Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா பிரஜைகள் குழுத் தலைவர் மீது கொலை முயற்சி!!

Featured Replies

வவுனியா பிரஜைகள் குழுத் தலைவர் கிருஸ்ணபிள்ளை தேவராசா கொலை முயற்சி தாக்குதல் ஒன்றிலிருந்து உயிர் தப்பியுள்ளார். நெடுங்கேணியிலுள்ள தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை இன்றிரவு மோட்டார் சைக்கிளில் சென்றவர்களால் அவர் தாக்கப்பட்டிருந்தார்.

எதிர்வரும் 10ம்; திகதி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டிருந்ததற்காக அவர் இருமீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஆர்ப்பாட்டமா செய்யப் போகின்றாய், அதற்கிடையில் உன்னைக் கொல்லுவோம் என்று கொச்சை தமிழினில் மிரட்டி அச்சுறுத்தியே மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் அவரைத் தாக்கியிருக்கின்றார்கள். காயமடைந்த அவர், நெடுங்கேணியில் அனுமதிக்கப்பட்டு இப்போது, வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி வவுனியா பிரஜைகள் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளனர். இந்தப் பின்னணியிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது.

அவரது கை மற்றும் கால்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.பெற்றோலினை ஊற்றி அவரை கொலை செய்ய முற்பட்டிருந்த வேளை வீதியினால் வாகனமொன்று பயணித்ததையடுத்து தாக்குதலாளிகள் தப்பி சென்றுள்ளனர்.

http://www.pathivu.com/news/34422/57//d,article_full.aspx

  • தொடங்கியவர்

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் மீது கொலை முயற்சி தாக்குதல்!

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கிருஸ்ணப்பிள்ளை தேவராசா (வயது 61) மீது இன்று (08.10.2014) இரவு நெடுங்கேணி பிரதான இராணுவ முகாமுக்கு சமீபமாக வைத்து கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10.10.2014 வெள்ளிக்கிழமை அன்று வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஜெயக்குமாரியினதும், ஏனைய அரசியல் கைதிகளினதும் விடுதலையை வலியுறுத்தியும், சட்டத்துக்கு முரணான கைதுகள், தடுத்து வைத்தல்களை கண்டித்தும் கவனயீர்ப்பு போராட்டத்தை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு நடத்தவுள்ள நிலையிலேயே இந்த கொலை முயற்சி தாக்குதல் அவர் மீது நடத்தப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்துக்கான முன்னாயத்த கூட்டம் இன்று வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினால் வவுனியாவில் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு விட்டு நெடுங்கேணி பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கும் பயண வழியிலேயே இந்த கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு இனம் தெரியாத நபர்கள் அவரை இடை மறித்து, “மவனே போராட்டமா நடத்தப்போறாய். நீ உயிரோட இருந்தாத்தானே போராட்டம் நடத்துறதுக்கு?” என்று கொச்சை தமிழில் தூசன வார்த்தைகளால் பேசியவாறு வாயை பொத்தி பிரதான வீதியின் ஓரமாகவிருந்த வயல்காணிக்குள் இழுத்துச்சென்றுள்ளனர்.

அங்கு வயல் காணியின் பாதுகாப்பு வேலி இருந்தமையினால் மேற்கொண்டு அவரை இழுத்துச்சென்று தனிமைப்படுத்தி கொலை செய்யும் முயற்சி கைகூடாததால் சினம் அடைந்த அவர்கள், இரும்பு கம்பிகளால் தலையை குறிவைத்து தாக்கியவேளை தலைக்கவசத்தில் பட்டு வழுக்கி தோள்பட்டைகளில் பலமாக அடிகள் விழுந்தமையினால் தோள்மூட்டுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கைகள் கால்களில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனால் கை கால் என்புகளிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததும் அங்கு உடனடியாகவே விரைந்து சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் மற்றும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் செயல்குழுவினர் நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆகியோரின் வலியுறுத்தலுக்கு அமைவாக வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

dcp127828282-1.jpg

dcp127828282-3.jpg

dcp127828282-4.jpg

dcp127828282-5.jpg

dcp127828282-6.jpg

dcp127828282-7.jpg

dcp127828282-9.jpg

dcp127828282-10.jpg

dcp127828282-11.jpg

http://www.naamthamilar.ca/?p=143932

  • கருத்துக்கள உறவுகள்

எனி இவர்.. பிரிட்டனில் அல்லது கனடாவில் அகதி அந்தஸ்துப் பெற தகுதி அடைகிறார்.

 

இப்ப எல்லாம் ஒரு அரசியல் கட்சியை ஸ்தாபிக்க வேண்டியது.. பேப்பரில.. தாக்குதல்.. அச்சுறுத்தல் என்று படத்தோடு செய்தி வர வைக்க வேண்டியது.. ஏஜென்சியை பிடிக்க வேண்டியது.. வந்திறங்க வேண்டியது. சிம்பிள்.. இவ்வளவும் ஒழுங்கு மரியாதையா நடந்தா அசைலம்.. நிச்சயம்..!

 

 

இதைவிட இன்னொரு வகுப்பு உள்ளது. அது ஏதாவது ஒரு பள்ளியில் படிக்க அனுமதி பெற வேண்டியது. பொலிஸ் பிடிச்சது.. அச்சுறுத்தல் என்று.. போட்ட.. பேப்பர் கட்டிங்குகளை பொறுக்கி எடுக்க வேண்டியது. வந்ததும்.. பள்ளிக்கு போகாமல்.. நேரா அசைலம் அடிக்கிறது.. இது தான் இப்ப எம் தமிழர் அரசியலில் முதன்மையாக உள்ளது.

 

இந்த ஐயா நேர்மையா அரசியல் செய்திருந்தாலும்.. இப்ப எல்லாம் எம்மவரை நம்ப முடியுதில்லை..! தாங்களே தங்களுக்கு ஆளை வைச்சு அடிச்சு.. செய்தி பேபப்ரில வருகுதோன்னு தான் பார்க்கிறாங்க. இதில சிங்களவன் செய்யுற அநியாயம் எது எம்மவர் செய்யுற அநியாயம் எதுன்னு பிரிச்சுப் பார்க்கவே முடியுதில்ல..!! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா மனதில் தோன்றுவதை எல்லாம் பினாத்த வேண்டாம் நெடுக்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கேன் சுடுகுது. நீங்களும் இதே வழியில் கனடாவை அடைந்தவரோ..??!

 

எம்மவர்களின் அசைலம் செய்யும் சட்டத்தரணிகளை அணுகிக் கேளுங்கள். உண்மை தெரியும்..!! அதைச் செய்யாமல்.. மற்றவர்கள் மீது பாய்வதை நிறுத்துங்கள். அது திரும்பி உங்களையே வந்து சேரும். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

குறித்த மனிதர் தாக்கப்பட்ட நோக்கம் புரியவில்லை.. ஜெயக்குமாரி விடயம் உங்களுக்குத் தெரியவில்லை. இன்றைய நாட்களில் தமிழ் மக்களை மிரட்டி வைக்கச் சிங்கள அரசு செய்யும் முயற்சிகளின் நோக்கங்களில் இதுவும் ஒன்று எனத் தெரிவில்லை. ஆனால் குறித்தவர் அசலம் அடிக்கத் தான் இப்படிச் செய்கின்றார் என்று சிங்கள அரசுக்குச் சார்ப்பான வகையில் பிரச்சாரம் செய்கின்றீர். இதை என்னவென்று சொல்வது. ஆமாம்.. நாங்கள் எல்லாம் குறுக்கு வழியில் வந்தோம். நீங்கள் நல்லவழியில் வந்தனீர்கள். போய்ச் சிங்கள அரசின் செயல்களுக்கு வக்காளத்து வாங்குங்கள்...

  • தொடங்கியவர்

நெடுக்ஸ் அண்ணா, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் முன்பிலிருந்தே காணாமல் போனோர் குறித்த கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்துபவர்கள்.

உதாரணமாக இந்த இணைப்புகளை பாருங்கள்.

போன வருடம் இவர்கள் நடத்திய போராட்டம்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/132096-வவுனியாவில்-இடம்பெறவுள்ள-காணா/

http://www.yarl.com/forum3/index.php?/topic/132228-வவுனியாவில்-ஏட்டிக்குப்-போட்ட/?hl

இப்பொழுது ஜெயக்குமாரியை விடுவிக்குமாறு போராட்டம் நடத்தவிருப்பதாக வந்த செய்தி.

http://www.yarl.com/forum3/index.php?/topic/147018-தடுத்து-வைக்கப்பட்டுள்ள-ஜெயக்/

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா பிரஜைகள் குழு தலைவர் மீது தாக்குதல்

 
141009153907_vavunia_citizen_committe_51வவுனியா பிரஜைகள் குழு தலைவர் மீது தாக்குதல்

வவுனியா பிரஜைகள் குழு தலைவர் கிருஸ்ணபிள்ளை தேவராசா அவர்கள் நேற்றிரவு நெடுங்கேணியில் அடையாளம் தெரியாதவர்களினால் தாக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றார்கள்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் ஜெயக்குமாரி உள்ளிட்ட விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை வவுனியா பிரஜைகள் குழுவினர் நாளை நடத்தவிருக்கின்ற பின்னணியிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு அடையாளம் தெரியாத ஆட்கள் தனிமையான ஓரிடத்தில் வைத்து ''போராட்டமா நடத்துகிறாய் போராட்டம், அதற்குள் உன்னைக் கொல்வோம்'' என திரும்பத் திரும்ப கூறியபடி, தன்னை இரும்புக் கம்பிகளினால் சரமாரியாகத் தாக்கியதாக வவுனியா பிரஜைகள் குழு தலைவர் தேவராசா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தத் தாக்குதலானது ஒரு கொலை முயற்சியென்றும், சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுக்கின்ற தமது நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்றும் வவுனியா பிரஜைகள் குழுவின் செயலாளர் தியகாராஜா நவராஜ் அவர்கள் கூறுகின்றார்.

எனினும் திட்டமிட்டபடி தமது கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பிபிசியிடம் தகவல் வெளியிட்ட காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண அவர்கள், தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை எனக் கூறினார்.

அத்துடன் தாக்குதல் நடத்தியது யார் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகள் நடைபெறுகின்றன என்றும் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/10/141009_jaffnaattack

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.