Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் செலவினம் அதிகரிப்பு. பணவீக்கம் உயர வாய்ப்பு

Featured Replies

நடப்பாண்டைவிட அரச செலவினம் 40 சதவீதத்தால் அதிகரிக்கிறது: பணவீக்கமும் மோசமாக உயர்வடையும் அபாயம்

[06 - October - 2006] [Font Size - A - A - A]

இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு செலவினங்கள் உட்பட 2007 ஆம் ஆண்டிற்கான தனது செலவினங்களை நடப்பாண்டைவிட 40 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளது.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட 2007 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் முன்னறிவித்தலில் இந்த விபரம் வெளியாகியுள்ளது.

இலங்கையின் ஒட்டுமொத்த செலவினம் 2007 இல் 804.6 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.

இம்முறை பொலிஸ் சேவைக்கான செலவினம் இராணுவத்திற்கான செலவுகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது.பொலிஸ் சேவையை இணைத்துள்ளோம்.

பாதுகாப்பு தொடர்பாக அனைத்து செலவினங்களும் ஒன்றாகவுள்ளன. இதன் காரணமாக ஊதியங்களில் பாரிய அதிகரிப்பு தென்படுகின்றது என திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஆ.ஏ.ஜயதிலக குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் 2007 ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த செலவினம் 40 வீதத்தினால் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 1, 2007 முதல் டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்க செலவினம் 804,643 மில்லியனாக விளங்கும் என நிதி ஒதுக்கீடு சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கம் பொதுச்செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. வரிசேகரிப்பு நடைமுறையை வலுப்படுத்த வேண்டியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான உத்தேச சமாதான பேச்சுவார்த்தையிலேயே அனைத்தும் தங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் மீண்டும் தீவிரமடைந்துள்ள வன்முறைகளை தொடர்ந்து பல முதலீட்டாளர்கள் முதலிடும் யோசனையை கைவிட்டுள்ளனர்.

சமாதான முயற்சிகளே முக்கியமானது. அதனை முன்னெடுக்க முடியுமெனில், அது பல அழுத்தங்களிலிருந்து பொருளாதாரத்தை விடுவிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.thinakkural.com/news/2006/10/6/...s_page12372.htm

  • தொடங்கியவர்

இந்த வேளையில் இலங்கை அரசு போராட்டத்துக்கு எதிராக தமிழர்களின் நிதிதிரட்டலை ஒடுக்க முயல்வது போல இலங்கையில் பொருளாதாரத்தை முடக்கி யுத்தத்துக்கு போக முடியாதவாறு செய்ய வேண்டும்....

இதில் புலம்பெயர் தமிழர்கள் செய்யக்கூடியது என்ன...?????

இந்த வேளையில் இலங்கை அரசு போராட்டத்துக்கு எதிராக தமிழர்களின் நிதிதிரட்டலை ஒடுக்க முயல்வது போல இலங்கையில் பொருளாதாரத்தை முடக்கி யுத்தத்துக்கு போக முடியாதவாறு செய்ய வேண்டும்....

இதில் புலம்பெயர் தமிழர்கள் செய்யக்கூடியது என்ன...?????

தல இது என்ன கேள்வி இலங்கை வங்கிகளில் பணத்தை வைப்பலிடாமலும் வங்கிகளினூடாக பணத்தை உறவினர்களுக்கு அனுப்பாமல் விட்டாலே போதும். பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்தும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இலங்கை உற்பத்திகளை புறக்கணிக்க வேண்டும்.

சிங்களப்பகுதிகளில் சாக்கடைகளில் விளையும் வல்லாரைகளும் ஈரப்பலாக்களும் யானை குளிர்ப்பானங்களையும் புறக்கணிக்கலாம். ஏற்றுமதியாளர்களும் மிளகாய்த்தூள் போன்றவற்றை இந்தியாவில் தயாரித்து அனுப்பலாம். இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை கொடுத்து அவர்கள் திருந்தாவிட்டால் அவற்றை நாம் புறக்கணிக்கலாம். இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யும் உணவுப்பொருட்களை வேறுநாடுகளிலிந்து பெற்றுக்கொள்ள முயலலாம்.

இதெல்லாம் ஒரு கை ஓசை அல்ல

இணைந்தகைகள் ஆனால் சாத்தியம்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையரசு, யுத்ததை முழுமையாக உள்வாங்கினால் உல்லாசப் பிரயாணத்துறை நிச்சயம் வீழ்ச்சியடையும். இன்று இலங்கையின் பொருளாதாரத்தில் 20 சதத்துக்கு மேலதிகமாக அதில் தான் தங்கியிருக்கின்றது.

வன்னியன் சொன்னது போல, புலம்பெயர் மக்கள் ஒன்றுபட்ட எண்ணங்களாக, எம் தாய்நாட்டுக்கு செய்யும் சேவை என்று செய்தால், நிச்சயமாக அரசின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தலாம்.

இப்போது உதவிவழங்கும் நாடுகளின் கடனின் அளவும் குறைக்கப்பட்டிருப்பதால், அது ஒரு வகையில் வெற்றி பெறும்.

விடுதலைப் புலிகளால் குறியீட்டு பெயரோடு

ஒரு தொடர் யுத்தம் மூளுமேயானால் அரசின் பொருளாதாரம் ஆட்டம்

காணும். முதிலீட்டார்கள் வேலியேறுவார்கள் .உள்ளாச துறை பெரும் வீழ்ச்சியடையும் .

இலங்கை விமான சேவை தனது பயணங்கள் பலதை இரத்து செய்யும் .

பாரிய பொருளாதார முற்றுகையில் அது சிக்கி தவிக்கும்

இவை யாவும் நடந்தேறும் புலிகள் தமது போரை தாமாக

முன்னெடுத்தால் .

அதை மைய்யமாக வைத்தே அவர்கள் தமது தாக்குதல் திட்டங்களை

வகுப்பார்கள் .

ஆனால் எம் தமிழர் தலைநகரில் இருக்கும் வரை இது சாத்தியமாக

ஏனெனில் அவர்களை சிறையில் அடைத்தும்

கப்பம் பெற்றால் அதுவே அரசக்கு போதுமே....

இங்கு இறக்குமதியாகும் பொருட்களை

மட்டு படுத்துவது இயலாத காhPயம் .

நடை முறை சாத்தியம் அற்றது...

இதற்கு பல உதாரணங்களை காட்டலாம் .

ஓரே வழி போர் அதில் அவனை வெல்வது

அவன் பொருளாதார நிலைகளை தகர்தழித்தால் .

திருமலை புலிகள் வசம் வந்தால் அதுவே போதும்

அப்புறம் என்ன...தனி நாடு வந்த மாதிரி .

என்று

இவ்வாறு சிலர் சுறுகிறார்கள்

நன்றி

- வன்னி மைந்தன் -

  • தொடங்கியவர்

நானும் கொஞ்சம் முதல்த்தான் பார்த்தேன்... விவரமாக தெரிந்து கொள்ள வேணும் எண்டு இன்னும் ஒருமுறை பார்க்க, பதிவுகளைத்தான் எதிர்பார்த்து இருந்தேன்...

குறுக்ஸ் தந்ததால் வேகமாக இன்னும் ஒருதடவை கேட்க்க முடிகிறது...

அன்னிய செலவாணியின் வருகை, வரி அறவீடுகள் இலங்கை அரசுக்கு எவ்வளவுதூரம் கைகொடுக்கிறது எண்று கூறினார்கள்... அதை தடுக்க புலத்தமிழர்கள், புலம்பெயர் சமூகம் எவ்வாறு உதவலாம் எண்றும் விரிவாக அலசிய நிலவரம் இது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.