Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கங்காணி + கீரைப்பாத்தி + இந்தியா = சமாதானம்??

Featured Replies

கங்காணி இயக்கங்களோடும் கீரைப்பாத்தி கட்சிகளோடும் இந்தியா பேச்சு நடத்துவதா?: மூத்த தமிழக ஊடகவியலாளர் சோலை சாடல்

cholai20061008.jpg

தமிழீழ மக்களால் புறக்கணிக்கப்பட்ட கங்காணி இயக்கங்களோடும் கீரைப்பாத்தி கட்சிகளோடும் இந்திய அரசாங்கம் பேச்சு நடத்துவதா என்று தமிழ்நாட்டில் மூத்த ஊடகவியலாளர் சோலை சாடியுள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆலோசகர்களில் ஒருவராக இருந்த சோலை குமுதம் குழுமத்தின் "றிப்போர்ட்டர்" இதழில் எழுதியுள்ள கட்டுரை விவரம்:

இலங்கை நாடாளுமன்றத்தின் ஈழப் பிரதிநிதிகள், பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்க நெடுநாள் தவம் இருந்தனர். கடைசியில், அவர்களை அழைத்துப் பேச வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் பிரதமரை வலியுறுத்தினர். அவர்களைச் சந்திக்க ஆட்சேபணை இல்லை என்று பிரதமர் தெரிவித்தார். அவர்கள் வந்தால் சந்திக்கத் தயார் என்றும் தெரிவித்தார். அவருடைய அழைப்பின் பேரில் அவர்கள் இந்தியா வந்தனர்.

இதற்கு மத்தியில், கியூபாவில் நடந்த நடுநிலை நாடுகள் மாநாட்டில் பங்கு கொள்ள பிரதமர் பயணமானார். ஈழத் தமிழர்களுக்கு எதிராக, சிங்கள இனவாதிகள் வளர்த்து வரும் ஒரு ஜீவனை, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அங்கு அறிமுகப்படுத்தினார். அந்த ஜீவன் பெயர், டக்ளஸ் தேவானந்தா. அனைத்துப் பாதுகாப்போடும், இலங்கை அரசின் அமைச்சராகவும் அமர்ந்திருக்கிறார். ஈழ விடுதலை இயக்கத்தைப் பரம எதிரியாகக் கருதுகிறவர். நினைத்தால் அவர்கூட டெல்லி வந்து இந்தியத் தலைவர்களைச் சந்திக்க முடிகிறது. ஆனால், நாடாளுமன்ற ஈழ உறுப்பினர்களால் சந்திக்க முடிந்ததில்லை. அதனைச் சுட்டிக் காட்டித்தான் அவர்களை பிரதமர் சந்திக்க வேண்டும் என்று, தமிழகத் தலைவர்கள் வலியுறுத்தினர்.

கியூபாவிலிருந்து திரும்பிய பின்னர் நாடாளுமன்ற ஈழ உறுப்பினர்களை பிரதமர் சந்திப்பார் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது.

அதன்பின்னர் ஈழத் தமிழர்களின் பெயரால் கீரைப்பாத்திக் கட்சிகள் நடத்தும் மூவர் டெல்லிக்கு வந்தனர். அவர்கள் ஈழச் சமுதாயத்தின் பிரதிநிதிகள் அல்ல. கொழும்பில் அதிகார வர்க்கத்தின் கொல்லைப்புறத்தில் குடியிருப்பவர்கள்.

இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அகமதுவையும், வெளியுறவுச் செயலாளர் சியாம் சரணையும் சந்தித்துப் பேசினார்கள். தங்களுக்காக வாதாட அவர்களுக்கு ஈழ மக்கள் எந்த உரிமையும் அளிக்கவில்லை.

அவர்கள் என்ன சொன்னார்கள்? கூட்டாட்சி முறைக்கு சிங்களக் கட்சிகள் தயாராக இருப்பதாகவும், ஈழ விடுதலை இயக்கம்தான் அதற்கு வேட்டு வைப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். அதிகாரப் பகிர்வுக்கு சிங்கள இனவாதிகள் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள். சிங்கள அரசுதான் இந்தக் கற்றுக்குட்டிகளை அனுப்பியிருக்கிறது என்பதனை அந்தக் குட்டிகளே அம்பலப்படுத்திக் கொண்டன.

சிங்களம் ஒரே நாடு. சிங்களம் ஒரே மொழி. பௌத்தம் ஒரே மதம் என்ற முழக்கத்தை முன் வைத்துத்தான், ராஜபக்சேயின் கட்சி தேர்தல் களத்திற்கு வந்தது என்பதனை முழங்கையால் மூடி மறைக்கப் பார்க்கிறார்கள்.

இன்னொரு சூரப்புலியும் டெல்லி வரப்போவதாகத் தகவல். இலங்கை அரசின் அழைப்பின் பேரில், இந்திய ராணுவம் ஈழத்தில் இருந்தது. மாநில சுயாட்சி என்ற பெயரால், வரதராசப் பெருமாள் என்ற தஞ்சாவூர் பொம்மையை, வடகிழக்கு மாநில முதல்வராக அமர்த்தினார்கள்.

இந்திய ராணுவ நிழலில் சில நாட்கள் செங்கோல் செலுத்திய அவர், நமது ராணுவம் திரும்பியபோது, ரொம்பப் பாதுகாப்பாகத் திரும்பிவிட்டார். அவரும் ஈழ விடுதலை இயக்கத்திற்கு எதிராக வளர்க்கப்பட்ட கொம்பில்லாத தஞ்சாவூர் மோழை மாடுதான்.

இதுவரை இந்தியாவில் எங்கு இருக்கிறார் என்று தெரியாமலே ரொம்ப ரகசியமாக இருந்த அவரும், ஈழப் பிரச்னைக்கு என்ன வழி? என்று அகமதுடனும் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப் போகிறாராம்.

இன்னும் வேடிக்கை என்னவென்றால், இரண்டு சிங்கள இனவெறிக் கட்சிகளின் தலைவர்களும் டெல்லிக்கு வருகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன. வரட்டுமே. அவர்களுடைய கருத்துக்களை அறியட்டும்.

சுனாமிக்குப் பின்னர் இலங்கைக்கு உதவ பல நாடுகள் முன் வந்தன. ஆனால் உதவிப் பொருள்களை இலங்கை அரசின் பிரதிநிதிகளும், விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளும் இணைந்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்று, அந்த நாடுகள் கோரின. அதனை விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் அவர்களோடு இணைந்து செயல்படக்கூடாது என்று இந்த சிங்கள இனவெறிக் கட்சிகளின் எம்.பி.க்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களுடைய கோரிக்கைக்கு, இன்றைய சிங்கள அரசு பணிந்தது. எனவே, அவர்களின் திட்டம் என்ன என்பதனை அவர்களை அழைத்துப் பேசித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.

விடுதலைப் புலிகளுடன் பேசுக என்று இலங்கை அரசுக்கு அமெரிக்கா புத்திமதி சொல்கிறது. ஐரோப்பிய நாடுகள் சொல்கின்றன. ஏன்? இந்திய அரசே சொன்னது. ஆனால், நடைமுறையில் சிங்கள அரசின் ஏவல் புறாக்களுடன் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் என்ன ஈழ மக்களின் பிரதிநிதிகளா? அவர்கள் ஈழ மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள்.

ஈழ விடுதலை இயக்கமும் இதர கங்காணி இயக்கங்களும் ராஜிவ் காந்தி காலத்தில் ஒரே நிலையில் சமநிலைப்பங்காளிகளாக வைத்துப் பார்க்கப்பட்டன. அதன் பின்னர் அந்தக் கங்காணி இயக்கங்கள் காணாமல் போயின. இப்போது அவைகளுக்கு விலாசம் தேடித்தரும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறோம்.

அதேசமயத்தில் நாடாளுமன்ற ஈழ உறுப்பினர்கள் பிரதமரைச் சந்திக்கும் வாய்ப்பு எப்படியோ நழுவிப் போய்விட்டது.

1972 ம் ஆண்டு வரை சம உரிமையுடன் ஈழத்திற்கு சுயாட்சி என்ற நிலையிலேதான் விடுதலை இயக்கங்கள் நின்றன. தனிநாடு என்ற குரலே எழவில்லை. அதே சமயத்தில் இனத்தால், மொழியால், கலாசாரத்தால் ஈழம் புறக்கணிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தமிழ்க்களஞ்சியமாக இருந்த மாபெரும் நூலகம் கொளுத்தப்பட்டது. அங்கே நடந்த உலகத் தமிழ் மாநாட்டை சிங்களர்கள் தாக்கினர். துப்பாக்கிப் பிரயோகம் என்கிற அளவிற்கு நிலைமை வளர்ந்தது. இலங்கை ராணுவம் களத்தில் இறங்கியபோது, ஈழத்து இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர். ராணுவத்தின் இயந்திரத் துப்பாக்கிகளைப் பூச்செண்டு தூக்கியா சந்திக்க முடியும்?

அதன்பின்னர் ஏற்பட்ட உடன்பாடுகளைச் சிங்கள அரசுதான் மீறியிருக்கிறது. இவைகளெல்லாம் பழங்கதைகளாக இருக்கட்டும்.

ஈழம் தனிநாடு ஆவதா, ஒன்றுபட்ட இலங்கையின் ஓர் அங்கமாக இருப்பதா என்பதனை சிங்கள அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அதற்கு ஒன்றுபட்ட இலங்கையில், ஈழத்திற்குச் சுயாட்சி என்ற இந்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்கிறோம் என்று அறிவித்தால், அரசியல் அபலைகளை அழைத்து நாம் பேச்சுவார்த்தை நடத்தத் தேவையிருக்காது.

ஈழத்திற்கு, சுயாட்சி என்ற கோட்பாட்டை ஏன் இன்றுவரை சிங்கள அரசு பிரகடனம் செய்யவில்லை?

சிங்கள மொழியோடு தமிழும் ஆட்சி மொழி, பாடமொழி, நீதிமன்ற மொழி என்று ஏன் இன்றுவரை தெரிவிக்கவில்லை? சிங்கப்பூரில், மலேசியாவில் அத்தகைய ஏற்பாடு இருக்கிறதா இல்லையா?

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இப்போது விடுதலைப் புலிகளை இலங்கை அரசு அழைத்திருக்கிறது. அவர்களும் உடன்பட்டிருக்கிறார்கள்.

ஈழத்திற்கு சுயாட்சி இலங்கைக்குக் கூட்டாட்சி என்பதனை நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்துவிட்டு, பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு செல்லுமானால், உடன்பாடு எட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை இன்னொரு பக்கம் ராணுவத்தை ஏவுதல் என்ற இரட்டை நிலை எடுக்குமானால், இலங்கை அரசு வெற்றி பெறாது.

அதேசமயத்தில் தமிழகம் இன்னும் ஓர் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. வந்தால் சந்திக்கிறேன் என்று சொன்ன பிரதமர், ஏன் நாடாளுமன்ற ஈழ உறுப்பினர்களைச் சந்திக்க மறுத்தார்?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்னை வந்ததும், அவர்கள் மதிய உணவு விருந்தோடு பிரதமரைச் சந்திப்பார்கள் என்று வைகோ அறிவித்தார்.

பிரதமரையே அவர்கள் சந்திக்கும்போது, நாம் சந்தித்து என்ன பயன் என்று கலைஞர் எண்ணிவிட்டாரா? அப்படி அறிவித்த வைகோ அரசியல் மாச்சரியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, கலைஞரைச் சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவையாவது நல்லவையாக இருக்கட்டும் என்று சோலை அதில் எழுதியுள்ளார்.

  • தொடங்கியவர்
4415.jpg + spinach.jpg + Indiaflag.gif = 52775426144e6d2c943341.jpg

பனங்காய் :

இந்தியக் கொடிக்குப் பதிலாக ஒரு நரியின் படத்தைப் போட்டால் பொருத்தமாக இருக்கும்.

  • தொடங்கியவர்

உன்மைதான் வன்னி அண்ணே...

இதையும் பாருங்கள்......

http://atcharam.tamiloviam.com/unicode/06300505.asp

உன்மைதான் வன்னி அண்ணே...

இதையும் பாருங்கள்......

http://atcharam.tamiloviam.com/unicode/06300505.asp

உந்த கட்டுரை எழுதிய புத்திசாலியாரையா ஏவுகனை பற்ரி எல்லாம் சொல்லுகிரார் சிங்களவனிடம் லம்பாக பெற்றுவிட்டார் போல

ஜயா சீனாக்காரன் தாய்வானை நோக்கி 610 ஏவுகனையை வைதிருகிரானாம் அதைபோல இந்தியாவை நோக்கி ஆயிரக்கனக்கில் வைத்திருப்பாம் பாகிஸ்தானும் வைதிருக்கும் உந்த கட்டுரை எழுதியவர் என்னேண்டால் புலிகளின் விமானப்படையில் இருந்து இந்தியாவை பாதுகாக்க அக்கினி பிருத்துவி ஏவுகனைகளை பொருத்தட்டாம்.அதில ஒருத்தர் எழுதிரார்குண்டுவீசிவிட்டு துன்பவியல் சம்பவன் என்பீனமாம் புலிகள்.துன்பத்தை தந்தவனுக்கு திருப்பி கொடுப்பதுதான் எம் ஸ்டைல்.இலங்கையில் இந்தியா செய்தகொடுமைக்கு தமிழீழ மக்களின் சார்பில் மரனதண்டனை நிறைவேற்றப்பட்டது அது முற்றிலும் சரியானது.சும்மா தக்கிவிட்டு துன்பவியல் சம்பவம் எண்டு சொல்ல வேலைவெட்டியிலாதவ்ர்கல் இல்லை புலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.