Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவில் கடத்திய குதிரைகள் திருமலையில்; மீள வழங்குமாறு கோருகிறார் கால்நடை அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நெடுந்தீவில் இருந்து குதிரைகள் கடத்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் வடக்கு மாகாண சபையினர் இன்று பேச்சுக்களை நடாத்தியுள்ளனர்.

நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்பு மிக்க குதிரைகள் கடற்படையினரால் கடத்தப்படுவதை நிறுத்துவது தொடர்பில் வடக்கு மாகாண கால்நடை அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஆகியோர் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.

நெடுந்தீவில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குதிரைகள் உள்ளன. இந்த நிலையில் யுத்தம் முடிந்த பின்னர் வன ஜீவராசிகள் திணைக்களம் நெடுந்தீவுக்கு வருகைதந்து குதிரைகளுக்கு சரணாலயம் அமைப்பதற்கு காணி ஒன்றினை வழங்குமாறு காணி அமைச்சர் ஊடாக வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கோரியிருந்தனர்.

அதனடிப்படையில் நெடுந்தீவில் 537 ஏக்கர் நிலம் வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார். எனினும் மீண்டும் நெடுந்தீவுக்கு வந்த  வன ஜிவராசிகள் திணைக்களம் அங்குள்ள குதிரைகள் நல்லினக்குதிரைகள் என்றும் அவற்றை கடற்படையினரின் விடுதிகளுக்கு தருமாறும் கேட்டிருந்தனர்.

இதனையடுத்து திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம் ஒன்றிற்கு கடந்த 3ஆம் திகதி நெடுந்தீவில் இருந்து 4 குதிரைகளை கடத்தியும் சென்றுள்ளனர்.

இதனையடுத்து விசனம் கொண்ட மக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் குறைப்பட்டுள்ளதுடன் எமது வரலாற்று பெருமையுடைய குதிரைகளை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பூரணமாக அறிந்து கொள்ளவும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறு நடைபெறாது இருக்கவும் பலதரப்பட்டவர்களுடன் கலந்துரையாடும் நோக்குடன் இன்று கால்நடை அமைச்சர் மற்றும் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஆகியோர் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு நேரடியாக விடயங்களை அறிந்து கொண்டதுடன் கலந்துரையாடல்களையும் நடாத்தினார்.

எனினும் பிரதேச செயலர் இன்று அலுவலகத்திற்கு சமுகமளிக்காத காரணத்தினால் மூத்த அலுவலகர் ஒருவரிடமும் கடற்படையின் இரண்டாம் நிலை அதிகாரியான கருணாரட்ண என்பவரிடமும் குதிரைக் கடத்தல் தொடர்பில் தெளிவு படுத்தப்பட்டது.

அவர்களிடம் நெடுந்தீவு மக்களும் புலம்பெயரிகளும் குதிரைகள் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்துமாறு எங்களுக்கு அழுத்தங்களை வழங்குகின்றனர் என்றும் குறித்த விடயத்தில் நாமும் மக்கள் கருத்துடனேயே உடன்படுகின்றோம் என்றும் அமைச்சர் அவர்களிடம் தெரிவித்திருந்தார்.

மேலும் இது பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே எங்களுடைய வரலாற்றுச்சின்னங்களை கொண்டு செல்லவிட மாட்டோம் என்றும் கொண்டு செல்லப்பட்ட குதிரைகள் மீண்டும் கொண்டுவந்து விடப்பட்டால் மட்டுமே சரணாலத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியை தருவோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் குதிரைப் படை என்ற ஒன்று இலங்கையில் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் உள்ளது. தேவையான குதிரைகளை அங்கேயே வாங்க முடியும் என்றும் இங்கிருந்து கொண்டு செல்ல அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, பிரதேச செயலர் இல்லாத காரணத்தினால் பதில் கடமையாற்றிய அலுவலகர் வன ஜீவராசிகள் திணைக்களம் எங்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியதையடுத்தே நாம் அனுமதி வழங்கினோம் என்று கூறி தனிச்சிங்களத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றினையும் அமைச்சரிடம் வழங்கினார்.

மேலும் கடற்படையின் அதிகாரி தெரிவிக்கையில், குதிரைகள் கொண்டு சென்றதற்கும் எமக்கும் சம்பந்தம் இல்லை. நாம் மேலிடத்து உத்தரவிலேயே செயற்பட்டோம்.

தற்போது திருகோணமலை கடற்படையின் முகாமில் குதிரைகள் உள்ளன என்றும் இங்கிருந்து முதல் 4 குதிரைகள்  கொண்டு செல்லப்பட்டன . அதில் ஒன்று கண் தெரியாத குதிரை என குறிகட்டுவானில் வைத்து மருத்துவ பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டதையடுத்து அது மீண்டும் இங்கு கொண்டு வந்து விடப்பட்டு பிறிதொரு குதிரை கொண்டு செல்லப்பட்டது.

எனினும் திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் தற்போது ஒரு குதிரை மட்டுமே உள்ளன. எனவே அதற்கு துணையாகவே இவை கொண்டு செல்லப்பட்டன. நீங்கள் கூறுவது போல திருப்பி கொண்டு வந்து விட்டால் எங்களுக்கும் சந்தோசம் தான் என அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து கால்நடை அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

குறித்த விடயம் தொடர்பில் வன ஜீவராசிகள்  திணைக்களத்திற்கும் திருகோணமலை கடற்படை முகாமிற்கும் விரைவில் கடிதம் மூலம் தெரியப்படுத்த இருக்கின்றோம். அவ்வாறு அவர்கள் இணங்குவார்கள் எனின் எங்கள் முன்னாலேயே கொண்டு செல்லப்பட்ட குதிரைகள் மீண்டும் நெடுந்தீவில் விடப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=842413419711868768#sthash.iYpkmEEA.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத் தட்ட 600 ஆண்டுகளுக்கும் மேலாக பல இனங்களைச் சார்ந்த குதிரைகள்  வாழ்ந்து வந்தாகவும்..அதனைப் பற்றிய ஆய்வுகளை முன்னெடுக்கபட வேண்டும் என்ற செய்திகள் கூட அண்மைய காலங்களில் வந்து கொண்டு இருந்தது..அவர்களின் ஆய்வுகளின் தாக்கம்,நோக்கம் எல்லாம் அந்த உயிரினங்களையும்  மனிதர்களைக் கடத்துவது போல் ஆரம்பித்துள்ள ஒரு திருவிளையாடல் தான்  என நினைக்க தோன்கிறது..

கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நெடுந்தீவுக் குதிரைகள் திருமலை கடற்படை முகாமில்! மீளத்தரக் கோருகிறார் அமைச்சர் ஐங்கரநேசன் -
 
horse%20nedu%20632.jpg
 
நெடுந்தீவில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாக பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்ட நான்கு குதிரைகளும் கடற்படையினரால் திருகோணமலைக் கடற்படைமுகாமுக்கு எடுத்துச்செல்லப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவில் இருந்து படையினரால் குதிரைகள் கடத்தப்படுவதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், யாழ்மாவட்ட இராணுவத் தளபதி உதய பெரேரா தரைப்படையினர் இத்தகைய நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லையென ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், இதன் பின்னணி பற்றித் தெரிந்து கொள்வதற்காக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்துடன் நெடுந்தீவுக்கு இன்று வியாழக்கிழமை சென்றிருந்தார். நெடுந்தீவில் மேய்ச்சல் நிலங்களில் குதிரைகளைப் பார்வையிட்ட அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதேசசபை அதிகாரிகள், கடற்படை முகாமைச் சேர்ந்த லெப்டினன்ட் கொமாண்டர் கருணாரட்ண மற்றும் பொதுமக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
 
அதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவித்தபோதே கடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நான்கு குதிரைகளும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதியுடன் கடற்படையினரால் திருகோணமலைக் கடற்படைமுகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் - நெடுந்தீவில் வாழுகின்ற போனி ரகக் குதிரைகள் போர்த்துக்கேயரால் கொண்டுவரப்பட்டவை. எனினும் பெருநிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்பட்ட நெடுந்தீவில் பன்னெடுங்காலம் தனிமைப்படுத்தப்பட்டு அக இனக்கலப்பில் ஈடுபட்டு வந்ததன் காரணமாக வடக்குக்கே உரித்தான தனித்துவமான ஒரு ரகமாகவும், வடக்கின் மரபுரிமைகளில் ஒன்றாககவும் இன்று இந்தக் குதிரைகள் மாறி உள்ளன.
 
எனினும் ஏறத்தாழ 500 குதிரைகள் மட்டுமே வாழ்வதால் இவற்றை உரியமுறையில் பாதுகாக்கத் தவறினால் விரைவிலேயே அழிந்துவிடும் அபாயம் உள்ளது. இதனைப் பலரும் சுட்டிக்காட்டியதன் காரணமாக இலங்கை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் நெடுந்தீவில் குதிரைகளுக்கு 537 ஹெக்டெயர் பரப்பளவில் சரணாலயம் ஒன்றை அமைக்க முன்வந்துள்ளது. இதற்கான அனுமதிகோரி எமது முதலமைச்சரிடம் வடமாகாணக் காணி ஆணையாளர் கோரிக்கைக் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார்.
 
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஒருபுறம் குதிரைகளைப் பாதுகாப்பதற்காகச் சரணாலயத்துக்கு அனுமதியைக் கோரிவிட்டு இன்னொருபுறம் கடற்படையினர் குதிரைகளைப் பிடித்து செல்வதற்கு அனுமதி வழங்கியிருப்பது முரண்பாடானது. இது கண்டிக்கத்தக்கது. திருகோணமலை கடற்படைமுகாமில் குதிரை ஒன்று தனிமையில் வாடுவதாகவும் அதற்குத் துணையாகவே நெடுந்தீவிலிருந்து குதிரைகள் எடுத்துச்செல்லப்பட்டிருப்பதாகவும் தனது மேலதிகாரிகளின் வேண்டுதலின் பேரில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதியுடன் தாம் இதற்கு அனுமதித்தார் எனவும் நெடுந்தீவு கடற்படைமுகாம் அதிகாரி என்னிடம் தெரிவித்துள்ளார்.
 
தவறான முன்னுதாரணமாக இந்தச் சம்பவம் அமைந்துவிடக்கூடாது என்பதால் எடுத்துச்சென்ற குதிரைகளை மீளவும் நெடுந்தீவிலேயே கொண்டுவந்து விட்டுவிடுமாறு திருகோணமலைக் கடற்படை உயர் அதிகாரிக்கு உத்தியோகபூர்வமாக விரைவில் அறிவிக்கவுள்ளோம். கடற்படையினர் தங்களுக்குக் குதிரைகள் தேவையென்று கருதினால், இலங்கைக் காவல்துறையில் ஒரு பிரிவாகவுள்ள குதிரைப்படைப் பிரிவில் இருந்து இளைப்பாறும் குதிரைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
 
horse%20nedu%20634.jpg
 
horse%20nedu%20633.jpg
 
 
 
 
 
http://malarum.com/article/tam/2014/09/11/5327/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.html#sthash.uHrYCJBv.dpuf
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.