Jump to content

விண்வெளி பயணத்தில் ஒளியை மிஞ்ச முடியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விண்வெளி பயணத்தில் ஒளியை மிஞ்ச முடியுமா?

– லட்சுமி கணபதி

பயணம்

மனிதனுக்கு பயணம் அவசியமானது. ஆதி மனிதன் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவில் தொடங்கி உலகம் முழுவதும் நடை பயணம் மூலமாகவே சென்று சேர்ந்தான். பயணப்பட பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய ஆதாரத் தேவைகளில் ஒன்று “உறைவிடம்”.

இந்த உறைவிடத் தேடல் நமக்கு பூமியில் மட்டுமில்லாது நமது பிரபஞ்சம் நோக்கியும் திரும்பியது என்னவோ சென்ற நூற்றாண்டில் தான். நமது பிரபஞ்சத்தின் பல நட்சத்திரத் திரள்களையும், விண்மீன்களையும் அவற்றைச் சுற்றி வரும் கோள்களையும் நோக்கிப் பயணம் செய்ய அறிவியல் உலகம் பல முயற்சிகளை எடுத்தது.

நிலவில் மனிதனை இறக்கிய பின் மனித குலம் இந்த தேடுதலை உற்சாகத்துடன் தொடர்ந்தது. நமது சூரிய குடும்பத்தில் வியாழனின் தரை பகுதிக்கு கீழ், TITAN என்ற சனியின் துணைக் கோள் என முடிந்தவரை அனைத்தையும் அலசி ஆராய்ந்துவிட்டோம். நமது தேவை பூமியை போன்ற ஒரு கோள், சூரியன் போன்ற ஒரு நட்சத்திரம்.

வான் வெளியின் பூமிக்கு வெளியே ஓர் தொலைக்கோக்கி அமைத்து தேடத் தொடங்கினோம், இந்த HUBBLE தொலை நோக்கி நமக்கு வாரம் ஒரு பூமியை ஒத்த ஒரு கோளை காட்டிக்கொடுக்க ஆர்ம்பித்தது. இதுவரை 1800 மேலான பூமியை போன்ற வாழத் தகுதி உடைய கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.ஆனால் ஒரு தடை, நமது பிரபஞ்சத்தில் எது வேண்டுமாளாலும் இல்லை என்று சொல்லலாம்(ஏன் கடவுள் கூட இல்லை என்று சொல்லலாம்) ஒன்று மட்டும் இல்லை என்றே சொல்ல முடியாது “வெளி”. இந்த தூரம் தான் நம்மை இந்த கோள்களை அடைய விடாது தடையாக இருக்கின்றது.

பக்கத்து வீட்டுக்கு போவது எப்படி?

ஒரு ஒளி வருடம் என்பது ஒளி ஓர் ஆண்டில் கடக்கும் தொலைவு. அதன் ஒரு நொடி வேகம் மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள். நமது பிரபஞ்சம் 46.6 பில்லியன் ஒளி வருடங்கள் விட்டம் கொண்டது (இது நீங்கள் எப்படி கற்பனை செய்தாலும் இந்த பிரம்மாண்டத்தை உணர முடியாது!) கொசுறு தகவல் என்னவென்றால் இந்த விட்டம் நாம் OBSERVE செய்த தொலைவுதான், மேலும் நமது பிரபஞ்சம் நித்தம் நித்தம் வீங்கிகொண்டே இருக்கிறது என்பதையும் மறந்து விடக்கூடாது.(காரணம் பெரு வெடிப்புக் கொள்கை – Big Bang Theory)

சரி அதை விடுவோம் நமக்கு அருகில் உள்ள பக்கத்து வீடான PROXIMA விண்மீன்திரள் கூட நம்மில் இருந்து 4.24 ஒளி வருடங்கள் தொலைவில் உள்ளது. நாம் ஏவியதிலயே உள்ள மிகவும் வேகமான விண் ஊர்திகளில் ஒன்றான வாயேஜர் 1 இது செப் 5 1977 இல் ஏவப்பட்டது சென்ற வருடம்தான்(36 ஆண்டுகள் கழித்து) சூரிய குடும்பத்தை விட்டு வெளியேறியது. இதன் உட்ட்ச்ச கட்ட வேகம் 62,136 KM/h. சென்ற வருடம் செப்டெம்பரில் ஏவப்பட்ட இந்திய மங்கல்யாண் வரும் 24 செப் 2014 தான் (46 வாரங்கள் கழித்து) செவ்வாய் சென்று அடைகிறது.

ஆகமொத்தம் இந்த வேகம் போதாது என்பது கண்கூடு.

நமது தேவை மனித ஆயுளில் பயணம் செய்ய ஒரு விண் கலம் அதிவேகத்திலும் இது பயணம் செய்யவேண்டும்.

1980களில் இந்தவேலையை தொடங்கினர் அறிவியலாள்ர்கள். Project Daedalus என பெயரிட்டு ஒளியின் வேகத்தில் 12% அடைய முயன்றனர் கைக்கூடவில்லை. பின் Project LONGSHOT பல கலங்களை பயன்படுத்தி நீண்ட தூரம் வேகமாய் பயணம் செய்யலாம் என்றெல்லாம் கூட என நினைத்தனர்.

இவை எல்லாம் வாயேஜர் 1 இன் நீட்சியாகவே இருந்தன. பிறகு தொலை தூர விண்வெளி பயணம் சாத்தியம் இல்லையோ என்றே தோன்றியது.

குமிழ் ஓட்டம்

இதன் இடையில் தான் 1994 ஆம் ஆண்டில் ஒரு அருமையான கருத்தை முன்வைத்தார் “Miguel Alcubierre” என்றோர் விஞ்ஞானி. இதன் படி நம்மால் நமது பிரபஞ்சத்தின் உள்ளேயே EINSTEIN இன் சார்பியலுக்கு உட்பட்டே ஒளியின் வேகத்தை மிஞ்ச முடியும் என்றார்.

ஒளியின் வேகத்தை மிஞ்ச முடியாது என்பதுதான் EINSTEIN நமக்கு அளித்த சார்பியல் கொள்கையின் கூறு, பிறகு எப்படி இது சாத்தியமாகும்?

இதை அறிய நாம் பிரபஞ்ச ஆரம்பத்திற்க்கு செல்ல வேண்டும். பெரு வெடிப்பு (BIGBANG) நிகழ்த்த பின் முதல் சில நொடிகளிலேயே நமது பிரபஞ்சம் இப்போது உள்ள அளவில் பாதியை எட்டி இருந்தது.

அதெப்படி எதுவானாலும் ஒளியின் வேகத்தை மிஞ்ச முடியாது அல்லவா? ஆனால் இடம் உருவாக இது பொருந்தாது. வெளி(SPACE) உருவாகிறதே அன்றி எந்த பொருளும் ஒளியின் வேகத்தை எட்ட வில்லை எனவே நமது பிரபஞ்ச விரிவடைதல் ஒளியின் வேகத்தை எல்லாம் பொருட்படுத்தாது.(நோபல் வென்ற STEVEN WEINBERG இதனை பற்றி “The First Three Minutes” என்ற ஓர் அற்புதமான நூலை எழுதி உள்ளார்.)

இதனை விளக்க விஞ்ஞானி Michio Kaku ஒருமுறை சொன்னார் “Nothing can go faster than light. Since nothing is just empty space or vacuum, it can EXPAND faster than light speed.” ஆகவே இது சாத்தியம் தான் (சார்பியலில் வெளி வளைவதை பற்றி நம்மில் பலர் அறிந்திருப்பீர்கள்.)

ALCUBIERIE வெளியை நமக்கு முன்னால் இருக்கும் தடையாக பார்க்காமல் நமக்கு உதவும் ஒரு பொருளாக பார்த்தார். இந்த வெளியே நமது விண் கலனுக்கு பயணம் செய்ய உதவினால்? இந்த வெளியே நமது கலனை தள்ளிவிட அல்லது இழுத்து செல்ல உதவினால் எப்படி இருக்கும் என யோசித்தார். இதனை தான் ALCUBIERIE ஓட்டம் அல்லது குமிழ் ஓட்டம் (WARP DRIVE) என்கின்றனர்.

இவரின் தத்துவப்படி விண் கலனின் முன்னாலும் பின்னாலும் வெளியை வளைக்க முடிந்தால் போதும் அது கலனை செலுத்திவிடும். வேகம் எவ்வளவு என்றால் ஒளியின் வேகம் ஏன் அதற்க்கு மேல் கூட செல்லலாம். வாயேஜரின் 36 வருட பயணம் இப்போது வெறும் இருபது மணி நேரங்களில்!!!

இந்த குமிழின் உள்ளே கலனில் நாம் ஒளியின் வேகத்தை மிஞ்சவில்லை. நிலையாகத்தான் உள்ளோம். எனவே இது சார்பியலுடன் கூட ஒத்து வருகிறது. (கண்டுபிடிப்பாளர் ALCUBIERIE STAR TREK இன் ரசிகர் இந்த படத்தில் வரும் வாகனம் ஒளியை விட மேகமாக செல்லும்)

அது சரி! அப்படி இருந்தாலும் நாம் Proxima விண்மீன்திரள் செல்ல 4.24 ஒளி ஆண்டுகள் ஆகுமே என நினைக்கலாம். சார்பியல் நமக்கு இங்கேயும் உதவும். ஒளி வேக பயணம் நம்மை காலத்தின் ஊடெயும் பயணம் செய்ய வைப்பதால் (TIME DILATION) கலத்தில் உள்ளே உள்ள மனிதர்கள் சில வார பயணத்தையே உணருவார்கள். பூமியிலோ நாம் நான்கு வருடத்தை கடந்திருப்போம்.

அட! நல்லா இருக்கே என உடனே நீங்கள் யாரும் பெட்டிப் படுக்கைகளை தயார் செய்ய வேண்டாம். இதனை NASA இப்போது தான் கையில் எடுத்து இருக்கிறது. இதிலும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை.

வெளியை வளைப்பது

முதல் மற்றும் முக்கிய பிரச்னை வெளியை வளைப்பது. நமக்கு நன்றாக தெரியும் பூமியும் சூரியனும் ஈர்ப்பு விசை கொண்டு வெளியை வளைக்கிறது. எனவே நமது கலனும் வெளியை வளைக்க ஒரு வியாழன் கோள் அளவுள்ள விண்கலன் தேவைப்படும்.

இது மனித சக்தியில் மிகக் கடினம், ISS எனப்படும் சர்வதேச விண் நிலையம் விண்வெளியில் அமைந்துள்ளதை நாம் அறிவோம். இதன் எடை 419,600 KG, இதை அமைக்க நாம் 1998 இல் இருந்து முயந்து வருகிறோம் (இன்னும் பல வேலைகள் தொடர்ந்து எதிர் வரும் வருடங்களில் நடந்து வருகின்றன). என்வே இது சாத்தியம் இல்லை.

ஆனால் Harold G White எனும் NASA வின் அறிவியலாளர் எதிர் ஆற்றல்(Negative Energy ) மூலம் இதற்க்கு விடை அளித்துள்ளார்.. இதன் மூலம் வியாழன் கோள் அளவு பொருண்மை தேவை இல்லை, வெறும் 726 கிலோ எடை உள்ள கலன் போதுமானது (இந்த எடை வாயேஜர் 1 விட குறைவு).

சரி அது என்ன எதிர் ஆற்றல். எளிமையாக சொல்லவேண்டுமானால் நமது அண்ட வெளியில் நிறையுள்ள ஒரு பொருளுக்கு எப்படி ஈர்ப்புவிசை உண்டாகிறதோ அதே போல் எதிர் ஆற்றல் GRAVITY REPULSION(விலக்கு விசை) ஐ உருவாக்கும்.

இதனை பயன்படுத்தி கலனின் முன்னால் வெளி குழியையும் கலனின் பின்னால் வெளி மேடும் உண்டாக்க முடியும் ஒரு Escalator -ல் ஏறிய மனிதனைப் போல் விண் வெளியின் இது நிலையாக நின்ற போதும் தள்ளப்படும். ஆனால் துரதிஷ்டவசமாக இதுவரை எதிர் ஆற்றல் யாராலும் அவதானிக்கப் படவில்லை.

இதனை சிறிய அளவில் Harold White சோதனை கூடத்தில் செய்யவும் ஆரம்பித்து விட்டார். முடிவுகள் வெகு விரைவில் சாத்தியப்படும் என நம்புவோம்.

மனிதகுலம் தனது அறிவியல் அறிவை பயன்படுத்தி பூமியை போன்ற ஒரு கோளில் குடியேறுவது வெகு தொலைவில் இல்லை. அங்காவது இடத்திற்க்கு சண்டை போடாமல் இருத்தல் சரிதான்.

http://malaigal.com/?p=5589

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எந்தச் செலவுமின்றி என்னைப் பிரபஞ்சத்திற்கு அழைத்துச் சென்ற கிருபன் அவர்களுக்கு நன்றிகள்!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Warp propulsion system, விண்கலத்தின் முன்னிருக்கும் வெளியை சுருங்கச்செய்து பின்னிருக்கும் வெளியை (space) விரியச்செய்வதன் மூலம் ஒரு அலையைச் உருவாக்குவதன் மூலம் அந்த அலையின் உதவியுடன் பயணம் செய்வதுதான் warb drive...இதன்மூலம் ஒளியை விட வேகமாகச்செல்லலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்றைய உலகில், மதத்தை வைத்து பிழைப்பவர்களும் அதை விற்று பிழைப்பவர்களுமுண்டு. மதத்தின் புனிதம், மனித நேயம் எல்லாம் மரணித்து வெகுகாலமாகிவிட்டது. இந்து தமிழர் கட்சி தலைவர், ராம ரவிக்குமார் கிறிஸ்தவர்களை சாடியிருக்கிறார். ஒன்று இவர்களின் லாப நோக்கு அல்லது நிர்வாக திறன் இன்மையே காரணம் என்பதை ஒத்துக்கொள்ள தயாரில்லை. அங்கே முழங்கினால் இங்கே சச்சியர் வீட்டில் அடை மழைபெய்யும். கிறிஸ்தவர்களை வாங்கு வாங்கென்று வாங்குவார். ஆனால் தமிழக அரசு, இது ஒரு ஊர்ஜிதமற்ற குற்றச்சாட்டு என்றும் இவர்கள் கூறும் நிலையத்தில் கோவில் பிரசாதம் (லட்டு) செய்ய பொருட்கள் கொள்வனவு செய்வதில்லையென்றும் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. 
    • அம்பாறையில் தேர்தல் நிலவரம்! அம்பாறை  மாவட்டத்தின்  திகாமடுல்ல  தேர்தல் தொகுதியில்  30 வீதம் வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அம்பாறை மாவட்டத்தில் 5,55,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 528 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 4 ஆசனங்களுக்காக 39 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளாகவும் பல சுயேட்சைகளாகவும் களமிறங்கி உள்ளனர். இத்தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் 82,830 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99727 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 1,84,653 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 188222 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது” இவ்வாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தனது வாக்கினை விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400420
    • யாழில் தேர்தல் நிலவரம்! யாழ்ப்பாணத்தில் இன்று  மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில்,நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் 35 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை 04 மணி வரையில் வாக்களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400414
    • பின்னாலை... ரணில்,  காஸ் சிலிண்டருடன் சத்தமே  இல்லாமல்  போறார். . 😂 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.