Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீதான நிலைப்பாட்டில் மாற்றமில்லை: அமெரிக்கா விளக்கம்

Featured Replies

kerry1_2137834h.jpg
அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி| கோப்புப் படம்.

மனித உரிமை மீறல் பிரச்சினையில் இலங்கை மீதான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அமெரிக்கா ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்தது.

இந்நிலையில், அண்மையில் ஐ.நா. பொதுச்சபை வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்ற இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அந்நாட்டு வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரியை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களில் வெளியாகின. இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப் பிறகு அமெரிக்கா, இலங்கை மீதான தனது நிலைப்பாட்டை சற்று தளர்த்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. இது, அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறியதாவது: "இலங்கை - அமெரிக்கா குறித்து ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் ஒன்று மட்டும்தான் உண்மைச் செய்தி. அது, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியும் சந்தித்தனர் என்பதே.

அந்த சந்திப்பின் போதும் இலங்கை மீதான நிலைப்பாட்டை கெர்ரி வலியுறுத்தியுள்ளார். இலங்கையுடனான நட்புறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அமெரிக்கா இப்போதும் விரும்புகிறது. ஆனால், அந்த விருப்பம் நிறைவேற வேண்டுமானால் இலங்கை அந்நாட்டில் உள்ள அனைத்து மொழி, இன, மதத்தினருக்கும் அமைதியும், வளமும் ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்றார்.

அதன் காரணமாகவே வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, போரில் இருந்து மீண்ட தேசமாக உருவெடுக்க இலங்கை அதிபர் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்" என்றார்.

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6468660.ece?homepage=true

 

  • கருத்துக்கள உறவுகள்

68c619786e7138d13a2610231c92fe8c.jpg

இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கைகளில் மாற்றமில்லை என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா இலங்கை தொடர்பான கடுமையான நிலைப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டுள்ளதாக அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

அமெரிக்காவின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் தளர்ச்சி தெரிவதை தான் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியுடனான சந்திப்பின்போது உணர்ந்ததாக அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாக வெளியான செய்திகளையே அமெரிக்கா நிராகரித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்காவின் வெளிவிவகார பேச்சாளர் ஜென் சகி தெரிவித்துள்ளதாவது :-

இலங்கை ஊடகங்களில் வெளியான தகவல்களில் ஒரு விடயம் மாத்திரம் சரியானது. வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரின்போது இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார்.

இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கையில் மாற்றமெதுவும் இல்லை என்ற நோக்கத்தை தெரியப்படுத்தும் நோக்குடனேயே இந்த சந்திப்பு இடமபெற்றது. நிச்சயமாக  இலங்கை தொடர்பான கொள்கையில் தளர்ச்சியேற்படவுமில்லை.

இலங்கையுடனான எமது உறவு முழுமையாக வளர்ச்சி காணவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், இலங்கை தனது பல தரப்பட்ட இன மத குழுக்களிற்க்கு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திக்கொடுத்தாலே சாத்தியமாகும்.

இதன் காரணமாகவே இலங்கை தொடாந்தும் யுத்தத்தில் ஈடுபட்டிராத நாடு என்பதை காண்பிக்கும் விதத்திலான அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=259713507703226767

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் குறைவடையவில்லை.
அதுவரை நாங்கள்  இலங்கை அரசை போர்க்குற்றம் என்ற பொறியில் பிடிப்பதாக நடித்துக்கொண்டிருப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
 
 
் தமிழரின் புராதன நடனம் பரத நடனத்தை முறைப்படி கற்று நடனமாடி வியக்க வைத்தார்கள் .
இவற்றை எல்லாம் ஒழுங்கு செய்த நியூ ஜெர்சி இலங்கை சமூகத்துக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள் .உங்கள் உதவிகள் இல்லையெனின் இப்படி சிறப்பாக செய்ய முடியாது மீண்டும் நன்றிகள் .
 
இப்படி ஒரு..சமுகம் அமெரிக்காவில் விரிவடைந்து செல்கிறது.... நியு ஜெர்சி வாழ் தமிழர்களே உசாராக இருங்கள்...r · 
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.