Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐஸ்கிறீம்களில் மலத் தொற்று; உதயன் தலைப்புச் செய்தியால் குடாநாட்டில் பரபரப்பு!?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐஸ்கிறீம்களில் மலத் தொற்று; உதயன் தலைப்புச் செய்தியால் குடாநாட்டில் பரபரப்பு!? 

 

 

யாழ்.மாவட்டத்தில் முன்னணியில் உள்ள மூன்று பிரபல ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புக்களில் மலத்தொற்று காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து உதயன் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி குடாநாட்டில் மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது.

இது குறித்து உதயன் பத்திரிகையின் இன்றைய பிரதான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நெருப்புக்காய்ச்சாலை ஏற்படுத்தக்கூடிய கோலி போர்ம் என்ற பக்ரீறியா ஐஸ்கிறீம் வகைகளில் மிக அளவுக்கு அதிகமாகவே இருப்பது ஆய்வுகூடச் சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் நெருப்புக்காய்ச்சல் நோய்க்கு இது ஒரு முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகின்ற போதிலும் குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புக்களை தடை செய்யவோ உற்பத்தியை நிறுத்தவோ இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஐஸ்கிறீம் உற்பத்திகளில் மலத் தொற்று கண்டறியப்பட்டுள்ளமையை பிராந்திய சேவைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் 10 ஐஸ்கிறீம் விற்பனை நிலையங்களில் அனைத்து மாதிரிகளிலும் போலி போர்ஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும் எந்த நிறுவனங்களின் உற்பத்திகள் அவை என்பதை அவர் வெளியிடவில்லை.

நல்லைக்கந்தன் திருவிழாக் காலத்தில் ஐஸ்கிறீம் மாதிரிகள் பெறப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்று உதயன் அறிந்தான். உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் இருக்கும் மூன்று நிறுவனங்களின் தயாரிப்புக்கள் மீதே அதிக கவனம் செலுத்தப்பட்டது என்றும் தெரிகிறது.

ஒரு லீற்றர் குடிதண்ணீரில் ஒரு கோலி போர்ம் பக்ரீறியா இருந்தால் கூட அது மனித நுகர்வுக்கு உதவாதது என்று புறந்தள்ளப்படுகிறது. ஆனால் சோதனை செய்யப்பட்ட ஐஸ்கிறீமிலோ லீற்றருக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோலி போர்ம் பக்ரீறியா இருந்தமை சோதனையில் கண்டறியப்பட்டது. சோதனை குறித்த முழுமையான அறிக்கை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்குக் கடந்த வாரம் அனுப்பிவைக்கப்பட்டது.

நல்லூர் திருவிழாக் காலத்தில் நாம் மாதிரிகளைப் பெற்றோம் என்று கூறுவது தவறு. மாவட்டம் முழுவதிலும் உள்ள 10 ஐஸ்கிறீம் கடைகளில் மாதிரிகளைப் பெற்றோம். அவற்றில் பக்ரீறியாத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றார் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன்

குறித்த ஐஸ்கிறீம் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் உரிய நடவடிக்கை என்ன என்பதை அவர் விளக்கவில்லை.

இலங்கையிலேயே நெருப்புக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை யாழ்.மாவட்த்திலேயே மிக அதிகமாக உள்ளது. அதற்கு மலத் தொற்று உள்ள ஐஸ்கிறீம்களும் ஒரு காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்த ஐந்து வருடங்களாக இலங்கையில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு நெருப்புக்காய்ச்சலால் யாழ்.மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

அப்படி இருந்த போதும் மலத்தொற்று ஏற்பட்டுள்ள ஐஸ்கிறீம் வகைகளைத் தடைசெய்யவோ அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ உரிய அதிகாரிகள் முன்வராமை கவலை அளிக்கிறது என்று குடாநாட்டின் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்னரும் யாழ்.நகரில் உள்ள ஒரு பிரபல ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனத்தின் தயாரிப்புக்களி் இவ்வாறு மலத்தொற்று இருப்பது கண்டறியப்பட்ட போதும் அந்த நிறுவனம் தொடர்ந்தும் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதிகாரிகளின் இத்தகைய அசமந்தப் போக்கு யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கையை தேவையற்ற நெருக்கடிகளுக்குள் தள்ளிவிடும் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamilleader.com/?p=41367

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தானே.... செத்து துலையட்டும் என்று சிங்கள சுகாதார அமைச்சு மெத்தனமாக இருந்தாலும்,
சமூக ஆர்வலர்களும், வட மாகாண அமைச்சின் சுகாதார பிரிவினரும்... விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.