Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெளத்தத்திற்கு அனைத்தும் மாறவேண்டும் ஏழாயிரம் பெளத்த தேரர்களுடன் பொது பல சேனா கொழும்பில் மாநாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பெளத்தத்திற்கு அனைத்தும் மாறவேண்டும் ஏழாயிரம் பெளத்த தேரர்களுடன் பொது பல சேனா கொழும்பில் மாநாடு
2014-09-24 10:21:25
3279.jpg

எதிர்வரும் 28-ம் திகதி நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு நாளாக அமையும் என பொது பல சேனா தெரிவித்துள்ளது.

நான்காயிரம் தேரர்களை ஓர் இடத்தில் குவித்து எமது பௌத்த தலைவர்கள் எவரும் மாநாடுகளை நடத்தவில்லை, இதை சவாலாக ஏற்று ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பௌத்த தேரர்களை ஓர் இடத்துக்கு அழைத்து சுகததாச விளையாட்டரங்கில் மேற்படி தினத்தில் இந்த மாபெரும் மாநாட்டை நடத்த தீர்மானித்துள்ளோம் என அந்த அமை ப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

நேற்றுக் காலை கிருலப்பனை பொது பல சேனா தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தேரர், எதிர்வரும் 28-ம் திகதி கொழும்பு சுகத தாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள பொது பல சேனாவின் மாபெரும் மாநாடு, இலங்கை நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு மாநாடாக அமையவுள்ளது.

நாம் இன்று எமது பிறந்த நாட்டில் அவலத்துக்குரியவர்களாக வாழ்ந்து கொண்டிரு க்கிறோம், 12 வீதம் உள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொண்டு, சர்வதேச சக்திகளுக்கு துணைபோகும் ராயப்பு ஜோசப் உள்ளிட்ட, புலித்தோல் போர்த்திய கூட்டம் நாட்டை பிரிக்க வேண்டும் என கோருகின்றனர்.

அதேபோன்று 7 வீதம் உள்ள முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலை வர்கள் எனக் கூறிக்கொண்டு இராணுவம் தவிர்ந்த மற்ற நிர்வாகத்தினர், கல்வி, சட்டம் போன்ற அனைத்து இடங்களிலும் மிகவும் ஆபத்தான முறையில் தமது ஆதிக்கங்களை செலுத்தி வருகின்றனர்.

12 வீதம் மற்றும் 7 வீதம் உள்ள இவர்கள் எந்தநேரமும் ஒரு இறாத்தல் இறைச்சி யையே கேட்டுக்கொண்டிருகின்றனர், என்றாலும் இவர்களுக்கு யாரும் இனவாதிகள் அல்லது தீவிரவாதிகள் என கூறுவதில்லை.

ஆதலால் 28-ம் திகதி நாம் எமது நாட்டில் பிறந்த சமூகத்துக்காகவும், இரத்தம், கண் ணீர், வியர்வை சிந்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிங்கள பௌத்தர் களுக்காகவும் நாமும் ஒரு இறாத்தல் இறைச்சி கேட்போம்.

இந்த நாட்டின் சகல நிகழ்ச்சி நிரல்களும் மாற்றியமைக்கப்பட வேண்டும். பௌத்த தர் மத்துக்கு ஏற்றமுறையில் நிர்வாகம், கல்வி, மருத்துவம் உட்பட சகலதையும் கட்டியெழுப்ப நாம் பணியாற்றுவோம்.

அதற்கு நாம் தயார். அதற்காக நாடும் தயாராகி வருகிறது. சிங்கள பௌத்த தலைவர்களை உருவாக்கிக் கொள்ளும் சூழல் தற்பொழுது உருவாகியுள்ளது.

நாம் 28-ம் திகதி இது தொடர்பான கொள்கையையும், எங்கள் வேலைத்திட்டத்தையும் இந்த சமூகத்துக்காக வெளியிடுவோம்.

துரதிர்ஷ்டவசமாக நாம் நம்பிக்கை வைத்துள்ள எமது தலைவர்கள் இது தொடர்பில் எதனையும் கூறுவதில்லை, அவர்கள் தாங்கள் பிறந்த சமூகத்தின் அலுகோசுகளாகவே காணப்படுகிறனர்.

இந்த நாட்டின் அரசியல்வாதிகள் தொடர்பில் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகவே நாம் இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்காக நாம் தயாராகவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
 
valampuri
  • கருத்துக்கள உறவுகள்

,

அவர்கள் தாங்கள் பிறந்த சமூகத்தின் அலுகோசுகளாகவே காணப்படுகிறனர்.
இப்படி சிங்களத்தில சொன்னவரோ ...தமிழில் சொன்னவரோ
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில ஒரு குண்டு வெடிச்சால்.. இவர்கள் தலைதெறிக்க ஓடுவார்கள். :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பௌத்த பூமியாக மாற்றப்பட்டுப் பல காலம் ஆகிவிட்டது.
புதிது புதிதாக புத்த சிலைகள் தோன்றுவது போலத் தேரர்களும் தோன்றுவதால்

அவர்களுக்கு நிறைய அரசியல் அறிவை ஊட்டவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.