Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

images.jpg

animated%2Bflowers%2B(101).gif

13244659_1179356548793031_76929899443928

13240484_10153702104607992_6539405211415

13220844_1029102767173114_84641012683179

13239213_1029514557103356_11606535139567

  • Replies 3.9k
  • Views 331k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13245459_1085927354811054_5543112727689611017555_954033474658674_568753152350535நெருப்பு விழுங்கிய நாட்கள் 

நான் செத்திருக்கிறேன்
............................................

பறை அடித்து ஊர் கூட்டி
ஒப்புச்சொல்லி அழவேண்டும்

தலை கீழாய் தோறணத்தை 
தொங்கவிடவேண்டும்

வாசலிலே 
கறிவாழை கட்டவேண்டும்

வெற்றிலையை புரட்டிவைத்து தாம்பூலம் கொடுக்கவேண்டும்

தென்னோலை வெட்டிவந்து
பன்னாங்கு பின்னவேண்டும்

கமுகைக்கிழித்து 
காவாங்கு கட்டவேண்டும்

அரப்பு வைத்து குளிக்கவேண்டும்
வாய்க்கருசி போடவேண்டும்
பந்தம் பிடிக்கவேண்டும்

கொள்ளிக்குடம் தூக்கிவந்து
கொழுத்தவேண்டும் 

யார் அங்கே

தமிழன் என்று சொல்லி
சாவீட்டுச் சீர் செய்து
தகணத்தில் போடுதற்கு 

எரிப்பதற்கு என் இனத்தில் யாருமில்லை
தவிக்கின்றேன்
இராணுவத்தின் டயர்தீயில் 
எரிவதெண்ணி

என்னை போல் லட்சம்பேர்
எரிகின்றார் டயர்த்தீயில்
நானும் செத்திருக்கின்றேன்
17-05-2016
ப.பார்தீ

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13227142_1604002073193840_15775635375167

13254054_1058179584261525_20716919486718

13230281_128896040854218_254711705161114

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2009 முள்ளிவாய்க்காலின் பதிவுகள்

13220829_572882469544939_621488957409873

நன்றி புகைப்படவியளாலர் அமரதாஸ்

13177571_572882499544936_788956323159512

13177823_572882496211603_423363396696930

13254198_572882516211601_61708617742129613244605_572882536211599_491781095532178

 

13164494_572882576211595_158138508865036

13221452_572882579544928_33264584391866713221596_572882612878258_94547918075935813241315_572882609544925_70807390243016213220837_572882646211588_37617972963796913256069_572882649544921_63646771493094513226893_572882686211584_81559066994338513241354_572882692878250_81212776121704413220913_572882719544914_52489130554259613240565_572882726211580_50550494565421513232988_572882776211575_58737157367732813244898_572882789544907_27110375866165013179085_572882802878239_597245551150189

2009 முள்ளிவாய்க்காலின் பதிவுகள்

13174180_572882819544904_333124480464532

13221597_572882836211569_489895276571473

13240523_572882892878230_814778162072163

13232905_572882906211562_376550933445778

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13178062_572882939544892_813533069276609

13173711_572882936211559_30087693048650213178569_572882999544886_24274523334141813230145_572883009544885_794065007882930

2009 முள்ளிவாய்க்காலின் பதிவுகள்

நன்றி புகைப்படவியளாலர் அமரதாஸ்

13239412_1604001909860523_41535299582113

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13220930_10153336723430834_3962128586535

நாம் ஏழாண்டுகளைத்தாம் கடந்திருக்கிறோம். துருக்கி தமக்கு இழைத்த கொடுமைகளை, இனப்படுகொலையை ஆர்மேனியர்கள் நுாறாண்டு கழித்தும் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். நீதியின் நிமித்தம் அதற்காக இன்றுவரைக்கும் சளைக்காமல் போராடுகிறார்கள். 

முள்ளிவாய்க்காலின் நெருப்பினை, நாம் நெஞ்சில் ஏந்திக் காப்பாற்றுவோம். அதனை எமது தலைமுறைகளுக்குக் கடத்துவோம். அனைத்துலக அரசியல் தகிடுதத்தங்களில், சுயநல கொடுக்கல்-வாங்கல்களில் எமக்கான நீதி தாமதமாகலாம். கிடைக்காமற் கூடப் போகலாம். ஆனால், அந்த மேலாதிக்க சக்திகள் எங்கள் முன் தங்கள் விழிகளைத் தாழ்த்திக்கொள்ளும்படியாக, தங்கள் தன்மதிப்பினைக் குறித்து எம்முன் உரத்து மொழியமாட்டாமல், கள்ளத்தனமான வார்த்தைகளால் கடந்து செல்லும்படியாக, ”கொலை பாதகர்களே!”என நாம் உரத்துக் கத்துவோம். “இனப்படுகொலை“என்ற வார்த்தையை உச்சரிக்க அஞ்சும் கனவான்களின் முன்பாக எமது சாட்சியங்களைக் கிடத்துவோம்.

மலையின்மீது ஒளிரும் சுடரென யாவரும் காணும்படியாக எரியட்டும் நமது நெஞ்சகத்து நெருப்பு.
...

 

தமிழ்நதி

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13237808_10208074776321382_4562008662174
 
by :- yarl akaithiyan

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13240170_568762856627978_849690557468030

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீர்த்த  அனைத்து உறவுகட்கும் என் கண்ணீர் அஞ்சலிகள்.

13239308_10209850207435721_3235883039593

13244139_480777582116924_713876188659220

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தாயக கனவுடன் உயிர் நீத்த மாவீரர்களுக்கும்,முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
18 may!

13232870_495373230655286_64294342302478113226974_495373240655285_71380306412612913256269_495373260655283_33749506277316113244822_495373277321948_12000304048562613094270_495373297321946_136002291991058

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலின் பதுங்குகுழியில் பிறந்த தன் பிள்ளைக்காக கண்ணிரண்டை இழந்த தாயொருத்தி பாடிய தாலாட்டு...

அன்னை ஒருத்தியின் அந்தநாள் தாலாட்டு

வான்மீது கூவி
வந்துவிட்ட எறிகணை
பதுங்குகுழி கடந்து
பனையில் மோதி வெடித்தது
பயமது கொள்ளாமல்
பதுங்குகுழி பிற
ந்த‌
பாலகனே கண்ணுறங்கு.

அலைகடல் தாண்டியே
ஐசிஆர்சி கப்பல் வந்தால்
பசிக்கு ஒரு
பால்மா பெட்டி வரும்
பவளமே..முத்தே
படுத்துறங்கு அதுவரை.

தேங்காய் பிடுங்கவென‌
சென்றுவிட்ட உன்னப்பா
செல்லிலே சிக்கி
சிதறியே விடாமல்
தெய்வமது துணையிருக்கும்
செல்லமே..சிங்காரமே
சிரித்தபடி நீயுறங்கு.

வெளியே போனால்
வேட்டு ஒலிகள்.
வேண்டாம் நமக்கு
வீண் வம்புகள்.
கனியே..தமிழே
கந்தக வாசத்து
காலம் பிறந்த ஒளியே
விழியை மூடி
துணிவாய் நீயுறங்கு.

கண்ணில்லா எறிகணையால்
கண்ணிரண்டை இழந்துவிட்ட‌
கண்னாஉன் தாயிவளின்
உள்ளமது குளிரவே
'அம்மா' எனவழைத்த‌
ஆதவனே நீயுறங்கு.

முதற்பிள்ளை உந்தனின்
முகம்காணா விட்டாலும்
அகம்காணும் அம்மாநான்
ஆரிராரோ பாடுகிறேன்
அற்புதமே கண்னுறங்கு.

உந்தனுக்கு நான் தாய்
எந்தனுக்கு தந்தைதானே தாய்.
இருவருக்கும் தாயாக‌
என்மகனே வளர்ந்துவிடு.
இப்போமட்டும் கண் மூடிவிடு.

தொட்டிலிட்டு தாலாட்ட‌
சேலை இல்லையே..
சேலையெல்லாம் உரப்பையாகி
பங்கருக்கு எல்லையே.
இந்த இடம் கூடநமக்கு
நிரந்தரம் இல்லையே.
இடம்பெயர்ந்து வேறிடம்
தடம்பதிப்போம் நாளையே.
இந்த நேரம் கண்மூடி
இதமாய் உறங்கு என் காளையே..
ஆராரோ..ஆரிவரோ...

 

13241263_1742930749253753_61192089978611
22.04.2010 மதியம் 12.39,
யோ.புரட்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் மண்மேடே!
===========================

சட்டத்தரணி இரா. சடகோபன்
ஆசிரியர், சுகவாழ்வு
++++++++++++++++++++++++++

(1 ) என்னருமைத் தாய்நாடே! இலங்கை மண்ணே
உன்னருமைப் பிள்ளைகளை உருக்குலைத்த மாயமென்ன?
மன்னர்களும் வீற்றிருந்த மருக்கொழுந்து பூமியிலே
மண்மூடிப்போனதென்ன மழலைகளும் அன்னையரும்
கண்மூடித்தனமாக கட்டவிழ்ந்த வன்முறையால்
காணாமல் போய்விட்ட கண்மணிகாள்! கண்மணிகாள்!
கண்கலங்கித் தவிக்கின்றேன் கதிகலங்கித் துடிக்கின்றேன்
என்மனதைத் தேற்றுவதற்கு என்ன தவம் நானிருப்பேன்

( 2) தென்கோடிச் சீமையிலே பலகோடி உறவிருந்தும்
சென்னை நகர்ப்பட்டினத்தில் செந்தமிழர் கொலுவிருந்தும்
உன்னுயிரை காப்பாற்ற உற்றார் தான் வந்தனரோ
கண்மணியின் துயர்துடைக்க கயவர் அவர் வரவில்லை
கண்துடைப்பு வித்தைகளை கட்டவிழ்த்து விட்டதுடன்
காதுகளில் பூச்சுற்றி நீலிக்கண்ணீர் தான் வடித்தார்
கதிரைகளில் அமர்ந்து கொள்ள குளறினார்
கொக்கரித்தார், குற்றினார், குதர்க்கம் செய்தார்

(3 ) என்னாட்டில் எனக்கில்லை சம உரிமை
தன்நாட்டில் தமக்கில்லை மொழியுரிமை
இந்நாட்டில் எதற்காக நீ பிறந்தாய் ?
பன்னாட்டில் பலவாறு தொழில் புரிந்தாய்
பொன்னாடும் பிறநாடும் பொற்குளங்கள்
கொண்டுவந்து இந்நாட்டை அணிசெய்தாய்
கண்ணாக காத்திருந்த என் நாட்டை
மண்மேடாய் மண்மேடாய் ஆக்கிவிட்டார்

(4 ) என் மண்ணே எனக்களித்த புதைகுழிகள்
கண்மணிகாள் படுத்துறங்கும் தலையணைகள்
விண்மீன்கள் இரவில்தான் கதை சொல்லும்
உன்கண்ணீரே வரலாற்றில் கதை எழுதும்
மண்ணாகப் போய்விட்டாய் வருந்தாதே என்னுயிரே
உன் உயிர்தான் என் உயிரும் என்னுயிர்தான் உன்னுயிரும்
கண்ணயர நேரமில்லை காத தூரம் வந்து விட்டோம்
காத்திருப்போம் காலங்கள் ஒருநாள் பதில்சொல்லும்

(5 ) விளைந்த பயிர் அறுக்க இன்னும் விடியவில்லை
களைந்த கேசம் அள்ளி முடிக்க நேரமில்லை
மலையென குவிந்து வரும் யுத்த எந்திரங்கள்
பொலிந்தன ஆயிரம் நச்சுக்குண்டுகளை
இலையென உதிர்ந்தன எம்முடல்கள்
சிதைந்தன, நைந்தன, கருகின் எம் சுற்றங்கள்
வினைவந்துற்றதுசூவா யானறியேன்
கொடுங்கூற்றென வந்தவன் யாரென செப்புவது

( 6 ) ஓலங்கள் ஓலங்கள் ஒலித்தனவெங்கும்
சிதறிய உடல்கள் சிந்திய ரத்தம் உறைந்தென பூமியெங்கும்
கதறிய கூக்குரலில்லை காதுகளில்
இடறிவிழுந்த இடங்களில் எல்லாம் பிணங்கள் பிணங்கள்
பதறிய நெஞ்சம் திகைத்தது, திண்டாடியது, திடுக்குற்றது
எத்தனை இரவுகள், எவ்வளவு துயரங்கள்
அத்தனை நடந்தும் ஆண்டகை வருவான் ஆண்டகை வருவான்
அனத்தல்கள் கேட்டன, ஆண்டகை வரவில்லை

(7 ) போர் ரொன்றை போரிட்டு
போரில் வென்றோர் யாருளர்
தீராத போர் வேட்கை நீண்ட காலம்
நம்மண்ணை தீண்டியதால் நாமும் கெட்டோம்
தாராதார். நம்முரிமை தருவாரென்று
நீடித்தால் போராடி சிவந்த மண்ணை
வேரறுக்கும் நோக்கில் எம்மை சாகடித்தார்
வெந்த புண்ணில் வேல்பாய்ச்சி நோகடித்தார்

( 8) நீண்ட போரில் எத்தனை பேர்
சுடு ரத்தம் சிந்தப் போய் மண்ணைத் தின்றார்
கொண்டதொரு கொள்கை ஒன்றை
தோளிற் சுமந்து மண்ணுக்கு வித்தானார்
கண்டதிங்கு கத்தரிக்காய் ஒன்றுமில்லை
நில்லுங்கள் ஒருநிமிடம் கேள்மின் சொல்வேன்
தண்டலுக்கு நிற்பதென்றால் தாற்பரியம் புரிந்து கொள்ளும்
தகைமை வேண்டும்
எதற்காக தம்மினத்தை அடகு வைத்தார்

(9 ) எதை நம்பி முன்னெடுத்தார் உரிமைப்போரை
கதை சொன்னார் உலகெங்கும் கனன்று வந்து
கை கொடுக்கும், கால்கொடுத்தும் உதவுமென்று
விதை செய்தார் தம்மக்காள், பிறமக்காள்
நாட்டுமக்காள் நனி செய்த அனைவரையும்
பதை பதைத்தோம் இறுதியிலே பற்றறுத்தோம்
விதை நெல்லாய் விதைக்கப்பட்டோம் விழித்தெழுவோம்

(10 ) வரலாறு தோற்றபெரு வஞ்சனைகள் பொதிந்த பல
இருளான சரித்திரங்கள் நிறையவே பாரிலுண்டு
மணலாறு முதலாக மாவிலாறு எனத் தொடர்ந்து
புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன், முள்ளி வாய்க்காலென
திரளான மக்கள் தனை பலிகொண்ட கதை கூறும்
சிந்துவெளி நாகரிகம் மொஹஞ்சதாரோ ஹரப்பா கூட
வரலாற்றில் எப்போதோ மண்ணாகி மடிந்து போன
மண்மேட்டின் கதைகள் தானே.

13256095_10209237723118022_3234945888212

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

எம் துயரத்தின் வலிகளைச் சுமந்து நிற்கும் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் 

1559314_377017442439899_1131435644_o.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் இட்ட தீ/ வரைவு: ரமணி

13247717_10153876382118801_9148195905978
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • CONTENT COUNT

    6,051
  •  
  • JOINED

    19 May 2009
  •  
  • LAST VISITED

    23 January
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7 years happy journey....;)

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் யாயினி.தொடர்ந்தும் யாழோடு பயணியுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

வாழ்த்துக்கள் யாயினி.தொடர்ந்தும் யாழோடு பயணியுங்கள்

Thank you rathy.::)

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தகாலங்கள் அருமையான பாடல் தொடருங்கள் சகோதரி....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

வசந்தகாலங்கள் அருமையான பாடல் தொடருங்கள் சகோதரி....!  tw_blush:

நன்றி சுவியண்ணா.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13268139_300155603649219_656765908234506

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.