Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியத்தின் புத்துயிர்ப்பும் தமிழ் – முஸ்லிம் உறவும் – பிஸ்மி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியத்தின் புத்துயிர்ப்பும் தமிழ் – முஸ்லிம் உறவும் – பிஸ்மி

2009 மே முள்ளிவாய்க்காலுடன் தனது இறுதி மூச்சினை விட்டு விட்டதாகக் கருதப்பட்ட தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் உறங்கு நிலைக்குச் செல்லுமா அல்லது தன்னை மீள்பரிசீலனைக்கு உள்ளாக்கிக் கொண்டு, புதிய திசையில் அது முன்னோக்கி வீறு நடை போடுமா என்பது இலங்கைச் சமூகங்களின் ஒட்டுமொத்த அரசியல், சமூக விடுதலையை நேசிக்கும் சக்திகளின் எதிர்பார்ப்பாகும்.

தமிழ்த் தேசியமானது அரசியல், சமூக, பொருளாதார ஒடுக்குமுறையின் எதிர்வினையாற்றல் என்ற வகையில் அது முற்போக்கானது. அது தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்கான கூறுகளை மாத்திரமல்ல முழு இலங்கையின் விடுதலைக்குமாறு உட்கூறுகளையும் கொண்டிருந்ததாக மூன்று அல்லது நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் கருதப்பட்டு சோசலிசச் சிந்தனை மற்றும் செயற்பாட்டாளர்களைப் பெரிதும் உள்ளீர்த்தது. ஆனாலும் தமிழ்த் தேசியம் 80 களின் பிற்பகுதியிலும் 90 களிலும் நிச்சயமாக அதன் முற்போக்குக் கூறுகளை இழந்து நின்றது. விதிவிலக்காக ஒரு சில சிறு பிரிவுகளைத் தவிர. மேலும் பின்வந்த தசாப்தங்களின் பயங்கரவாதம் என்ற முத்திரையையும் சுமந்து கொண்டது. இது பற்றி இங்கு விரிவாக ஆராயத் தேவையில்லை.

இலங்கைத் தமிழ்த் தேசியத்திற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

2013 செப்டெம்பர் வடமாகாணத் தேர்தல் மூலமும் இதற்குச் சற்று முன்னர் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மூலமும் மீண்டும் ஒரு வாய்ப்பு தமிழ்த் தேசியத்திற்குக் கிடைத்துள்ளது. தோற்கடிக்கப்பட்டோம், மீண்டும் எழுந்து நிற்க முடியாதவாறு தொடர்ச்சியாக நசுக்கப்படுகின்றோம், துவம்சம் செய்யப்படுகின்றோம். தமது அன்றாடத் தேவைகளையும் அடிப்படைத் தேவைகளையும், உணர்வுகளையும் அபிலாசைகளையும் வெளிப்படுத்தவும், அவற்றை அடைந்து கொள்ளவும் முடியாதவாறு தொடர்ச்சியாக அடக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு வருகின்றோம் என்ற ஆதங்கத்திலும் அழுத்த நிலையிலும் இருந்த வடமாகாண தமிழ் மக்கள் கடந்த வட மாகாண தேர்தலின் ஊடாக தம்மையும் தமது தேசிய அபிலாசைகளையும் அடக்குமுறைக்கான எதிர்ப்புணர்வினையும் வெளிப்படுத்தினர். 2009 மே தொடக்கம் யுத்த வெற்றி மமதையில் இருந்த சிங்கள பௌத்த மேலாதிக்கம் எதனையிட்டு அஞ்சிக் கொண்டிருந்ததோ அந்த அரசியல் தாக்குதல் அத்தேர்தலில் நடந்தேறிவிட்டது. ஆம், தமிழ்த் தேசியம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.

திசைவழி தெரியாது தட்டுத்தடுமாறும் முஸ்லிம் அரசியல்:

இலங்கையின் வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பிரதேசமாகும். இவ்விரண்டு சமூகங்களுக்கும் இடையிலான உறவும் முரணும் குறித்து இங்கு அதிகம் குறிப்பிட வேண்டியதில்லை. மொழி ஒன்றாக இருந்தது .சமய, காலாசார விடங்களில் வேறுபாடுகள் இருந்தன. தமிழ் சமூகம் தனியான அரசியல் திசைவழியொன்றைத் தெரிவு செய்த நாற்பதுகளில் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு தனி அரசியல் வழி என்ற ஒன்று இருக்கவில்லை. 80களின் நடுப்பகுதியில், வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தனியான அரசியல் வழியொன்றைத் தீவிரமாக வரித்துக் கொண்டனர். இது இரு சமூகங்களுக்கும் இடையிலான அரசியல் உறவின் திருப்பு முனையாகும். பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்ட வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் திசை இன்று திசைவழி தெரியாது தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. தனது அரசியல் எதிர்காலம் குறித்த மிகவும் கராரான மீளாய்வினையும் அது வேண்டி நிற்கின்றது.

தமிழீழம் என்ற தனிநாட்டுக் கோரிக்கையை விட்டு, வடக்குக் கிழக்கு முஸ்லிம்கள் தம்மை எப்போது தூரப்படுத்திக் கொண்டிருந்தனர். இதற்கு குறிப்பான காரணிகள் இருந்தன. அதேசமயம், ஒரே இலங்கை என்ற எல்லைக்குள் சுயாட்சி வகை அரசியல் தீர்வு தொடர்பில் வ.கி. முஸ்லிம் சமூகத்திற்கு உடன்பாடு இருந்தது. இதற்கான அரசியல், சமூக, பொருளாதார தேவையும் இருந்தது. ஆனாலும் சுயாட்சி வகைப்பட்ட அரசியல் தீர்வொன்றிற்கு ஒப்புதல் தருவது முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், நிச்சயமாக ஒரு நிபந்தனையின் அடிப்படையில் ஆகும். வடக்கு கிழக்கு முஸ்லிம் சமூகத்தின் இவ்விரண்டு நிலைப்பாடுக்கும் – தமிழீழத்திற்கு உடன்பாடில்லை, சுயாட்சி வகைப்பட்ட தீர்வில் உடன்பாடு – இடையிலான இயங்கியல் உறவினை தமிழ் தேசியத்தின் ஆயுதம் ஏந்திய ஆயுதம் ஏந்தாத பிரிவினர் புரிந்து கொள்ளவே இல்லை. இந்த உறவு சரியாக புரிந்து கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் ஆக்கபூர்வமான அரசியல் உறவு கட்டமைக்கப்பட்டிருந்தால், இதன் அடிப்படையில் சிங்கள தேசத்தின் முற்போக்கு சக்திகளுடன் நேச அரசியல் உறவு தாபிக்கப்பட்டிருந்தால் இலங்கையின் அரசியல் தலைவிதி வேறு விதமாக அமைந்திருக்கும்.

விடுதலைப் புலிகள் அமைப்பு போர் முனையில் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டதுடன் அரசியல் சூழல் முற்றாக மாற்றங்கண்டது. இலங்கையின் அரசியல் திசைவழியைத் தீர்மானிக்கக் கூடிய முரண்பாட்டுக் கூறுகள் சடுதியாக மாற்றங் கண்டன. சிங்கள பௌத்த மேலாதிக்கம் இலங்கையின் ஒவ்வொரு பிரஜையினது அனைத்தையும் நிர்ணயிக்கின்ற காரணியாக தன்னை உயர்த்திக் கொண்டுள்ளது. இதற்கு வசதியாக சிங்கள பௌத்த சிங்கள மேலாதிக்கம் வன்முறை அரசு இயந்திரத்தின் முழுமையான ஆதரவையும் தன்பக்கம் வென்று கொண்டது. விளைவு அரசியல் சாசன வழிப்பட்ட உரிமைகள், சட்ட ஒழுங்கு உட்பட கேள்விக்குரியதாகவும் கேலிக்கிடமாகவும் மாறியுள்ளது. ஒரு வகை அரசியல் பீதி அரசியல் கலக்கம் எங்கும் வியாபித்துக் கிடக்கின்றது.

இதுவரை காலமும் பார்வையாளராக இருந்து வந்த சர்வதேச சமூகம் இலங்கையின் தற்போது நிலவும் புதிய அரசியல் சூழலில், இலங்கை அரசியலில் நேரடியான பங்காளராக மாறி தலையீடு செய்து வருகின்றது. ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் நம்பப்படுகின்றது. தனியான அரசொன்றை அமைப்பதென்ற கோரிக்கையினை கிட்டத்தட்ட கைவிட்டு விட்ட நிலையில், இன்றைய தமிழ்த் தேசியம் உள்ளக சுயநிர்ணயம், சுயாட்சி முறை குறித்து கதையாடல் செய்து கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசியத்தின் பலத்தில் வடமாகாணசபையை வென்று கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபையினை சுதந்திரமாக இயங்க விட்டு நல்லாட்சி முறையொன்றை நடைமுறைப்படுத்தும் சூழலை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுவதுடன் தனது அரசியலை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தோன்றுகின்றது. தமிழ்த் தேசிய இயக்கத்தினுள் பன்முகத் தன்மையை பிரக்ஞைபூர்வமாக அங்கீகரித்து உள்வாங்கி தேசிய இயக்கத்தை பலப்படுத்தும் சிந்தனைக்கும் செயற்பாட்டுகள் எதிரான போக்கு தமிழ்தேசிய கூட்டமைப்புத் தலைமைக்குள் தீவிரம் பெறுவதையும் காண முடிகின்றது.

நல்லாட்சிக்கான முன்மாதிரி முழு இலங்கைக்கும் அவசியமாகின்றது.

வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஒருவகை நிழல் இராணுவ ஆட்சிக்குள் வைக்கப்பட்டு முற்றாகவே நல்லாட்சிச் சூழலை இழந்து நிற்கின்றது. மேலும், முழு இலங்கை மக்களுமே இன்று கேடு ஆட்சி சூழலுக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய ஆளுங்குழுமம் போருக்குப் பிந்திய சிங்கள, பௌத்த மேலதிக்க சிந்தனைக்குள் பெரும்பாலான சிங்கள, பௌத்த வெகுசனங்களை கொண்டு வந்துள்ளதுடன், ஜனநாயக, ஜனநாயக மீறல் வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கையின் அரசியல் அதிகாரத்தை தன் கைகளில் குவித்துக் கொண்டுள்ளதுடன் அதனைத் தக்க வைக்க எந்த வகை கேவலமான வழிமுறைகளையும் பயன்படுத்தி வருகின்றது. விலை போய்விட்ட முஸ்லிம், தமிழ் அரசியல் சக்திகளை இன்றைய ஆளுங்குழுமம் தனது கேடாட்சிமுறைக்கு துணை சேர்ந்துக் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் நல்லாட்சிக்கான முன்மாதிரி முழு இலங்கைக்கும் தேவைப்படுகின்றது. இதற்கான குரல்கள் ஆங்காங்கு அரசாங்கக் கூட்டணிக்குள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. தமிழ்த் தேசிய இயக்கம் தனது அரசியல் நண்பர்களையும் அணிகளையும் சிங்கள சமூகத்தினுள் அடையாளம் காண்பதற்கும் அவற்றுடனான உறவுகளை ஏற்படுத்துவதற்கும் மேற்படி சூழல் பற்றி ஆய்வறிவு பிரதானமானதாகும்.

வடக்கு கிழக்கில் தமிழ் – முஸ்லிம் புதிய அரசியல் கூட்டணி

இவ்வாறானதொரு சூழலில், அரசியல் இயக்கமான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் , நீதிக்கும் சமதானத்திற்குமான ஒன்றியம் மற்றும் ஆய்விற்கும் கலந்துரையாடலுக்குமான நிலையம் ஆகிய சிவில் அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள ‘நல்லாட்சிமுறைக்கான ஒன்றியம்’ என்ற சிறிய, இளம் கூட்டணியானது, வடக்கு கிழக்கில் தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் அரசியல் உறவினைக் கட்டியெழுப்பும் நோக்கிலும் நல்லிணக்கம், மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் கடந்த தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஒரு அரசியல் கூட்டிணை ஏற்படுத்திக் கொண்டது. இதுவொரு புதிய அரசியல் பரிசோதனைக் களம் எனலாம். முதலாவதாக, இவ்வாறான ஒரு அரசியல் கூட்டினை உருவாக்குவதற்கு அசாத்தியமான துணிச்சலும் கடும் உழைப்பும் அவசியம் என்பது முதலில் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும். இதுவொரு வரலாற்றுத் தேவையும் கூட. இரண்டாவதாக, தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு அரசியல், சமூகப் பிரச்சனைகளை கலந்துரையாடுவதற்கான ஒரு மேடை இன்று அவசர அவசியமாகவும் இருந்து வருகிறது. இக் கூட்டணி ஏற்பாட்டினை முன்கொண்டு செல்வதற்கு கடுமையான சவால்களும் அச்சுறுத்தல்களும் உள்ளும் புறமும் ஏற்படும் என்பது மூன்றாவது விடயம். எனவே ஒவ்வொரு முன்னெடுப்புகளும் செயற்பாடுகளும் உடனுக்குடன் மீளாய்வு செய்யப்பட்டு படிப்பினைகள் பெறப்பட்டு முன்னேற்றப்படல் வேண்டும். சமூகங்களைப் பிளவுபடுத்துவதிலேயே தமது அரசியல் இருப்பினை பாதுகாக்கவும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் சக்திகளிடமிருந்து குறிப்பான எதிர்ப்புகளையும் சேறடிப்புகளையும் முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதும் ஆளுங்குழுமச் சதிவேலைகள் முடுக்கி விடப்படும் என்பதும் நான்காவது விடயம்.

ஐந்தாவது பிரதான சவால்தான் கடந்த கால அரசியல் மற்றும் யுத்த நெருக்கடிகள் காரணமாக பிணக்கிற்கு உட்பட்டு அல்லது இணக்கநிலை பாதிக்கப்பட்டுக் கிடக்கும் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், சகவாழ்வு என்பவற்றை ஏற்படுத்துவது. நம்மைப் பொறுத்த வரையில், ஐந்தாவதாகக் குறிப்பிட்ட சவாலை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தான் முதல் நான்கு சவால்களையும் அச்சுறுத்தல்களையும் வெற்றி கொள்வதற்கான மூலச் சூத்திரமாகும். நீதியும் சமத்துவமும் மிக்க ஒரு தீர்வினை நோக்கி சிங்கள வெகுசனங்களை நோக்கிய அடுத்த அணிச்சேர்க்கையை உருவாக்குவதற்கும் மேற்படி ஐந்தாவதன் வெற்றி வழிவகுக்கும்.

இலங்கைச் சமூகங்களுக்குள் நல்லிணக்கம், சகவாழ்வுச் சூழலை ஏற்படுத்துவதற்கு மிகவும் தொடர்ச்சியான விடாப்பிடியான முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இதுவொரு நீண்ட சிக்கலான பயணமும் கூட. மாறாக, தேர்தல் வெற்றி, ஆசனங்களைப் பெற்றுக் கொள்வது என்ற வகையில் தமிழ், முஸ்லிம் அரசியல் சக்திகளின் அணிச்சேர்க்கையும், உபாயங்களும் அமையுமாயின், மேலும் குறிப்பிட்ட ஒட்டுமொத்த அரசியல் குறிக்கோளும் நோக்கமும் தோல்வியுறும். இதற்கு நிச்சமான வரலாற்று ஆதாரங்கள் நம்முன் உள்ளன.

அந்தவகையில், தமிழ்த் தேசியத்தை மறுபடியும் முற்போக்காக முன் கொண்டு செல்வதற்கும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் சகவாழ்வினையும் ஏற்படுத்துவதை நோக்கிய திசையில் பயணிப்பதற்கும் நிரப்பப்பட வேண்டிய இடைவெளிகள் கணிசமாக உள்ளது. இன்றைய தமிழ் அரசியல் தலைமை அரசியல் தீர்வு அதனூடாக நல்லிணக்கம் பற்றி மாத்திரமே பேசிக் கொண்டிருப்பதை மிகப் பெரும் குறையாகக் குறிப்பிடலாம். இன்றைய தமிழ்த் தலைமையின் குறிப்பான அரசியல் நலன்கள் இதனுள்ளே கிடப்பது இத் தவறான போக்கிற்கு ஒரு காரணமாகும். அரசியல் நல்லிணக்கம் முக்கியமானது என எடுத்துக் கொண்டாலும் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் அரசியல் நல்லிணக்கத்தை எய்துவதற்கான எந்தவித அரசியல் திட்டங்களும் செயற்பாடுகளும் இன்றைய தமிழ் அரசியல் தலைமையின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருப்பதாகத் தெரியவில்லை. அது அவசியமில்லை என்று நினைக்கின்றார்களா? அல்லது இந்தத் தீர்மானகரமான முயற்சியை மேற்கொள்வதற்கான அர்ப்பணிப்பிற்கும் தியாகங்களுக்கும் தாம் தயாரில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளனரா ? . முஸ்லிம்கள் மத்தியிலுள்ள பெரிய அல்லது சிறிய அரசியல் கட்சிகள் அல்லது குழுக்களுடன் தேர்தல், தேர்தலுக்குப் பிந்திய கூட்டுகள் பற்றிப் பேசுவதைத் தவிர. தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு, கடந்த கால வன்முறைகள் ஏற்படுத்திய வடுக்கள், பொருளாதார மற்றும் நில வளப் பங்கீடுகள், கலாசார, பண்பாடுகள் பற்றிய தப்பெண்ணங்களைக் களைவது போன்ற பல தளங்களில் நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. இதுவே நீடித்த சகவாழ்விற்கும் சமாதானத்திற்கும் இட்டுச் செல்லும். அந்த வகையில், இன்றைய சூழலில் நல்லாட்சிக்கான ஒன்றியம் நீட்டியுள்ள அரசியல் நேசக் கரத்தினை இதயசுத்தியுடன் பற்றிக் கொண்டு, இம்முயற்சியினை தொடர்ச்சியாக எடுத்துச் சென்று பலப்படுத்தும் செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியம் குறைந்த முக்கியத்துவம் தரப்படக் கூடாதென்பது நமது ஆதங்கமாகும்.

இன்றைய தமிழ் அரசியல் தலைமையின் மற்றுமொரு அரசியல் பலவீனம் தமது அரசியல் இலக்குகளை வென்று கொள்வதற்கு சொந்த மக்கள் சக்தியை நம்பியிருப்பதற்குப் பதிலாக சர்வதேச சமூகம், இந்திய ஆளுங்குழுமத்தில் முற்றாகத் தங்கியிருப்பதாகும். தேர்தலில் ஓட்டுபோட்டு ஆணைவழங்கும் ஒரு பிரிவினர் என்பதைத் தவிர மக்கள் சக்தியின் அரசியல் முக்கியத்துவம் குறித்து பெரியளவில் தமிழ்த் தலைமைக்குக் கரிசனையிருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறாக மக்களை அரசியல் மயப்படுத்தி அமைப்பாக்கம் செய்வது தமது தீர்மானகரமற்ற அரசியலுக்கு ஆபத்தெனக் கருதுவதாகவும் இருக்கலாம்.

இந்தவகையில், தமிழ் சிவில் சமூக சக்திகளுக்கு இன்று தமிழ்த் தேசியத்தை தலைமை தாங்கும் சக்திகள் குறித்து முழுமையான நம்பிக்கையில்லை. இருந்த போதிலும் ஒரு மாற்று சக்தி இல்லை என்ற வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு ஒரு சந்தர்ப்பத்தினை வழங்கி விட்டு கண்காணித்துக் கொண்டிருப்பதை அறிய முடிகின்றது. மேலும், போதுமான அளவிற்கு தமிழ் சிவில் சமூகம் கொள்கை இணக்கத்துடனும் அரசியல் பிரக்ஞையுடனும் இருக்கின்றதா என்ற கேள்வியும் உள்ளது.

எதார்த்தமான அரசியல் அணிச்சேர்க்கையும் மக்களை அணிதிரட்டலும் :

ஆக, புதியதோர் அரசியல் திசைவழியைத் தமிழ்த் தேசியம் தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ்த் தலைமைகள் இருக்கின்ற அதேசமயம், தனது அரசியல் எதிர்காலம் குறித்தும் சக சமூகங்களுடனான அரசியல், சமூக உறவுகள் குறித்தும் ஆழமாக, சீரியசாக சிந்திக்க வேண்டிய மற்றுமொரு வாய்ப்பு முஸ்லிம் சமூகத்திற்கும் தற்போது கிடைத்துள்ளது. இதற்கான கொள்கைகள், தந்திரோபாய வழிமுறைகள், அதன் அடிப்படையிலான தொடர்ச்சியான வழிகாட்டல்கள் தீர்மானிக்கப்படல் அவசரமும் அவசியமும் ஆகும்.

மோசமான யுத்த அழிவுகளில் இருந்து இன்னமும் விடுபடாமல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மூலை முடுக்குகளில் வதைபட்டுக் கிடக்கும் பல்வேறுபட்ட சமூகங்களின் அன்றாடப் பிரச்சனைகளைக் கருத்தில் கொள்வதுடன், நீண்ட கால அடிப்படையில் தமிழ்த்தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதையும் உள்ளடக்கியதாக அணிச்சேர்க்கைகள் உருவாக்கப்படல் வேண்டும். இதற்கான அரசியல் கொள்கை மற்றும் தந்திரோபாய வழிமுறைகள் வகுக்கப்படல் வேண்டும். ‘ஒரே நாடு என்ற ஆள்புல எல்லைக்குள் உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய சுயாட்சி முறை’ என்ற தேர்தல் விஞ்ஞாபனமும் அதற்கு மக்கள் அளித்த ஆணையினையும் இதற்கு ஒரு அடித்தளமாகப் பயன்படுத்த முடியும். பல்வேறு அணிச் சேர்க்கைகளை உருவாக்க இக்கொள்கை அடித்தளம் காத்திரமான தொடக்கமாக அமையும். மேற்படி கொள்கை அடித்தளம் சமகால அரசியல் சூழலில் சர்வதேச, பிராந்திய மற்றும் இலங்கை ஆள்புல எல்லைக்குள் இருக்கும் பெரும்பாலான அரசியல், சமூக சக்திகளிற்கு உடன்பாடான நிலைப்பாடாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிங்கள தேசத்துடன் உரையாடல்:

கடந்த காலங்களில், பௌத்த சிங்கள மேலாதிக்க சக்திகளுக்கு எதிர்வினையாற்றும் அரசியலை தமிழ்த் தேசிய சக்திகள் செய்து வந்துள்ளதன் பலாபலன்கள் ஆழமாக மதிப்பீடு செய்யப்படல் வேண்டும். ஒரு புறம் தேசிய கிளு கிளுப்பூட்டலை தமிழ் மக்களுக்குள் செய்து கொண்டு, மறுபுறம், பரந்து பட்ட சிங்கள மக்களை மேலும் மேலும் அந்நியப்படுத்தி, தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் குறித்து சந்தேகம் கொள்ளும் நிலைக்குத் தள்ளிவிடும் கைங்கரியத்தை மேற்படி எதிர்வினையாற்றல் உருவாக்கியுள்ளதா? என்பதும் இதில் தமது பொறுப்பு குறித்தும் தமிழ்த் தேசியம் தன்மை மீளாய்வு செய்ய வேண்டும். மிகவும் உடனடியாகச் செய்ய வேண்டியது சிங்கள தேசத்துடன், சிங்கள மக்களுடன் ஒரு அரசியல் உரையாடல். இதற்கான போதுமான வாய்ப்பு இன்றுள்ளது. இதய சுத்தியும் அரசியல் பிரக்ஞையும் மிக்க தொடர் செயற்பாடுகள் இதற்கு அவசியம்.

தமிழ்ப் புலம்பெயர் சமூகத்தின் பாத்திரம் :

கடந்த காலங்களைப் போலவே, புத்துயிர்ப்புப் பெறத் தொடங்கியுள்ள தமிழ்த் தேசியத்தின் பலம் பலவீனங்களைத் தீர்மானிப்பதிலும், வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதிலும் தற்போது தமிழ்ப் புலம் பெயர் சமூகத்திற்குக் குறிப்பான பாத்திரம் முன்னரைவிடவும் அதிகமாக உள்ளது. இது பற்றிய பரிசீலனைகளை இலங்கையிலுள்ளவர்களை விடவும் புலம்பெயர் சமூகத்திலுள்ள அரசியல் சக்திகள் செய்வதுதான் தார்மீக ரீதியிலும் எதார்த்த ரீதியிலும் சரியாகும்.

00000000

http://eathuvarai.net/?p=4325

  • கருத்துக்கள உறவுகள்
இதன் அடிப்படையில் சிங்கள தேசத்தின் முற்போக்கு சக்திகளுடன் நேச அரசியல் உறவு தாபிக்கப்பட்டிருந்தால் இலங்கையின் அரசியல் தலைவிதி வேறு விதமாக அமைந்திருக்கும்.
எல்லாம் எழுத நல்லாக உள்ளது நடைமுறைக்கு எதுவும் சாத்தியமில்லை......சிங்கள முற்போக்கு சக்தி,முஸ்லிம் முற்போக்கு சக்தி ,தமிழ் முற்போக்கு சக்தி எல்லாம் சேர்ந்து போராடினாலும் ......நிலாந்தன் எழுதிய்து போன்று போராட்ட விரோத பிராந்தியத்தில் எதுவும் சாத்தியமில்லை.............சிங்கள இளைஞர்கள் பலியானார்கள் ,தமிழ் இளைஞர்கள் பலியானார்கள் இனி நட்க்கும் போராட்டத்தில் மூவின இளைஞர்களும் பலியாவதை தவிர வேறு ஒன்றும் நடவாது.....
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் எழுத நல்லாக உள்ளது நடைமுறைக்கு எதுவும் சாத்தியமில்லை......சிங்கள முற்போக்கு சக்தி,முஸ்லிம் முற்போக்கு சக்தி ,தமிழ் முற்போக்கு சக்தி எல்லாம் சேர்ந்து போராடினாலும் ......நிலாந்தன் எழுதிய்து போன்று போராட்ட விரோத பிராந்தியத்தில் எதுவும் சாத்தியமில்லை.............சிங்கள இளைஞர்கள் பலியானார்கள் ,தமிழ் இளைஞர்கள் பலியானார்கள் இனி நட்க்கும் போராட்டத்தில் மூவின இளைஞர்களும் பலியாவதை தவிர வேறு ஒன்றும் நடவாது.....

அதனாலை தான் அண்ணை 

எல்லோரையும் பொத்திக்கொண்டு சும்மா இருங்கள் என்று கத்துகிறோம் 

வாங்கிக்கட்ட உள்ளத்திலும் மட்டுமல்ல உடலிலும் சக்தி இல்லை ....கத்திப்பார்த்தார்கள் தமிழ் தரப்பு உஷார் என்று தெரிந்தவுடன் 

தமிழ் தேசியத்திற்கு புத்துயிர்ப்பு கொடுக்கிறார்கள் ....இன்றைக்கு பிஸ்மி வருவார் நாளை கிஸ்மி வருவார்  ...சேர்ந்து மலையை புடுங்கலாம் என்பார் 

இவர்களை நம்பி தமிழ் சனம் பெட்டி கடை சந்தி வரை கூட வராது என்பது கொஞ்சம் கொஞ்சமாக விளங்க தொடங்கியிருக்கும் 

 

திசை தெரியாமல் முஸ்லிம் அரசியல் தடுமாறாமல் என்னசெய்யும்.... பிசினஸ் பேச இப்ப தமிழன் இல்லையே 

தமிழனை போடுவோம் கூட்டு கோஷம் இனி அவனுகளுக்கு தேவையேயில்லையே 

 

கடைசியில் பிஸ்மி புலம்பெயர்சுக்கு குளிர குளிர ஐஸ் பக்கெட் சலேன்ச் வைத்துள்ளார் 

இஞ்ச சனம் யாவாரத்துக்கு சரிபட்டு வரலவா ....என்னசரி பார்த்து சப்போட் ஒண்டு கொடுங்கவா ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.