Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திராவிடர், திராவிடம் (மொழி, நாடு) பற்றிய சொல்லாய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திராவிடர், திராவிடம் (மொழி, நாடு) பற்றிய சொல்லாய்வு

__________________________

தொல்காப்பியம்

சொல்லதிகாரம் - தெய்வச்சிலையார் உரை

எச்சவியல்

பன்னிரு நிலமாவன:--குமரியாற்றின் தென்கரைப் பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமுந் துளுவமுங் குடகமுங் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும்.

இவற்றுள், கூபகமுங் கொல்லமுங் கடல்கொள்ளப்படுதலின், குமரியாற்றின் வடகரைக்கண் அப்பெயரானே கொல்லமெனக் குடியேறினர். "பஞ்சத்திராவிடமெனவும் வட நாட்டார் உரைப்ப வாகலான் அவையைந்தும் வேங்கடத்தின் தெற்காதலுங் கூடாமை யுணர்க."

_____________________________

மேலுள்ள உரையின் படி தெய்வச்சிலையார் தமது தொல்காப்பிய உரையில் பஞ்ச திராவிடரின் நாடுகள் வேங்கட நாட்டின் (நன்கு கவனிக்கவும். வேங்கடம் என்பது வேங்கட நாட்டின் வட எல்லை. திருப்பதியையும் தாண்டி சிறிது தூரம் இருக்கும்.) வடக்கில் இருப்பதே பஞ்ச திராவிட நாடுகள் என்பதை தெளிவாக்கிவிட்டார்.

இந்த ப‌ன்னிரெண்டு நாடுகளில் வேங்கடத்துக்கு தெற்கே சிங்களம், கொல்லம், கூபகம், தென்கரைப் பட்ட பழந்தீபம், குடகம், குன்றகம் போன்றவை இருந்தன.

வடக்கில் கொங்கணமுந் துளுவமுங் கருநடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் இருந்தன.

கீழுள்ள இராஜதரங்கிணி என்னும் நூலில் குறிப்பிடப்படும் பஞ்ச திராவிட நாடுகளோடு இதைப் பொருத்திப் பார்த்தால் வடக்கில் இருந்த ஆறு நாடுகளில் கலிங்கம் தவிர்த்த மற்ற ஐந்தும் பஞ்ச திராவிட நாடுகள் எனத் தெரிய வரும். இந்த இராஜதரங்கிணி நூல் பிராமணர்களின் கோத்திரங்களை குறிப்பிடும் போது அதில் திராவிடர் என்பவர்களும் பிராமணர்களின் பத்துப் பிரிவுகளில் ஒருவராக கூறுகிறது.

_______________________________

//कर्णाटकाश्च तैलंगा द्राविडा महाराष्ट्रकाः, गुर्जराश्चेति पञ्चैव द्राविडा विन्ध्यदक्षिणे || सारस्वताः कान्यकुब्जा गौडा उत्कलमैथिलाः, पञ्चगौडा इति ख्याता विन्ध्स्योत्तरवासिनः || ... - 

இராஜதரங்கிணி

கர்நாடகாஸ் தெலிங்கா திராவிடா மகாராஷ்ட்ரகா குர்ச்சராஷெதி பஞ்ச திராவிடா விந்திய தக்ஷினே

சரஸ்வதா கான்யகுப்ஜா கௌடா உத்கலமிதிலா பஞ்ச கௌடா விந்தியோதித்ர்வாஸின்..- 

இராஜதரங்கிணி//

_________________________

மேலுள்ள இராஜதரங்கிணி வரிகளின் படி கர்நாடகம், தெலிங்கம், திராவிடம் மகாராட்டிரம். குர்ச்சரம் (குஜராத்) பகுதி பிராமணர்கள் பஞ்ச திராவிடர் ஆவர். இவர்கள் விந்திய மலை தெற்கில் குடியேறியவர். விந்திய மலை வடக்கில் உள்ளவர் பஞ்ச கௌடர் ஆவர்.

"இராஜதரங்கிணி பஞ்ச திராவிடர்களின் நாடுகள் விந்தியமலை தெற்கிலும், தெய்வச்சிலையார் பஞ்ச திராவிடர்களின் நாடுகள் வேங்கட நாட்டின் வடக்கிலும் உள்ளதை கூறியதால் இரண்டுக்கும் நடுவில் இருப்பதே பஞ்ச திராவிடர் என்ற பிராமணர்களின் நாடுகளாகும் என்பது தெளிவு."

இதனால் இராஜதரங்கிணி குறிப்பிடும் பஞ்ச திராவிட நாடுகளில் வரும் திராவிடம் என்ற நாடு இதுக்கு முன்னர் பலர் கூறிவந்தது போல தமிழகமும் கேரளமும் அல்ல. மாறாக வேங்கட நாட்டின் வடக்கில் இருந்த ஒரு நாடே. பிராமணரின் கோத்திரத்தைக் குறிக்கவே திராவிடர் என்ற மக்கள் குழு சொல் பயன்பட்டு வந்தது. பிற்காலத்தில் கால்டுவெல் மேக்ஸ்முல்லர் போன்றவர்கள் கூறியது இதில் இருந்து தவறு எனத் தெளிவாகிறது.

_________________________

தென்னகம் பல காலமாக திராவிடம் என்று அழைக்கப்பட்டதாகவும் அதில் குடியேறிய பிராமணர்கள் திடாவிடப் பிராமணர்கள் என அழைக்கப்பட்டார்கள் என்பது கீழுள்ளவற்றை வைத்து தவறென உறுதிப்படுகிறது..

1. இராஜதரங்கிணி குறிக்கையில் பிராமணர்களை திராவிடப் பிராமணர் எனக்குறிக்காமல் "திராவிடா", "பஞ்ச திராவிடா" என்னும் இனப்பெயராகவே குறிக்கிறது. எனவே திராவிடப் பிராமணர் என்பது தற்காலத்தில் பயன்படுத்தப்படும் பெயர். பண்டையகால பெயர் திராவிடர் என்பதே.

2. தற்காலத்தில் ஆரம்ம திராவிடா (Brahmin Sect) தங்களின் இனக்குழுப் பெயரான திராவிடா என்னும் சொல்லில் "ஆ" என்னும் வடமொழி விகுதியைத் தவிர்த்து "அலு" என்னும் தெலுங்கு விகுதியை சேர்த்து திராவிடலு என்றே அழைத்துவருகிறார்கள்.

3. திருஞானசம்பந்தர் ஒரு திராவிடர் கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணர் என்பதால் சங்கரரால் "திராவிட சிசு" எனப் பாராட்டப்பட்டார். (திட்டப்பட்ட என்பது பொய். இதை சங்க‌ரரின் நூலைப் படித்து அறியலாம்) அங்கும் திராவிடப் பிராமணர் எனக் கூற‌வில்லை.

இதனால் தெய்வச் சிலையார் கூறும் வடுகம், தெலிங்கம், கருநாடகம், துளவம், கொங்கணம் போன்ற பகுதிகளில் இருந்த பிராமணரே திராவிடர் எனவும் அந்நாடுகளே திராவிட நாடுகள் என்பதும் அங்கு பேசப்பட்டவையே கால்டுவெல் வருவதற்கு முன்பு திராவிடம் என்னும் மொழியாக இருந்ததும் தெளிவு.

_______________________

இதில் இராஜதரங்கிணியும் தொல்காப்பிய‌த்துக்கு எழுதப்பட்ட தெய்வச்சிலையார் உரையும் கால்டுவெல்லுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட புராண, காப்பிய, இதிகாசத்தன்மை இல்லாத நூல்கள். அதாவது வரலாற்று நூல்கள் போல. வரலாற்றுப் பார்வையில் உள்ள முதல் நிலைச் சான்றுகளில் உள்ள வரலாற்று பார்வையில் அமைந்த சொற்றொடர்களே நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பதால் அதை முதலில் தந்தேன்.

புராண, காப்பிய, இதிகாசத்தன்மை உடைய நூல்களில் திராவிடர் இனம், மொழி, நாடு போன்றவற்றில் தமிழர் இனம், மொழி, நாடு போன்றவற்றோடு அந்நியப்பட்டே இருந்தனர் என்பதையும் அடுத்துவரும் பதிவுகளில் பார்க்கலாம். வேறு சில வரலாற்றுப் பார்வையில் அமைந்த சான்றுகளையும் பார்க்கலாம்.

_______________________

இதற்கு முன்னர் திராவிடர் என்னும் சொல் பற்றி ஆராய்ந்தவர்கள் யாரும் தமிழ் நூல்களில் இருந்து திராவிடா மொழி, நாடு, இனம் தமிழரில் இருந்து வேறுபட்டு இருந்ததாக நிறுவவில்லை. பாவாணர் தவிர‌ யாரும் தொல்காப்பிய உரை பற்றி பேசவும் இல்லை. சில தளங்கள் தமிழ் காப்பியங்களில் திராவிடம் நாடு பற்றி பேசியதாக காட்டினாலும் அது வேங்கடநாட்டின் வடக்கில் இருந்தவை என நிறுவவில்லை. நான் தமிழ் நூல்களில் இருந்தே தந்திருக்கிறேன்.

என்னிடம் வாதிட விரும்பவர்கள் கால்டுவெல்லுக்கு முற்பட்ட‌ முதல் நிலைச்சான்றுகளான இலக்கிய வரிகளையும் கல்வெட்டுப் படங்களையும் கொண்டு வாதிடுவது நல்லது. இரண்டாம் நிலைச் சான்றுகளான ஆய்வு நூல்களை கொண்டு அமைந்த வாதங்களுக்கு உரைகளுக்கும் நான் பதிலளிக்க மாட்டேன். -கூர்ங்கோட்டவர்

 
 
1606849_336040653240940_6975308271184304

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.