Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கும் சீனாவுக்குமான துறைமுக ஓப்பந்தங்கள் பிராந்தியத்தில் அச்சத்தை தோற்றுவிக்கலாம்

Featured Replies

China%20srilanka_CI.jpg

இலங்கைக்கும் சீனாவிற்க்குமிடையிலான துறைமுகங்கள் குறித்த ஓப்பந்தங்கள் பிராந்தியத்தில் அச்சத்தை தோற்றுவிக்கலாம் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது.

சீனா ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின்போது துறைமுகங்கள் குறித்த உடன்பாடுகள் எட்டப்படலாம்.

பிராந்திய நாடுகளுக்கு சீனா தனது நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்துவதற்காக இந்த விஜயத்தை பயன்படுத்தவுள்ள அதேவேளை இந்தியாவை சுற்றி வளைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு சீனா இந்த துறைமுகங்களை பயன்படுத்தலாம் என்ற அச்சம் உருவாவதற்கான சாத்தியமுள்ளது.

சீனா ஜனாதிபதி 19 ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற் கொள்ளவுள்ளார். அவர் கொழும்பில் மேற்கொள்ளவுள்ள பேச்சுக்களில் துறைமுக அபிவிருத்தி என்பது முக்கியமாக இடம்பெறும். அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக இரு தரப்பும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடலாம் என சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் லியு சியான்சோ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்க்கு ஏற்கனவே பெருமளவு  கடனுதவியை வழங்கியுள்ள சீனா தற்போது அதன் இரண்டாவது கட்ட அபிவிருத்திக்காக உதவிகளை வழங்கவுள்ளது.

கொழும்பு துறைமுக அபிவிருத்திக்கும் சீனா 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

சீனா தன்னுடைய கடலோர சில்க்ரோட் கொள்கையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. கடற்பாதைகளை விஸ்தரிப்பதும், தன்னுடைய கேந்திர நலன்களை உறுதிசெய்வதும் இந்த திட்டத்தின் நோக்கம்,

இலங்கை இந்த முயற்ச்சிகளுக்கு ஆதரவளிக்கிறது எனஇலங்கையின் லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் இயக்குநர் - அசங்க அபயகுணசேகர தெரிவித்துள்ளார். இந்த திட்டம் அபிவிருத்தியை நோக்கமாக கொண்டது என்பதும் அவரது கருத்து.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் நிகழந்ததாக தெரிவிக்கப்படும் யுத்தக்குற்றங்கள் குறித்த மேற்குலகின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்க்கும் சீனாவின் உதவியை இலங்கை எதிர்பார்த்துள்ளது.

மார்ச் மாதம் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை எதிர்த்தநாடுகளில் முக்கியமானது சீனா. இலங்கை அதே ஆதரவை எதிர்பார்க்கின்றது என்கிறார் அசங்க அபயகுணசேகர,.

சீனா இந்துசமுத்திர பகுதியில் படைகளை நிறுத்தவில்லை, இதனால் பாதுகாப்பு கவலைகளில்லை, எனினும் இந்திய இலங்கை உறவுகளை தீர்மானிக்கும் வி;டயத்தில் சீனா பிரதான பங்கு வகிக்கலாம், சீனா வேறு உட்கட்டமைப்பு திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளது-தற்போதைக்கு துறைமுக விவகாரங்கள் முக்கியமானவை அல்ல ஆனால் அடுத்த பத்து வருடங்களில் அவ்வவாறு தெரிவிக்க முடியாது. சீனாவின் கடன்களை திருப்பிகொடுக்க முடியாத நிலையில் இலங்கை தனது சுயாட்சியை இழக்கலாம் என்ற அச்சமுள்ளது என புதுடில்லியின் ஜவஹர்லால் பல்கலைக்கழக பேராசிரியர் சிறிகாந் கொண்டபள்ளி கூட்டிக் காட்டியுள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111525/language/ta-IN/article.aspx

இது ஏற்கனவே இருந்த ஒரு வளித்தடத்தை பொருளாதார நலனை முன் நிறுத்தி மீள உருவாக்குகிறார்கள்...

இதில் இந்தியாவும் சேரும் எண்றே நம்புகிறேன்... அதுக்கும் முன் அடிச்சு பிடிச்சு கொண்டு மகிந்த அறிக்கை விட்டு இருக்கிறார்...

இதுதான் பழைய பட்டு வளித்தடம்...

Zheng_He.png

இது புதுசு..

dsc0869.jpg

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்
சீனாவின் கடன்களை திருப்பிகொடுக்க முடியாத நிலையில் இலங்கை தனது சுயாட்சியை இழக்கலாம் என்ற அச்சமுள்ளது என புதுடில்லியின் ஜவஹர்லால் பல்கலைக்கழக பேராசிரியர் சிறிகாந் கொண்டபள்ளி கூட்டிக் காட்டியுள்ளார்.
சுயாட்சியை யாரிட்ட இழப்பினமாம்......?...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.