Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிவேதாவின் நிறம் மாறும் உறவோடு கோசல்யாவின் சிற்றுராய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாத ஆட்காட்டியில் வெளியாகியிருந்த என் நூல் பற்றிய விமர்சனம்

 

 

நிவேதாவின் நிறம் மாறும் உறவோடு கோசல்யாவின் சிற்றுராய்வு

மரபாக வாழ்ந்த இடத்திலிருந்து புலத்தில் வாழ்வை ஆரம்பித்த காலங்கள் பலரைப் படைப்பாளிகளாக . ஆக்கதாரர்களாக தோற்றம் பெற்றவர்கள் எம்மத்தியில் பல படைப்பாளிகள் . இவர்கள் வாழ்வியல் பட்டறிவு வாயிலாக வாய்ப்புப் பெற்றது மெய்யானதே எனலாம் அந்த வகையில் இங்கே நிவேதா உதயராயன் +நிறம் மாறம் உறவு + படைப்பிலக்கியம் சிறப்புப் பெறுகின்றது ..சீரிய உரை நடை வீரிய வார்த்தைகள் ..வட்டார வழக்கான வசனயார்ப்பு. இங்கு கூறப்படும் பதினனைந்து படைப்பாக்கமும் பறைசாற்றி நிற்பது -மெய்யானது. . கதையல்ல மெய்யான மெருகான சம்பவங்களே --- இவைதான். அந்த வகையில் இவரும் மெய்ப்பாடான படைப்பிலக்கிய கர்த்தாவென்று அங்கீகாரம் பெற்றுக் கொள்கின்றார். என் சிற்றுராய்வு சிந்தனைக்குள் முனைப்பெடுக்கிறது.

 

+நீங்க கடிச்சிட்டுத் தாங்கோ + தலைப்பு சிறப்பு. தன்னெழுவில் வாசிக்கத் தூண்டும் .. ஆற அமர அடுத்தவர் கையில் தன் திருமண வாழ்வை அரக்கி ..அரக்கி வருடங்களாக தள்ளிப் போட்டு கொண்டு போகும் ஆண்கள் மனத்தில் ஏற்படும் தாழ்வு மனப்போக்கின் உச்சமே .இயலாமை. இறுதியில் நிச்சயிக்கப்படும் பெண்ணின் ஆராவாரத்துக்கும் நடிப்புக்கும் பலியாகும் இந்த ஆண்மகன் படைப்பு புலத்தில் விதைக்கப்படும் களைகளை இதை அழிக்க இதுவொரு சான்று !

 

+பெண் + தலைப்பினைப் பார்த்ததும் நினைத்தேன் பெண்ணியச் சிந்தனைகளை பெரிதாக கற்பிக்க அல்லது அதன் சார்பானதொரு வக்காலத்து படையலாக இருக்கலாமென்ற எதிர்பார்ப்பு. மாறாக --பெண்ணின் நியாயமான தவிப்பு, தனிமை, அங்கலாப்புகள் இன்னொரு வடிவாமாக பிரபாகித்து சலனம் சஞ்சலமாகி .. அப்பாவி கணவனின் ஆதரவை மீளவும் தேடிவருவது--உழைப்பே கதியென உறைந்து ..வாழ்வை தொலைத்து நிற்கும் சம்பவம் பட்டறிவை காட்டி நிற்பது சிறப்பு.

 

+நினைவு சுடும் + இங்கே எம்மவர்கள் ஆரம்ப கால அவலங்கள் ..கணக்கிடவே இயலாத கடினங்களின் நடுவில் ..புலம் பெயர்ந்த அப்பொழுதுகளில் சந்தித்த விடயங்களைத் தனித்தனி அறியின் சரித்திரங்களாக அறியலாம். இங்கு வந்து சேரும் வரை நடுவில் எதையோ தொலைத்தவராக ..இழந்தவராக சேர்ந்தார்கள் தமிழர் ..அதில் மிகவும் நெஞ்சைத் தொடும் நிகழ்வை முன் கொணரும் ஆக்கமிது. தரமானது .

 

+நிறம் மாறும் உறவு+ உறவுகளின் உன்னதம் உருமாறும் உபத்திரவங்கள் ஆங்காங்கே அரும்புவதாய் அறிந்து அவமானப்பட்டு போனதுண்டு. எம்மினத்தின் சீர்கேட்டுக்காக நாணுவதாக,வேலியே பயிரை மேய்ந்தால் .. விழிப்புணர்வை விதைத்து விடும் பங்குப்பணி நிவேதா போன்ற ஆக்கதாரர்கள்தான் அணி வகுத்து முனைப்பெடுத்து வெளிச்சம் காட்டவேணும் ..அதை இவர்கள் கச்சிதமாக தகுதியோடு தந்துள்ளார் ..

+அக்கா எனக்கொரு கல்யாணம் பேசுங்கோ + காலங்காலமாக கல்யாணத்திற்காக கரைந்து ..யாதகத்தை கடைசியாகக் கொண்டோடும் ..காலம் கடைசியில் எது வந்தாலும் ஏற்கும் மனநிலையை தாங்கும் மனநிலை எம்மவருக்கும் வந்து விடும் இயல்பினையும் எடுத்துக்காட்டுவதோடு இவர்களை வைத்துப் பிழைத்துக் கொள்ளும் உறவுகளும் இங்கே உடைக்கப் பட்டு வெளி வரும் கதை அற்புதம்.

 

+மனதே மயங்காதே + மயங்காத உறங்காத மனதினை வில்லங்கமாக மயக்கம் தரவைக்கும் மானிடம் மக்களிடையே மலிந்து வரும் கால் கோளாக கரையும் காலமிதாக சஞ்சலமும் சாராசரியாக ஏக்கமுறும் மனப்பாங்குகள் .தெரிகிறது .இங்கு நகர்வில் -இல்லாவற்றுக்கு ஏங்கும் இந்த மனித வர்க்கதத்தை எடுத்து வகைப்படுத்த பாத்திரங்களைப் படைத்திருக்கும் பண்பு சிறப்பாகும் .

 

+வாழ்வு வதையாகி + சண்டையோ சச்சரவோ > கோபமோ தாபமோ - அவர்கள் அற்புதவாழ்வை மூதாதையர். அவர்கள் அங்கீகாரமின்றி வாழுமிடங்களிருந்து வலிந்து வரவழைத்து பின் தங்கள் இட்டப்படி அவர்களைத் தன்னலத்திற்காகவே பிரித்து வைத்துப் பார்க்கும்.. வதையாகி உத்தரிக்கும் பெற்றோர் கதைகள் சமகாலத்தில் பவனி வருகிறது .அதையும் தொட்டுப் போன லாபகம் அருமை .

+ரயில் பயணம்+ பயண அனுபவம் எம்மை மீறி நிற்கும் பார்வையும் அக்கறையும்..சமுக சரிவுகளைச் சங்கதிகளை நினைத்து ஏங்கும் ஒரு படைப்பாளியின் தவிப்பு இங்கே தெரிகிறது .

 

+இப்படியும் ஒரு தாய்+ சில வழக்கொழிந்த சொற்கள் வந்து போகிறது ..தாய்மை என்பது சேய்க்காக செய்யும் தியாகங்களைத்தான் தெரியும்.. தன் சேய் சேய்மையாகப் போய் விடுவாளோ என்ற தாபம் .. உறவின் புதுமை சொல்கிறது தாய் பக்கம் ஏற்க மறுக்கிறது. ஆனால் இது கதாசிரியரின் கற்பனையல்ல. மெய்யான சேதியாகலாம் .

 

+அந்த மூட்டைப் பூச்சி+ ; ஆகா ! அற்பமான விடயமெனில் அந்தக்காலத்து சின்ன சின்னக் களவுகள் சேதியறியா ..விளையாட்டுக்கள் நினைப்பெடுக்கும் பாங்கு இங்கே சேர்க்கப் பட்டு மீட்கப் படுவது தேவையான நினைவுத் திருப்தி ...எனலாம் .

 

+முதல் கடிதம்+ இந்தப் பகிர்வும் சிறப்பு ..முதல் கடிதம் என்றால் .. இன்னும் கடிதம் இருக்கமோ ...சென்றல் கொலிச் மாணவர்கள் சேட்டைகள் காலம் பெரிது ... இவர்களின் படையல்கள் அனைத்துமே >சந்தித்தவை > கேட்டவை <பார்த்தவை அதை நிவேதா நெறிப்படுத்தி நகரும் நன்னயம் எழுச்சியாக எடுத்துப் போய் விரிக்கும் விதம் கச்சிதமே !

 

+நினைத்தாலே நெஞ்சு பக் பக்+ 13 கதை .இந்த எண்ணைப் போல் --இடத்தில் பதட்டம் இப்படீயுமா??? மாக்களிடையே மனிதம் மரத்துப் போய் மர்ம உலகோடு வாழ்கிறோமா .. ) ஆணுக்கு ஆண் அடிமை யா..அது இந்த சேர்வால் தான் உருப் பெற்றதா ? மிக நீண்டதாய் இருக்கிறது . சலிப்பு ஏற்பட்டது இதை யாராலும் சகிக்க இயலாத சம்பவத்திரள் ..இயற்கை தான் இவர்களைக் காக்க வேணும் என்று மனம் கேட்டது..போய்.. எம்மினம் எங்கே நிற்கிறது ..என்ற ஆதங்கத்தை ஆசிரியர் எற்படுத்திய உணர்வு தோன்றியது.

 

+வசந்தம் தொலைத்த வாழ்வு+ வாழ்வியலில் வசந்தம் ஏகாந்தமதை தொலைத்து அதை மீட்க முனைப்பெடுக்கும் விண்ணாலங்கள் விரைவியெழும் வித்தகம் பாறிக்கடக்கிறது. கொஞ்சம் நீண்டே விட்டது .. கருத்துச் செறிவு ..கதாபாத்திர கலாபிப்புகள் மனோபாவ சித்தரிப்பு சிறப்புத் தர உந்துகிறது !

 

+நட்பின் கதை + இதில் நட்பு ஒரு தலை நட்பே தென்படுகிறது. பள்ளிப் பால்ய சிநேகம் பக்கமாக இழுத்து வரா வறுமை காட்டப் படுகிறது .. இப்படி நட்புகள் மலிந்த போதும் ..இதை இழுத்துப் போகும் பொறுமை எவருக்குள்ளும் ஏற்படாது .... இப்படியான தோழமையை இடையில் இறக்கி விட்டு போய் கொண்டிருக்கும் பாங்கற்று --ஆனால் தொடர்ந்தும் வளர்க்க தெண்டிக்கும் தோரணை ..இன்றைய காலத்திற்கு ஒவ்வாத ஒரு கட்டம் -- இதுபோல இருக்கிறார்கள் என்பதை சொல்லி போன சிறப்பு நிவேதா வின் சமுகப் பார்வை விரியவும் . பணி சார்பாக விரவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

 

-கோசல்யா சொர்ணலிங்கம் - முல்கைம், யேர்மனி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களுக்கு நன்றி.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகோதரி...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி அண்ணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.