Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ உதிர்ந்தாலும் அழகுதான்.

Image may contain: food
  • Replies 3.9k
  • Views 331.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவரும் நோயாளியும்

 

ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால், வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார். 

விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்.

அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.

மருத்துவரைக் கண்டதும் கோபமாக, “என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்? உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?” என்று கதறினார். 

மருத்துவர் புன்னகையுடன், “மன்னியுங்கள், நான் மருத்துவமனையில் இல்லை. எனக்கு அழைப்பு வந்ததும் என்னால் இயன்ற அளவு விரைந்து வந்தேன். சற்று பொறுமையாக இருங்கள்” என்று கூறினார்.

“பொறுமையாக இருக்கவா?” அந்த தந்தை மேலும் ஆத்திரத்துடன், “உங்கள் மகன் இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா? உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்” என்று கொந்தளித்தார்.

மருத்துவர் சிரித்த முகத்துடன், “எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம், நீங்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார். 

“கையறுநிலையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிது” தந்தை முனுமுனுத்தார். அறுவைசிகிச்சை சில மணி நேரங்கள் நடைபெற்றது.

மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார், “உங்கள் மகன் பிழைத்துவிட்டார்” என்று சொன்னபடி, “மேற்கொண்டு ஏதும் சந்தேகம் என்றால் செவிலியரைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்” என்று கூறியபடி அவசரமாக போய்விட்டார்.

சற்று நேரத்தில் வந்த செவிலியரிடம், “அந்த மருத்துவர் அத்தனை அகங்காரம் பிடித்தவரா? என் மகனின் நிலையை என்னவென்று கூறக்கூட அவருக்கு நேரமில்லையா?” என்று நொந்துகொண்டார் தந்தை. 

அதற்கு அந்த செவிலி கண்ணீர் மல்க, “அந்த மருத்துவரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இன்று, அவர் மகனை அடக்கம் செய்யும் காரியங்களில் ஈடுபட்டிருந்தார். உங்கள் மகனுக்காக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று அழைத்தவுடன் அந்த வேலையை ஒத்தி வைத்துவிட்டு ஓடி வந்து உங்கள் மகனையும் காப்பாற்றிவிட்டார். இப்போது மீண்டும் மகனை அடக்கம் செய்யப் புறப்படுகிறார்” என்று கூறினாள். 

நீதி: எவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது, அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும், மனோநிலையைப் பற்றியும் நாம் அறிந்திருக்காதவரை! “நம் வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் கற்பனையானவை. மீதி பிரச்சினைகள் தற்காலிகமானவை.” இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமாக இருக்க போவதுமில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்ராறியோவில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு நாளை 20.11,2016 ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது......❄️❄️

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு வரும் கஷ்டங்களுக்கு நாம்தான் பொறுப்பு !!

உண்மையில் கர்ணனை வலிமை இழக்கச் செய்து கொல்வதற்கு பங்களித்தவர்கள் ஆறு பேர்கள்...!!
கர்ணனைக் கொல்ல அர்ஜூனன் அம்பாய்ப் பயன்பட்டானே தவிர, அவன் மீது அந்த அம்பை எய்தவர்கள் ஆறு பேர்.
யார் அந்த ஆறு பேர்கள்...?
────●●●────
முதலாவதாகப் பரசுராமர்....
இவர் அந்தணர்களுக்கு மட்டும்தான் வில்வித்தை கற்றுக் கொடுப்பேன் என்று சபதம் செய்திருந்தார். இதையறிந்த கர்ணன், தான் அந்தணன் என்று சொல்லி அவரிடம் வில்வித்தை கற்றுக் கொண்டான்.
ஒருநாள் இவன் மடியின் மீது தலை வைத்து, பரசுராமர் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இந்திரன் வண்டுருவில் வந்து, கர்ணனின் தொடையைப் பிளந்து அவனுடைய ரத்தத்தைப் பரசுராமர் மீது விழும்படி செய்தார்.
ஆசிரியரின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்று கர்ணன் வலியைப் பொறுத்துக் கொண்டான். ரத்தம் பட்டதால் விழித்தெழுந்த பரசுராமர், அவன் அந்தணன் இல்லையெனத் தெரிந்து அவனைச் சபித்தார்.
அதாவது, “நீ கற்ற பிரம்மாஸ்திரம் உனக்குத் தக்க சமயத்தில் மறக்கக் கடவது” என்று சபித்தார்.
────●●●────
இரண்டாவதாக ஒரு முனிவர்...
முனிவருடைய பசுங்கன்று, கர்ணனின் தேர்ச்சக்கரத்தில் அடிபட்டு இறந்ததால் "யுத்தத்திலே உன் இரதம் பூமியில் அழுந்தட்டும் " என்று அவர் சபித்தார்.
────●●●────
மூன்றாவதாக இந்திரன்...
கர்ணனின் கவச குண்டலங்களை அந்தணன் போல் வந்து யாசித்துப் பெற்றுச் சென்றான்.
────●●●────
நான்காவதாகக் குந்தி...
கர்ணனைப் பெற்ற குந்தி, பஞ்ச பாண்டவர்களில் அர்ஜூனனைத் தவிர, வேறு யாரையும் கொல்லக் கூடாது என்றும், நாகாஸ்திரத்தை அர்ஜூனன் மீது ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கர்ணனின் வரம் பெற்றாள்.
────●●●────
ஐந்தாவதாகச் சல்லியன்...
கர்ணனுக்குத் தேரோட்டிக் கொண்டிருந்தவன், தக்க சமயத்தில் தேரிலிருந்து குதித்து ஓடிப் போனான்.
────●●●────
ஆறாவதாகக் கண்ணன்...
கர்ணன் அர்ஜூனனை நோக்கிச் செலுத்திய நாகாஸ்திரம் அர்ஜூனனைத் தாக்காதபடித் தேரைத் தரையில் அழுத்தி அர்ஜூனனைக் காப்பாற்றியதுடன், கர்ணனைக் காத்துக் கொண்டிருந்த அவனது புண்ணியத்தையும் யாசித்துப் பெற்றான்.
────●●●────
ஆக இவரால் தான் நமக்கு கஷ்டம் வந்து விட்டது என்று துன்பப் படாமல் , நம்முடைய ஊழ்வினைகள்தான் இப்படி பல உருவில் வருகிறது என்று தெரிந்து கொண்டு, யாரையும் நோகாமல் நமக்கு வரும் கஷ்டங்களுக்கு நாம்தான் பொறுப்பு என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்..

Image may contain: one or more people
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்...1f33e.png?1f33e.pngஇப்போ யாராவது வெளியில் போனால் காற்று அப்படியே தூக்கிக் கொண்டு போய் மேகத்துள் ஒழித்து விடும் போன்ற கால நிலை கனடா வெறுக்குது..?

 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்

dsc04498
Winter-is-Coming.jpg?fit=120%2C111

செங்காந்தள் மலரை பற்றி ஏற்கனவே பலவேறு பட்ட பதிவுகள் ஒன்றை போலவே வார்த்தை மாறமல் எழுதப்பட்டுள்ளன. அதில் சில குறிப்பிட்டதக்க தகவலை இங்கு பகிர்ந்துள்ளேன்.

நம் இலக்கியங்களில் காந்தள் என்று சிறப்பித்துக் கூறப்படும் இந்த மலர் கார்த்திகை மாதத்தில் பூப்பதால் கார்த்திகைப்பூ என்றொரு பெயரும் கொண்டுள்ளது. தமிழகத்தின் மாநில மலராகவும் ஜிம்பாவே நாட்டின் தேசிய மலராகவும் இதுவே உள்ளது.

நீரயற் கலித்த நெறிமுகைக் காந்தள் வார்குலை அவிழ்ந்த வள்இதழ் கிரை தொறும் விடுகொடிப் பிறந்த மென்தகைத் தோன்றி பவழத் தன்ன செம்பூத் தாஅய்
– நப்பண்ணனார்

விடுதலைப் புலிகளின் தேசியக் கொடியின் வண்ணங்களை கொண்டிருப்பதாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த மாதத்தில் பூத்து குலுங்குவதாலும், மாவீரர் நாளில் திசையெங்கும் பூத்து காணப்படுவதாலும் இதனை தமிழீழ புலிகளும் தமது தேசிய மலராக பிரகடனப்படுத்தினர்.

தமிழகத்தின் மாநில மலராக அறியப்படுவதற்கு காரணம் முருக கடவுள் ஆகத்தான் இருக்க வேண்டும். கார்த்திகை மாதம் தமிழ்க் கடவுள் முருகனின் விருப்பமாதலால் அதன் காலத்தில் பூக்கும் இம்மலரும் சிறப்பு பெற்றிருக்கிறது.

பண்டைய அரச காலம் முதலே இது அங்கீகார மலராக இருந்துள்ளது. மன்னர்கள் போருக்கு செல்லும் போது காந்தள் மலர் மாலைகளை அணிந்து கொண்டதாக சங்ககால வரலாறு கூறுகிறது.

1 (1).jpg

இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் என்றும் இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும், பற்றி ஏறுவதால் பற்றியென்றும்,  வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்றும் அழைக்கப்படும்.

மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் தோன்றி என்றும் அழைக்கப்படும். சுதேச மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர். இதன் தாவரவியல் பெயர் குளோரியோசா சூப்பர்பா (Gloriosa superba ). லில்லி இன மலர் வகையை சேர்ந்தது.

நம் ஊரில் இதன் பேர் கண்ணு நோய் பூ. நெருப்பை போன்ற இப்பூவை பார்த்தால் கண் நோய் வரும் என்று நம்பிக்கை இருக்கிறது. உண்மையில் இதற்கும் கண் நோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது மலரும் நேரம் நம் மாவட்டத்தில் கண் நோய் சீசன், அவ்வளவே.

கார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் இக்கொடி படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் தோன்றும். ‘செங்காந்தள் ஐந்தன்ன விரலும் காட்டி’ என இம்மலரை பெண்களின் விரலுக்கும் ஒப்பிடுகின்றனர்.

6511067575_42b026da75_b_d600.jpg

தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள்.

கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

இந்தப் பூ கொடுக்கும் கிழங்குதான் கண்வலி கிழங்கு. இதைக் கார்த்திகைக் கிழங்கு என்றும் கூறுவார்கள். இதன் தாவரவியல் பெயர் குளோரியோசா சூப்பர்பா (Gloriosa superba ). இதன் கிழங்கும், விதையும் மிகுந்த விஷத்தன்மை உடையவை. கிழங்கு கலப்பை போலத் தோன்றுவதால் கலப்பை எனவும் அழைப்பர். கண்வலி இப்போது பிரபல பெயர்.

நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் அது விஷத்தன்மை கொண்டது. சிறிதளவு உட்கொண்டாலும் முடி உதிரும், தோல் நோய் வரும். மொத்த செடிடின் பகமும் விஷத்தன்மை கொண்டதே. வாந்தி, மயக்கம் தொடங்கி கோமா, லுகிமியே என மரணம் கூட உண்டாக வாய்ப்புள்ளது.

வாதம், மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய் வெண்குட்டம் ஆகியவற்றிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பிரசவ வலியைத் தூண்டும்மருந்தாகவும், ஆற்றலூட்டும் குடிப்பானாகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.

செங்காந்தள் செடி மூலிகை விஷக்கடிகளுக்கும், விஷ ரோகங்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. பாம்பு, சாரை,அரணை,ஜலமண்டல விஷக்கடிகள் குணமாகும்.

எலிக்கடி, வண்டுக்கடி, பூரான்கடி, செவ்வட்டை,சாரைப்பாம்பு, சிறுபாம்புக்கடி, வண்டுக்கடி போன்ற விஷநோய்களுக்கு இதன் இலையை பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்து வர மேற்கண்ட வியாதிகள் குணமாகும். தைலத்தை தேய்த்து குளித்தால் மேகநோய், கிராந்தி, பத்துபடை,சொறிசிரங்கு, முதலிய வியாதிகள் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் உண்டாகும். பத்தியமாக புளி, புகை, லாகிரி நீக்க வேண்டும்.

slide3.jpg

வேலிகளில் இதை கண்டால் வெட்டி வீழ்த்தும் நிலையில் தான் நாம் இருந்து வந்தோம். இதனை மருத்துவ பயன்களை மக்கள் அறிந்திருந்தும் இதன் பண மதிப்பை வெளிநாட்டினரே நமக்கு கண்டறிந்து தந்தனர்.

முதன் முதலில் என்ற ஜெர்மன் நிறுவனம் தனது ஆராய்ச்சியின் மூலமாக கோல்சிசின் என்ற மூலப்பொருள் இதன் கிழங்கு மற்றும் விதைகளில் இருப்பதை கண்டறிந்தது அதன் பின் ஆல்தியா என்ற பெயரில் ஒரு இத்தாலிய மருந்து நிறுவனம் இதனை வணிக ரீதியில் சாகுபடிக்கான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிகண்டது.

சுபர்பின் மற்றும் கோல்சிசின் ஆகிய மருந்துப் பொருட்கள் இதில் கிடைக்கின்றன. கொடியைக் காட்டிலும் விதைகளில் தான் அதிக அளவு கோல்சிசின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதியான ஏற்றுமதி மதிப்பைப் பெற்றுள்ளன.

அண்மை காலத்தில் ‘கோல்சிசின்’ மூலப் பொருளைக்காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான ‘கோல்ச்சிகோஸைடு’ கண்டு பிடிக்கப்பட்டு மூட்டு வலி மருத்துவத்தில் புரட்சிகரமாக பயன் படுத்தப்படுகிறது.

இது ஐரோப்பிய நாடுகளில் கௌட்(gout) எனும் மூட்டுவலி நிவாரணத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. மிக நுண்ணிய படிகங்களாக யூரிக் அமிலம் மூட்டுகளில் தங்குவதால் இந்த மூட்டுவலி வருவதாகவும், இம்மருந்து அவ்வாறு யூரிக் அமிலம் மிக நுண்ணிய படிகங்களாகத் தங்காவண்ணம் பாதுகாக்கிறது. இதனால் தொடர்ந்து மூட்டுவலி உண்டாகும் நிலைமையினை இது முறித்து விடுவதாகக் கூறப்படுகிறது.

அதிக அளவில் வெளிநாட்டு மருந்து கம்பெனிகளுக்கே விதைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தாலி மிக அதிக அளவிலும் அதற்கடுத்து நெதர்லாந்து, ஃபிரான்ஸ் நாடுகளும் இந்த விதைகளை கொள்முதல் செய்கின்றன.

தமிழ்நாடு, அந்தமான் மற்றும் இலங்கையில் இந்தச் சாகுபடி நடைபெறுகிறது. இந்தியாவில் டெல்லி, பாம்பே, ஓசூர், ஹைதராபாத் நகரங்களில் விதை கொள்முதல் நிலையங்கள் உள்ளன. 95 % தமிழகத்தில் தான் சாகுபடி நடக்கிறது.

தமிழகத்திலிருந்து வாங்கப்படும் விதைகள் இங்கு அரைக்கப்பட்டு, பவுடராக வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகின்றது. ஆண்டுக்கு 700 முதல் 1,000 டன் விதைகள் தேவைப்படுகிறது. ஆனால், உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளதால் விதைகளுக்கு கிராக்கி இருக்கிறது.15-250x250.jpg

ஒரு செடியில் 20 முதல் 150 காய்கள் காய்க்கும். ஒரு கிலோ எடையுடைய தரமான காய்களில் இருந்து கால் கிலோ விதை கிடைக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை சேலம், திண்டுக்கல், கரூர், ஜெயங்கொண்டம், வேதாரண்யம் என்று பல இடங்களில் தீவிரமாக கார்த்திகைக் கிழங்கு பயிர் செய்யப்படுகிறது.

முதல்முறையாக 1980-ம் ஆண்டுகளில் மூலனூர் பகுதியில்தான் செங்காந்தள் சாகுபடி தொடங்கியது. தற்போது திருப்பூர் மாவட்டம், மூலனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கைக்கு அடுத்தபடியாக உள்ளது செங்காந்தள் சாகுபடி.

இக்கிழங்கானது வடிகால் வசதியுடைய செம்மண், பொறை மண் போன்றவற்றில் வளரும். மண்ணின் pH மதிப்பு 6.0 முதல் 7.0 வரை இருப்பது இக்கிழங்கிற்கு ஏற்றது. இக்கிழங்கு V வடிவில் காணப்படும்.

பாலையை தவிர மற்ற எல்லா வகை நிலங்களில் இது வளரக்கூடியது. பொதுவாக 2500 மீ உயரத்திற்கு மேல் மிக சாதரணமாக வளர்கிரது. கூடலூர் போன்ற இடங்களில் இந்த காலனிலையில் மிகச் சாதரணமாக காணலாம். ஆனால் தற்போது பல இடங்களில் தென்படுகிறது.

இந்த பயிர் பொதுவாக வறண்ட நில தோட்ட பயிராகும்.ஓரளவு மழை உள்ள சமவெளி பகுதிகள்,நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான எந்த நிலமானாலும் சரி தான். பல ஏக்கர் கணக்கில் இதன் விளச்சல் சில இடங்களில் நடைபெற்று வருகிறது. இதன் மகரந்த சேர்க்கை பணிக்காக தேனீக்கள் கூட வளர்க்கப்படுகின்றன.

4.jpg

ஆரம்பத்தில் ஒரு கிலோ விதை அதிக விலைக்கு விற்கப்பட்டது, அதாவது 1500 – 2000ரூ அளவிற்கு விற்கப்பட்ட காலமெல்லாம் உண்டு. இதனால் கண்வலி மூலிகை சாகுபடியில் ஈடுபட்ட பலர் அதிக மகசூலை ஈட்டினர். ஆனால் தற்போது 900 ரூ கிடைப்பதே பெரும்பாடக உள்ளது.

விலை வீழ்ச்சி, இடைதரகர்களின் ஆதிக்கம் போன்றவற்றால் விவசாயிகள் பெருமளவில் பாதிப்படைந்து வருகின்றனர். 2014 ஆம் ஆண்டு மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பல கோடிக் கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது, கிழங்குகள் பயிரிடப்படுவதும் குறைந்துவிட்டது

எது எவ்வாறாயினும் மருத்துவ பயங்கள் கொண்ட இந்த சங்க கால செடிகள் அதன் சிறப்பியல்பை வெளிப்படுத்தி காலங்கடத்து நிலைத்திருப்பது கவனிக்கத்தக்கது, இந்த கார்த்திகை மாதத்தில் செங்காந்தளை காண நேர்ந்தால் இது நம் மாநில மலரெனெ உங்கள் நினைவுக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.

படித்ததிலிருந்து........

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

காலை வணக்கம்...1f33e.png?1f33e.pngஇப்போ யாராவது வெளியில் போனால் காற்று அப்படியே தூக்கிக் கொண்டு போய் மேகத்துள் ஒழித்து விடும் போன்ற கால நிலை கனடா வெறுக்குது..?

 

 

இப்படியான காலநிலை வந்தால்த் தான் சிறிதளவேனும் ஊரைப் பற்றி எண்ணுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

கண்ணம்மா...கண்ணம்மா...
அழகு பூஞ்சிலை 
என்னுள்ளே என்னுள்ளே 
பொழியும் தேன் மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா... 
நெஞ்சமே….
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் 
செல்லுமே….
ஒளிவீசும்
மணிதீபம் 
அது யாரோ நீ…
கண்ணம்மா...கண்ணம்மா...
அழகு பூஞ்சிலை 
என்னுள்ளே என்னுள்ளே 
பொழியும் தேன் மழை
செம்பருத்தி பூவைப்போல 
சிநேகமான வாய்மொழி 
செல்லம்கொஞ்ச கோடைகூட 
ஆகிடாதோ மார்கழி
பால்நிலா உன் கையிலே 
சோறாகி போகுதே 
வானவில் நீ சூடிட 
மேலாடை ஆகுதே
கண்ணம்மா...கண்ணம்மா...
நில்லம்மா…
உன்னை உள்ளம் எண்ணுதம்மா...
கண்ணம்மா...கண்ணம்மா...
அழகு பூஞ்சிலை 
என்னுள்ளே என்னுள்ளே 
பொழியும் தேன் மழை
உன்னுடைய கோலம் காண 
கோயில் நீங்கும் சாமியே 
மண்ணளந்த்த பாதம் காண 
சோலையாகும் பூமியே
பாரதி உன் சாயலை 
பாட்டாக மாற்றுவான் 
தேவதை நீ தானென 
வாயார போற்றுவான்
கண்ணம்மா...கண்ணம்மா...
என்னம்மா…
வெட்கம் நெட்டி தள்ளுதம்மா
கண்ணம்மா...கண்ணம்மா...
அழகு பூஞ்சிலை 
என்னுள்ளே என்னுள்ளே 
பொழியும் தேன் மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா...
நெஞ்சமே….
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் 
செல்லுமே….
ஒளிவீசும்
மணிதீபம் 
அது யாரோ நீ…

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை 21 தொடக்கம் 27 வரையான காலப்பகுதி மாவீரர் வாரமாகும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை 21 தொடக்கம் 27 வரையான காலப்பகுதி மாவீரர் வாரமாகும்..

Sahana Sahana's photo.
Sahana Sahana's photo.
Sahana Sahana's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் முதல் முதலில் வித்தாகியவர்

Sahana Sahana's photo.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரர்களுக்கு மா என்ற அடைமொழி கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மா என்ற தழுவுசொல் ஒரு அர்த்தமுள்ள உயிர்மெய் எழுத்து. உயிரும் உடலும் கலந்த அர்த்தம் அதில் வெளிப்படுகின்றது. அழகு, வலிமை, பெருமை, பெரிய, குற்றமற்றவர் என்பன மா அடையின் பிற அர்த்தங்கள்!
பழந்தமிழர் வரலாற்றில் மாவீரர் என்ற சொற் பிரயோகம் கிடையாது. விசேட அர்த்தங்களோடு மாவீரர் என்ற சொல்லை முதன் முதலாகப் பயன் பாட்டிற்குக் கொண்டு வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளாவர். மாவீரர் என்பது ஆண் பெண் இருபாலாரையும் ஒரு சேரக் குறிக்கும் பொதுச் சொல்.

thamilpiraba thayalan

No automatic alt text available.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1f490.png?அன்பான இனிய காலை வணக்கம்...1f490.png?

Image may contain: text

மாவீரர் நினைவு வாரம் இன்று முதல் ஆரம்பம்.

 
Kuruvikal Kuruvi's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈமத்தாழி/ பிரசுரம்: தீராநதி/ 2015

மஞ்சளும் சிவப்புமான 
ஏதேதோ பொருட்களெல்லாம் தோரணங்களாக 
துயிலும் இல்ல நினைவுப்பாடலை முணுமுணுக்கிறான்
யாரோ ஒரு சிறுவன்

அழ முடியாதவர்களுக்காய் வானம் உருக
விளக்குகளின் ஒவ்வொரு துளி நெருப்பிலும் 
தெரிந்தன களம் சென்ற வீரர்களின் புன்னகை
மற்றும் இறுதிக் கையசைப்பு

துயிலும் இல்லங்களின்மேல் முகாங்கள்
கல்லறைகளின் மேல் காவலரண்கள்
சிதைமேடுகளின் மேல் துப்பாக்கிகள்

மண்ணுக்காய் மாண்டுபோனவர்கள் உறங்கும் 
மயானங்களைகளிலும் துப்பாக்கிகள்
புதையுண்ட சிதைகளோடான யுத்தம்
இன்னும் முடியவில்லை 

வாழ்தலும் இல்லை
நினைவுகூர்தலும் இல்லை
கண்ணாடிகளெங்கும் தெறிக்கின்றன 
தடைசெய்யப்பட்ட முகங்கள்

சிதைக்கப்பட்ட கல்லறையை சுற்றித் திரியும் 
தாயொருத்தி சிந்தும் ஒரு துளி கண்ணீர் 
இரண்டாய் பிரித்துவிடுமா இத் தீவை?

வெறித்துப்போயிருக்கும் தெருவில் 
வீரர்களின் நினைவுப்படங்களிருப்பதாய்
பூக்களை வைத்துச் செல்லுமொரு தாயின் 
ஈமத்தாழிபோல் கனத்திருக்கும் நெஞ்சில் 
கோடிச் சுடர்களின் அனல்....
 

Image may contain: plant, flower, outdoor and one or more people
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்னை
* * * * * * * 

மரணமென்றால்
அத்தனை
பற்றுனக்கு.
எத்தனை தடவைகளில்
மரணத்தோடு
நீ விளையாடி
வென்றிருப்பாய்.
ஒரு தடவை கூட
பின்வாங்கியதில்லை
நீ...

எத்தனை முட்கள்
உன் பாதங்களை கிழித்திட்டாலும்
முன் நகர்தலிலும்
நிதான அடி வைத்தலிலுமே
உனது கண்களிருந்ததாம்.
இரவு நேர தூக்கங்களை
அதிகமாக நீ வெறுத்திருந்தாய்.
பகலினை காப்பதை
விட இரவினையே
அதிகம் காத்திருந்து
காதலித்தாய்...

எப்போதும் 
யாருடனும் அதிகம்
பேசிக்கொள்ளவே மாட்டாய்.
வீட்டில் எப்படியோ
அப்படியே
புகுந்த வீட்டிலும் நீ.
குண்டுப்பைகளோடே
அதிகம் பேசிக்கொள்வாயாம்.
சன்னங்களில்
உள்ளார்ந்த ஈர்ப்புனக்கு.
அவைகளின் மொழிகூட
நீ அறிந்து கற்றிருந்தாய். 
பல தடவை சிரித்துமிருக்கிறாய்.
சில நேரங்களில்
அழுதுமிருப்பாய்...

எனக்கு தெரியும்
போர்க்களம்
எப்படியானது என.
எதிரிகளின் நெறிமுறை தவறிய
போராட்டமும் எவ்வாறானதென...
உன் நண்பன் சொன்னான்
மரணம் உன்னுடன்
விளையாடி கொண்டிருக்கையில்
நீ சன்னங்களை
நெஞ்சினிலே 
ஏந்திக்கொண்டாயாம்.
ஆனால் ஓர் தடவை கூட
அம்மா என்றதில்லையாம்.
உன் உதடுகள்.
ஈழம்
உன் அன்னையானதால்...

நெடுந்தீவு தனு

http://ntthanu.blogspot.com/2016/11/blog-post_21.html?m=1

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துயிலும் இல்லங்கள்..

 
Sankeethan King's photo.
Sankeethan King's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மாவீரர் வாரத்தோடு அவர்கள் பற்றிய விடையங்களே எடுத்து வரனும் என்றிருந்தால் ம்௯ம் சரிபட்டு வர இல்ல.....:( எப்ப ௯டி யாயினி தன்ட பாட்டில பேசத் பேசத்தொடங்கினது...

Balamuralikrishna, maestro of Carnatic music, passes away

author-deafault.pngB Kolappan
 NOVEMBER 22, 2016 17:18 IST
UPDATED: NOVEMBER 22, 2016 23:16 IST
 
HYF03BALAMURALIKRIS_910956f.jpg.
×
 

Carnatic vocalist, playback singer and composer Mangalamapalli Balamuralikrishna, who burst into the music world as a child prodigy, died on Tuesday. He was 86 and is survived by his wife, three sons and three daughters.

His music appealed to both the connoisseurs and the laymen alike. In classical music, he was able to give “play acting” to the essence of the lyrics in his song. In the film world,  “Oru Naal Pothuma”, a ragamalika in Thiruvilayadal, “Chinna Kannan Azhaikiran”, a Reetigowla-based song in the film Kavikuil, “Mounathil Vilayadum Manasatichye” from the film Noolveli  and the Abhogi song “Thanga Ratham Vanthathu” from the film Kalai Koil continue to enchant a generation of music lovers.

A native of East Godavari district of the erstwhile Madras Presidency, his father Pattabiramaiah was a musician and his mother Sooryakanthamma was a veena player. He gave his first concert when he was nine and the quality of his music is explained by the fact that All India Radio (AIR), Chennai, included him, a child artist, in the list of A-grade artists.  

He was also an accomplished violinist and once accompanied Ariyakudi Ramanuja Iyengar, the pioneer of the modern-day Carnatic concert format.

Balamuralikrishna learnt violin by listening to his father playing the instrument.

“Since my father was against me playing violin, I created my own instrument. Once I summoned courage and played his instrument in his absence. When questioned by my father I admitted and played Bhairavi ata thala varnam.  My father was impressed and allowed me to play the instrument,” he had recalled in his biography Sangita Perunkadal, penned by Ranimynthan.

Violin playing came in handy when his voice underwent changes in his teens and could not sing.

“He had a magic voice. He is to Telugu keerthanas what M.M. Dhandapani Desikar was to Tamil music. Since Telugu was his mother tongue, he knew the meaning of Thiyagaraja’s keerthanas and would not maul them,” said clarinet maestro A.K.C. Natarajan, who also learnt many keerthana’s from him.

Balamuralikrishna.jpg
 

Actually Balamuralikrishna’s career in film industry began as an actor. He played the role of Narada in the film Bhakta Prahalada on the request of A.V. Meyappa Chettiar. It was a Telugu film and was dubbed in Tamil, Hindu and Kannada and he played the role in other languages also. His first song is also for a Telugu film Sati Savitri.

“S. Varalakshmi was the heroine of the film and she learnt music from Balamuralikrishna. She requested him to render at least one sloka in the movie. But he ended up singing all the songs for the hero A. Nageswara Rao,” recalled Ranimynthan, the biographer of Balamuralikrishna.

When K. Balachander directed Apoorva Ragangal, he told M.S. Viswanthan to compose a song in a rare raga to justify the title of the film. It was Balmuralikrishna who helped him compose the song Athisaya Ragam in raga Mahathi. His other creations are raga Sarvashri, Lavangi, and Sumukham.

He also scored music for the first Sanskrit film Adi Sankarar . He won the national award for best playback singer, music director and classical singer. He was awarded the Sangita Kalanidhi award of the Music Academy. He is also a recipient of France's Chevalier of the Ordre des Arts et des Lettres.

×

Veteran Carnatic singer M Balamuralikrishna passes away at 86, Twitter reacts

  • HT Correspondent, Hindustan Times, Chennai
  •  |  
  • Updated: Nov 22, 2016 23:14 IST
_8e8e97f4-b0ae-11e6-a9a7-656025b680d0.PNG
Balamuralikrishna was conferred with Padma Vibhushan in 1991.

 

Singer-composer Mangalamapalli Balamuralikrishna, who caught the nation’s attention in Doordarshan’s iconic music video ‘Mile Sur Mera Tumhara’ in the eighties, passed away in Chennai on Tuesday. He was 86.

A child prodigy who rose to become a musician of immense versatility in all fields and held sway over rasikas with his mesmerising voice and unique way of rendering compositions, Balamuralikrishna was awarded France government’s Chevalier of the Ordre des Arts et des Lettres (Order of Arts and Letters).

With a voice magnificently rich and instantly recognisable, Balamuralikrishna excelled not only as singer but left his imprint as a composer, poet, multi instrumentalist and innovator of ragas and taalas.

In ‘Mile Sur…’ -- the popular national integration song -- he sang the Tamil lyrics in the song first telecast on Independence Day in 1988. 

Though he was born in Sankaraputham of East Godavari district in present Andhra Pradesh, he made Chennai his home.

He started performing at a very young age and presented his first concert when he was just six years old.

Described as a living legend and awarded honorary doctorates, Balamuralikrishna performed at more than 25,000 concerts across the world and has more than 400 compositions in Telugu, Sanskrit, Kannada and Tamil to his credit.

In addition to Carnatic vocals, he was adept at playing the violin, viola and mridangam, a percussion instrument.

Reflecting his musical lineage, he once said that “music flows in my blood”.

Gifted with a stentorian voice, he could sing perfectly in three octaves. He was not content with the fame and recognition gained by performing concerts and composed new raagas known as ‘raganga ravali’, ‘lavangi’, ‘mahati’ and ‘manorama’.

Though his native tongue was Telegu, he could sing effortlessly in many languages, including Tamil, Kannada, Sanskrit, Malayalam and Hindi.

Hindustani music too was not out of bounds for this musical genius and his ‘jugalbandis’ with eminent exponents like Pt Bhimsen Joshi and Kishori Amonkar, Hariprasad Chaurasia, Pt Jasraj and Zakir Hussain drew wide acclaim.

He also left his imprint in the field of cinema, where he tried his hand with acting and playback singing too.

Among his notable film forays was the song ‘Oru Naal Pothuma’ in “Thiruvilayadal”, starring Sivaji Ganesan, the father of Bollywood actress Rekha.

Balamuralikrishna did full justice to the song, with his voice bringing out the arrogance of the character.

Besides numerous cities and towns in India, he gave concerts worldwide, including in the US, the UK, France, leaving audiences spellbound.

Tamil Nadu chief ministerJayalalithaa expressed said his death was an irreparable loss to the field of music, cinema, fans and “above all for me”.

Balamuralikrishna had dedicated a raaga in her name titled ‘Jaya Jaya Lalith

  •  

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ #பொக்கிஷ பதிவு...


சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மியூஸிக் அகாடமிக்கு அருகிலேயே, இன்னொரு மியூஸிக் அகாடமி உண்டு.  அந்த அகாடமியை, இசைத் துறையின் பல்கலைக் கழகம் என்றும் சொல்லலாம். சங்கீத ஜாம்பவான் என்றும் பெருமைபட விவரிக்கலாம். அந்த இசைமேதை... டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா.
‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று இவர் பாடி அழைத்தால் போதும்... அந்தக் கண்ணனே ஓடி வந்துவிடுவான். அவரின் குரலும் அதில் இருந்து வெவ்வேறு விதமாக வெளிப்படுகிற குழைவும், நெகிழ்வும் இசை ரசிகர்களுக்கு பெரு விருந்தாகவும் அருமருந்தாகவும் திகழும் என்பதில் சந்தேகமே இல்லை. 
காலமெல்லாம் இசையால் நம்மையும் இறைவனையும் தன்வசப்படுத்தியவர் இன்று இறைவன் வசப்பட்டுவிட்டார்.  சக்தி விகடன் வாசகர்கள் பங்கேற்கும் சக்தி சங்கமம் நிகழ்ச்சிக்காக அந்த இசைமேதையுடன் நடத்திய கலந்துரையாடலின் சில பகுதிகளை அவருடைய நினைவைப் போற்றும் வகையில் இங்கே உங்களுக்காக...

BaLAMURALIKRIS_18354_21365.jpg


மூன்று தலைமுறைக்கும் மேலாக கர்னாடக சங்கீதத்தில் ஒரு ராஜாங்கமே நடத்திவரும் மேதையைப் பார்க்கப் போகிறோம் என்கிற லேசான பதற்றம் ப்ளஸ் பயத்துடனும் வந்திருந்தனர், வாசகர்கள்.


‘‘நீங்க எல்லாரும் வந்தது ரொம்ப சந்தோஷம். வாங்கோ, வாங்கோ!’’ என்று பளீர் புன்னகையும், வாஞ்சையான பார்வையுமாக வரவேற்றார் பாலமுரளி கிருஷ்ணா.


‘’நீங்க எல்லாரும் பாடுவேளா? பாட்டுன்னா, கச்சேரி பண்றதையெல்லாம் சொல்லலே! சாதாரணமா பாடுவீங்களானு கேட்டேன். எல்லாரும் பாடுங்கோ. பாட்டு, ஆத்மாவிலேருந்து வர்ற விஷயம். அதனாலதான் ஒரு பாட்டு, நம்மளை உற்சாகமாக்கிடுது. மொத்தக் கவலையையும் போக்கிடுது’’ என்றார், சிரித்துக் கொண்டே!
ஒரு சின்ன அமைதி. அந்த அமைதி, கேள்விகள் கேட்க வாசகர்களை தயார் படுத்துவதுபோல அமைந்தது. அதையடுத்து வாசகர்கள் மெள்ள கேள்விகளைக் கேட்கத் துவங்கினார்கள்.

unnamed_21460.jpg


 ‘‘உங்களுக்குள் இருந்த இசை ஞானத்தை முதலில் அறிந்தவர் யார்?’’ என்று வாசகி சுகன்யா உரையாடலைத் தொடங்கி வைத்தார்.
 ‘‘எல்லாம் பகவானின் அருள். இதோ... இந்த நிமிஷம் வரைக்கும் குரல் பயிற்சி எடுத்துக்கிட்டதில்லை. சங்கீதம் பெரிசா தெரியாது. கச்சேரிக்கு முன்னாடி, இப்படி இப்படில்லாம் பாடணும்னு எந்தத் திட்டமிடலும் வெச்சுக்கறது இல்லை. இது, தெய்வ சங்கல்பம். இதைப் பெருமையாவோ தன்னடக்கமாவோ சொல்லிக்கலை. நிஜம் இதுதான்.
ஏழு வயசுல கச்சேரி பண்ண ஆரம்பிச்சேன். பாருபள்ளி ராமகிருஷ்ணய்ய பந்துலுதான் என்னோட குருநாதர். அவர்தான் எனக்கு என்னெல்லாம் வரும், எங்கிட்டேருந்து எதெல்லாம் வெளிக் கொண்டுவர முடியும்னு பயிற்சி கொடுத்து உருவாக்கினார். என் அப்பா பட்டாபிராமய்யா மிகப்பெரிய புல்லாங்குழல் வித்வான். அம்மா பிரமாதமா வீணை வாசிப்பாங்க. தாத்தாவும் இசைக்கலைஞர்தான். பாரம்பரியம் மிக்க ஓர் இசைக் குடும்பத்துலேருந்து வந்ததுகூட, என் இந்த வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் காரணமா இருக்கலாம்.’’


 ‘‘இசைத் துறை மட்டும் இல்லாம, சினிமாலயும் நடிச்சிருக்கீங்க. பக்த பிரதலாதன் படத்துல நாரதரா நடிச்சதுக்கு நிறையப் பாராட்டுக்கள் குவிஞ்சுதாமே..?’’ என்று வாசகி சுபஸ்ரீ கேட்டார்.
 ‘’நாரதர் வேஷத்துக்குப் பாராட்டுக்கள் கிடைச்சது இருக்கட்டும். ஆனா, அதுக்குப் பிறகு சான்ஸ் ஏதும் வரலியே! தவிர, அடுத்தடுத்தும் நாரதர் மாதிரியான கேரக்டரே வந்துச்சு. நான் வேணாம்னுட்டேன். ஏன்னா, நாரதருக்கு ஜோடி கிடையாது. ஹீரோயின் இல்லாம எதுக்காக  நடிக்கணும்னு விட்டுட்டேன். சான்ஸ் வேற கிடைக்கலியா... நல்லதாப் போச்சுனு  பேசாம இருந்துட்டேன்’’ என்று வெடிச்சிரிப்பு சிரித்தார் பாலமுரளி கிருஷ்ணா. அவருடன் சேர்ந்து வாசகர்களும் பலமாகச் சிரித்தார்கள்..


 ‘’நீங்கள் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறீர் கள். அதில் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்று எதைச் சொல்வீர்கள்?’’ என்று வாசகர் நல்லசிவம் கேட்க...
‘’மன்னிக்கணும். பிடிக்காத விஷயங்களை நான் செய்யறதே இல்லை. ஒரு விஷயத்தை பிடிச்சுப் பண்ணணும். மனசு லயிச்சுப் பண்ணணும். பிடிச்சும் லயிச்சும் பண்ற விஷயங்கள் நல்ல விதமாத்தான் வெளிப்படும்னு நம்பறேன்!’’ என்று உறுதியான பதில் வந்தது பாலமுரளிகிருஷ்ணாவிடம் இருந்து.


 ‘’கற்றுக் கொடுத்த குருவின் பெயரைக் காப்பாற்றிவிட்டதாக முதன்முதலில் எப்போது உணர்ந்தீர்கள். அவருக்கு எதைச் சமர்ப்பிக்க விரும்புகிறீர்கள்?’’ - என்று வாசகி சாருலதா தன் கேள்வியை முன்வைத்தார்.
‘’என் குருநாதர், வருடாவருடம் அவருடைய குருவுக்கு ஆராதனை விழா நடத்துவார். அந்த விழாவில் என்னையும் பாட வைச்சார். எனக்கு அடுத்தாப்ல, முசுனூரி சூரிய நாராயண மூர்த்திங்கறவரோட, கதா காலட்சேபம் இருந்துச்சு. மிகப்பிரமாதமா கதை சொல்வார். அதைக் கேக்கறதுக்கு ஆயிரக் கணக்கில் மக்கள் கூடுவாங்க. அவருக்கு முன்னாடி என்னைப் பாட வைச்சா, அந்தக் கூட்டம் என் பாட்டையும் கேக்கும்னு யோசிச்சு, நேரம் ஒதுக்கினாங்க. 8 மணிக்கு ஆரம்பிச்சு, 9 மணிக்கு முடிக்கணும். ஆனா, பாட்டு பாட ஆரம்பிச்சதும் நேரம் போனதே தெரியலை எனக்கு. பத்தரை மணியைத் தாண்டியும் பாடினேன். அப்புறம் குருநாதர் வந்து, ‘போதும்டா! முடிச்சுக்கோ’ன்னார். மேடைக்குப் பின்பக்கம் என்னை கூட்டிட்டுப் போய் திருஷ்டி சுத்திப் போட்டார். கட்டியணைச்சுக் கண்ணீர் விட்டார். இதுதான் குருவின் பெயரைக் காப்பாத்தறதுன்னு நினைக்கிறேன். தவிர, எல்லாமே குருவுக்கு சமர்ப்பணம். இந்த ஞானம், புகழ், கௌரவம் எல்லாத்தையுமே அவருக்கு சமர்ப்பணம் செய்றேன்.

unnamed%20%281%29_21034.jpg


என்னோட குரு, ஆல் இண்டியா ரேடியோல டாப் ஆர்ட்டிஸ்ட்! நான் ஏ கிரேடு. குருவுக்கு வெள்ளிக்கிழமை பாட வாய்ப்பு கிடைக்கும். எனக்கு ஞாயித்துக் கிழமை கிடைக்கும். இதுக்காக ரெண்டு பேரும் வியாழக்கிழமை சாயந்திரம் சென்னைக்குக் கிளம்புவோம். ரயில்ல அஞ்சு ரூபா டிக்கெட். குருவோட சகோதரர் மயிலாப்பூர் லஸ் பக்கத்துல இருந்தார். அவரைப் பார்த்துட்டு ரேடியோ ஸ்டேஷனுக்குப் போவோம். வெள்ளிக் கிழமை குருநாதர் பாடுவார். அப்புறம் சனிக் கிழமை ரெஸ்ட். ஞாயித்துக்கிழமை நான் பாடுவேன். அப்புறம் கிளம்பி ஊருக்கு வருவோம். அப்பா என் குருநாதரா இருந்தார். அதேபோல குருநாதரும் அப்பா மாதிரியே என்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்தார்’’ என்று பழைய நினைவுகளில் மூழ்கித் திரும்பினார்.

 


‘’உங்களின் இஷ்ட தெய்வம் எந்தக் கடவுள்னு தெரிஞ்சுக்கலாமா சார்?’’ - என்று வாசகி புவனேஸ்வரி கேட்டார்.
‘’நமக்கு இஷ்டமான தெய்வத்தை தேர்ந்தெடுக்கறதா  அல்லது தெய்வத்துக்கு இஷ்டமா நாம இருக்கறதா... இதுல எது முக்கியம்? கடவுளுக்கு இஷ்டமா நாம நடந்துக்கணும். அது இசைத் துறையாகட்டும், வேற துறையாகட்டும். எதுவா இருந்தாலும் சரி... வாழ்க்கையை அர்த்தம் உள்ளதா மாத்திக்கணும். எல்லாருக்கும் உபகாரம் பண்ணிண்டு, ஒருத்தருக்கும் சின்ன உபத்திரவம்கூட பண்ணாம, வாழ்ந்தா... கடவுளுக்கு இஷ்டமானவங்களா நாம ஆகிடலாம். ஒவ்வொரு மனுஷாளுக்கும் இதுதான் அவசியமும்கூட!  
மத்தபடி என் இஷ்ட தெய்வம்னு நீங்க கேட்டதால சொல்றேன். அனுமார்தான் என் இஷ்ட தெய்வம். சின்ன வயசுலேருந்து வந்த பழக்கம் இது. எந்தவொரு செயலா இருந்தாலும் சரி, சட்டுன்னு அனுமார்கிட்ட ஒரு வேண்டுதல் வைச்சிருவேன். அவரோட திருநாமத்தை அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பேன். ஸ்ரீஅனுமன் மேல அலாதி பிரியமும் பக்தியும் உண்டு எனக்கு’’ என்றார்.


‘’இந்தக் கால இசையைக் கேட்கிறீர்களா? கர்னாடக சங்கீதத்துடன் மேற்கத்திய இசையும் கலப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’ என்று வாசகி பத்மலதா கேட்டார்.
‘’ஓய்வு நேரங்கள்ல கேப்பேன். ஆனா, ஓய்வுக்குன்னெல்லாம் நேரம் ஒதுக்கறதே இல்லை. எப்பவும் ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கணும். அதான் என் விருப்பம். தவிர, கர்னாடக சங்கீதம் மேற்கத்திய சங்கீதம்னெல்லாம் தனித் தனியா இருக்கிறதா நினைக்கலை. காதுக்கு இனிமையான சங்கீதம் எதுவா இருந்தாலும், அது கர்னாடக சங்கீதமே!’’ என்றார் அழுத்தம் திருத்தமாக.


‘’உங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் நிறையப் பேர் உண்டு. குறிப்பாக, கமல்ஹாசன்கூட உங்களிடம் சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறாராமே...’’ - என்று வாசகர் ஸ்ரீநிவாசன் கேட்க...
‘’கமல், மகா கலைஞன். கூர்மையான புத்திசாலித்தனம் உண்டு. எதையும் சட்டுன்னு உள்வாங்கிப்பார். அவ்வளவு ஏன்... இப்போ நம்ம தமிழ்நாட்டை ஆட்சி செஞ்சிட்டிருக்கிற ஜெயலலிதா கூட எங்கிட்ட பாட்டு கத்துட்டிருக் காங்க. இசைல பெரிய ஆர்வம் உண்டு அவங்களுக்கு. அவங்க குரலும் பாடுறதுக்கு அத்தனை தோதா இருக்கும். அவங்க கச்சேரிலயோ இல்ல சினிமாலயோ இன்னும் நிறையப் பாடியிருக்கலாம். ஏன் பாடலைனு தெரியலை. ஆனா, இப்ப கமலும் சரி, ஜெயலலிதாவும் சரி... என்னை அடியோடு மறந்துட்டாங்கன்னுதான் சொல்லணும்’’ என்று வெள்ளந்தியாகச் சொல்லிப் புன்னகைத்தார் பாலமுரளி கிருஷ்ணா.


‘’மேடையில் கச்சேரி பண்ணும்போது கையில், பாக்கெட்டில் அல்லது பக்கத்தில் ஏதேனும் ஸ்வாமி படம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற சென்டிமென்ட் உண்டா, உங்களுக்கு?’’ என்று வாசகி லலிதா கேட்டார்.
‘’அப்படியெல்லாம் எந்த சென்டி மென்ட்டும் கிடையாது. இந்தக் கலர், இந்த ஸ்வாமி படம், இப்படி திசை பார்த்து உட்கார்றதுன்னு எந்தப் பழக்கமும் கிடையாது. பகவான் எப்பவும் எல்லா பக்கத்திலயும் பக்கத் துணையா இருக்கார். பக்க வாத்தியக்கார கலைஞர்களும் பக்கத் துணையா இருக்காங்க. எதிர்ல இருக்கற ரசிகர்களும் நம்ம மேல மிகுந்த வாத்ஸல்யத்தோட, பிரியத்தோட இருக்காங்க. இவங்க எல்லாரையும் திருப்திப்படுத்தணும்; சந்தோஷப் படுத்தணும்; பெருமைப்படுத்தணும். அவ்வளவுதான் நினைச்சுப்பேன்!
திருவையாறில் ஒரு ஆராதனை விழா. அப்ப எனக்கு 11 வயசு. அங்கே விழாவுல, முத்தையா பாகவதர் மடியில உக்கார்ந்திருந்தேன். ஸ்வாமிக்கு அபிஷேகம் நடந்துட்டிருந்துது. யாரோ ஒருத்தங்க பாடிட்டிருந்தாங்க. அவர் பாடி முடிச்சதும், ‘நீ பாடு... நீ பாடு...’னு முத்தையா பாகவதர் சொல்ல, நான் பாட ஆரம்பிச்சேன். மொத்தக் கூட்டமும் ‘யார் பாடுறது?’னு சுத்திச் சுத்திப் பார்க்க ஆரம்பிச்சுது. கடைசியாதான், முத்தையா பாகவதர் மடியில உக்கார்ந்திண்டிருக்கிற பய பாடுறான்னு தெரிஞ்சுது அவங்களுக்கு.
பெங்களூரு நாகரத்தினம்மாங்கறவங்க, ‘நாளைக் காலைல இவன் பாடட்டும். நான் என் டைமை இவனுக்காக விட்டுத் தரேன்’னு சொன்னாங்க. மறுநாள், மாபெரும் இசைக்கலைஞர்களோட நிகழ்ச்சிகளுக்கு நடுவே பாடினேன். ‘என் நேரத்தையும் பையனுக்கே தரேன்’னு அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் முன்வந்தார். மகாராஜபுரம் விஸ்வநாத அய்யரும் அவர் நேரத்தை எனக்குத் தந்து பாடச் சொன்னார். ஓர் இளம் பாடகன், திருவையாறு கச்சேரில ஒன்றரை மணி நேரம் பாடினது, அதுதான் முதல்முறை. மேடையேறும்போது பல தருணங்கள்ல, 11 வயசுல திருவையாறில மேடையேறின அனுபவம்லாம் சட்டுன்னு நினைவுக்கு வரும். இப்பவும் ஞாபகம் வந்துடுச்சு!’’ என்று சொல்லிப் பூரிக்கிறார் பாலமுரளி கிருஷ்ணா.
பெயருக்கேற்றாற்போலவே, ஒவ்வொரு பதிலிலும் ஒரு குழந்தைத்தனம் கொஞ்சுகிறது டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவிடம். எந்தக் கேள்வி கேட்டாலும், சட்சட்டென்று பதில் சொல்லிவிட்டு, கலகலவெனச் சிரிப்பதில் தான் அவரின் ஆரோக்கியமும் தெளிவும் நிறைந்திருக்கிறதுபோலும்.


 திருவிளையாடல்ல ‘ஒருநாள் போதுமா’ன்னு ஆணவ த்வனியில பாடியிருப் பீங்க. இன்னொரு படத்துல ‘தங்கரதம் வந்தது வீதியிலே’னு குழைஞ்சும் இழைஞ்சும் பாடியிருப்பீங்க. இதுக்காக, என்ன மாதிரியான முயற்சிகள் எடுத்துக் கிட்டீங்க?’’ என்று கேட்டார் வாசகி ராதா சுதர்சனம்.
‘‘இதுக்குப் பெரிசா மாத்திப் பாடணும், முயற்சி எடுத்துப் பாடணும்னெல்லாம் அவசியம் இல்லை. படத்துல அந்தக் கேரக்டரோட குணாதிசயம் என்ன, எந்தச் சூழல்ல இந்தப் பாட்டு வருது, இந்தப் பாட்டின்போது யார் யாரெல்லாம் இருப்பாங்க, பாட்டுக்கு வாயசைக்கிற நடிகர் யாருனு டைரக்டர்கிட்டயும் மியூஸிக் டைரக்டர்கிட்டயும் முழு விவரத்தை யும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டுப் பாடிட வேண்டியதுதான்!’’


 ‘இந்தக் காலத்தில் சங்கீதம் கற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு உங்களின் அறிவுரை என்ன?’’  இது வாசகர் சேதுராமனின் கேள்வி. 
‘‘அரைகுறையா கத்துக்காதீங்க; முழுசா கத்துக்கோங்க. ஆசைப்பட்டு கத்துக்கோங்க. அப்பா ஆசைப்படுறார், அம்மா விரும்பறானு இல்லாம, நீங்களா விரும்பிக் கத்துக்கணும். சங்கீதத்துல எல்லா நுணுக்கங்களையும் ஈடுபாட்டோட கத்துக்கணும். அந்தக் காலத்துல எல்லாம் இந்த அளவுக்கு வசதிகளோ வாய்ப்புகளோ இல்லை. இங்கேருந்து அங்கே போய் கத்துக்கறதுக்கு, போயிட்டு வர வாகன வசதிகளும் கிடையாது.
இன்னிக்கு எல்லாமே இருக்கு. கத்துக் கொடுக்கறதுக்கும் நிறையப் பேர் இருக்காங்க. போக வர, சாலையும் நல்லாருக்கு. வாகன வசதிகளும் இருக்கு. ரேடியோ, டிவி, மேடை, சபாக்கள்னு நிறைய வாய்ப்புகளும் கிடைக்குது. போட்டிகள் வைக்கிறாங்க. பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்துறாங்க. அதனால, எதைக் கத்துக்கறதா இருந்தாலும், ஆழ்ந்த ஈடுபாட்டோடயும் உத்வேகத்தோடயும் குழந்தைகள் கத்துக்கணும்!’’ என்றார் பாலமுரளி கிருஷ்ணா.


‘‘நீங்களே புதுப்புது ராகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். கீர்த்தனை களை இயற்றியிருக்கிறீர்கள். இதுபற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்’’ என்று வாசகி புவனேஸ்வரி கேள்வி எழுப்பினார்.
‘’இசையில் மொத்தம் 72 மேளகர்த்தாக்கள். ஆனால் அந்த மேளகர்த்தாக்களைப் பற்றி ஒரு சர்ச்சை உண்டு. சம்பூர்ண மேளகர்த்தா, அசம்பூர்ண மேளகர்த்தானு ரெண்டுவிதம். இதுல, அசம்பூர்ண மேளகர்த்தாவை உருவாக்கியவர் வேங்கடபதி. சம்பூர்ண மேளகர்த்தாவுக்கு கோவிந்தாச்சாரி என்பவர்தான் கர்த்தா. தியாகராஜர், சம்பூர்ண விதத்தைத்தான் கையாண்டார். எனக்கும் சம்பூர்ணம்தான் பிடிக்கும்.
முத்துசாமி தீட்சிதர், அசம்பூர்ண மேளகர்த்தாவை போற்றினார். எந்த ராகத்துக்கும் ஒரு பாடல் இருக்கணும். அப்போதுதான், அந்தப் பாட்டைப் பாடும்போதுதான் ராகம் புரியும். ஒரு ராகத்துக்கு பலப்பல பாட்டுகள் இருந்தா, இன்னும் விசேஷம். ஆனா, ஒரு ராகத்துக்கு ஒரேயொரு கீர்த்தனை மட்டுமே இருந்தா, அதை அடிக்கடி பாடணும். அப்படிப் பாடினாத்தான், அந்த அபூர்வ ராகம் வெளியே தெரியவரும். நான் கச்சேரிகள்ல, ரெண்டு பாட்டுப் பாடிட்டு, ஒரு அபூர்வ ராகம் பாடுறது வழக்கம்.
கவிதை, பாடல் எழுதறதை முறையாக் கத்துக்கலை நான். சம்ஸ்கிருதம் தெரியாது எனக்கு. பாடுவேனே தவிர, எழுதத் தெரியாது. திடீர்னு தோணுச்சு. குருநாதர்கிட்ட பாடிக்காட்டினேன்.
‘அற்புதம்... ரொம்ப நன்னா இருக்கு. நிறையப் பண்ணு...’னு ஆசீர்வாதம் பண்ணினார். அப்புறம் குருவை வைச்சே கீர்த்தனை தோணுச்சு. அதுக்கு நிறைய கீர்த்தனைகள் எழுதினேன். எல்லாமே இறையருள். குரு கிருபை.
அப்பய்ய சாஸ்திரி தெரியும்தானே! ஒருநாள், காலைல நாலு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார். அப்ப, சின்னவயசுதான் எனக்கு. கதவைத் திறந்து பார்த்ததும், என் அப்பா ஆடிப்போயிட்டார். ‘எழுப்பு... இன்னும் பத்து நிமிஷத்துல உன் பையன் என்னோட வரணும்’னார் சாஸ்திரி. எழுந்து, குளிச்சு நாங்க ரெண்டு பேரும் ரெடியானதும்... ‘நீ வரவேணாம். அவன் மட்டும் வந்தாப் போதும்’னார்.
சாஸ்திரிகளை நிமிர்ந்து என்னால பார்க்கவே முடியலை. அவர் கண்கள்ல அப்படியொரு ஒளி. தேஜஸ். பயமா இருந்துச்சு. ஏதோ மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டது மாதிரி அவரோடயே போனேன்.  
அவர் வீட்டு பூஜையறையில் என்னை உட்கார வெச்சு. ‘’இங்கே பார். சில விஷயங்களை உங்கிட்ட சொல்லச் சொல்லி, அம்பாள் உத்தரவு. அதைச் சொல்லத்தான் இங்க கூட்டிட்டு வந்தேன். கவிதைங்கறது ஒரு அற்புதமான படைப்பு. அதுக்கு சில விதிமுறைகள் இருக்கு. அதுவொரு அறிவியல். சில முக்கியக் குறிப்புகள் உனக்குத் தெரியணும். கவிதைக்கு ஒரு கனம் அவசியம். மீட்டர் ரொம்பவே முக்கியம். அதெல்லாம் இப்படித்தான் இருக்கணும்’னு சொல்லிட்டு, மடை திறந்த வெள்ளம் போல, சங்கீதம் தொடர்பான குறிப்புகளை சொல்லிக்கிட்டே போனார். அப்பய்ய சாஸ்திரி சொன்ன எல்லாமே அப்படியே என் மனசுல பதிஞ்சிடுச்சு.
வீட்டுக்கு வந்து, எழுதின கீர்த்தனைகளையும் சாஸ்திரி சொன்ன குறிப்புகளையும் வைச்சுப் பார்த்தப்ப, ஒவ்வொரு கீர்த்தனையும் கனகச்சிதமா அமைஞ்சிருந்து. நான் கரகரன்னு அழுதுட்டேன். எல்லாமே தெய்வ சங்கல்பம். வேற என்ன சொல்றது... சொல்லுங்க’’ என்றபோது, நெகிழ்ந்தும் வியந்தும் நின்றது வாசகர் கூட்டம்.


‘‘இப்படித்தான் கச்சேரி பண்ணணும். பூஜை இப்படித்தான் செய்யணும் என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே கட்டுப்பாடுகள் வைத்துக் கொண்டிருக் கிறீர்களா?’’ என்று வாசகி உமா கேட்டார்.

 


‘’பூஜையாகட்டும், கச்சேரியாகட்டும்... இப்படிக்கட்டுப்பாடுகள் வெச்சுக்கிட்டா, அப்புறம் மனசும் புத்தியும் அந்தக் கட்டுப்பாட்டையே பிடிச்சுண்டு நிக்கும். மனசு ஒரு திசை. புத்தி இன்னொரு திசை. இது ரெண்டும் இப்படிப் போயாச்சுன்னா, அப்புறம் பூஜைலயும் ஆத்மார்த்தம் இருக்காது. கச்சேரியை யும் லயிச்சுப் பண்ணமுடியாது.
அதனால, பூஜைகளை எப்ப செய்யணும்னு தோணுதோ, அப்ப ஆத்மார்த்தமா செய்றவன் நான். அதேபோல கச்சேரி புக்காகி, மேடை ஏறிட்டேன்னா, அந்த நாலஞ்சு மணி நேரமும் பாட்டுலதான் முழுக்கவனமும் இருக்கும்.
அதேபோல, ‘கச்சேரி அன்னிக்கி மௌன விரதம் இருந்து குரலை பாதுகாப்பீங்களா? ஐஸ்க்ரீம் அறவே தொடமாட்டீங்களா?’ன்னெல்லாம் கேப்பாங்க சிலபேர். ‘மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே’னு பாடியிருக்கேன். ஆனா, கச்சேரிக்கும் மௌனமா இருக்கறதுக்கும் சம்பந்தமே இல்லை. ஐஸ்க்ரீமை ரொம்ப விரும்பிச் சாப்பிடுவேன். சாயந்திரம் கச்சேரின்னா, ஒரு மூணு மணி வாக்குல, சுடச்சுட பஜ்ஜி சாப்பிட்டு, ஸ்ட்ராங்கா ஒரு காபி குடிச்சிட்டு, அப்புறம் ஒரு ஐஸ்க்ரீம்கூட சாப்பிட்டுவிட்டு, மேடையேறியிருக்கேன்.
இந்தப் பாட்டு, இசை, ஞானம், கீர்த்தனை, பெயர், புகழ் எல்லாமே பகவான் கொடுத்த பெருங்கருணை. கொடை. அப்படியிருக்கும்போது, குரல் வளத்தோட இருக்கறதுக்கு நாம என்ன பண்ணினாலும் ஒண்ணும் ஆகப்போறதில்லை. தெய்வக் கணக்குக்கு முன்னாடி, நீங்க என்ன.... நான் என்ன... நாமெல்லாம் எம்மாத்திரம்?
இசையுலகத்துக்கும் இறைவனுக்கும் எப்பவும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன். அவ்ளோதான்...’’ என்று ஒரு குழந்தையைப் போல் கபடமின்றிச் சிரிக்கிறார் பாலமுரளி கிருஷ்ணா.
அந்தச் சிரிப்பே ஒரு ஆலாபனைதான். சங்கீதம்தான்!
 

http://www.vikatan.com/news/cinema/73182-memories-of-balamuralikrishna.art

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

?1f635.png?1f635.png ?

 
Thangaraja Niranchan's photo.
Thangaraja Niranchan's photo.
 
· 
 

 

 

 

 

 

 

 

#மாவீரர்_நினைவுகள்.. 

மழை மெதுவாக தூறிக்கொண்டிருந்தது..
மல்லாவி நோக்கிய பேருந்து விரைந்து கொண்டிருந்தது. எனது இருக்கைக்கு அருகில் ஒரு வயதான அம்மா இருந்தார். எதையோ பறிகொடுத்தது போல ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்தார்.
என்னுடன் பேசவில்லை, ஆனால் அடிக்கடி என்னை ஏக்கத்தோடு பார்ப்பது புரிந்தது,..
வன்னிவிளாங்குளம் வந்தபோது திடீரென வெளியே எட்டிப்பார்த்தார். முகத்தில் சோகம் இளையோடி இருந்தது. நீண்ட பெருமூச்சுடன் என்னைப்பார்த்தார். கண்களின் ஓரம் வழிந்த கண்ணீரை துடைத்தவாறு 'என்ர புள்ள' இங்கதான் இருக்கிறான்,. அதுதான் பாத்தனான். என்று கூற எனக்கும் கண்கள் கலங்கியது,..

தம்பி எனக்கு 4 பிள்ளையப்பு. ஒரே ஓரு பொடியனடா, இப்ப இருந்தா அவனுக்கு உன்ர வயசு இருக்கும்..
நான் எதுவும் பேசவில்லை,.
அம்மா தொடர்ந்தார்,..
அவனுக்கு இயக்கம் என்டா காணும். சும்மா வால் பிடிச்சுக்கொண்டு திரிஞ்சான். 
2005 ஆம் ஆண்டு ஒரேயடியா போட்டான். அதுக்கு பிறகு நான் அவன தேடாத பேசுகள் இல்ல அவன அவங்கள் காட்டவே இல்லை.
2007 ஆம் ஆண்டு வீட்ட வந்தான். 10 நாள் லீவில வந்தவனாம்,, நல்லாக்கதைச்சான். பெரிய ஆம்பிளையா வளர்ந்து நல்ல வாட்டமா தான் இருந்தவனப்பு..
சிறிது நேரம் மௌனமானார் அம்மா.. கண்களில் கண்ணீர் ஓடியது..
பிறகு சொன்னார்.
தம்பி அவன் அந்த பத்து நாளும் போகாத வீடில்லை பாக்காத ஆக்களில்லை எல்லாரோடையும் நல்லமாதிரி அவன். குணத்தாற்ற பெட்டைல அவனுக்கு ஒரு விருப்பம். போய் அவளையும் பாத்து கதைச்சவனாம். இயக்கத்தை விட்டு விலத்தி வந்து உன்னைத்தான் கட்டுவன் என்டு அவளிட்ட சொன்னவனாம்..
பேந்து நாங்களும் அவனுக்கு பிடிச்ச சாப்பாடு எல்லாம் செய்து குடுத்தம்.. பத்தாம் நாள் வெளிக்கிட்டான். வெளிக்கிடேக்க அம்மா உன்ர மடில ஒருக்கா படுக்க ஆசையா இருக்கும்மா என்டு கேட்டான். வாவன் ஐயா படன் எண்டு சொன்னன். என்ர மடில தலைவைச்சுப் படுத்துக்கொண்டு அம்மா ணேய் ஒரு வாய் சோறு தீத்தி விடணை உன்ர கையால சாப்பிட்டு எத்தினை நாள் ஆசையா இருக்கு என்டு கேட்டான். எனக்கு அழுகை வந்திட்டு தம்பி. சாப்பிடேக்க சொன்னான் அப்பா இல்லாம கஸ்டப்பட்டு எங்களை வளத்த நீங்கள் அழக்கூடாதம்மா. நான் உயிரோட இருக்கிற வரைக்கும் உன்னை அழ விடமாட்டன்..
தங்கச்சியாக்கள வடிவா படிப்பியண. அக்காவ வெளிநாட்டுக்கு பாத்து அனுப்பணை. நான் நாட்டுக்கான பிள்ளை என்னால காசு உழைச்சு தரமுடியாதம்மா என்டு கண் கலங்கியபடி சொன்னான்..
அழாதையப்பு எண்டு அவன்ர கண்ணீரை துடைச்சுப்போட்டு சொன்னன் நீ உன்ர கடமைய செய்யப்பு எண்டு.."
எல்லாருக்கும் போட்டுவாறன் என்டு போகும்வரை கை காட்டிப்போட்டு போனவன் தான்...

அதுக்கு பிறகு வரவே இல்லை...
அம்மா அழுதார்..
கரும்புலியா போய் கடல்ல வெடிச்சவனாம்..
என்ர புள்ள சாகேக்க என்ன நினைச்சிருப்பான்...
எல்லாம் கனவாப்போச்சு தம்பி.

எனக்கு எதுவுமே பேச வரவில்லை..
அக்கா வெளிநாடு போட்டாவா என்றேன். 
இல்ல தம்பி அவளை அங்க விட்டுட்டு எப்பிடி நாங்க இஞ்ச இருக்கிறது. பிள்ளையள் மூண்டு பேரும் ஏ எல் முடிச்சுட்டாளவ. நான் கூலி வேலைக்கு போறனான். மூத்தவள் கடைல வேலை செய்யுறாள். இரண்டாவது பிள்ளை கலியாணம் கட்டி பக்கத்தில தான் இருக்கிறாள். மூண்டாவது பிள்ளை கம்பசில படிக்கிறாள்..
இப்பிடி எங்கட சீவியம் இப்பிடியே போகுது..
இப்ப மூத்தவள யாருட்டயாச்சும் பிடிச்சு குடுக்கலாம் எண்டா சீதணம் கனக்க கேக்கிறாங்கள். அவளுக்கு கால்ல ஒரு காயம் இருக்கு.. அது முள்ளிவாய்க்கால்ல. செல் பீஸ் அவளின்ர கால்ல பட்டது. நடக்கேக்க காயத்தால கால் வளைஞ்ச மாதிரி தெரியும். அதால அவளுக்கு சீதணம் கனக்க குடுக்கத்தானே வேணும்.. எங்களிட்ட அந்தளவுக்கு வசதி இல்லை தம்பி இனி கடவுள் விட்ட வழிதான் தம்பி,

என்ர புள்ள இருந்தா நாங்க இப்பிடி கஸ்டப்பட விட்டிருக்க மாட்டான்.. இஞ்ச இப்பத்தைய சனங்கள் எல்லாத்தையும் மறந்து திரியுதுகள். ஒரே குடியும் கும்மாளமும் ரவுடியள் மாதிரி இப்பத்தய இளசுகள்,..
எல்லாம் எங்க போய் முடியுமோ தெரியாது என்னடா.
நீயாவது நல்ல புள்ளையா இரப்பு...
அந்த அம்மா சொல்லும் போது நெஞ்சு கனத்தது.
எங்கட பிள்ளையள் என்னத்துக்கு செத்துப்போனவங்கள் என்டு யோசிக்கிறதுக்கு கூட இப்ப இஞ்ச ஒரு மனிசரில்லை. எல்லாம் ஒண்டையொண்டு பிடிச்சு தின்னுற மாதிரி திமிர் பிடிச்செல்லே இப் அலையுதுகள்.. போனும் மோட்டச்சைக்கிளும் ரீவீ யும் மட்டும் தான் வாழ்க்கை எண்டு நினைக்குதுகள். பழக்க வழக்கங்கள் எல்லாம் சரி இல்லை இப்ப...
ம்ம் காலம் சொல்லும் தம்பி எல்லாத்துக்கும் பதில் சொல்லும் தம்பி எண்டு சொன்ன அம்மா நீண்ட பெருமூச்சு விட்டார்,

2007 மாவீரர் நாளுக்கு என்ர புள்ளைட்ட நான் கடைசியாப்போய் விளக்கெல்லாம் கொழுத்திப்போட்டு வந்தனான். அதுக்குப்பிறகு எல்லாமே மாறிப்போச்சு என்ன தம்பி.,
ஓம் அம்மா என்றேன்.

மல்லாவி இறங்கிற ஆக்கள் முன்னுக்கு வாங்கோ..
நடத்துனர் சொன்னபோது தான் மல்லாவிக்கு பஸ் வந்தது தெரிந்தது.  
அம்மாவிடம் என்னுடைய போட்டோ ஒன்றை கொடுத்து வீட்டு முகவரியையும் கொடுத்தேன்.
உங்கட மூத்தவளுக்கு என்னை பிடிச்சிருந்தா எங்கட வீட்ட வந்து பாருங்கோ எண்டு அம்மாட்ட சொல்லிப்போட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்தேன்.ஏதோ ஒரு திருப்தி என் மனதில் இழையோடியது.

யாரோ ஒருவரின் அனுபவ பகிர்வு..

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'மாவீரர் கவிதை'

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழ மண்ணில் மாவட்டந்தோறும் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள்!

15095671_10211503244482184_2044417656374
  • அம்பாறை மாவட்டம்
    • கஞ்சிக்குடியாறு மாவீரர் துயிலுமில்லம்.
  • மட்டக்களப்பு மாவட்டம்
    • தரவை மாவீரர் துயிலுமில்லம்.

     

    • தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்.
    • மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம்.
    •வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம்,

  • திருகோணமலை மாவட்டம்
    • ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
    • தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம்.
    • பெரியகுளம் மாவீரர் துயிலுமில்லம்.
    • உப்பாறு மாவீரர் துயிலுமில்லம்
  • வவுனியா மாவட்டம்
    • ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
  • மன்னார் மாவட்டம்
    • ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம்.
    • பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்.
  • முல்லைத்தீவு மாவட்டம்
    • விசுவமடு மாவீரர் துயிலுமில்லம்.
    • முள்ளியவளை மாவீரர்துயிலுமில்லம்.
    • அலம்பில் மாவீரர் துயிலுமில்லம்.
    • ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
    • வன்னிவளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
    • ஜீவன்முகாம் மாவீரர் துயிலுமில்லம்.
    • டடிமுகாம் மாவீரர் துயிலுமில்லம்.
  • கிளிநொச்சி மாவட்டம்
    • கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லம்.
    • முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்.
  • யாழ்ப்பாண மாவட்டம்
    • சாட்டி தீவகம் மாவீரர் துயிலுமில்லம்.
    • கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்.
    •கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம்.
    • எல்லங்குளம், வடமராட்சி மாவீரர் துயிலுமில்லம்.
    • உடுத்துறை, வடமராட்சி மாவீரர் துயிலுமில்லம்.

-ஜெகதீஸ்வரன் பிரசாத்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.