடும்பத்தில் இவர் எட்டாவது பிள்ளை. வீட்டின் கடைக்குட்டியும் இவர்தான். பாடசாலைக்கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் புவியியல் துறைசார்ந்த முதற்பட்டக் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். 1984 இல் முதுகலைமாணிப் பட்டத்தையும் 1991 இல் கலாநிதிப் பட்டத்தையும் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக்கொண்டார்.
.
இலக்கிய உலகு, கல்வி உலகு, நிர்வாக உலகு என இவரது ஆளுமை விரிவாக்கத்தை வகுத்து ஆராய முடியும். 50 நாவல்கள், 185 சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட பாடநூல்கள் எனப் படைத்த பெருமக்குரியவர். கடந்த 2016 சனவரி 25 ஆம் நாள் யாழ்ப்பாணம் பாரீர் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் பார்வையிடக்கூடிய இடங்கள் பற்றிய விவரண நூல் ஒன்றைத் தனது 75 ஆவது பிறந்த நாள் நினைவாக வெளியிட்டிருந்தார். இதுவே இவரது இறுதி நூல் வெளியீடாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
.
.அவரது இறுதிப் பேட்டி கோப்பாய் ஆசிரிய கலாசாலை தமிழ் சிறப்புக் கற்கை ஆசிரிய மாணவர்களுடன் அமைந்திருந்தது. 2012 ஆம் ஆண்டில் இந்தப்பேட்டி சுதந்திரமான முறையில் எனது மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது. கலாசாலையின் கணிப்பீட்டு முறைமைக்காக அன்று நான், எங்கள் பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு அவர்களின் துணையுடன் இப்பேட்டியை ஒழுங்கு செய்திருந்தேன். அன்று மிகவும் கஷ்டப்பட்டு ஆனால் மகிழ்ச்சிகரமாக அவர் எங்களுடன் பேசினார்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

It's February 29,  Every 4 years, February gets an extra day make the most of it.

 

leapday2012.jpg

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து போகும் லீப் வருடத்தில் குகிளின்  கொண்டாட்டம்....!!!

leap-year-2016-5690429188079616-hp2x.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Coming off of record-breaking warm weather Sunday, Toronto could soon see a big blast of winter weather.

A winter storm warning is now in effect for much of southern Ontario, with a low-pressure system from the U.S. expected to bring heavy snow into the region tomorrow.

On Monday afternoon Environment Canada upgraded a winter storm watch previously issued for much of the province, including Toronto, Hamilton and the regions of Halton, Peel, York and Durham.

PHOTOS

 
Toronto snow

“A low pressure system developing over Texas today will head towards the Lower Great Lakes and is expected to spread an area of snow into Southern Ontario Tuesday and Tuesday night,” an advisory from the national weather agency says.

The storm, Environment Canada says, has the potential to produce snowfall amounts between 15 and 30 centimetres in some areas, with the heaviest snowfall expected Tuesday night.

Freezing ice pellets and freezing rain are also possible.

Areas north of the GTA are already seeing some intense winter weather.

A snow squall warning was issued by Environment Canada Monday afternoon for a number of areas, including Barrie, Gravenhurst, Huntsville and Algonquin. The agency says heavy snow and strong wind gusts could result in zero visibility for drivers.

Motorists are advised to adjust to the conditions as snow may reduce visibility and create sloppy conditions on the roads.

“Surfaces such as highways, roads, walkways and parking lots may become difficult to navigate due to accumulating snow. There may be a significant impact on rush hour traffic in urban areas,” Environment Canada said.

cp24.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

12800217_10208838578270830_6648672854653

 

 

 

ராஜராஜ சோழனிடம் நான் வியந்தது


1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
.
ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985–1014) தான் தமிழ் வர லாற்றின் பொற்காலம்.பொருளாதாரம்,கட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது.
.
தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு
தன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை.
அந்த ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் க்ரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில்.இந்த பதிவு கோவில் கட்டப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது அல்ல அதை விட மிக கடினமான மற்ற துறைகளை பற்றியது.
.
தஞ்சை பெரிய கோவில் தன் காலத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரிய கோவில்.கோவில் கட்டுமானத்தில் மரம் இல்லை.
சுடு செங்கல் இல்லை பூராங்கல் இல்லை மொத்தமும் நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே (சிற்பங்கள் மற்றும் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் உட்பட அனைத்திலும் க்ரானைட் கற்கள்தான்).
.
1,30,000ton இடையுள்ள கற்களை கொண்டு கோவில் எழுப்ப வேண்டும் என்றால் கோவில் அஸ்திவாரம் எந்த அளவுக்கு பலமாக இருக்கவேண்டும்,அதேபோல் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கூர்நுனி வெற்று விமானம் (HollowTower , அதாங்க கர்ப்பக்கிரகத்துல இருந்து பார்த்தா விமானம் உச்சி தெரியும்) .விமானத்தின் உச்சியில் 80ton (ரொம்பலாம் இல்ல just 72574.779kg தாங்க) இடையுள்ள கலசத்தை ஏற்ற வேண்டும்,இது போக விமானத்தின் மேல் 8 நந்தி சிலைகள் வேறு. கட்டிடக்கலையின் உச்சபட்ச அறிவு இல்லாமல் இது சாத்தியம் ஆயிருக்காது.
.
1000 வருடங்களுக்கு முன் தஞ்சை கோவில் கட்டும்பொது அது தான் இந்தியாவின் மிகப்பெரிய விமானம் கொண்ட கோவில். விமானம் முழுக்க கிரனைட் கற்களை சிற்பமாக செதுக்க வேண்டும்,மேற்கூறிய 80ton காலசத்தை வேறு ஏற்ற வேண்டும் என்றால் மிக பெரிய சாரத்தை கோவில் விமானம் சுற்றி கட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து இருப்பார்கள், இது போக எவ்வளவு கயிறு,மரக்கட்டை வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும் , இவை அனைத்திற்கும் சிறந்த கணித அறிவு நிச்சயம் தேவைபட்டு இருக்கும்.
.
தஞ்சை பெரிய கோவிலை கட்ட 7 வருடம் ஆனது என்று வரலாறு சொல்கிறது.கோவிலை ஒரு லட்சத்திற்குக்கும் மேற்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் காட்டியுள்ளனர்,கைதிகள் மட்டும் இல்லை மக்களின் உதவியும் கூட.
.
கைதிகளை வைத்து தானே கட்டினார்கள் என்று ஏளனமாக நினைக்க வேண்டாம்,சற்று யோசித்து பாருங்கள்,இன்றைய நிலமையில் டெல்லி நகரில் ஒரு லட்சம் கைதிகளை வைத்து ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால், நம் மிலிட்டரி எவ்வளவு கட்டுகோப்பாக இருக்க வேண்டும், நம் பாதுகாப்பு எவ்வளவு நேர்த்தியாக இருக்கவேண்டும்.ஒரு நிமிடம் அசந்தாலும் நாட்டின் தலைநகரம் வரைபடத்தில் இருந்து காணாமல் போகிவிடும். எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகள் கலவரத்தில் ஈடுபடலாம்,தற்கொலை தாக்குதல் நடத்தலாம். எந்த அளவுக்கு சோழ காவல் படை செயல்பட்டு இருந்தால் 7 வருடமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரமஎதிரி நாட்டு கைதிகளை வைத்து தஞ்சை தலைநகரில் வேலை வாங்கி இருப்பார்கள்.
.
7 வருடம் கைதிகளை அடக்கிஒடுக்கி வேலை வாங்குவது சாத்தியம் இல்லை,அதேபோல் மற்ற கட்டிடக்கலை வல்லுனர்களும் மனம்கோணாமல் வேலை செய்ய வேண்டும்,மக்களிடம் இருந்தும் எதிர்ப்பு வராமல் பார்த்து கொள்ளவேண்டும் என்றால் HRM எனப்படும் மனித வள மேலாண்மையை மிக நேர்த்தியாக நடைமுறை படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஓங்கி உயர்த்து நிற்க்கும் கோவில் தான் சாட்சி.
.
சரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகள்,ஆயிரம் ஆயிரம் யானைகள்,குதிரைகள்,1000க்கும் மேற்பட்ட சிற்பிகள்,ஓவியர்கள்,ஆசாரிகள், கொல்லர்கள், நடனகலைஞர்கள் ,சமையல் வேலையாட்கள்,கற்களை பிளக்கும் வீரர்கள் என ஒரு மாபெரும் படைக்கும் 7 வருடம் உணவு வழங்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக 7 வருடம் சோழதேசத்தில் விவசாயம் மற்றும் பொருளாதாரம் தங்குதடை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஒரு முழு படைக்கும் தேவையான மருத்துவ வசதியும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.
.
இது மட்டுமா
.
7 வருடம் கோவில் கேட்ட தேவையான பொருட்செலவை ஈடுகெட்ட தொடர்ச்சியாக போர்களும் நடந்து இருக்கவேண்டும், வெற்றியும் அடைந்து இருக்கவேண்டும் .அதே நேரத்தில் எதிரிநாட்டு படையெடுப்பையும் தடுத்து இருக்க வேண்டும்.
.
ஒரு வேலை ராஜராஜ சோழனோ இல்லை மற்ற முத்த கட்டிடக்கலை நிபுணர்கள் இறந்தாலும் கோவில் வேலை தடை இல்லாமல் தொடர சுமார் 1000 வரைப்படங்களை தயார் செய்து இருக்கிறார்கள்.
.
கிரானைட் கற்களை செதுக்க என்ன வகை உளி, இரும்பு பயன்படுத்த வேண்டும் என்று முன்பே கொல்லர்கள் ஆராய்ச்சி செய்து இருக்கவேண்டும். அதே போல் கற்களை நெம்பிதூக்க உதவும் கம்பிகளை தயார் செய்ய வேண்டும் என்றால் பழுக்கக்காய்ச்சி உரமேற்றும் உத்தியும் தெரிந்திருக்க வேண்டும்.
.
தஞ்சையை சுற்றி 50 கிலோமீட்டருக்கு க்ரானைட் கற்கள் கிடையாது, கோவில் கட்ட தேவையான கற்களை திருச்சிக்கு சற்று தெற்கே 50km தூரத்தில் உள்ள நார்த்தாமலையில் இருந்து கொண்டு வரவேண்டும் என்றால் சோழதேசத்தின் சாலைகள் மற்றும் போக்குவரத்தும் மிக மிக தரமாகவும் சீராகவும் இருந்திருக்க வேண்டும்.
.
இது எல்லாவற்றையும் சமாளித்தலும் மிக பெரிய பூதம் ஒன்று உள்ளதே, அது தான் அரசியல். எந்த ஒரு சாம்ராஜ்யமாக இருந்தாலும் அரசியல் குழப்பம் இருக்காமல் இருக்காது.7 வருடம் அரசியல் குழப்பம் எதுவும் நடக்காமல் மிக நேர்த்தியாக ஆட்சி செய்திருக்க வேண்டும்.சோழ அரசியலில் பெண்களின் பங்கு கவனிக்கத்தக்கது ஆண்மகன்கள் கோவில் வேலையில் மும்முரமாக இருக்க பெண்கள் ( அதிகாரிச்சி ) அரசு இயந்திரத்தை திறன்பட இயக்கியுள்ளனர் என்று வரலாறு சொல்கிறது.
.
1000 வருடம் 6 நிலநடுக்கத்தை கண்டும் அசராமல் நிற்க்கும் தஞ்சை பெரிய கோவில் வெறும் தேவாலயம் இல்லை.
மருத்துவம்,பொருளாதாரம்,
கட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் மிக மிக சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள் 
.
தஞ்சை பெரிய கோவில் என்கின்ற மாபெரும் பொக்கிஷத்தை நமக்கு தந்த அருள்மொழிவர்மன் (எ) ராஜராஜ சோழனின் பெருமையை உலகம் முழுக்க பரப்புவோம்

 

படித்ததிலிருந்து........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10246421_10153667778978801_491914957318110314025_10153667778983801_8017834320875

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12814655_995244653897562_315797790533596

Wake up each day & Be thankful  for life!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.